என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் சாம்சங் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்களில் இரு டாப் எண்ட் வெர்ஷன்களில் சாம்சங் நிறுவனத்தின் OLED பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர இந்த ஆண்டு வெளியாகும் நான்கு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும், இரு ஐபோன்களில் மட்டும் LTPO ரக OLED பேனல்கள் வழங்கப்படலாம் என்றும் இவற்றை சாம்சங் டிஸ்ப்ளே உற்பத்தி செய்து வழங்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 12 மாடலில் எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களின் டிஸ்ப்ளே பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் LTPO OLED பேனல்களை வழங்க முடியாது என கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் ஆப்பிள் நிறுவனம் LTPO OLED பேனல்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கென பேனல்களை உற்பத்தி செய்வதில் எல்ஜி நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பேட்டரி பேக்கப் குறையலாம் என்ற காரணத்தால் இது வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் ஐபோன் 13 ப்ரோ மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி நிறுவனத்தின் வயோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
சோனி நிறுவனத்தின் வயோ பிராண்டு லேப்டாப்கள் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இதன் வருகையை ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் அறிவித்து இருந்தது.
அந்த வகையில் தற்சமயம் வயோ பிராண்டு தனது புதிய லேப்டாப் இந்தியாவில் ஜனவரி 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக வயோ லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

`வயோ பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்ய முன்னணி ஆன்லைன் தளத்துடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம். எதிர்கால லேப்டாப் மாடல்களை அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவை நாட்டின் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.'
`தலைசிறந்த லேப்டாப்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் தனது இடத்தை பிடிப்பதில் கவனமாக இருக்கிறோம். நாட்டில் லேப்டாப் வாங்குவோரின் முக்கிய தேர்வாக உருமாறும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.' என வயோ பிராண்டு வியாபார பிரிவு இயக்குனர் சீமா பட்நகர் தெரிவித்தார்.
போக்கோ பிராண்டின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு போக்கோ எம்2, போக்கோ எம்2 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்3, போக்கோ சி3 தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது.
போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் (4ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ரூ. 8999-இல் இருந்து தற்சமயம் ரூ. 8499 என மாறி இருக்கிறது. இதேபோன்று போக்கோ எம்2 (6ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ரூ. 10999-இல் இருந்து தற்சமயம் ரூ. 9999 என்றும் போக்கோ எம்2 (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 12499-இல் இருந்து தற்சமயம் ரூ. 10999 என மாறி இருக்கிறது.
போக்கோ எம்2 ப்ரோ (4ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 12999 என மாறி இருக்கிறது.
போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 64 ஜிபி) மாடல் விலை ரூ. 14999-இல் இருந்து தற்சமயம் ரூ. 13999 என்றும் போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 16999-இல் இருந்து தற்சமயம் ரூ. 15999 என மாறி இருக்கிறது.
போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 18499-இல் இருந்து தற்சமயம் ரூ. 17999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் குறைக்கப்பட்ட புது விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒப்போ ரெனோ 5 சீரிசில் ரெனோ 5 5ஜி, ரெனோ 5 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 5 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்களை கொண்டுள்ளது.
இவற்றில் தற்சமயம் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடல் மட்டும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ரெனோ 5 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED வளைந்த டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
- அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- 4350 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 38,200 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 42,700 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
5ஜி வசதி கொண்ட முதல் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்ட முதல் 4 சீரிஸ் பிராசஸர் ஆகும். இது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பிராசஸர் உருவாக்கப்பட்டு வருவதாக குவால்காம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 460 பிராசஸரின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.

புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் மில்லிமீட்டர் வேவ் மற்றும் சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வொர்க்குகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்ட முதற்கட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸரை சந்தையில் கொண்டுவர ஹெசஎம்டி குளோபல், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களுடன் குவால்காம் இணைந்து பணியாற்றி வருகிறது.
சமீபத்தில் அறிமுகமான ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் போன்று இல்லாமல் புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் 8 நானோமீட்டர் வழிமுறையில் உருவாகி இருக்கிறது.
2021 ஆரம்பமே இப்படியானு சொல்லும் வகையில் அமலாகி இருக்கும் சில திட்டங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் ஓரளவு சுமாரா தான் போச்சுனு பலர் தங்களோட அனுபவத்தை சொல்லிட்டு இருக்காங்க. 2021 துவக்கமே சரியில்லைனு சொல்ல வைக்குறதுக்கு ஏற்ற மாதிரி உருமாறிய கொரோனா, 100 வருஷத்துல இல்லாத மழை ஜனவரி துவக்கத்திலேயே பதிவான சம்பவங்கள் அரங்கேறி இருக்கு.
இந்த நிலையில், 2021 நம் வாழ்க்கை முறையில் சத்தமின்றி மாறி இருக்குற சில விஷயங்களோட டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப்
ஜனவரி 1, 2021 துவங்கி ஆண்ட்ராய்டு 4.0.3, ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முந்தைய ஒஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பாஸ்டேக்
இந்தியா முழுக்க சுங்க சாவடிகளில் ஆன்லைன் பணம் செலுத்தும் முறையை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. எனினும், கடைசியில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

பாசிட்டிவ் பே சிஸ்டம்
வங்கி துறையில் ஏற்படும் ஊழல்களை குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி, ஜனவரி 1 2021 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் எனும் திட்டத்தை அமலாக்கி இருக்கிறது. இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட காசோலை சார்ந்த பரிமாற்றங்களை கடைசி நேரத்தில் உறுதிப்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
அதாவது காசோலை கொடுத்தவர் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் போன்ற சேவைகளை கொண்டு காசோலை விவரங்களை வழங்கி அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

அழைப்புகளுக்கு முன் இதை செய்யணும்
லேண்ட்லைனில் இருந்து மொபைல் நம்பர்களுக்கு அழைப்பை மேற்கொள்ளும் முன் 0 என்ற எண் பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறை ஜனவரி 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது. எனினும், இதற்கு தேவையான வழிமுறைகளை டெலிகாம் ஆபரேட்டர்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.
ஆன்லைன் வர்த்தகம்
இந்தியாவில் டிஜிட்டல் பேமண்ட் சேவையை பாதுகாப்பாக மேற்கொள்ளும் நோக்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் வங்கிகள் காண்டாக்ட்லெஸ் கார்டு பரிமாற்றங்களுக்கான அளவை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி இருக்கிறார். இது ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் முதல்முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கி இருந்தது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்சமயம் சியோமி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் உடனான போட்டியை எதிர்கொள்ள ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஒன்பிளஸ் 9 சீரிசில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 லைட் என மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் 9 லைட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 20,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் FHD+LCD ஸ்கிரான், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அடாப்டிவ் சின்க் ரிப்ரெஷ் ரேட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிராசஸர் 5ஜி SA/NSA வசதி வழங்குகிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4820 எம்ஏஹெச் பேட்டரி
- 33வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் புதிய சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து உள்ளது. மேலும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களும் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரெட்மி வெளியிட்டிருக்கும் டீசரின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 5ஜி மாடலின் சர்வதேச வேரியண்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9டி 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 13 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
வாட்ஸ்அப் செயலியில் புத்தாண்டு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட புது சாதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புத்தாண்டு தினத்தில் மட்டும் வாட்ஸ்அப் செயலி மூலம் சுமார் 140 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது வாட்ஸ்அப் செயலியில் ஒரே நாளில் பதிவான அதிகப்படியான அழைப்புகள் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் இதேபோன்று அதிகளவு பயன்பாடு பெறுவது வாடிக்கையான ஒன்று தான். எனினும், இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இத்தகைய சாதனை படைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் ஆகும். பேஸ்புக்கின் வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவையும் அதிக பயன்பாட்டை எதிர்கொண்டிருந்தது. இதே நாளில் மெசஞ்சரில் அதிகப்படியான க்ரூப் வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதாவது முந்தைய ஆண்டை விட புத்தாண்டு தினத்தில் மட்டும் இருமடங்கு அதிக வீடியோ கால்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மெசஞ்சரில் பயன்படுத்தப்பட்ட ஏஆர் எபெக்ட் “2020 Fireworks” ஆகும்.
புத்தாண்டு தினத்தில் நேரலை சேவையின் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. அன்று மட்டும் உலகம் முழுக்க 5.5 கோடி நேரலைகள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் பப்ஜி மொபைலுக்கு மாற்றாக உருவாகி வரும் பாஜி கேம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் பாஜி கேம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த கேம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கேம் இந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் பாஜி கேம் டிரெயிலரில் கேம்பிளே காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

பிளே ஸ்டோரில் இந்த கேம் விவரங்கள் மற்றும் டிரெயிலர் காட்சிகளை பார்க்கும் போது, இது இந்திய எல்லையின் வடக்கு பகுதியில் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது போன்ற கதையம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
மேலும் இது மற்ற கேம்களை போன்று இன்-ஆப் பர்சேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் கேம் வெளியானதும் அறிவிக்கப்படலாம். இந்த கேமிற்கான முன்பதிவு தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகமான கேலக்ஸி எம்01எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புது ஸ்மார்ட்போன் வெளியீடு அமேசான் தளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய வலைப்பக்கம் அமேசான் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.5-இன்ச் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
- 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி + 2 எம்பி கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
புதிய கேலக்ஸி எம்02எஸ் மாடல் ஸ்டிரீமிங், கேமிங், புகைப்படம் மற்றும் பிரவுசிங் அனுபவத்தை சிறப்பாக வழங்கும் என சாம்சங் தெரிவித்து உள்ளது. இதற்கென சாம்சங் டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது.
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.






