என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    போக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2104K10I எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட்போன் போக்கோ F3 GT மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், விரைவில் இது அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

     ரெட்மி கே40 கேமிங் எடிஷன்

    முன்னதாக M2104K10C எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ரெட்மி கே40 கேமிங் எடிஷன் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போனே இந்திய சந்தையில் போக்கோ F3 GT பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    போக்கோ F3 GT மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12.5, 16 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

     ரெட்மி நோட் 10

    அறிமுகமான சில மாதங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,999 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,999 விலையில் அறிமுகமாகி பின் ரூ. 12,499 என மாற்றப்பட்டது.  

    ரெட்மி நோட் 10 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என மாறி இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 இரு வேரியண்ட்களின் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட புதிய விலை எம்ஐ மற்றும் அமேசான் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. விரைவில் ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
    குறைந்த விலையில் கொரோனாவைரஸ் தொற்று உள்ளதா என கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


    மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட்போன் திரையில் இருந்த ஸ்வாப்களை ஆய்வுகளில் பயன்படுத்தினர். ஆய்வில் பிசிஆர் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டபவர்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப்களை சோதனை செய்தனர். இரு சோதனைகளிலும் தொற்று உறுதியாகி இருந்தது. 

     கோப்புப்படம்

    போன் ஸ்கிரீன் டெஸ்டிங் (PoST) என அழைக்கப்படும் புது வழிமுறையை கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை 81 முதல் 100 சதவீதம் வரை சரியாக கண்டறிய முடிகிறது. வழக்கமான பிசிஆர் சோதனையை விட இந்த சோதனைக்கான செலவு குறைவு தான். குறைந்த விலை மட்டுமின்றி சோதனையில் தற்போது இருக்கும் அசவுகரியத்தை தவிர்க்க இந்த சோதனை வழி செய்கிறது.

    இந்த சோதனையில் ஒரே நிமிடத்தில் மாதிரியை சேகரிக்க முடியும். இதனை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் யாரும் தேவையில்லை. இந்த ஆய்வு முடிவுகள் இ-லைப் எனும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது.

    இந்தியாவில் 5ஜி நெட்வொர்கிங் தொழில்நுட்பத்தை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. இன்டெல் 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உருவாக்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     ரிலையன்ஸ் ஜியோ

    5ஜி தொழில்நுட்பங்களை பெற மற்ற நிறுவனங்களை சார்ந்து இருக்கும் வழிமுறையை ரிலையன்ஸ் ஜியோ பின்பற்றவில்லை. மாறாக தனக்கென சொந்தமாக 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற முறையை உலகின் பல்வேறு இதர டெலிகாம் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிகப்பெரிய ஒன்றாக அமைய இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ ஈடு இணையற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறது என இன்டெல் நிறுவனத்தின் டேட்டா தளங்களுக்கான பொது மேலாளர் மற்றும் துணை தலைவர் நவீன் ஷெனாய் தெரிவித்தார். 
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எம்ஐ வாட்ச் ரிவால்வ் பின் ரூ. 10,999 விலையில் விற்கப்பட்டது. பின் சலுகை விற்பனையில் ரூ. 8,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

     சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ்

    தற்போது முதல் முறையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை குறைப்பு காரணமாக எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலில் மேம்பட்ட GPS, அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், SpO2 மாணிட்டரிங், அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், FISRTBEAT ஸ்போர்ட் அனாலடிக்ஸ் வசதி, GPS, 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் செய்தி பிரிவு உருவாக்கிய அறிக்கை புகைப்படங்களாக இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்பட இருப்பதாக இம்மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், இரு நிறுவனங்கள் இணைப்பு எப்படி இருக்கும் என அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறும் என கூறப்படுகிறது.



    இதுபற்றிய விவரங்களை ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். ட்விட்டர் பதிவில் ஒன்பிளஸ் செய்தி பிரிவு அறிக்கையின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி இரு நிறுவனங்கள் இணைப்புக்கு பின் ஒப்போ நிறுவனத்தின் அங்கமாக ஒன்பிளஸ் மாறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இரு நிறுவனங்கள் இணைந்த பின், அதிக ஊழியர்கள் எண்ணிக்கையுடன் மேலும் சிறப்பான பொருட்களை உருவாக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் தளத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய பிழை வைபை பயன்பாட்டில் இடையூறு ஏற்படுத்துகிறது.

    ஐஒஎஸ் தளத்தில் புது பிழை கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஐபோன்களின் வைபை வசதியை செயலிழக்க செய்கிறது. இந்த பிழையை ரிவர்ஸ் என்ஜினியர் கால் ஷௌ கண்டறிந்து தெரிவித்தார். 

    புதிய பிழை  SSID %p%s%s%s%s%n எனும் பெயர் கொண்ட வைபையுடன் இணைய முயற்சிக்கும் போது ஏற்படுகிறது. இது உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் லட்சக்கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கிறது. இந்த பிழை தூண்டப்படும் போது ஐபோன் பயனர்களால் வைபை வசதியை ஆன் செய்ய முடியாது. ஐபோனினை ரீ-ஸ்டார்ட் செய்தாலும் இந்த பிழை சரியாகாது.

     ஐஒஎஸ் 14.1

    இந்த பிழை குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதனை சரி செய்ய ஐபோனின் நெட்வொர்க் செட்டிங்கை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஐபோனில் சேமிக்கப்பட்டு இருந்த வைபை பாஸ்வேர்டுகள் அழிக்கப்பட்டு விடும்.

    ஐபோனில் வைபை நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய  Settings > General > Reset > Reset Network Settings போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இது குறுகியகால தீர்வு ஆகும். இவ்வாறு செய்யும் போது ஐபோன் பலமுறை பாதிக்கப்படும்.
    ஆன்லைனில் நடைபெற்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையின் போது ஐபோன்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனத்தின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன்கள் விற்பனை சீனாவில் அதிகரித்து வருகிறது. சீனாவில் நடைபெற்ற 618 விற்பனையின் இறுதி நாள் விற்பனை இதனை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து jd.com வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரூ. 114 கோடி மதிப்பிலான ஐபோன்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஒரே நொடியில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நிறுவன மாடல்களும் அதிகளவு விற்பனையானது. எனினும், ஆப்பிள் நிறுவனம் ஒட்டுமொத்த விற்பனையில் முதலிடம் பிடித்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம்

    ஹயர், மிடி மற்றும் கிரீ போன்ற நிறுவனங்களும் ரூ. 114 கோடி மதிப்பிலான விற்பனையை பெற்று இருக்கிறது. சீமென்ஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் இதே அளவு விற்பனையை மூன்று நிமிடங்களில் பெற்று இருக்கின்றன. வருடாந்திர அடிப்படையில் சாம்சங் நிறுவன விற்பனை 200 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 

    முதல் 15 நிமிடங்கள் விற்பனையில் ரியல்மி மற்றும் ஐகூ வருவாய் வருடாந்திர அடிப்படையில் ஆறு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்போன்களின் விற்பனை முதல் பத்தே நிமிடங்களில் 260 சதவீதம் அதிகரித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எல்ஜி ஸ்டோர் மூலம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து எல்ஜி நிறுவனம் விலகிவிட்டது. தென் கொரியாவில் எல்ஜி நிறுவனம் சுமார் 400-க்கும் அதிக எல்ஜி பெஸ்ட் ஷாப் விற்பனை மையங்களை கொண்டுள்ளது. இங்கு எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகியதால் இந்த விற்பனை மையங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன.

    இந்த நிலையில், விற்பனை மையங்களை பயன்படுத்த எல்ஜி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன்கள் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தென் கொரியாவில் மட்டுமே செயல்படுத்தப்பட இருக்கிறது.

     எல்ஜி

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் எள்ஜி பெஸ்ட் ஷாப்கள் இருப்பதால், ஆப்பிள் தனது சில்லறை விற்பனையை இவற்றை கொண்டு அதிகபடுத்த முடியும். ஜூலை மாத இறுதி வரை தென் கொரியாவில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், ஐபேட் மற்றும் இதர அக்சஸரீக்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியின் ரீல்ஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க துவங்கி இருக்கிறது.

    இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனை தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியில் உங்களை பாளோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும்.

     இன்ஸ்டா ரீல்ஸ்

    இதனால் அதிக பாளோவர்கள் இல்லாத சிறு வியாபாரங்கள், பிராண்டுகள் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும். பிராண்டுகள் மற்றும் க்ரியேட்டர்கள் முன்பை விட அதிக பிரபலமாக ரீல்ஸ் விளம்பரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

    விளம்பரங்கள் வழக்கமான ரீலஸ் போஸ்ட்களை போன்றே புல் ஸ்கிரீன் மற்றும் செங்குத்தாக தோன்றும். ஏற்கனவே ஸ்டோரிக்களில் வரும் விளம்பரங்களை போன்று இவை ரீல்ஸ்களின் இடையே வரும். அதிகபட்சமாக 30 நொடிகள் வரை ரீல்ஸ் விளம்பரங்களை பதிவிட முடியும். ரீல்ஸ் பகுதியில் வரும் விளம்பரங்களுக்கு மற்ற பயனர்கள் லைக், கமென்ட், சேவ் மற்றும் ஷேர் செய்யலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    தற்போது கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் சில வாரங்களில் புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 2

    கடந்த ஆண்டும் கேலக்ஸி போல்டு 2 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கேலக்ஸி இசட் போல்டு விற்பனை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் கேலக்ஸி இசட் போல்டு 2 பல்வேறு நெட்வொர்க் வேரியண்ட்களும் விற்று தீர்ந்ததாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    சில வலைதளங்களில் மட்டும் கேலக்ஸி இசட் போல்டு 2 கிடைக்கிறது. இந்த தளங்களிலும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்று முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம். முந்தைய தகவல்களில் சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.
    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது.


    பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 456 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகை 50 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதுதவிர அன்லிமிடெட்ட வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    புதிய ஏர்டெல் ரூ. 456 பிரீபெயிட் சலுகை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த ரூ. 447 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. ஜியோ ரூ. 447 சலுகையிலும் ஏர்டெல் தற்போது வழங்கும் பலன்களே வழங்கப்படுகிறது.  ஏர்டெல் ரூ. 456 சலுகையுடன் முதல்முறை பாஸ்டேக் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் புது சலுகையில் கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் விண்க் மியூசிக் போன்ற சேவைகளுக்கான சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புது ஏர்டெல் சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளிலும் கிடைக்கிறது.
    ×