என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த ஜான் தாம்ப்சன் தற்போது இயக்குனராக பொறுப்பேற்று இருக்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெல்லா தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்று இருக்கிறார். தலைவராக இருந்துவந்த ஜான் தாம்ப்சன் மூத்த இயக்குனராக பதவி ஏற்கிறார்.
2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றது முதல் மைக்ரோசாப்ட் வியாபார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதோடு லின்க்டுஇன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் செனிமேக்ஸ் போன்ற நிறுவனங்களை மைக்ரோசாப்ட் வசதம் கையகப்படுத்தினார்.

தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கும் முன் சத்ய நாதெல்லா அந்நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் இயங்குதளங்கள், கிளவுட் கம்ப்யூடிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார்.
பதவி உயர்வு மட்டுமன்றி, மைக்ரோசாப்ட் தலைவராக பொறுப்பேற்கும் மூன்றாவது நபர் என்ற பெருமையை சத்ய நாதெல்லா பெற்று இருக்கிறார். முன்னதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஜான் தாம்ப்சன் மட்டுமே இந்நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதை தொடர்ந்து முதல் முறையாக இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பணி மாற்றம் நடைபெற்று இருக்கிறது. நிர்வாக குழுவில் இருந்து விலகிய பில் கேட்ஸ் தொண்டு பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான சோதனையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் துவங்கி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பையில் 5ஜி சேவையை வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை குர்கிராமில் துவங்கியது. ஏர்டெல் சோதனையில் 1Gbps வரையிலான டவுன்லோட் வேகம் கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குஜராத், மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் 5ஜி சோதனையை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் 5ஜி சோதனைக்காக தனது சொந்த தொழில்நுட்பங்களை ஜியோ பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் 5ஜி வழங்க எரிக்சன் நிறுவனத்துடன், பூனேவில் சோதனையை மேற்கொள்ள நோக்கியா நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது. இதேபோன்று குஜராத்தில் சோதனையை மேற்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ சாம்சங் நிறுவனத்துடன் இணைகிறது.

இந்தியாவில் ஆறு மாத காலத்திற்கு 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்த ஆண்டு மே மாதத்தில் அனுமதி அளித்தது. இதற்கென 700MHz, 3.2 முதல் 3.6GHz மற்றும் 24.25 முதல் 28.5GHz பேண்ட்களை ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ஒத்துக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அந்த மாதத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி இசட் போல்டு 3 அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி S21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டு பின் அதனை மாற்றி இருப்பதாக கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து போக்கோ நிறுவனம் பயனர்களுக்கு பதில் அளித்து இருக்கிறது.
இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைலில் கேமரா இயங்கவில்லை என குற்றஞ்சாட்டி வந்தனர். பயனர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்களில் 0.2 சதவீத மாடல்களில் மட்டுமே இந்த கோளாறு ஏற்பட்டு இருப்பதாக போக்கோ தெரிவித்து இருக்கிறது.
ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிரச்சினையை உறுதிப்படுத்திய போக்கோ, இதனை சரி செய்ய பயனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவித்து இருக்கிறது.
Dear POCO users, A few of you have approached us with a 'camera not working' issue on the POCO X2. We have detailed out the steps that need to be followed to fix it. Please go through the letter to know more. pic.twitter.com/Najbl8Pq1n
— POCO India Support (@POCOSupport) June 15, 2021
அதன்படி ஸ்மார்ட்போனில் settings, சர்ச் பாரில் Manage apps என டைப் செய்து Camera ஆப்ஷனில் Clear Data மற்றும் Clear all data – OK ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த செட்டிங்களை மாற்றிவிட்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
சியோமி நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சியோமியின் புது மடிக்கக்கூடிய சாதனம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புது சியோமி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் உள்புற ஹின்ஜ் மற்றும் இரண்டு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

உள்புறம் சாம்சங் உற்பத்தி செய்யும் பெரிய டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 90 ஹெர்ட்ஸ் சிறு டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்படுமா அல்லது மற்ற நாடுகளிலும் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய ரூ. 127 பிரீபெயிட் சலுகை அசத்தல் அம்சங்களை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio Freedom Plans சலுகையை தனது பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், ஜியோ செயலிகளுக்கான சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
புது சலுகைகள் துவக்க விலை ரூ. 127 ஆகும். மற்ற சலுகைகளில் தினசரி டேட்டா வழங்கப்படுவதை போன்று புது சலுகையில் தினசரி டேட்டா வழங்கப்படவில்லை. எனினும், இவற்றில் சலுகை முடியும் வரை குறிப்பிட்ட அளவு டேட்டா வழங்கப்படுகிறது. இதனை வேலிடிட்டி முடியும் வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 127 சலுகையில் மொத்தம் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ரூ. 247 ஜியோ சலுகையில் 25 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 447 சலுகையில் 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கும், ரூ. 597 சலுகையில் 75 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியும், ரூ. 2397 சலுகை 365 ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனினை ஜூன் 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் இதே நாளில் அறிமுகமாகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்து உள்ளது.
டீசரின் படி புது ஸ்மார்ட்வாட்ச் SpO2 மாணிட்டரிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. தோற்றத்தில் இது எம்ஐ வாட்ச் ரிவால்வ் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இதில் அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

முன்னதாக எம்ஐ வாட்ச் கலர் சீன சந்தையில அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் இந்திய சந்தையில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எம்ஐ வாட்ச் கலர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இந்தியாவில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை புது ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் ஜிபிஎஸ், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டணட் வசதி, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
தெலுங்கானா மாநிலத்தில் டிரோன்களின் மூலம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை வினியோகம் செய்யும் திட்டம் துவங்கப்பட இருக்கிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து டிரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கும் ஊரக பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஜியோ மேப்பிங், ஷிப்மென்ட் ரூட்டிங், டிராக் அண்ட் டிரேஸ் லொகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்த ஆண்டுகளாக ப்ளிப்கார்ட் உருவாக்கி வந்தவை ஆகும்.
இந்த திட்டம் மூலம் மாநிலத்தினுள் சாலை மூலம் விரைவில் சென்றடைய முடியாத ஊரக பகுதிகளில் மருந்துகளை வேகமாக வினியோகம் செய்ய முடியும். திட்டத்தை செயல்படுத்தும் முன் இதனை ஆறு நாட்களுக்கு சோதனை செய்யப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் போக்கோ எம்3 மாடல் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் சுமார் 5 லட்சம் யூனிட்களை கடந்தது.

இந்த நிலையில், போக்கோ எம்3 விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. விற்பனை துவங்கி சுமார் மூன்று மாதங்களில் போக்கோ எம்3 சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த தகவலை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முந்தைய போக்கோ எம்2 மற்றும் போக்கோ சி3 மாடல்களை போன்றே போக்கோ எம்3 மாடலும் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக கேம் ஸ்டிரீமிங் சாதனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சேவையை ஸ்மார்ட் டிவிக்களுக்கும் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்பாக்ஸ் மற்றும் கேமிங் சேவை குறித்த விவரங்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.

எக்ஸ்பாக்ஸ் அனுபவத்தை ஸ்மார்ட் டிவிக்களில் வழங்க மைக்ரோசாப்ட் உலகின் முன்னணி தொலைகாட்சி உற்பத்தியாளர்களுடன் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் கேமிங் கன்சோல் இன்றி, வெறும் கண்ட்ரோலர்களை மட்டுமே வாங்கினால் டிவிக்களிலேயே கேமிங் செய்யலாம்.
தொலைகாட்சி அல்லது மானிட்டர் மூலம் அதிக கேமிங் பயனர்களை ஈர்க்க கிளவுட் கேமிங் சேவையை வழங்கும் ஸ்டிரீமிங் சாதனங்களை சொந்தமாக உருவாக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வு அந்நிறுவன வலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது. புதிய M1X பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களை ஆப்பிள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
எனினும், புது மேக்புக் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு யூடியூப் வீடியோவில் M1X மேக்புக் ப்ரோ மற்றும் M1X போன்ற குறியீடுகள் இடம்பெற்று இருந்தது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து வெளியாகும் தகவல்களில் சிலர், புது மேக்புக் வெளியீடு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்றும், சிலர் வீடியோவுக்கான SEO-வை மேம்படுத்த ஆப்பிள் இவ்வாறு செய்து இருக்கலாம் என கூறுகின்றனர்.
புது மேக்புக் மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற போதும், M1X பிராசஸர் மற்றும் M1X கொண்ட மேக்புக் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஆப்பிள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் புதிய பிரேவியா X90J ஸ்மார்ட் டிவி காக்னிட்டிவ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
சோனி நிறுவனம் 2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காக்னிடிவ் பிராசஸர் XR-ஐ அறிமுகம் செய்தது. தற்போது இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச், 65 மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
இந்த டிவியில் ஃபுல் அரே பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளது. இதில் உள்ள 4K பேனல் HDR10, டால்பி விஷன் மற்றும் HLG உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்குகிறது. இந்த டிவியில் மொத்தம் நான்கு HDMI போர்ட்கள் உள்ளன.

மேலும் இதில் மினி-ஏவி போக்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஹெட்போன் அவுட், ஆப்டிக்கல் அவுட், வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் IMAX மோட் உள்ளது. இதில் உள்ள லைட் சென்சார்கள் அறையில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப பிக்சர் செட்டிங்களை மாற்றியமைக்கும்.
புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச் விலை ரூ. 1,39,990 ஆகும். இதன் விற்பனை இன்று (ஜூன் 10) துவங்கியது. 65 மற்றும் 75 இன்ச் வேரியண்ட்களின் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.






