என் மலர்

  நீங்கள் தேடியது "Relaince Jio"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பார்த்து ரசிக்க ஜியோ புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. #Jio  ஸ்டார் இந்தியாவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு இருப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஜியோ டி.வி. மற்றும் ஹாட்ஸ்டார் மூலம் பயனர்கள் இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

  ஜியோ மற்றும் ஸ்டார் இந்தியா இடையேயான ஒப்பந்தத்தின் படி டி20, சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் பிரீமியர் தொடர்களை ஜியோ டி.வி. மற்றும் ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம்.

  முன்னதாக இந்தியாவிலேயே முதல் முறையாக இன்டராக்டிவ் ஸ்போர்ட் அனுபவத்தை ஜியோ டி.வி. செயலியில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கியது. இந்த சேவையை கொண்டு பயனர்கள் தாங்கள் விரும்பும் கேமரா கோணத்திற்கு திருப்பிக் கொள்வது, மைக் தேர்வு செய்வது மற்றும் போட்டிகளை பார்த்து ரசிக்க குறிப்பிட்ட மொழிகளில் ஒன்றை தேர்வு செய்வது போன்றவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

  இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது ஜியோ கிரிக்கெட் பிளே எனும் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியுடன் ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை கிரிக்கெட் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இத்துடன் கிரிக்கெட் தொடரின் போது இலவச ஆட்-ஆன் சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
  ×