என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
வாடஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை தானாக அழிந்து போக செய்யும் அம்சம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் 7 நாட்களில் குறுந்தகவல்கள் அழிந்து போகும் வகையில் இந்த அம்சம் வழங்கப்பட்டது.

பின் குறுந்தகவல்கள் 24 மணி நேரத்தில் அழிந்து போகும் வகையில் மாற்றப்பட்டது. அந்த வரிசையில் தற்போது குறுந்தகவல்கள் 90 நாட்கள் கழித்து அழிந்து போக செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அம்சம் ஏற்கனவே உள்ள 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரங்களுடன் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் வாட்ஸ்அப் வெப் பதிப்புகளுக்கான பீட்டா வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன் பின் அனைவருக்குமான ஸ்டேபில் பதிப்பில் வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இம்மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றன.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஜிடி சீரிஸ் விலை ரூ. 25,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி ஜிடி மாடலில் 16 எம்பி செல்பி கேமரா, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.

ரியல்மி ஜிடி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, வைபை, ப்ளூடூத் அம்சங்கள் உள்ளன. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி ஜிடி மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 10 என அழைக்கப்படுகிறது.

அதன்படி ரெட்மி 10 மாடலுக்கான புது டீசரை சியோமி வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி 10 வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல், இந்த பிராசஸருடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனும் ரெட்மி 10 தான் என சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் அம்சங்களை சார்ந்து உருவாகும் என்றும் சியோமி வெளியிட்டுள்ள டீசர்களில் தெரியவந்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் அந்நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிசில் - ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 10எஸ் மற்றும் ரெட்மி நோட் 10டி போன்ற மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது.
ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் 6 ஜிபி + 64 ஜிபி விலை முறையே ரூ. 15,999 மற்றும் ரூ. 18,999 ஆகும். தற்போது சியோமி நிறுவனம் 6 ஜிபி + 64 ஜிபி மாடல்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் பேஸ் வேரியண்ட் சியோமி வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.

தற்போது ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 19,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 21,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் குறைந்த விலை பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்த ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தங்களின் என்ட்ரி-லெவல் சலுகைகளை நீக்கி வருகின்றன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகை ரூ. 18 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 19 சலுகையை விட விலை குறைவு ஆகும். பி.எஸ்.என்.எல். ரூ. 18 சலுகையில் அன்லிமிடெட் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்துடன் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 19 பிரீபெயிட் சலுகையில் 200 எம்.பி. டேட்டா, அன்லிமிடெட் காலிங் உள்ளிட்டவை 48 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. புது சலுகை தவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 49, ரூ. 75, ரூ. 94, ரூ. 106, ரூ. 197 மற்றும் ரூ. 397 என ஆறு சலுகைகளின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் சைபர்டாக் ரோபோட் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது முதல் குவாட்ராபெட் ரோபோட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது சியோமி ரோபோட் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த ரோபோட் போஸ்டன் டைனமிக் நிறுவனத்தின் ஸ்பாட் ரோபோட் டாக் போன்றே காட்சியளிக்கிறது.
சியோமியின் புதிய சைபர்டாக் (CyberDog) என்விடியா நிறுவனத்தின் ஜெட்சன் சேவியர் என்.எக்ஸ். ஏ.ஐ. சூப்பர்கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் எம்பெட் மற்றும் எட்ஜ் சிஸ்டம்கள் கிட்டத்தட்ட 128 ஜிபி தொழில்துறை தரத்தாலான எஸ்.எஸ்.டி. மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் தலையில் பல்வேறு கேமரா, மைக்ரோபோன் மற்றும் சென்சார்கள் உள்ளன. இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைய வீடியோவின் படி புதிய குவாட்ராபெட் சைபர்டாக் மழையிலும் சீராக இயங்கும் என தெரியவந்துள்ளது.
சீன சந்தையில் சைபர்டாக் விலை 9,999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 1,14,567 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு டி.வி., வாக்யூம் கிளீனர், ஏர் பியூரிபையர் போன்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் இயக்க முடியும். இதில் சியோ-ஏ.ஐ. சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் கேமரா, பிராசஸர் விவரங்கள் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா குறியீடுகளில் தெரியவந்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 பதிப்பை வெளியிட்டுள்ளது. பீட்டா பதிப்பின் இறுதிக்கட்ட கம்பேடபிலிட்டி சோதனையை துவங்கி, இதற்கான அப்டேட்களை உடனடியாக வெளியிட ஆப் மற்றும் கேம் டெவலப்பர்களுக்கு கூகுள் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 பதிப்பு பிக்சல் 3 மற்றும் அதன்பின் வெளியான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பதிப்பு ஆண்ட்ராய்டு டிவி-க்களுக்கு ADT-3 டெவலப்பர் கிட் உடன் வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் மற்றொரு பீட்டா வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய ஆண்ட்ராய்டின் பீட்டா சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் சாம்சங்கின் 50எம்பி GN1 கேமரா சென்சார் வழங்கப்பட இருப்பது புதிய ஆண்ட்ராய்டு 12 பீட்டா மூலம் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2100 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆண்ட்ராய்டு 12 பீட்டாவில் புதிய பிக்சல் 6 சீரிஸ் எக்சைனோஸ் 5123 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இது 7 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. இந்த பிராசஸர் 5ஜி-யின் சப்-6GHz மற்றும் எம்.எம்.வேவ் ஸ்பெக்ட்ரம்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய ஐபோன் சீரிசை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2021 ஐபோன் மாடல் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய ஐபோனின் கேமரா விவரங்கள் வெளியாகி உள்ளன.
வீடியோக்களுக்கு ப்ரோ-ரெஸ், வீடியோவில் போர்டிரெயிட் மோட் மற்றும் புதிய பில்ட்டர் உள்ளிட்டவை ஐபோன் 13 சீரிஸ் கேமரா அம்சங்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன்களில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஐபோன் 7 பிளஸ் மாடலில் போர்டிரெயிட் மோட் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐ.ஓ.எஸ். 15 தளத்தில் பேஸ்டைம் மற்றும் இதனை இயக்கும் அனைத்து சாதனங்களிலும் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஐபோன்களின் வீடியோவில் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் சினிமேடிக் வீடியோ என அழைக்கப்படலாம். இத்துடன் ப்ரோ-ரெஸ் தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி ஐபோன்களில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்றொரு நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் ட்விட்டரில் குற்றம்சாட்டி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இதே போன்று மற்றொரு பயனரும் தனது நார்டு 2 வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி இருந்தார்.
தனது தந்தைக்கு வாங்கிய நார்டு 2 கட்டிலில் இருக்கும் போது வெடித்து சிதறியதாக அவர் தெரிவித்தார். வெடித்ததால் தீப்பற்றி எரிந்த நார்டு 2 ஸ்மார்ட்போனினை தனது தந்தை சிறு கம்பு கொண்டு கட்டிலில் இருந்து தள்ளிவிட்டதாக பயனர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பயனர் வெடித்து சிதறிய நார்டு 2 புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. மேலும் அவர் குற்றச்சாட்டு அடங்கிய ட்விட்டர் பதிவும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டது. எனினும், ஒன்பிளஸ் சார்பில் பயனருக்கு ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதில், "எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம். இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதற்கான காரணத்தை கண்டறிய தயவு செய்து குறுந்தகவல் அனுப்புங்கள்," என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் செயலியில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk chatbot மூலம் செயல்படுத்தப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk chatbot அம்சத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் போலி செய்தி பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு இதனை அறிமுகம் செய்தது.
பின் இந்த அம்சம் கொண்டு அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களை அறிந்து கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற முதலில் ஒருவர் குறைந்தபட்சம் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தியிருக்க வேண்டும்.
1 - முதலில் மொபைல் போனில் +91 9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் செயலியில் MyGov Corona Helpdesk என தேட வேண்டும்.
2 - அடுத்து வாட்ஸ்அப் செயலியின் MyGov Corona Helpdesk-இல் ‘COVID Certificate' அல்லது ‘Download Certificate' என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
3- உங்களின் மொபைல் எண்ணிற்கு 6 இலக்க ஒ.டி.பி. வரும். இதனை 30 நொடிகளுக்குள் பதிவிட வேண்டும்.
4 - இனி கோவின் (CoWIN) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் எண்களும் காணப்படும். இதில் உங்களுக்கு யாருடைய சான்றிதழை பெற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
5 - சான்றிதழ் வாட்ஸ்அப் மூலமாகவே பி.டி.எப். (PDF) ஆக அனுப்பப்பட்டு விடும். இதனை மிக எளிமையாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை பார்ப்போம்.
அமேசான் வலைதளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கும் பல்வேறு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சாம்சங், ரியல்மி, ரெட்மி என பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது கூடுதல் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள அசத்தல் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 19,999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும்போது ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் மற்றும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 18,990 விலையில் அறிமுகமாகி தற்போது ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது கூடுதல் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள அசத்தல் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஐகூ Z3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 16,740 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 18,990 விலையில் அறிமுகமாகி தற்போது ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம் பூமி பந்தை சுற்றி நிகழும் அற்புதங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என ரம்மியமான புகைப்படங்களால் அதன் சமூக வலைதள பக்கங்களை நாசா அலங்கரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டு உள்ளது.

53 புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் நிலவின் புகைப்படத்திற்கு "false-colour mosaic" என நாசா பெயரிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் டிசம்பர் 7, 1992 ஆம் ஆண்டு நிலவின் வடக்கு பகுதிகளில் எடுக்கப்பட்டவை ஆகும். இவற்றை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது.
வியாழன் கிரகத்தை நோக்கிய பயணத்தின் போது இந்த புகைப்படங்களை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது. நிலவின் வண்ணமயமான புகைப்படங்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.






