என் மலர்
தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
இணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் முதல்முறையாக ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கி இருந்தது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்சமயம் சியோமி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் உடனான போட்டியை எதிர்கொள்ள ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் 45 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஒன்பிளஸ் 9 சீரிசில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 லைட் என மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் 9 லைட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story






