என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
- விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.
டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.
இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.
விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சலுகை விரைவில் துவங்க இருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதில் ஸ்மார்ட்போன், மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நாளை (ஜூலை 15) துவங்க இருக்கும் ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் பிரைம் டே சேல் நடைபெற இருக்கும் அதே வேளையில், ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் நடைபெறுகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15 மற்றும் ஜூலை 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி, ப்ளிப்கார்ட் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அழகுசாதன பொருட்கள், மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ்-க்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கமான சலுகைகள் தவிர, நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு ஸ்பிலாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு பொருட்களை வாங்கும் போது பத்து சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்ப்படுகிறது.
- ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.
- ரெட்மி 12 பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் மைக்ரோசைட் மூலம் வெளியாகும்.
ரெட்மி 12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வெளியாகி உள்ளது.
அமேசான் மட்டுமின்றி புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போன் Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அழகிய சாதனம் என்று சியோமி நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்காக பாலிவுட் நடிகை திஷா படானியை விளம்பர தூதராக சியோமி நியமனம் செய்து இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் க்ரிஸ்டல் கிளாஸ் கொண்டிருக்கும் என்று மைக்ரோசைட்-இல் தெரியவந்துள்ளது. ரெட்மி 12 பற்றிய இதர விவரங்கள் மைக்ரோசைட் மூலம் வரும் நாட்களில் தெரிவிக்கப்பட இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ சென்சார், கிளாஸ் பேக், IP53 தர ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்தனர்.
- இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்த முறை பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ் மற்றும் ஒகே ருபீ உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாக, ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். மேலும் கொடுத்த கடனை திரும்பி வசூலிக்க சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பயனர்களுக்கு அதிவேகமாக கடன் கொடுக்கும் செயலிகள் கணிசமான அளவில் அதிகரித்து பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் கரணமாக நிதி சார்ந்த முன்னணி செயலிகள் பட்டியலில் டாப் 20 இடத்தை அடைந்தது. பல்வேறு பயனர்கள், கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.
மேலும் கடன் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் பெற்ற கடன் விவரங்களை, அவர்களது காண்டாக்ட்களுக்கு அனுப்பி விடுவதாக கடன் செயலிகள் மிரட்டியதாகவும், குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, ஆப்பிள் டெவலப்பர் திட்ட ஒப்பந்தத்தை இந்த கடன் செயலிகள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வகையில், போலி விளம்பரங்கள் மூலம் கடன் கொடுத்து, பிறகு வாடிக்கையாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வந்த கடன் செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து முடக்கப்பட்டன.
- வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- சமீபத்தில் வோடபோன் ஐடியா ரூ. 24 மற்றும் ரூ. 49 விலை கொண்ட சூப்பர் ஹவர் டேட்டா பேக் சலுகைகளை அறிவித்தது.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 198 மற்றும் ரூ. 204 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் காம்போ / வேலிடிட்டி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இரு சலுகைகளிலும் டாக்டைம் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகின்றன.
ரூ. 198 சலுகையில் ரூ. 198 மதிப்புள்ள டாக்டைம், அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் 50 எம்பி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதே போன்று ரூ. 204 விலையில் கிடைக்கும் மற்றொரு ரிசார்ஜ் சலுகையில் இதே போன்ற பலன்கள் ஒரு மாத கால வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

தற்போதைக்கு இந்த சலுகைகள் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள ரிசார்ஜ் சலுகை வேலிடிட்டி நிறைவு பெறுவதற்குள் ரிசார்ஜ் செய்யவில்லை எனில், இன்கமிங் அழைப்புகள் நிறுத்தப்படும். இதனை தவிர்க்க ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.
அதிக பலன்கள் இல்லை என்ற போதிலும் இந்த சலுகைகள் சிம் கார்டை ஆக்டிவேடட் நிலையில் வைத்திருக்க உதவும். மேலும் இன்கமிங் அழைப்புகளை தொடர்ந்து பெற முடியும். சமீபத்தில் தான் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 24 மற்றும் ரூ. 49 விலை கொண்ட சூப்பர் ஹவர் டேட்டா பேக் சலுகைகளை அறிவித்து இருந்தது.
- பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும்.
- இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்தனர்.
மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் சமூக வலைதள சேவை வெளியான ஐந்து நாட்களில் 100 மில்லியன் பயனர்களை பெற்று அசத்தி இருக்கிறது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். இத்தகைய மைல்கல்லை எட்டியதில் திரெட்ஸ் ஆப் சாட்ஜிபிடி-யை பின்னுக்குத் தள்ளியது.
திரெட்ஸ் சேவையின் பயனர் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராம் செயலியிலேயே அறிந்து கொள்ள முடியும். அறிமுகமான இரண்டு மணி நேரத்தில் திரெட்ஸ் ஆப்-ஐ இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருந்தனர்.
பிறகு பயனர் எண்ணிக்கை படிப்படியாக 5 மில்லியன், 10 மில்லியன், 30 மில்லியன் மற்றும் 70 மில்லியன் வரை சீராக அதிகரித்தது. இத்தகைய டவுன்லோட்கள் மூலம் திரெட்ஸ் செயலி, மெட்டா எதிர்பார்ப்புகளை கடந்து அமோக வரவேற்பை பெற்று இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
- ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
- டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 19 மற்றும் ரூ. 29 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவினை வழங்குகிறது. இவை முறையே 1.5 ஜிபி மற்றும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
இரு சலுகைகளுக்கும் எவ்வித வேலிடிட்டியும் இல்லை. எனினும், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகை நிறைவடையும் போது, இதற்கான வேலிடிட்டி நிறைவுக்கு வந்துவிடும். இந்த ஆட்-ஆன் டேட்டா பேக் சலுகையில் கிடைக்கும் டேட்டா, ஏற்கனவே உள்ள சலுகையில் வழங்கப்படும் டேட்டா தீர்ந்தால் தான் பயன்படுத்தப்படும்.

ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவற்றை ரிசார்ஜ் செய்த வரிசையில் தான் பயன்படுத்த முடியும். முதலில் ரிசார்ஜ் செய்த வவுச்சர் தீர்ந்த பிறகு தான், அடுத்த வவுச்சரை பயன்படுத்தலாம். டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இரண்டு சலுகைகள் தவிர ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ரூ. 15, ரூ. 25, ரூ. 61, ரூ. 222 மற்றும் ரூ. 121 விலைகளில் ஆட்-ஆன் சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி, 50 ஜிபி மற்றும் 12 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகலும் ஜியோ வலைதளம் மற்றும் ஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அம்சம் ஸ்டிக்கர் சஜெஷன் என்று அழைக்கப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
2018 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கும் ஸ்டிக்கர்களை இம்போர்ட் செய்து பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு செய்து குறிப்பிட்ட எமோஜிக்களை பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப்-இல் வழங்கப்படும் புதிய ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பீட்டா அப்டேட்-இல் புதிய ஸ்டிக்கர் டிரே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படும். இந்த டிரே-இல் எமோஜியுடன் தொடர்புள்ள ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் பயனர்கள் சூழலுக்கு ஏற்ற சரியான ஸ்டிக்கர்-ஐ தேர்வு செய்து அனுப்ப முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பில்ட்-இன் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து கப்பி (Cuppy) ஸ்டிக்கர் பேக்-ஐ டவுன்லோடு செய்து, சாட் பாரில் எமோஜியை டைப் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டிக்கர் சஜெஷன் மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலியில் வழங்குவதற்கு பல்வேறு புதிய அம்சங்களை டெஸ்டிங் செய்து வருகிறது.
- அமெரிக்க கருவூலத்துறை மந்திரி சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
- OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது.
கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான பணியை செய்வது இயங்குதளம் (Operating System). கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர்பெற்று இயங்குவதற்கு இயங்குதளம் அவசியமானது. இந்த தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் விண்டோஸ், மேக்ஓஎஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேனட் யெல்லன் சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த புதிய இயங்குதளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகள் சில அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Windows மற்றும் MacOS அமைப்புகளின் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போன்று அல்லாமல், OpenKylin பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளை பெற முடியும். அத்துடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது. இது பிரபலமான ஓபன் சோர்ஸ் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும்.
மெட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சமூக வலைதள சேவையில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் என்று மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சேவை துவங்கிய ஏழு மணி நேரங்களில் இத்தனை பேர் இணைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய டுவிட்டர் தளத்திற்கு நட்பு ரீதியிலான போட்டியாளர் திரெட்ஸ் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும். இத்துடன் பல்வேறு அம்சங்கள் டுவிட்டர் தளத்தில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நபர்களை பின் தொடர்வதற்காக இன்ஸ்டாகிராம் அல்காரிதம் பயன்படுத்தி குறிப்பிட்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இத்துடன் பாலோவர்-ஒன்லி ஃபீட் அம்சத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது பயனர்கள் பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும். திரெட் சேவையில் பயனர்களை ஃபாலோ மற்றும் அன்-ஃபாலோ செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்றே இந்த தளமும், ப்ரோபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
- ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
- திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.
டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திரெட்ஸ் தொடக்கம்:
கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.

பாடுபடும் டுவிட்டர்:
டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.

மார்க் விருப்பம்:
இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.

போட்டி நிறுவன சேவைகள்:
புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.
எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.
- வோடபோன் ஐடியா நிறுவனம் பயனர்களுக்கு அசத்தல் சலுகைகளை மிக குறைந்த விலையில் அறிவித்தது.
- புதிய வோடபோன் ஐடியா சலுகைகள் பயனர்களுக்கு டேட்டா பலன்களை வழங்குகின்றன.
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய சாஷெட்களை அறிவித்து இருக்கிறது. இவை சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே என்று அழைக்கப்படுகின்றன. இந்த சலுகைகள் பிரீபெயிட் பயனர்கள் தங்களின் தினசரி டேட்டா அளவை கடந்த பிறகும், எவ்வித இடையூறும் இன்றி டேட்டா பயன்படுத்த அனுமதிக்கிறது.

சூப்பர் ஹவர் பேக் விலை ரூ. 24 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பயனர்களுக்கு ஒர மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. சூப்பர் டே சலுகை விலை ரூ. 49 ஆகும். இதில் ஒரு நாள் வேலிடிட்டியில் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
டேட்டா தவிர இரு சலுகைகளிலும், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. சாஷெட் சலுகை என்பதால் இதில், டேட்டா பலன் மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர்கள் அவசர காலத்திற்கு டேட்டா பயன்படுத்த இவைகளை ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இரு சலுகைகளையும் பெறுவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். இந்த சலுகைகளை பயனர்கள் வி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் செயலியில் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும். இரு சலுகைகளும் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.






