என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பிரைவசி விவகாரம் காரணமாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.


    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதகரிப்பதாக கூறப்படுகிறது.

     டெலிகிராம்

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. 

    அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சைன்-இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலை சிக்னல் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.

    எலான் மஸ்க் மட்டுமின்றி ஆய்வாளரான எட்வர்ட் ஸ்னோடனும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தான் சிக்னல் செயலியை பயன்படுத்தி வருவதாக தெகிவித்தார்.
    பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது.


    பப்ஜி மொபைல் மீண்டும் வெளியாகும் என அந்நிறுவனம் வெளியிட்ட டீசர், இந்திய பயனர்களிடையே கேமின் மறு வெளியீடு குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இது எப்போது வெளியாகும் என்ற தகவல் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. 

    இந்நிலையில், இந்த கேமின் இந்திய வெளியீடு பற்றி பப்ஜி மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

     பப்ஜி மொபைல்

    இதுகுறித்து தனியார் நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு,` மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பப்ஜி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை' என பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு பப்ஜி மொபைல் உள்பட 117 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்ததோடு அவற்றை முடக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பப்ஜி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் இந்த கேம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனினும், தற்போதைய மத்திய அமைச்சகத்தின் பதில் மற்றும் முந்தைய பதில்களில் இதன் வெளியீடை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இடம்பெறவில்லை. 

    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது. 

    பின் 2020 செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும், அதன் பின் இரண்டாவது முறையாக இவற்றின் விலை குறைக்கப்பட்டது. அந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களின் விலை மூன்றாவது முறையாக இந்திய சந்தையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. 

     கேலக்ஸி ஏ71

    புதிய விலை விவரங்கள்

    சாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999 
    சாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499 
    சாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499 

    இம்முறை இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிரதிபலிக்கிறது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் தளங்கள் மற்றும் இதர ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நோக்கியா 6.3 ஸ்மார்ட்போன் என கூறி புது நோக்கியா போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6.3 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடலில் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் போர்ட், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் வட்ட வடிவ ஹவுசிங்கில் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனில் பொருத்தப்படுகிறது. இதன் கீழ் வால்யூம் ராக்கர் வழங்கப்படுகிறது. இடதுபுறத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. 
    வாட்ஸ்அப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி பற்றி முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. செயலியில் தனியுரிமை கொள்கை மாற்றப்படுவதை பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் மூலம் வாட்ஸ்அப் தெரிவித்தது. இதனை பலர் படிக்காமலேயே புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்க Agree ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கின்றனர்.

    முந்தைய அப்டேட்கள் போன்று இல்லாமல், புது அப்டேட் பயனர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதில் வாட்ஸ்அப் அதன் பயனாளிகள் தகவல்களை எப்படி கையாள்கிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொழில் நிறுவனங்கள் எப்படி பேஸ்புக் சேவைகளின் டேட்டாவை சேமிப்பது, பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் வாட்ஸ்அப் எப்படி ஒருங்கிணைந்து செயல்படும் என்ற விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    புதிய கொள்கை முறை பற்றி வாட்ஸ்அப் தனது வலைதள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படி முக்கிய மாற்றங்களில் ஒன்றாக மீடியா தரவுகள் எப்படி சர்வெர்களில் சேமிக்கப்படுகிறது என்ற விவரம் இடம்பெற்று உள்ளது. புதிய முறையில் தகவல் பார்வேர்டு செய்யப்படும்போது அதை எளிதில் வாட்ஸ்அப் சேமித்து கொள்ளும்.

     வாட்ஸ்அப்

    மேலும் பயனர் வாட்ஸ்அப் சேவையை எப்படி பயன்படுத்துகின்றனர், எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றார், எந்த மாதிரி சேவைகளை பயன்படுத்துகின்றனர், ஆன்லைனில் எந்தெந்த நேரத்தில் இருக்கிறார் என பல்வேறு தகவல்களை பட்டியலிட்டு இருக்கிறது. 

    இத்துடன் வாட்ஸ்அப் பேமண்ட் சேவையை இயக்கும் போது பரிமாற்ற விவரங்களான-  பேமண்ட் அக்கவுண்ட், பேமண்ட் முறை, வினியோக விவரம், பரிமாற்றம் செய்யப்படும் தொகை உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கும். பின் இவை பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிரப்பட இருக்கிறது.

    புதிய கொள்கைகளுக்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் பயனர்கள், பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். வாட்ஸ்அப் செயலி மாற்றங்களுக்கு பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை ஏற்பட்டு உள்ளது.

    பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்த போவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் முன்பதிவு சலுகைகளுடன் துவங்கி இருக்கிறது.


    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3849 மதிப்புள்ள போன் கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக், கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக் மற்றும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டது.

     சாம்சங்

    சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்வோருக்கு கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்21 பிளஸ் போன்ற மாடல்கள் பற்றி சாம்சங் தளத்தில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.2  ஆயிரம் மதிப்புள்ள விஐபி பாஸ் வாங்க வேண்டும். இவர்களுக்கு கேலக்ஸி எஸ்21 வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும். பின் ஸ்மார்ட்போன் வாங்கும் போது விஐபி பாஸ் பெற செலுத்திய ரூ. 2 ஆயிரம் கழிக்கப்படும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.


    இந்திய டெலிகாம் சந்தையில் குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கும் வழக்கத்தை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி வைத்தது. எனினும், இந்த ஆண்டு இருமடங்கு டேட்டா பலன் வழங்கும் ஒற்றை நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது.

    இந்த நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகைகளில் தேர்வு செய்யப்பட்ட மூன்று சலுகைகளுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது வி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    இந்த மூன்று சலுகைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் புது சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தினமும் 4 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். கூடுதல் டேட்டா தவிர மூன்று சலுகை பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    வி ரூ. 299 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 449 சலுகையில் இதே பலன்கள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 699 வி சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11 அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெர்ஷன்களை பெறும் ஸ்மார்ட்போன்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் உலகின் எந்தெந்த பகுதிகளில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது என்ற விவரங்களையும் ஒப்போ தெரிவித்து உள்ளது. படிப்படியாக வெளியிடப்படுவதால் ஒரே ஒப்போ போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்க சிலகாலம் ஆகும் என தெரிகிறது.

     ஒப்போ

    ஒப்போ கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட்

    ஒப்போ பைண்ட் எக்ஸ்2, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபைல் லம்போர்கினி எடிஷன், ஒப்போ எப்17 ப்ரோ, ரெனோ 4எப், ஒப்போ ஏ93, ரெனோ 4 ப்ரோ 5ஜி, ரெனோ 4 ப்ரோ 4ஜி, ரெனோ 4 4ஜி, ரெனோ 4 லைட், ரெனோ 3 ப்ரோ 4ஜி, ரெனோ 3 4ஜி மற்றும் ஒப்போ ஏ72 உள்ளிட்ட மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட் பெற இருக்கின்றன.

     ஒப்போ

    ஒப்போ எப்11, ஒப்போ எப்11 ப்ரோ மற்றும் எப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் மாடல்களுக்கு இன்று முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அப்டேட் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஒப்போ ஏ52, ஒப்போ ஏ9 மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது.

    ஜனவரி 26 ஆம் தேதி முதல் ரெனோ 2எப், ரெனோ 10எக்ஸ் ஜூம் மாடலுக்கும், ஒப்போ எப்15 மாடலுக்கு ஜனவரி 29 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அல்ட்ரா-லோ லேடென்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் மூலம் மியூசிக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற சேவையை ஆக்டிவேட் செய்ய போன் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

     நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2

    நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அம்சங்கள்

    - ப்ளூடூத் 5
    - 6எம்எம் ஸ்பீக்கர் டிரைவர்
    - MEMS மைக்
    - ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்
    - லோ லேடென்சி கேமிங் மோட்
    - வாட்டர் ரெசிஸண்ட் வசதி
    - பின்டிப் மற்றும் சிலிகான்
    - கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
    - 5 மணி நேர பிளேபேக்

    நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்போன் ரேவென் பிளாக், ஆம்பர் ஆரஞ்சு, கோபால்ட் புளூ மற்றும் லைம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அட்ரினோ 506 GPU வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி எம்02எஸ்

    மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5,  5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அட்பாடிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் புளூ, ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9999 என்றம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்ந்த சாதனங்கள் பிரிவில் இந்த ஹெட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் குறைந்த விலை வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஹெட்போனின் விலையை குறைக்க புதிய மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ்

    அதன்படி புதிய ஹெட்போன் அலுமினியம் இயர்கப் மற்றும் ஸ்டீல் ஹெட்பேண்ட்-க்கு மாற்றாக பிளாஸ்டிக் மூலப்பொருளாக பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய ஹெட்போன் மெஷின் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட அலுமினியம் இயர்கப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹெட்பேண்ட் கொண்டிருக்கிறது.

    புதிய வயர்லெஸ் ஹெட்போன் விலை 350 டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விலையில் புது ஆப்பிள் ஹெட்போன் சோனி WH-1000XM4 மற்றும் போஸ் குவைட்கம்பர்ட் 35 II போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனம் அந்த விஷயத்தில் மீண்டும் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    வாய்ஸ் கால் சேவையில் அதிக தரமாக வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன் ஐடியா 2020 டிசம்பர் மாதத்திலும் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த தகவலினை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு உள்ளது.

    டிராய் வலைதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து விதமாக நெட்வொர்க்குகளில் பயனர் வழங்கிய விவரங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்படுகிறது. மேலும் டிராயின் `மைகால்' டேஷ்போர்டில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    அந்த வகையில் 2020 டிசம்பர் மாதத்திலும் வோடபோன் ஐடியா இணைந்து ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி அதிக தரமுள்ள வாய்ஸ் கால் சேவையை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

    தரமான கால் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 5-க்கு 4.9 புள்ளிகள், வோடபோன் 5-க்கு 4.3 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ 5-க்கு 3.9 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனம் 5-க்கு 3.1 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    ஒட்டுமொத்தமாக 86.84 சதவீத பயனர்கள் திருப்திகரமான சேவையை பெற்றதாகவும், 8.39 சதவீதம் பேர் மோசமான சேவையை பெற்றதாகவும், 4.77 சதவீதம் பேர் கால் டிராப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.
    ×