என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வழக்கத்தில் சிறு மாற்றம்.. முன்கூட்டியே அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12.. லீக் ஆன புது தகவல்..!
    X

    கோப்புப் படம் 

    வழக்கத்தில் சிறு மாற்றம்.. முன்கூட்டியே அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12.. லீக் ஆன புது தகவல்..!

    • ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.
    • ஒன்பிளஸ் 12 மாடலில் 32MP செல்ஃபி கேமரா, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் 12 வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    எனினும், புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 5400 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கோப்புப் படம்

    இதுபற்றி டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 12 மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் 12 மாடலில் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 14, 6.7 இன்ச் புளூயிட் LTPO AMOLED டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 16 ஜிபி LPDDR5X ரேம், UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    கோப்புப் படம்

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் பன்ச் ஹோல் கட்-அவுட், அலர்ட் ஸ்லைடர், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5400 எம்ஏஹெச் பேட்டரி, , 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×