என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ப்ளிக்ஸ் பொழுதுபோக்கு மட்டுமின்றி கேமிங் துறையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளது.


    இந்தியாவில் முன்னணி ஓ.டி.டி. தளங்களில் ஒன்றாக இருக்கும் நெட்ப்ளிக்ஸ் விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்க இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது நெட்ப்ளிக்ஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. 

     கோப்புப்படம்

    நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவைக்கான சந்தா, பயனர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்திலேயே சேர்க்கப்பட்டுவிடும். இதனால் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம். 

    வருவாய் அறிக்கையின்படி நெட்ப்ளிப்க்ஸ் நிறுவனம் 7.3 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது நெட்ப்ளிக்ஸ் சேவையை 20.9 கோடி பயனர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இது சரசாரி கட்டண வருவாயில் 11 சதவீதமும், ஒரு சந்தாதாரரின் வருவாயில் 8 சதவீதமும் அதிகம் ஆகும்.
    பைட்டேன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் TickTack எனும் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. அதன்படி டிக்டாக் செயலி TickTack பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     டிக்டாக்

    முன்னதாக பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் வெளியிடும் முயற்சியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மேலும் இந்தியாவில் சமீபத்தில் அமலுக்கு வந்த புது தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று செயல்பட பைட்டேன்ஸ் ஒப்புக் கொள்வதாக அறிவித்தது. இதற்கென 2019 வாக்கில் பைட்டேன்ஸ் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்தது.

    சமீபத்தில் பப்ஜி மொபைல் கேம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா எனும் பெயரில் வெளியிடப்பட்டது. முந்தைய கேமினை போன்றே புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி இசட் போல்டு 3 விலை முந்தைய மாடலை விட 17 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 விலை முந்தைய மாடலை விட 22 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறைந்த விலையில் வழங்குவதன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி சாம்சங் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், இதர அக்சஸரீக்களை ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.  
    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இம்முறை தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குகிறது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் போன்ற மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ரூ. 4 ஆயிரத்திற்கும், ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் வழங்கப்படுகிறது.

    இலவச ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள்கேர் சேவையில் 20 சதவீத தள்ளுபடி, ஆப்பிள் பென்சில், கீபோர்டு சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி, ஆப்பிள் மியூசிக் ஸ்டூடன்ட் திட்டம் மாதத்திற்கு ரூ. 49 விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் ஆர்கேட் சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன்பின் மாதம் 99 ரூபாய் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.


    சியோமி நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சியோமி நிறுவனம் முதல் முறையாக இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.

     சியோமி

    இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி நிறுவனம் 83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இரு இடங்களில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. சாம்சங் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    2021 இரண்டாவது காலாண்டில் சாம்சங் 19 சதவீதம், சியோமி 17 சதவீதம், ஆப்பிள் 14 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 10 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. 
    ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் அடுத்த மாதம் நீக்கப்படுகிறது.


    ட்விட்டர் ப்ளீட்ஸ் அம்சம் ஆகஸ்ட் 3, 2021 முதல் பயன்படுத்த முடியாது என ட்விட்டர் தெரிவித்தது. ட்விட்டரில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ப்ளீட்ஸ் ஆப்ஷனை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்துவதில்லை.



    ப்ளீட்ஸ் அம்சம் மூலம் அதிக பயனர்களை ஈர்க்க ட்விட்டர் திட்டமிட்டு இருந்தது. ப்ளீட்ஸ் என்பது வாட்ஸ்அப் ஸ்டோரி போன்றே செயல்பட்டு வருகிறது. ட்விட்டர் பயனர்கள் தங்களது கருத்துக்களை எளிதில் பதிவு செய்ய வைக்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக ப்ளீட்ஸ் ஆப்ஷன் ஆகஸ்ட் 3, 2021 முதல் செயல்படாது என ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. தற்போது இந்த ஆப்ஷன் நீக்கப்பட்டாலும், இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ட்விட்டரின் மற்ற ஆப்ஷன்களில் படிப்படியாக வழங்கப்படும் என தெரிகிறது. 


    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் மெமரி ஆப்ஷன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் ஒற்றை மெமரி ஆப்ஷனில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

     சியோமி ரெட்மி நோட் 10டி 5ஜி

    புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 14,999 என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முதல் விற்பனைக்கு சியோமி அறிமுக சலுகைகளை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான்  தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த ஸ்மார்ட்போன் புளூ, கிரீன், கிரே மற்றும் சில்வர் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த இலவச சேவையில் திடீர் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது.


    கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாது. 

     கூகுள் மீட்

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது. 

    தற்போது கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச வரம்பற்ற க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது.
    சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் விரைவில் வெளியிட இருக்கிறது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இரு சாதனங்களின் தென் கொரிய விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி இசட் போல்டு 3 விலை 1655 டாலர்களில் துவங்கி அதிகபட்சம் 1,741 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய மதிப்பில் ரூ. 1,23,241 முதல் ரூ. 1,29,645 ஆகும். 

    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 விலை 1,045 டாலர்களில் துவங்கி அதிகபட்சம் 1,110 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 77,816 துவங்கி ரூ. 82,657 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர நோக்கில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் (first recharge coupon) சலுகையை அறிவித்து இருக்கிறது. இது விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    45 நாட்கள் வேலிடிட்டி நிறைவுற்றதும், பயனர்கள் தற்போது வழங்கப்படும் இதர சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். புதிய அறிமுக சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இதுதவிர ஜூலை 31 ஆம் தேதி வரை இலவச சிம் சலுகையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது.

    புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 249 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    மற்ற நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.


    இந்திய சந்தையில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை கடந்த வாரம் உயர்த்தின. இந்த நிலையில், சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.

    விலை உயர்வின் படி கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எம்02எஸ் மற்றும் கேலக்ஸி ஏ12 போன்ற மாடல்களின் விலை மாறி இருக்கின்றன. மூன்று மாடல்களின் அனைத்து வேரியண்ட்கள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.

     சாம்சங் கேலக்ஸி எப்02எஸ்

    புதிய விலை விவரம்:

    கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499 

    கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499

    கேலக்ஸி எம்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499

    கேலக்ஸி எம்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499

    கேலக்ஸி ஏ12 4 ஜிபி+64 ஜிபி ரூ. 13,499

    கேலக்ஸி ஏ12 4 ஜிபி+128 ஜிபி ரூ. 14,499

    விலை உயர்வு தவிர, சாம்சங் விரைவில் தனது கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவற்றுடன் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
    அமேசான் நிறுவனம் அதிக சலுகை மற்றும் தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்யும் பிரைம் டே சேல் தேதியை அறிவித்து இருக்கிறது.

    அமேசான் பிரைம் டே சேல் இம்முறை ஜூலை 26 ஆம் தேதி துவங்குகிறது. ஜூலை 26 நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, ஜூலை 27 ஆம் தேதியுடன் இந்த சிறப்பு விற்பனை நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவில் ஏராளமான பொருட்களுக்கு தள்ளுபடி, சலுகை, சேமிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒரே நாளில் சுமார் 300-க்கும் அதிக பொருட்கள் அமேசானில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான் திட்டமிட்டது. எனினும், கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பிரைம் டே சேல் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது தேதி உறுதிப்படுத்தப்பட்டு பிரைம் டே சேல் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சலுகைகள், மாத தவணை வசதி போன்றவையும் இந்த விற்பனையில் வழங்கப்படுகிறது. 
    ×