search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்
    X
    சாம்சங்

    பொங்கல் பண்டிகைக்கு அறிமுகமாகும் சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பொங்கல் பண்டிகைக்கு அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     

    சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் என சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வுக்கான டீசரில் புதிய கேமரா மாட்யூல் படத்துடன் ‘Welcome to the Everyday Epic’ எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     கேலக்ஸி அன்பேக்டு 2021

    கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வைலட், கிரே, வைட் மற்றும் பின்க் போன்ற நிறங்களிலும், எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் வைலட், சில்வர் மற்றும் பிளாக் நிறங்களிலும், எஸ்21 அல்ட்ரா மாடல் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்21 மற்றும் எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி வெர்ஷன்களிலும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்துடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரீயாக இது வழங்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×