என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஐகூ பிராண்டு சமீபத்தில் அறிவித்தது. அந்த வரசையில் ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் கெவ்லர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று சென்சார்களில் ஒன்று பெரிஸ்கோப் கேமரா ஆகும். இந்த கேமரா 5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வழங்கும் திறன் கொண்டது.

    ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர்

    ஐகூ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சக்திவாய்ந்த சாதனங்களை உற்பத்தி செய்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி மொபைல் பிராசஸர், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR5 ரேம் வழங்கப்பட இருக்கிறது.

    இத்துடன் ஐகூ 5 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷனில் 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், டாப் எண்ட் மாடலில் 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது ஆகும்.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்பசம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எதிர்கால சர்பேஸ் டுயோ சாதனத்தை அறிவித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு பிரிவு தலைவர் பனோஸ் பனே இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

    ஆண்ட்ரோமெடா எனும் பெயரில் தயாராகும் சர்பேஸ் டுயோ மாடலை மைக்ரோசாப்ட் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சாதனம் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது எனினும், இதன் வெளியீடு தாமதமானது.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வெர்ஷனை கொண்டிருக்கிறது. இந்த யூசர் இன்டர்பேஸ் பார்க்க விண்டோஸ் 10 போன்று காட்சியளிக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சர்பேஸ் டுயோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 11 எம்பி பிரைமரி கேமரா, 5.6 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள். இரு ஸ்கிரீன்களில் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டுயோ மாடல் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 75 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சர்பேஸ் டுயோ இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என சாம்சங் தெரிவித்து உள்ளது.

    முன்பதிவு செய்யாதவர்கள் கேலக்ஸி நோட் 20 அல்லது கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் வாங்கிட முடியும். புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க இதுவரை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக சாம்சங் தெரிவித்து இருக்கிறது.

     கேலக்ஸி நோட் 20

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் நடைபெற்ற 2020 கேலக்ஸி அன்பேக்டு விர்ச்சுவல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடலை 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி எனும் ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடல் விலை ரூ. 77999 முதல் துவங்குகிறது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 256 ஜிபி மாடல் விலை ரூ. 104999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.


    ரியல்மி பிராண்டின் புதிய 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. முன்னதாக இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி போன்ற ஆன்லைன் வலைதளங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் முதற்கட்டமாக இந்தியா முழுக்க சுமார் 1250 விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ரியல்மி பிராண்டை நாடு முழுக்க பிரபலப்படுத்தும் நோக்கில் துவங்கபட்டு இருப்பதாக தெரிகிறது.

     ரியல்மி ஸ்மார்ட் டிவி

    ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் மற்றும் 4 ஸ்பீக்கர் சிஸ்டம், ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கின்றன. இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் டிசிஎல், வு மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

    ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் இந்திய சந்தையில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆன்லைன் தளங்களிலேயே விற்பனையாகி வந்தன.
    கூகுள் நிறுவனம் இந்தியாவில் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை அறிமுகம் செய்து உள்ளது.


    கூகுள் சர்ச் கார்டு மூலம் பிரபலங்களின் விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் எளிமையான ஒன்று தான். எனினும், இது பொது மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று ஆகும். இதனை முற்றிலும் மாற்ற கூகுள் பீப்பிள் கார்ட்ஸ் எனும் அம்சத்தை துவங்கி இருக்கிறது. 

    கூகுளின் புதிய பீப்பிள் கார்ட்ஸ் சேவையை கொண்டு பயனர்கள் அவர்களுக்கான விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை உருவாக்கி கொள்ள முடியும். இதனை உருவாக்க பயனற்கள் சைன் இன் செய்து உங்களின் பெயர் அல்லது add me to search என சர்ச் பாக்சில் டைப் செய்ய வேண்டும். 

    கூகுள் பீப்பிள் கார்ட்ஸ்

    இனி உங்களின் விவரங்களை கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து உருவாக்கிக் கொள்ள கோரும் தகவல் திரையில் தோன்றும். இதில் உங்களின் விவரங்கள் மட்டுமின்றி, வலைதளங்கள் மற்றும் சமூக வலைதள ப்ரோபைல்களை லின்க் செய்து கொள்ள முடியும். பயனர் விரும்பும் பட்சத்தில் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து கொள்ளலாம்.

    ஒரு அக்கவுண்ட்டிற்கு ஒரு கார்டு மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவேளை கார்டு உருவாக்கியவர்கள் அதனை அழித்துவிடும் வசதியும் வழங்கப்படுகிறது. கூகுளின் பீப்பிள் கார்ட்ஸ் அம்சம் மொபைல் சர்ச் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்திலேயே லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் ரஷ்ய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்சிசி வலைதளத்தில் லீக் ஆனதுடன் பென்ச்மார்க் செயலிகளிலும் லீக் ஆகி இருந்தது.

    தற்சமயம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே லீக் ஆகி இருப்பதால், விரைவில் இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். புதிய கேலக்ஸி எம்51 சாம்சங் எம் சீரிசில் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மற்றும் கேலக்ஸி எம்01 கோர் மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்திருந்தது.
    கேலக்ஸி எம்51 லீக்


    சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அதிகபட்சம் 8 ஜிபி ரேம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 12 எம்பி அல்ட்ரா வைரடு ஆங்கில் கேமரா
    - 7000 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
    லாவா நிறுவனம் இந்திய சந்தையில் இசட்61 ப்ரோ, ஏ5 மற்றும் ஏ9 மாடல்களின் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்து உள்ளது.


    லாவா இசட்61 ப்ரோ, லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9 மாடல்களின் ProudlyIndian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ProudlyIndian எடிஷன் மாடல்கள் 74 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களின் பின்புறம் ProudlyIndian லோகோ மற்றும் இந்தியாவின் தேசிய கொடி அச்சிடப்பட்டு உள்ளது. லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஷேம்பெயின் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது.

    லாவா லிமிட்டெட் எடிஷன் மொபைல் போன்

    லாவா நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ProudlyIndian மொபைல்போன் மாடல்கள் விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என லாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

    இந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ 2 ஜிபி + 16 ஜிபி மெமரி கொண்ட ProudlyIndian மாடல் விலை ரூ. 5777 என்றும் லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9  ProudlyIndian எடிஷன் விலை முறையே ரூ. 1333 மற்றும் ரூ. 1574 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்கலுக்கு தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களில்ல அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாமல் இருப்பவர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட பலன்களை மூன்று நாட்களுக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக ரூ. 48 மற்றும் ரூ. 49 என குறைந்த தொகை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கியது. இவ்வாறு இலவச டேட்டா வழங்குவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    இலவச சலுகையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த குறுந்தகவல் அடங்கிய ஸ்கிரீன்ஷாட் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதேபோன்ற சலுகைகளை தொடர்ந்து பெற அன்லிமிட்டெட் சலுகையை தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

    தங்களின் அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களில் இலவச சலுகையை வழங்க ஏர்டெல் எவ்வாறு தேர்வு செய்கிறது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறதா அல்லது தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    சியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசரை சியோமி வெளியிட்டு இருந்தது.

    தற்சமயம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் புளூ, கோரல் ஆரஞ்சு, காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய கோரல் ஆரஞ்சு நிற ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே கிடைக்கும் நிறங்களின் விலையிலேயே கிடைக்கும் என தெரிகிறது.

     ரெட்மி நோட் 8 ப்ரோ

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் ஹெச்டிஆர் வசதி, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது.

    முன்புறம் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் சீன பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் சீன சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. சீன சந்தைக்கென ஆப்பிள் விசேஷ கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 12 மாடலில் லோக்கல் நேவிகேஷன் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய மாடலில் பெய்டௌ நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

     ஐபோன் 12

    இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெய்டௌ வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள ஐபோன் பயனர்கள் நீண்ட காலமாக பெய்டௌ வசதி இல்லாததற்கு கவலை தெரிவித்து வந்தனர். இதனால் புதிய மாடலில் சீன பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் மாடல்களில் ஜிபிஎஸ் வசதி, குளோனேஸ், கலிலியோ மற்றும் கியூஇசட்எஸ்எஸ் போன்ற நேவிகேஷன் சிஸ்டம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 200 நாடுகள் மற்றும் 10 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் அமேசானில் தெரியவந்துள்ளது. அதன் படி புதிய கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்னதாக இவை 2020 கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடல் துவக்க விலை ரூ. 77999 முதல் துவங்குகிறது. 

     கேலக்ஸி நோட் 20

    சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 256 ஜிபி மாடல் விலை ரூ. 104999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமேசானில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    - கேக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்வோர் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வாங்கவிட வேண்டும்.

    பலன்களை வாடிக்கையாளர்கள் சாம்சங் ஷாப் செயலியில் கேலக்ஸி பட்ஸ் பிளஸ், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி டேப் உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும். 

    - இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 20 மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை வாங்குவோருக்கு ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    பிரபல வீடியோ காலிங் செயலியான ஜூம் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
      

    ஜூம் செயலியில் புதிய ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி உள்ளது. புதிய அப்டேட்டில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் புதிய ஃபில்ட்டர்கள், வீடியோ கால்களில் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஆடியோ கால்களுக்கு மேம்பட்ட நாய்ஸ் சப்ரெஷன் வழங்கப்பட்டு உள்ளது. வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவம் கிடைக்காமல் இருந்தது. விர்ச்சுவல் மீட்டிங் அனுபவத்தை புதிய அம்சங்கள் மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.    

    ஜூம்

    கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூம் செயலியில் புதிய அம்சங்கள் சமீப காலங்களில் வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழைப்புகளின் செக்யூரிட்டியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், போட்டியை எதிர்கொள்ள ஜூம் புதிய அம்சங்களை வழங்கி உள்ளது.

    புதிய நாய்ஸ் செட்டிங் ஜூம் செயலியின் செட்டிங் பகுதியில் உள்ளது. இவற்றை லே, மிட் மற்றும் ஹை என பயனர் விருப்பப்படி செட் செய்து கொள்ளலாம். இதேபோன்று ஜூம் வீடியோ செட்டிங்களில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். 

    முன்னதாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் ஆயிரம் பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட்டது. கூகுள் மீட்ஸ் சேவையிலும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் என்க்ரிப்ஷன் மற்றும் இதர அம்சங்களை வழங்கும் பணிகளில் ஜூம் ஈடுபட்டு வருகிறது.
    ×