என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வாங்கலாம்.
    அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் இணையதள பக்கத்துக்கு சென்று வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் மூலம் அன்புக்குரியவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அந்த பரிசு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கி, அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளத்தை அமேசான் ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த ஸ்டோரில் புதிய மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையல் உபகரணங்கள், ஆடை அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்க முடியும்.

    மேலும், 18 முதல் 24 வயதுடைய வாடிக்கையாளர்கள் தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். பிரைமுக்கு ‘சைன் அப்’ செய்து தங்கள் வயதை சரிபார்த்து உடனடியாக 50 சதவீதம் கேஷ்பேக் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம்.

    கோப்புப்படம்

    வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் பாம்பே சேவிங் கம்பெனியில் இருந்து ஆண் மற்றும் பெண்களுக்கான அற்புதமான பரிசுகளின் வகைகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதேபோல், காட்பரி டைரி மில்கின் பிரீமியம் சாக்லேட் ரூ.617-க்கும், 15 வகையான புதிய ரோஜாக்களுடன் மலர் பூங்கொத்து ரூ.588-க்கும், அன்புக்குரியவர்களை கவரும் விதமாக சாப்ட் டெடி பியர் ரூ.399-க்கும், சாம்சங் கேலக்சி எம் 02 எஸ். மாடல் செல்போன் ரூ.9 ஆயிரத்து 999-க்கும் என ஏராளமான பரிசு வகைகள் கிடைக்கிறது.

    மேலும், கடிகாரம், ஆபரணங்கள், கைப்பைகள், மணிபர்சுகள், செல்போன்கள், ஸ்பீக்கர்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், அழகு சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஸ்டோரில் வாங்க முடியும். காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுடன் பரிசு பொருட்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தி தந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் அமேசான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் உள்ள பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.0 வழங்கப்பட்டு வருகிறது. 

    புது அப்டேட் கேலக்ஸி ஏ51 பயனர்களுக்கு மேம்பட்ட யுஐ, முன்பை விட சிறப்பான பிரைவசி அம்சங்கள், சாட் பபிள்கள், பேரண்டல் கண்ட்ரோல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என் பல்வேறு அம்சங்கள் கிடைக்கும். இத்துடன் பிப்ரவரி மாதத்திற்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.

     ஆண்ட்ராய்டு 11

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் இந்திய வெளியீடு பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மூன்று ஆண்டு ஆண்ட்ராய்டு அப்கிரேடு பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இந்த மாடல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படலாம். 

    இந்தியாவில் போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனித்துவம் பெற்று ஒரு ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு போக்கோ Anniversary Sale ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இந்த விற்பனையில் போக்கோ எக்ஸ்3, போக்கோ எம்2 மற்றும் போக்கோ சி3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. போக்கோ எக்ஸ்3 அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பிரீபெயிட் பரிமாற்றங்களுக்கு ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     போக்கோ சி3

    போக்கோ சிறப்பு விலை விவரங்கள்

    போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 64 ஜிபி) ரூ. 14,499
    போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 128 ஜிபி) ரூ. 15,499
    போக்கோ எக்ஸ்3 (8ஜிபி + 128 ஜிபி) ரூ. 17,499
    போக்கோ எம்2 ப்ரோ (4ஜிபி + 64 ஜிபி) ரூ. 11,999
    போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 64 ஜிபி) ரூ. 12,999
    போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 128 ஜிபி) ரூ. 14,999
    போக்கோ எம்2 (6ஜிபி + 64 ஜிபி) ரூ. 9,499
    போக்கோ எம்2 (6ஜிபி + 128 ஜிபி) ரூ. 10,499
    போக்கோ சி3 (4ஜிபி + 64 ஜிபி) ரூ. 7,999

    இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 மற்றும் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்கள் முறையே பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக போக்கோ தெரிவித்து உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மேம்பட்ட அல்ட்ரா வைடு கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஐபோன் 13 புதிய அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோனில் ஆப்பிள் மேம்பட்ட 7 பிக்சல் வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கலாம் என தெரிகிறது.

    இந்த சென்சார் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும். ஆப்பிள் நிறுவனத்திற்கு லென்ஸ் பாகங்களை வழங்கும் சன்னி ஆப்டிக்கல் ஐபேட் 5பி லென்ஸ் பாகங்களை இந்த ஆண்டு வினியோகம் செய்ய இருக்கிறது. 

     ஐபோன்

    இதே நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கு 7பி வைடு ஆங்கில் லென்ஸ்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. 7பி லென்ஸ் இருப்பதால் ஐபோன் 13 அல்ட்ரா-வைடு லென்ஸ்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் தற்போதைய ஐபோன் 12 மாடல்களில் இருப்பதை விட அகலமான அப்ரேச்சர் இருக்கும் என்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.

    புதிய அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் ஐபோன் 13 சீரிசில் அனைத்து மாடல்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த லென்ஸ் இரண்டு டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்படும் என மிங் சி கியோ கணித்திருக்கிறார்.
    ஏர்டெல் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் வெளியானதாக கூறும் தகவல்களுக்கு பதில் அளித்து இருக்கிறது.


    இணையத்தில் பயனர் விவரங்கள் அம்பலமாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தனிநபர் துவங்கி ஒவ்வொரு நிறுவனங்களும் டேட்டாவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்த நிலையில், ஏர்டெல் பயனர் விவரங்கள் இணையத்தில் வெளியானதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏர்டெல் வாடிக்கையாளர்களில் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    கோப்புப்படம்

    இத்தனை லட்சம் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் முகவரி, நகரம், ஆதார் எண் மற்றும் பாலிணம் போன்ற விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.

    இதுகுறித்து பதில் அளித்த ஏர்டெல் நிறுவனம், பயனர் விவரங்கள் வெளியானதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இணையத்தில் விற்பனைக்கு வந்ததாக கூறும் விவரங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமானவை கிடையாது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

    வாடிக்கையாளர்களின் விவரங்களை பாதுகாப்பதில் ஏர்டெல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பெருமையாக உணர்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய குறுகிய காலக்கட்டத்தில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.


    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ 5ஜி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் மதிப்பு ரூ. 400 கோடிகளை கடந்து இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்ஐ 10ஐ 5ஜி விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கியது குறிப்பிடத்தக்கது. 

    விற்பனை மட்டுமின்றி கூகுளில் 2021 ஜனவரி மாதத்தில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் எம்ஐ 10ஐ 5ஜி இடம்பெற்று இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது. வெளியான சில வாரங்களில் அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான சாதனங்கள் பட்டியலிலும் எம்ஐ 10ஐ 5ஜி இடம்பிடித்தது.

    இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்ஐ 10ஐ 5ஜி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட குறைந்த விலை மாடலாக வெளியானது. 

     சியோமி

    சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4820 எம்ஏஹெச் பேட்டரி
    - 33வாட் பாஸ்ட் சார்ஜிங்

    காதலர் தினத்தை ஒட்டி வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் அசத்தல் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவல் ஒன்று அதன் பயனர்கள் தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது. 

    ஒருவழியாக தாஜ் ஓட்டலில் ஏழு நாட்களுக்கு இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை பெற்று இருக்கிறேன் என கூறும் தகவல் மற்றும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. 

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இணைய முகவரியை க்ளிக் செய்ததும், `காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தாஜ் ஓட்டல் சார்பில் 200 பரிசு கூப்பன்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஏழு நாட்கள் எந்த தாஜ் ஓட்டலிலும் இலவசமாக தங்க முடியும். இதற்கு சரியான பரிசு பெட்டியை திறக்க வேண்டும்.' எனும் கூறும் தகவல் அடங்கிய வலைப்பக்கம் திறக்கிறது.

    பின் பரிசு கூப்பனை க்ளிக் செய்த பின், பயனர்கள் பரிசை பெற குறுந்தகவலை ஐந்து க்ரூப் அல்லது 20 அக்கவுண்ட்களுக்கு அனுப்ப கோருகிறது. உண்மையில் இது மால்வேர் அடங்கிய வலைதளமாக இருக்கலாம்.

    இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து தாஜ் ஓட்டல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், பயனர்கள் வைரல் தகவலை நம்பி வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ள தகவல் பொய் என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஏற்பட்ட சிக்கலை வாட்ச் கொண்டு சரி செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    உலகில் கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு உச்சநிலையில் இருந்த போது, ஐபோன் பயனர்கள் முகக்கவசம் அணிந்து இருந்த போது பேஸ் ஐடி அம்சத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்சமயம் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் பேஸ் ஐடி அம்சத்தை ஆப்பிள் வாட்ச் அணிந்திருக்கும் போது இயக்கும் வசதியை வழங்குகிறது.

    அதாவது ஆப்பிள் வாட்ச் அணிந்து இருப்பவர்கள் முகக்கவசத்துடன் தங்களின் ஐபோனை பேஸ் ஐடி கொண்டு அன்-லாக் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது முக அங்கீகாரம் செய்யும் அம்சம் பயனர்கள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உணர்ந்து செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

     ஆப்பிள் வாட்ச்

    இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்புவோர் அதனை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த அம்சம் செயல்படும் போது வெற்றிகரமாக அன்லாக் செய்யப்பட்டதை ஆப்பிள் வாட்ச் ஹேப்டிக் முறையில் பயனர்களுக்கு உணர்த்தும். எனினும், இந்த அம்சம் போனினை அன்லாக் செய்வதற்காகவே வழங்கப்படுகிறது. 

    இதை கொண்டு ஆப் ஸ்டோர் பர்சேஸ் மேற்கொள்ள முடியாது. இந்த அம்சம் ஐஒஎஸ் 14.5 டெவலப்பர் பீட்டாவில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பேரண்சி அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட இருக்கிறது. இந்திய சந்தைக்கென தனித்துவம் மிக்க ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் நிறுவன துணை தலைவர் சன்மீத் கோச்சர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது..,

    "இந்தியா எங்களுக்கு மிகமுக்கிய சந்தை ஆகும். முதற்கட்டமாக இந்திய சந்தைக்கென பிரத்யேக சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். அடுத்து 5ஜி பிரிவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் குறைந்த விலையில் 5ஜி சாதனங்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறோம்," 

    "இந்தியாவில் உற்பத்தி ஆலையை கட்டமைப்பது பற்றி இதுவரை எந்த திட்டமும் இல்லை. தொடர்ந்து குவால்காம் மற்றும் கூகுள் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." 

    என அவர் தெரிவித்தார்.
    ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    டேட்டா மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக பிஎஸ்என்எல் காம்போ சலுகை பலன்கள் மாற்றப்பட்டு தினமும் 250 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்பட்டது.

     கோப்புப்படம்

    புதிய சலுகையை ஏர்டெல் ரூ. 598 சலுகையுடன் ஒப்பிடும் போது, பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று வி ரூ. 555 சலுகையும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் மட்டுமே குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது.

    4ஜி நெட்வொர்க் இல்லாததால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இருந்து விலக துவங்கி உள்ளனர். இந்நிலையில், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு அனுமதி வழங்க இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலி பயன்பாடு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தொடர்ந்து பார்ப்போம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் செயலியில் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பயனர்கள் அனுமதி வழங்காவிட்டால், செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கைவிட மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. 

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவீர்களா என்ற கோணத்தில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்த இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் அசத்தலான பதிலை வழங்கி உள்ளனர்.

     கோப்புப்படம்

    ஆய்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டுமா என்பதை பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர். இதர 28 சதவீதம் பேர் மே மாதம் புது பிரைவசி பாலிசி மாற்றப்பட்டால் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய திட்டமிடுவதாக தெரிவித்தனர்.

    குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனமான சைபர்மீடியா ரிசர்ச் இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறது. அதன்படி ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 41 சதவீதம் பேர் டெலிகிராம் செயலியையும், 35 சதவீதம் பேர் சிக்னல் செயலியையும் பயன்படுத்த போவதாக தெரிவித்து உள்ளனர். 

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றான தளங்களை பொருத்தவரை பயனர்கள் டெலிகிராம் செயலி மீது அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வில் எட்டு நகரங்களை சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டு பதில் அளித்தனர்.
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆப்பிள் சிஇஒ டிம் குக் கடிதம் எழுதியுள்ளார். இதன் விவரங்களை பார்ப்போம்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று சில நாட்களே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய அதிபருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கைகளுக்கு பாராட்டு மற்றும் எதிர்ப்பு என பலதரப்பட்ட கருத்துக்களை டிம் குக் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    அந்த வகையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை டிம் குக் பாராட்டி உள்ளார். ஆப்பிள் சிஇஒ மட்டுமின்றி டிம் குக் பிஸ்னஸ் ரவுண்ட்-டேபிள் எனும் அமைப்பின் நிர்வாக இயக்குனராகவும் பதவி வகிக்கிறார்.

     ஆப்பிள்

    இந்த அமைப்பு அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மை உள்ளிட்டவைகளுக்கு ஆதரவான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக டிம் குக் பைடனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    டிம் குக் எழுதியிருக்கும் கடிதத்தில், 

    “இந்த பிரச்சினை மட்டுமின்றி நம் நாட்டை மேம்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் வளமிக்கதாக மாற்ற உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம்.” 

    என தெரிவித்து இருக்கிறார்.
    ×