search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டெலிகிராம்
    X
    டெலிகிராம்

    டெலிகிராம் செயலியில் விரைவில் வீடியோ காலிங் வசதி

    டெலிகிராம் செயலியில் விரைவில் வீடியோ காலிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    வாட்ஸ்அப் செயலிக்கு கடுமையான போட்டியாளராக டெலிகிராம் இருக்கிறது. டெலிகிராமில் அவ்வப்போது புதுப்பது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த செயலியில் இதுவரை வீடியோ காலிங் வசதி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலை விரைவில் மாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள வீடியோ கால் அம்சம் செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்படலாம்.

    உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சத்தை இயக்க விரும்பினால், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் கனெக்ட் செய்து புதிய ஏபிகே வெர்ஷன் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். 

    தற்போதைய தகவல்களின் படி டெலிகிராமின் வீடியோ காலிங் இன்டர்பேஸ் மற்ற செயலிகளில் உள்ளதை போன்றே காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. பின்புறம் மற்றும் முன்புற கேமராக்களை மாற்ற ஆன் ஸ்கிரீன் பட்டன் வழங்கப்படுகிறது. இதேபோன்று வீடியோ டாகிள், மியூட் மற்றும் குளோஸ் செய்யக்கோரும் பட்டன்களும் ஸ்கிரீனில் காணப்படுகிறது.
    Next Story
    ×