search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    இனியும் பயன்படுத்துவோமா? வாட்ஸ்அப் விவகாரத்தில் இந்தியர்கள் அளித்த பதில்

    வாட்ஸ்அப் செயலி பயன்பாடு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தொடர்ந்து பார்ப்போம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் செயலியில் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பயனர்கள் அனுமதி வழங்காவிட்டால், செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கைவிட மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. 

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவீர்களா என்ற கோணத்தில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்த இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் அசத்தலான பதிலை வழங்கி உள்ளனர்.

     கோப்புப்படம்

    ஆய்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டுமா என்பதை பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர். இதர 28 சதவீதம் பேர் மே மாதம் புது பிரைவசி பாலிசி மாற்றப்பட்டால் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய திட்டமிடுவதாக தெரிவித்தனர்.

    குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனமான சைபர்மீடியா ரிசர்ச் இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறது. அதன்படி ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 41 சதவீதம் பேர் டெலிகிராம் செயலியையும், 35 சதவீதம் பேர் சிக்னல் செயலியையும் பயன்படுத்த போவதாக தெரிவித்து உள்ளனர். 

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றான தளங்களை பொருத்தவரை பயனர்கள் டெலிகிராம் செயலி மீது அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வில் எட்டு நகரங்களை சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டு பதில் அளித்தனர்.
    Next Story
    ×