என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
சியோமி நிறுவனம் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் தனது வரலாற்றில் முதல்முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் விற்பனை மாதாந்திர அடிப்படையில் 26 சதவீதம் வளர்ச்சி பெற்று இருந்தது.
மேலும் ஜூன் மாதத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாகவும் சியோமி இருந்தது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது.

2011 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் சியோமி இதுவரை சுமார் 80 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த தகவல்கள் தனியார் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.
"சர்வதேச சந்தையில் ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்திக்க துவங்கியது முதல் சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க சியோமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹூவாய் மற்றும் ஹானர் பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்திய சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா போன்ற சந்தைகளில் சியோமி கூடுதல் கவனம் செலுத்த துவங்கியது." என தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வு பிரிவு இயக்குனர் தருன் பதாக் தெரிவித்தார்.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் புது சாதனையை படைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகம் முழுக்க சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை ரியல்மி பெற்று இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளரும் பிராண்டாக ரியல்மி இருந்தது.

2021 இரண்டாவது காலாண்டில் ரியல்மி நிறுவனம் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
"பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு ஆதரவளித்த ரியல்மியின் இளம் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களின் அடுத்த இலக்கு 2022 வாக்கில் மற்றொரு 10 கோடி யூனிட்களும், 2023 இறுதியில் மேலும் 10 கோடி யூனிட்களையும் விற்பனை செய்வது தான்," என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி தெரிவித்தார்.
சமீபத்தில் வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் பயனர் ஒருவர் தனது மனைவியின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார். தனது பதிவில் வெடித்து சிதறியதால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தெளிவாக தெரியும் படி புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார். பயனர் குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.

"வெடித்து சிதறிய நார்டு 2 ஸ்மார்ட்போனினை முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த மாடலில் எந்த விதமான உற்பத்தி கோளாறும் ஏற்படவில்லை. நார்டு 2 வெளிப்புற காரணிகளால் தான் வெடித்து சிதறியது என எங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது."
"குற்றம்சாட்டிய பயனருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறோம். வாடிக்கையாளரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் ஒரே நோக்கம் ஆகும். பயனரின் குறைகளை தீர்ப்பது மற்றும் நன்னிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறந்த சேவையை வழங்கி இருக்கிறோம்," என தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வைத்திருப்போர் உடனே இப்படி செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சாதனங்களை பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய CERT-In கேட்டுக்கொண்டுள்ளது.
இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மெமரி கரப்ஷன் பிழையை கொண்டு ஹேக்கர் பயனரின் சாதனத்தை இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ்-இன் IOMobileFrameBuffer-இல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது.
இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது.
ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் இருந்த போது பூர்த்தி செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்நாளில் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ஆகும். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் விண்ணப்ப படிவம் 3.43 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 2,54,95,018.50 ஆகும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் விண்னப்பத்திற்கான ஏலம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. வகையில் நடைபெற்றது. ப்ரின்ட் வடிவத்திற்கு டாலர்களிலும், என்.எப்.டி.க்கான ஏலம் எத்தெரியம் மூலமாகவும் நடைபெற்றது. என்.எப்.டி.-யை விட விண்ணப்பத்தின் ப்ரின்ட் வடிவத்திற்கு நான்கு மடங்கு அதிக தொகை வழங்கப்பட்டது. ப்ரின்ட் வடிவத்திற்கான அதிகபட்ச தொகை 3.43 லட்சம் டாலர்கள் வரை கேட்கப்பட்டது.
எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோலின் 20 வது ஆண்டு விழா முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டு செயல்பட்டு வரும் க்ரிஸ்பி கிரீம் உணவக குழுமம் எக்ஸ்பாக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் லிமிடெட் எடிஷன் டோநட் அறிமுகமாகிறது. லிமிடெட் எடிஷன் டோநட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22 வரை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புது கூட்டணி குறித்த விவரங்களை க்ரிஸ்பி கிரீம் விளம்பர வீடியோ வடிவில் அறிவித்தது. க்ரிஸ்பி கிரீம் நிறுவனம் முதல் முறையாக வியாபார ரீதியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் எக்ஸ்பாக்ஸ் ஏற்கனவே இதுபோன்ற கூட்டணி அமைத்து இருக்கிறது.
இம்முறை எக்ஸ்பாக்ஸ் வெளியாகி 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு லிமிடெட் எடிஷன் டோநட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. லிமிடெட் எடிஷன் டோநட் மீது எக்ஸ்பாக்ஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு குறித்து அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.
போக்கோ நிறுவனம் சமீபத்தில் தனது X3 GT ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,855 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
'இந்தியாவுக்கென பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனினும், போக்கோ X3 GT இதில் இடம்பெறவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை,' என அனுஜ் ஷர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ X3 GT மாடலில் 6.6 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் இந்திய மதிப்பில் ரூ. 1,61,588 கோடிகளாக அதிகரித்து இருக்கிறது. ஐபோன் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் விற்பனையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவன வருவாய் வருடாந்திர அடிப்படையில் 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐபோன் வருவாய் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இவற்றுடன் மேக் மற்றும் ஐபேட் மாடல்களின் விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து இருக்கிறது.

அதிக பிரபலம் இல்லாத ஆப்பிள் நிறுவனத்தின் 'இதர பொருட்கள்' பரிவு விற்பனையும் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்றுள்ளன.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதே ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இத்துடன் புது ஸ்மார்ட்போன் வாங்குவோரில் பலர் 5ஜி சாதனங்களை வாங்க திட்டமிட்டதும் ஐபோன் விற்பனை வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
ரியல்மி நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார். இது மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடாமல் டீசரை மட்டும் ரியல்மி வெளியிட்டு இருந்தது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் மேக்டார்ட் என அவைக்கப்பட இருக்கிறது. மேக்டார்ட் என்பது க்ளிப்-ஆன் அக்சஸரி ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஆப்பிள் மேக்சேப் சாதனத்தை போன்றே செயல்படுகிறது.
மேக்டார்ட் சாதனத்துடன் கூலிங் பேன் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த பேன் யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கிறது. இது சார்ஜிங்கின் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வழி செய்கிறது. தற்போதைய தகவல்களின்படி ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
அமேசான் பிரைம் டே சேல் 2021 சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அமேசான் பிரைம் டே சேல் 2021 துவங்கி நடைபெற்று வருகிறது. அமேசானில் பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் - அமேசானில் கேலக்ஸி எம்31எஸ் வாங்குவோருக்கு ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,499 ஆகும்.
எம்ஐ 11எக்ஸ் 5ஜி - சியோமி எம்ஐ 11எக்ஸ் 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் 18 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு சலுகையில் எம்ஐ 11எக்ஸ் 5ஜி விலை ரூ. 27,999 என மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 9 - அமேசான் பிரைம் டே விற்பனையில் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ. 49,999 விலையிலும், ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எம்42 5ஜி - சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்42 5ஜி மாடல் விலை ரூ. 21,999 என மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி - அமேசான் பிரைம் டே சேல் விற்பனையில் ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி மாடல் ரூ. 39,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
2021 ஐபோன் புகைப்பட போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷரன் ஷெட்டி வெற்றி பெற்று இருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனம் வருடாந்திர ஐபோன் புகைப்பட போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. ஆண்டின் சிறந்த புகைப்படக்காரருக்கான முதல் இடத்தை இந்தியரான ஷரன் ஷெட்டி வென்று இருக்கிறார். பூனேவை சேர்ந்த ஷரன் ஷெட்டி தனது ஐபோன் எக்ஸ் மூலம் எடுத்த புகைப்படத்தை சிறந்த புகைப்படமாக ஆப்பிள் தேர்வு செய்துள்ளது.
மொத்தம் 18 பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போட்டியில் ஷரன் ஷெட்டியின் புகைப்படம் வெற்றி பெற்று இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக புகைப்பட போட்டியை ஆப்பிள் நடத்தி வருகிறது. ஷரன் ஷெட்டியின் புகைப்படம் 'பான்டிங்' தலைப்பின் கீழ் முதல் பரிசை வென்று இருக்கிறது.

ஐபோன் புகைப்பட போட்டியில் கிராண்ட் பிரைஸ் வின்னராக ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் கெரிகிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபோன் புகைப்பட போட்டியை ஆப்பிள் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக இந்த போட்டியை ஆப்பிள் நடத்தி வருகிறது. 18 பிரிவுகளுக்கான வெற்றியாளர்களை ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.
முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கான பரிசு விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுதவிர 2022 ஐபோன் புகைப்பட போட்டிக்கான அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டு உள்ளது. இந்த போட்டியில் சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் வேறு எந்த போட்டிக்கும் அனுப்பப்பட்டு இருக்கக் கூடாது. மேலும் புகைப்படங்கள் கணினி மென்பொருள்கள் எதிலும் எடிட் செய்யப்பட்டு இருக்கக் கூடாது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ஏர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 13.3 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களிலும் புதிய மேக்புக் ஏர் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழக்கமான OLED பேனல்களை போன்ற பலன்களை அளிக்கிறது.

எனினும், மினி எல்.இ.டி. சிறப்பான கான்டிராஸ்ட், மேம்பட்ட டைனமிக் ரேன்ஜ் வழங்குகிறது. மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் கொண்டு வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சாதனமாக 2021 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ இருக்கிறது. இவைதவிர மேலும் பல்வேறு ஆப்பிள் சாதனங்களில் மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் வல்லுநர்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
புது மேக்புக் ஏர் மாடல் மேக்சேப் சார்ஜிங் வசதி, குறைந்தபட்சம் இரண்டு யு.எஸ்.பி. 4 போர்ட்கள், குறைந்த எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மேக்புக் ஏர் கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த எம்1 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷனை கொண்டிருக்கும் என தெரிகிறது.






