search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ
    X
    ஒப்போ ரெனோ 3 ப்ரோ

    இந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 3 ஆயிரம் குறைப்பு

    இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக ஒப்போ சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    எனினும், சமீபத்தில் இதன் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டது. விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ விலை மீண்டும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 27990 என மாறி உள்ளது. முனனதாக இதன் விலை ரூ. 29990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோன்று 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29990 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அந்த வகையில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது. இதே விலை ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×