என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிட்னஸ் பேண்ட் டீசர் வெளியாகி உள்ளது. புதிய டீசர், “The New Face of Fitness” தலைப்பில் #SmartEverywear-எனும் ஹேஷ்டேக் கொண்டு பதிவிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் பிராண்டிங்கில் வளைந்த ஸ்கிரீன் கொண்ட பேண்ட் படமும் இணைக்கப்பட்டு உள்ளது.

    புதிய பிட்னஸ் பேண்ட் ஸ்லீப் டிராக்கிங் அம்சம் கொண்டிருக்கும் என்றும் டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ஒன்பிளஸ் பேண்ட், சியோமி நிறுவனத்தின் எம்ஐ பேண்ட் 5 மாடலுக்கு போட்டியாக வெளியாகும் என கூறப்பட்டது.

     ஒன்பிளஸ் பேண்ட்

    இதில் வாட்டர் ரெசிஸ்டண்ட், AMOLED ஸ்கிரீன், நீண்ட பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சொந்தமான மென்பொருள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி புதிய ஒன்பிளஸ் வாட்ச் உருவாகி வருவதாக தகவல் தெரிவித்து இருந்தார். எனினும், முதற்கட்டமாக பேண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    பத்து கோடி பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டார்க் வெப் தளத்தில் சுமார் பத்து கோடி பயனர்களின் மிகமுக்கிய விவரங்கள் வெளியாகி இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தெரிவித்து இருக்கிறார். இதில் பயனர்களின் பெயர், போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி, முதல் மற்றும் கடைசி நான்கு இலக்க கார்டு எண்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் அமேசான், மேக்மைட்ரிப் மற்றும் ஸ்விகி போன்ற நிறுவனங்களின் பணப்பரிமாற்ற முறைகளை கையாளும் ஜஸ்பே எனும் முகமைக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் அம்பலமாதாக தெரிவித்து இருந்தது.

     கோப்புப்படம்

    மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் பணப்பரிமாற்றங்களின் போது இந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இதில் பல்வேறு இந்தியர்களின் கார்டு எக்ஸ்பைரி தேதி, கஸ்டமர் ஐடிி மற்றும் கார்டு எண்களின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், சரியான பரிமாற்ற விவரங்கள் தெரியவில்லை. 

    இணையத்தில் வெளியாகி இருக்கும் அந்த விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு இருந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இவற்றை விற்கும் ஹேக்கர் டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பிட்காயின்களை பரிமாற்றத்திற்கு கேட்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பொங்கல் பண்டிகைக்கு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     

    சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் என சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வுக்கான டீசரில் புதிய கேமரா மாட்யூல் படத்துடன் ‘Welcome to the Everyday Epic’ எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     கேலக்ஸி அன்பேக்டு 2021

    கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வைலட், கிரே, வைட் மற்றும் பின்க் போன்ற நிறங்களிலும், எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் வைலட், சில்வர் மற்றும் பிளாக் நிறங்களிலும், எஸ்21 அல்ட்ரா மாடல் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி வெர்ஷன்களிலும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரீயாக இது வழங்கப்படும் என தெரிகிறது.
    அமேசான்பேசிக்ஸ் பயர்டிவி எடிஷன் 4K ஸ்மார்ட் எல்இடி டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது. 

    இரு டிவிக்களிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், அலெக்சா வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. வாய்ஸ் ரிமோட் கொண்டு அலெக்சா மூலம் நிகழ்ச்சிகளை கேட்டு ஸ்டிரீம் செய்ய முடியும்.

     அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன்

    மேலும் பயர் ஒஎஸ் கொண்டு பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், சோனிலிவ், வூட், டிஸ்கவரி பிளஸ் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்கலாம். 

    அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் 50-இன்ச் மாடல் விலை ரூ. 29,999 என்றும் 55-இன்ச் மாடல் விலை ரூ. 34,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ஏற்கனவே அமேசான் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் 43-இன்ச் 4K, 43-இன்ச் புல் ஹெச்டி, 32-இன்ச் ஹெச்டி ரெடி மாடல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் 4 ஜிபி வேரியண்ட் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அந்நிறுவனம் முன்னணி இடம் பிடிக்க இந்த சீரிஸ் பெரிதும் உதவியாக இருந்தது.

    2020 ஆண்டு சாம்சங் நிறுவனம் சுமார் 1.5 கோடி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் சாம்சங் நிறுவனம் 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 
    சியோமியின் புதிய எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விற்பனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் கடந்த வாரம் புதிய எம்ஐ11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஐந்தே நிமிடங்களில் 3,50,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. சீன சந்தையில் சியோமி எம்ஐ 11 விற்பனை ஜனவரி 1 ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனாக சியோமி புதிய எம்ஐ11 வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 1500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11

    சியோமி குழும துணை தலைவரும், ஸ்மார்ட்போன் பிரிவு தலைவர் செங் யூஹோங் சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய ஐந்தே நிமிடங்களில் 3,50,000 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    அந்த வகையில் சியோமி எம்ஐ11 விற்பனையில் இருந்து இந்திய மதிப்பில் ரூ. 1677 கோடிகளை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விற்பனை துவங்கிய 7 மணி நேரத்தில் 8,54,000 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 45 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52,800 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சில செயலிகளை திடீரென நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் தனது சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39 ஆயிரம் கேம் செயலிகளை நீக்கி இருக்கிறது. உரிமம் பெறாத காரணத்தால் இந்த செயலிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்து இருந்தது. இந்நிலையில், உரிமம் பெறாத காரணத்தால் ஒரே நாளில் இத்தனை செயலிகள் நீக்கப்பட்டு இருக்கிறது.

     ஆப் ஸ்டோர்

    ஆப்பிள் நிறுவன வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆப் ஸ்டோரில் இருந்து மொத்தம் 46 ஆயிரம் செயலிகள் நீக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 39 ஆயிரம் செயலிகள் கேம்கள் ஆகும். 

    நீக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் என்பிஏ2கே20 மற்றும் அசாசின்ஸ் கிரீட் ஐடென்டி என பல்வேறு பிரபல கேம்களும் இடம்பெற்று இருக்கின்றன. 

    சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே பிராசஸர் கொண்ட எம்ஐ11 ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

    தற்சமயம் சியோமி எம்11 ஸ்மார்ட்போனை தொடர்ந்து எம்ஐ 11 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.

     கோப்புப்படம்

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 ப்ரோ என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய ரெட்மி கே40 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் தவிர, அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, AMOLED பேனல், 50 எம்பி சோனி IMX786 சென்சார், பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமி எம்ஐ 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளே, 2K AMOLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கி வருகிறது. முன்னதாக இதே அப்டேட் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    புதிய ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் F700FxXx3CTLx எனும் பர்ம்வேர் வெர்ஷன் கொண்டிருக்கிறது. அளவில் இது 2,014.37MB ஆக இருக்கிறது. தற்சமயம் இந்த அப்டேட் ஆசியா, ஐரோப்பியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி இசட் ப்ளிப்

    புது அப்டேட் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.0 சார்ந்த அம்சங்களை கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு வழங்குகிறது. இதில் மேம்பட்ட யுஐ டிசைன், சிறப்பான அனிமேஷன், சாட் பபிள்கள், மேம்பட்ட ஸ்டாக் ஆப், லாக் ஸ்கிரீன் விட்ஜெட்கள், மேம்பட்ட செக்யூரிட்டி மற்றும் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் புதிய பிரைவசி கண்ட்ரோல்கள், ஒன்-டைம் பர்மிஷன்கள், மேம்பட்ட டிஜிட்டல் வெல்பீயிங் அம்சங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்யுஐ 3.0 அப்டேட் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி எம்31 மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது இலவச சிம் கார்டு சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம் கார்டு சலுகையை ஜனவரி 31, 2021 வரை நீட்டித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு பிஎஸ்என்எல் தமிழ் நாடு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

    முன்னதாக இந்த சலுகை நவம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்து நவம்பர 28 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் இந்த சலுகை ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் இந்த சலுகை மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

     கோப்புப்படம்

    சலுகை நீட்டிப்பு மட்டுமின்றி பிஎஸ்என்எல் ரூ. 186 மற்றும் ரூ. 199 சலுகை விலையை மாற்றி இருக்கிறது. பிஎஸ்என்எல் வலைதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது. எனினும், பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ. 100 சலுகையை பெற வேண்டும்.

    இதுதவிர பிஎஸ்என்எல் ரூ. 186 சலுகை மற்றும் ரூ. 199 சலுகை விலை மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ. 186 சலுகை விலை தற்சமயம் ரூ. 199 என மாறி இருக்கிறது. மேலும் இதன் வேலிடிட்டி 30 நாட்களில் இருந்து 28 நாட்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த சலுகையில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    இதேபோன்று பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை ரூ. 201 என மாறி இருக்கிறது. இந்த சலுகை பலன்களின் வேலிடிட்டி, அம்சங்கள் மற்றும் பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 
    சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

    சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) கேமிங் கன்சோல் இந்திய சந்தையில் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. 

    இந்த தகவலை சோனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய கன்சோல் முன்பதிவு ஸ்டாக் இருக்கும்வரை மட்டுமே நடைபெறும் என சோனி தெரிவித்து உள்ளது. உலகின் பல்வேறு சந்தைகளில் சோனி பிளேஸ்டேஷன் 5 நவம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 

     சோனி பிளேஸ்டேஷன் 5

    விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் பிளேஸ்டேஷன் 5 மொத்தம் 34 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான பிளேஸ்டேஷன் கன்சோல்களை விட இது அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கிறது.

    இந்தியாவில் சோனி பிளேஸ்டேஷன் 5 முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான், ப்ளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், கேம்ஸ் தி ஷாப், ஷாப் அட் சோனி சென்ட்டர், விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் துவங்குகிறது.

    சோனி பிளேஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 39,990 என்றும் டிஸ்க் டிரைவ் எடிஷன் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்கோ நிறுவனத்தின் புதிய எப்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    போக்கோ எப்2 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புத்தாண்டில் அறிமுகமாக இருக்கும் முதல் போக்கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிகிறது. டீசர் வீடியோவில், கடந்த ஆண்டு மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிக போக்கோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், 4250 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார், AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் என்எப்சி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய போக்கோ எப்2 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி போக்கோ பிராண்டு லேப்டாப் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டு இருக்கிறது. 

    ×