என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • புதிய சேவை திரெட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.

    மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த சேவை பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள சேவை ஜூலை 6-ம் தேதி அறிமுகமாவதாக கூறப்படுகிறது. புதிய சேவை திரெட்ஸ் (threads) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    முன்னதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றே இருக்கும் என்றும், பயன்பாடுகள் டுவிட்டர் போன்றே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை மற்றும் மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான தளமாக இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய சேவை பற்றிய தகவல், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கிறது. "திரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலி," என்றும், இது ஜூலை 6-ம் தேதி முதல் டவுன்லோடு செய்ய கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது.

    • புதிய மாடல் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் ஆக இருக்கலாம்.
    • தற்போதைய கேலக்ஸி S21 FE மாடலில் 12MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், இந்த மாடல் கேலக்ஸி S21 FE ஆகவே இருக்கும் என்று தெரிகிறது.

    எனினும், புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படுகிறது. டீசரில் சாம்சங் நிறுவனம் "Faster Just Got Faster," என்று குறிப்பிட்டு இருக்கிறது. எனினும், ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதன் முன்புற டிசைன் தோற்றத்தில் கேலக்ஸி S21 FE போன்று காட்சியளிக்கிறது.

     

    அதன்படி புதிய மாடல் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் முற்றிலும் புதிய நேவி புளூ நிறத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி S21 FE மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ ஃபிலாட் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 12MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு சென்சார், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    • டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும்.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

    அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும்.

     

    "தகவல் திருட்டு மற்றும் சிஸ்டம் தவறாக கையாளுவது உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் நோக்கில், நாங்கள் தற்காலிக கட்டுப்பாடுகள்- வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 6 ஆயிரம் பதிவுகள் / வெரிஃபைடு இல்லா பயனர்கள் தினமும் 600 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 300 அக்கவுன்ட்களையும் பார்க்க முடியும்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்து இருந்தார்.

    பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு பதிவில், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்.

    இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • சாட் ஹிஸ்ட்ரியை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வாட்ஸ்அப் செயலியில் சாதனங்கள் இடையே சாட் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதனை செய்துமுடிக்க ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இந்த நிலையில், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்கவேண்டியது அவசியம் ஆகும்.

     

    கடந்த சில மாதங்களாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    சாட்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

    - இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் கொண்டிருப்பது, வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    - சாட் டிரான்ஸ்பர் செய்ய லொகேஷன் எனேபில் செய்யப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும்.

    - பழைய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாட் -- சாட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

    - புதிய ஸ்மார்ட்போன் மூலம், பழைய ஸ்மார்ட்போனின் திரையில் காணப்படும் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இனி சாட்-களை தேர்வு செய்து அனுப்பலாம்.

    - டிரான்ஸ்பர் ஆக வேண்டிய புதிய ஸ்மார்ட்போனில் தகவல்களை பெறுவதற்கு Accept ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி சாட் டிரான்ஸ்பர் முடிக்கப்பட்டு விடும்.

    இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாட் டிரான்ஸ்பர் வசதி இரு சாதனங்களிடையே நடைபெறுகிறது. சாட் டிரான்ஸ்பின் போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிக ஃபைல் சைஸ் கொண்ட தரவுகளை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    • இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 839 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 17 விலையில் சோட்டா ஹீரோ பேக் சலுகைகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் புதிய சலுகை வி செயலியில் இருந்து ரிசார்ஜ் செய்யும் வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் இதனை வலைதளம் மற்றும் இதர செயலிகளில் ரிசார்ஜ் செய்ய முடியாது.

    பலன்கள்:

    வோடபோன் ஐடியா ரூ. 839 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் மேலும் சில பலன்களும் வழங்கப்படுகிறது.

    அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை பயன்படுத்தாத டேட்டாவினை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் பிரீமியம் சந்தா இந்த சலுகையுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 2ஜிபி வரையிலான டேட்டா பேக்கப் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த சலுகை வி வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது.

    • சாம்சங் கேலக்ஸி S21 FE மாடல் 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் 2023 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. சில நாடுகளில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S21 FE மாடலை மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவலை டிப்ஸ்டரான தருன் வட்சா வெளியிட்டுள்ளார். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S21 FE மாடலை 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.

     

    இதில் எக்சைனோஸ் 2100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி S21 FE மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் ஸ்னாப்டிராகன் வேரியன்ட் அடுத்த மாதம் (ஜூலை) அறிமுகமாகும் என்று வட்சா தெரிவித்துள்ளார்.

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி S21 FE விலை ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. பிராசஸர் தவிர இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.

    • கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள புதிய முயற்சி.
    • ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை இதனை உண்மையாக்கும் வகையில் உள்ளது.

    சாட்ஜிபிடி சேவையின் திறன்களை கொண்ட ஏஐ சாட்பாட் ஒன்றை கணினியியல் துறை பாடப்பிரிவுக்கு ஆசிரியராக நியமனம் செய்ய ஹார்வார்டு பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டு வரும் வரிவுரையாளர்கள், ஏஐ சாட்பாட் ஒபன்ஏஐ நிறுவனத்தின் அதிநவீன சாட்ஜிபிடி 3.5 அல்லது ஜிபிடி 4 மாடல்களை தழுவி உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

     

    கல்வித்துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன்படி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஏஐ சாட்பாட் டீச்சர் செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட இருக்கிறது.

    ''கணினியியல் துறையின் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு ஏஐ சாட்பாட் 1:1 ஆசிரியர்: மாணவர் வீதம் வழங்கப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு இது தொடர்பான மென்பொருள் டூல்கள் வழங்கப்பட இருக்கிறது. இவை 24/7 நேரமும் பயன்படும் என்பதோடு, மாணவர்களுக்கு சிறப்பாகவும் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் டேவிட் மலன் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் டெக்னோ 20 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

    டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    கடந்த மாதம் தான் டெக்னோ மொபைல் தனது கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் கேமான் 20, கேமான் 20 ப்ரோ 5ஜி மற்றும் கேமான் 20 பிரீமியர் 5ஜி உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். இவற்றில் கேமான் 20 ப்ரோ 5ஜி, சிறப்பான மொபைல் போட்டோகிராபி வழங்குவதற்கு பெயர் பெற்றுள்ளது.

     

    தற்போதைய குறுகிய கால விலை குறைப்பின் மூலம் டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி முன்பை விட வாங்குவதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விலை குறைப்பை பயன்படுத்தி தலைசிறந்த கேமரா அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும் என்று டெக்னோ மொபைல் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    தள்ளுபடி விவரங்கள்:

    ஜூன் 30-ம் தேதி வரை டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களுக்கும் பொருந்தும். விலை குறைப்பின் படி பயனர்கள் டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் வெல்கின் மற்றும் செரினிட்டி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.

     

    டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்

    அதிகபட்சம் 16 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    64MP பிரைமரி கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபிளாஷ் சார்ஜிங்

    • ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பற்றிய புது தகவல் வெளியானது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி விட்டது. தற்போது ஐபோன் சீரிஸ் வெளியீடு நெருங்கி வருவதை அடுத்து, மேலும் அதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 2023 ஐபோன் மாடல்கள் டிசைன் மற்றும் ஹார்டுவேரில் அதிக மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பழைய மியூட் ஸ்விட்ச் நீக்கப்பட்டு, புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தகவல் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

     

    ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டு இருக்கும் ஐபோன் கேஸ் புகைப்படங்களில், இதன் டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பட்டன் பொருத்தப்படும் இடம் மாற்றப்பட இருக்கிறது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளும். ஐபோன் கேஸ் ரென்டர்களில் புதிய ஐபோன் சற்று அகலமான, வட்ட வடிவம் கொண்ட பட்டன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக பிரத்யேக கஸ்டம் பட்டன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஐபோன் மாடலில் கேமராவை இயக்கவும், போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய புதிய பட்டன் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா பம்ப் சற்றே பெரியதாக இருக்கும் என்றும், இதில் மேம்பட்ட கேமரா சென்சர்கள் வழங்கப்படுகின்றன. 

    • நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • நத்திங் போன் 2 மாடல் அந்நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

    நத்திங் நிறுவனம் ஜூலை 11-ம் தேதி தனது நத்திங் போன் 2 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ஜூன் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கும் என்று நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    முன்பதிவு சலுகை விவரங்கள்:

    நத்திங் இயர் ஸ்டிக் மாடலின் ஸ்டாக் இருக்கும் வரை 50 சதவீதம் தள்ளுபடி

    நத்திங் அக்சஸரீ பேக்கேஜுக்கு 50 சதவீதம் தள்ளுபடி

    முன்னணி வங்கிகள் வழங்கும் உடனடி கேஷ்பேக் பலன்கள்

    புதிய நத்திங் போன் 2 மாடலுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    ஜூலை 11-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து ஜூலை 20 நள்ளிரவு 11.59 மணிக்குள் மீண்டும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வேரியண்டை தேர்வு செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை செலுத்தி முன்பதிவு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    விற்பனை துவங்கிய பிறகு நத்திங் போன் 2 மாடலை வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் நத்திங் போன் 2 மாடலின் விற்பனை ஜூலை 21-ம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் நத்திங் போன் 1 விற்பனை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்க அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்.
    • ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்யலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது கிரெடிட் கார்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இது ஆப்பிள் கார்டு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவை, அந்நாட்டு சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் உடன் இணைந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்குவதற்காக இந்திய வங்கிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஹெச்டிஎப்சி வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஜகதீசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் கிரெடிட் கார்டு தொடர்பானதா அல்லது தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் வழங்கி வரும் யுபிஐ சார்ந்த பேமன்ட் வழங்குவதற்காகவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவில் வங்கிகள் மட்டுமே கிரெடிட் கார்டுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்களில் பேமன்ட் செய்வதற்காக ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. ஆப்பிள் மட்டுமின்றி கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் நிறுவனங்களும் பேமன்ட் பிரிவில் தங்களது சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    • சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை மாணவர்கள் சிறப்பு விலையில் வாங்கிடலாம்.
    • மேக்புக், ஐபேட் மற்றும் மேக் மினி போன்ற சாதனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. இவை பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக் சாதனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

    நேற்று (ஜூன் 22) துவங்கிய சிறப்பு சலுகைகள் வழங்கும் பேக் டு யுனிவர்சிட்டி திட்டம் அக்டோபர் 02-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விலையில் வாங்கிட முடியும். தேர்வு செய்யப்பட்ட மேக் சாதனங்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவைகளை பெற முடியும்.

    ஆப்பிள் கேர் பிளஸ் சேவையின் கீழ் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி சலுகையின் கீழ் உள்ள சாதனங்கள் அனைத்திற்கும் விசேஷ விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு மாதம் ரூ. 59 விலையிலும் வாங்கிடலாம்.

    மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக் 24 இன்ச், மேக் மினி, ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ஏர் 5th Gen உள்ளிட்ட சாதனங்களை இந்த சலுகையில் வாங்கிட முடியும். மேக்புக் வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் Gen 2 மாடல் வழங்கப்படுகிறது.

    ஐபேட் ஏர் / ஐபேட் ப்ரோ மாடல் வாங்கும்போது ஆப்பிள் பென்சில் 2nd Gen இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ஆப்பிள் பிகேசி, சகெட் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    ×