என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சில தினங்களுக்கு முன் பெயர் குறிப்பிடாமல் சியோமி, புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மாடல் ரெட்மி நோட் 10டி 5ஜி என தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதே மாடல் இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10டி 5ஜி மற்றும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடல்கள் இடையே அதிக வித்தியாசம் இருக்காது என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் மற்றொரு வெர்ஷனாகவே போக்கோ எம்3 ப்ரோ 5ஜி இங்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

இதுவரை பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். விரைவில் இந்த கேமின் ஐஒஎஸ் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கிராப்டான் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 5.1.1 மற்றும் 2 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் Early Access ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி பட்ஸ் 2 விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புது கேலக்ஸி பட்ஸ் 2 ஏற்கனவே அறிமுகமான கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மாடல்களை விட வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி பட்ஸ் 2 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இந்த மாடல் தலைசிறந்த இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி பட்ஸ் 2 வைட், லிலக் மற்றும் ஆலிவ் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் 2 விலை 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2019 வாக்கில் நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அதன்பின் இந்த மாடலுக்கான மேம்பட்ட வேரியண்ட் இதுவரை அறிமுகம் செய்யப்படவே இல்லை. எனினும், நோக்கியா 9 சீரிஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 ஸ்மார்ட்போனினை வெளியிட ஹெச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவுக்கான ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவன மேலாளர் ஷாங் யுஷெங், புதிதாக 5ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 11 ஆம் தேதி சீன சந்தையில் வெளியாகும் என தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் பிளாக் பிரைடே விற்பனை போன்று சீனாவில் நவம்பர் 11 ஆம் தேதி சிங்கில்ஸ் டே விற்பனை நடைபெற்று வருகிறது.
புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா X50 மற்றும் நோக்கியா X70 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) பெயரில் புது சாதனம் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

தற்போது புது ஒன்பிளஸ் பேட் 'examination' பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் டிவி, அணியக்கூடிய சாதனங்களை தொடர்ந்து ஒன்பிளஸ் தற்போது டேப்லெட் பிரிவில் களமிறங்க இருக்கிறது. வரும் நாட்களில் புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்படுவதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. அதன்படி ஆக்சிஜன் ஒஎஸ் கஸ்டம் ரோம் ஒப்போவின் கலர் ஒஎஸ் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இணைப்புக்கு பின் ஆக்சிஜன் ஒஎஸ்-இல் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட், 3 MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.
சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனிற்கு MIUI 12 அப்டேட் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.0.1.0.RJXINXM பில்டு நம்பர் கொண்டுள்ளது. தற்போது இது ஸ்டேபில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. வழக்கமாக ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. புது விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. ஒப்போ A11K, ஒப்போ A53s, ஒப்போ A15, ஒப்போ A15s மற்றும் ஒப்போ F19 போன்ற மாடல்களின் விலை ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு குறித்து ஒப்போ சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், சந்தையில் சிப்செட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒப்போ ஸ்மார்ட்போன்கள் புதிய விலை விவரம்
ஒப்போ F19 - 6ஜிபி ரேம் ரூ. 18,990
ஒப்போ A11k ரூ. 8,990
ஒப்போ A15 - 2 ஜிபி ரேம் ரூ. 9,490
ஒப்போ A15 - 3 ஜிபி ரேம் ரூ. 10,490
ஒப்போ A15s ரூ. 12,490
ஒப்போ A53s 5ஜி - 8 ஜிபி ரேம் ரூ. 17,990
ஒப்போ மட்டுமின்றி ரியல்மி, விவோ மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கின்றன.
கான்ட்ரா மொபைல் வெர்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வெளியாக இருக்கிறது. இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த கான்ட்ரா ஷூட்டிங் கேம் விரைவில் ஸ்மார்ட்போன்களுக்கும் வெளியாக இருக்கிறது. கான்ட்ரா மொபைல் வெர்ஷனுக்கான டிரெயிலர் வீடியோ ஒன்றை கோனாமி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த கேம் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் இம்மாதமே அறிமுகமாகிறது.
மொபைல் தளங்களுக்கு இந்த கேமை கொண்டுவர கோனாமி நிறுவனம் டென்சென்ட் உடன் இணைந்துள்ளது. முன்னதாக இந்த கேமின் பல பதிப்புகள் ஆண்ட்ராய்டில் வெளியாகி இருக்கின்றன. எனினும், கோனாமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தற்போது தான் நடைபெறுகிறது.

கான்ட்ரா என்பது ஆர்கேட் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்கிராலிங் கேம் ஆகும். பின் இதன் பதிப்புகள் கணினி, பிளே ஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல்களுக்கும் வெளியிடப்பட்டன. தற்போது இதன் மொபைல் வெர்ஷன் கான்ட்ரா ரிட்டன்ஸ் என அழைக்கப்படுகிறது.
மொபைல் வெர்ஷனில் கான்ட்ரா ரிட்டன்ஸ் முற்றிலும் புது கிராபிக்ஸ், கேம்பிளே அப்கிரேடுகள் என பல மாற்றங்களை பெற்று இருக்கிறது. மேலும் இதில் வரும் ஆயுதங்களை கேமர்கள் விரும்பும் வகையில் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் புது கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.
2007 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோன் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருந்தது.
ஆப்பிள் தனது முதல் ஐபோனினை வெளியிட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் 2007, ஜனவரி மாதத்தில் முதல் ஐபோனினை அறிமுகம் செய்தார். இந்த மாடல் ஜூன் 29, 2007 அன்று விற்பனைக்கு வந்தது. இன்று உலகமே ஐபோன் 13 சீரிஸ் மாடல் விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
தற்போதைய ஐபோன்களுடன் ஒப்பிடும் போது முதன் முதலில் வெளியான ஐபோன், அம்சங்கள் அடிப்படையில் மிகவும் சாதாரண மாடலாகவே இருந்தது. எனினும், அன்றைய தேதியில் ஐபோன் பல்வேறு புதுமையான அம்சங்களை கொண்டிருந்தது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் ஐபோன் புல் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், மல்டி-டச் ஜெஸ்ட்யூர்கள் என ஏராளமான அம்சங்களை கொண்டிருந்தது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோனை உருவாக்கும் பணிகளை 2005 ஆம் ஆண்டு துவங்கியது. பின் இரண்டு ஆண்டுகள் கழித்தே முதல் ஐபோன் மாடல் விற்பனைக்கு வந்தது. முதல் ஐபோனின் விற்பனை ஜூன் 29, 2007 மாலை 6 மணிக்கு துவங்கியது. ஐபோனை வாங்க ஆறு மாதங்கள் காத்திருந்த வாடிக்கையாளர்கள் அன்று ஆப்பிள் ஸ்டோர் வாயிலில் புது சாதனத்தை வாங்க வரிசைகட்டி நின்றனர்.
முதல் ஐபோனின் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,124 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,563 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் குறித்து மைக்ரோசாப்ட், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் கேலி செய்யும் வகையிலான கருத்துக்களை தெரிவித்தன. எனினும், இன்று ஐபோன்கள் உலகம் முழுக்க பிரபலமான ஸ்மார்ட்போனாக இருக்கிறது.
ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோனில் ஆப் ஸ்டோர் இன்றி ஐபோன்ஒஎஸ் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் சாம்சங்கின் 32-பிட் ARM சிப், 3.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, 1400 எம்ஏஹெச் பேட்டரி, 2 எம்பி பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடல் விற்பனை ஜூலை 15, 2008 அன்று நிறுத்தப்பட்டது.
தமிழ் நாட்டை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் நம்பர், குடும்ப விவரங்கள், மொபைல் நம்பர் என பொது மக்களின் மிகமுக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், உறவு முறை போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 3499 பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோவின் விலை உயர்ந்த பிரீபெயிட் சலுகை ஆகும்.
ஜியோ ரூ. 3499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை அந்நிறுவன வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது.

இதில் பயனர்களுக்கு 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 1095 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. எனினும், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற ஒடிடி தளங்களுக்கான சந்தா எதுவும் இந்த சலுகையில் வழங்கப்படவில்லை.
இன்பினிக்ஸ் நிறுவனம் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யும் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பத்தை இன்பினிக்ஸ் தனது கான்செப்ட் போன் 2021 மாடலில் வழங்கி இருக்கிறது. புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
Tested. Refined. Perfected. This is how we roll at Infinix. 🚀#Infinix#InfinixConceptPhonepic.twitter.com/WVJMzXOKsH
— Infinix Mobile (@Infinix_Mobile) June 28, 2021
புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இயக்கும் போதும் ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 40 டிகிரியை கடக்கவில்லை என இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வெப்ப அளவை கணக்கிட 20 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனைகளின் போது ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 37.3 டிகிரியாகவே இருந்தது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 88ºC வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் பட்டன்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இதில் 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.






