என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் சமீபத்தில் தனது விசேஷ சலுகைகளின் வேலிடிட்டியை குறைத்தது. தற்போது ரூ. 1498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

    ரூ. 1498 மட்டுமின்றி ரூ. 2399 விலையில் மற்றொரு சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1,498 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கிலோபைட் ஆக குறைக்கப்படும்.

    கோப்புப்படம்

    முதற்கட்டமாக சென்னையில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகை தற்போது நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது. இந்த சலுகையை பெற 123 என்ற எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் "STVDATA1498" என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகை 425 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை தனது ஏ சீரிசில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ13 5ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் எஸ்.எம்.-ஏ136பி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் அல்லது சாம்சங்கின் எக்சைனோஸ் பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ12 எக்சைனோஸ் மாடல் ரூ. 13,999 விலையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த வாரம் வெளியாகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 7 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் முதற்கட்டமாக 10 சதவீத தொகையை செலுத்தினால் போதும். மீதித்தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் அந்நிறுவனத்தின் வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புது சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. 

    இத்துடன் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

    புது சலுகைகள் 1 மாதம், 2 மாதங்கள், 3 மாதங்கள், வருடாந்திர மற்றும் 2 மாதங்களுக்கு டேட்டா ஆட் ஆன் வடிவிலும் வழங்கப்படுகிறது. டேட்டா ஆட் ஆன் சலுகையில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படாது.

     ரிலையன்ஸ் ஜியோ

    புதிய ஜியோ சலுகைகள்

    ரூ. 499 தினமும் 3 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 28 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 666 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 56 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 888 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 84 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 2599 தினமும் 2 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். - 365 நாட்கள் வேலிடிட்டி

    ரூ. 549 தினமும் 1.5 ஜிபி டேட்டா - 56 நாட்கள் வேலிடிட்டி

    டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடத்திற்கு பயன்படுத்த பயனர்கள், ஜியோ சலுகையை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். புதிய சலுகைகள் ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் கிடைக்கிறது.
    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இப்படித் தான் காட்சியளிக்கும் என நினைத்து அதன் நகல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வாட்ச் சீரிஸ் 7 போன்ற தோற்றம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

    ட்விட்டரில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்வாட்ச் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் சீரிஸ் 7 மாடலின் நகல் என கூறப்படுகிறது. சந்தையில் வெளியாகும் முன்பே ஆப்பிள் சாதனத்தின் நகல் விற்பனைக்கு வந்துள்ளது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    சீன சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன கேட் ரென்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 தோற்றம் கொண்ட வாட்ச் சீனாவில் 350 முதல் 400 யுவான் விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.


    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதனை வாட்ஸ்அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. 

    முன்னதாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.

     கோப்புப்படம்

    இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சம் குறித்த தகவல்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி உள்ளது.


    இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் செயலியில் வழங்கப்படாமல் இருந்தது. இன்ஸ்டாகிராமின் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விரைவில் இந்த நிலை மாறி, ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களில் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஸ்கிரீன்ஷாட் ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ஒருவர் ஒரு ஸ்டோரியை பலமுறை லைக் செய்வது தெளிவாக தெரிகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்வைப்-அப் ஜெஸ்ட்யூர்களில் லின்க் கொடுக்கும் அம்சம் நீக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. பலர் இதற்கான நோட்டிபிகேஷன் தங்களுக்கு வந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு வாட்ஸ்அப் செயலியிலும் மேற்கொள்ளலாம்.


    மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள mygov corona helpdesk மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலி மூலம் கொரோனாவைரஸ் சார்ந்த விவரங்களை வழங்க mygov corona helpdesk பெயரில் பாட் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த பாட்-ஐ பயன்படுத்த பயனர்கள் முதலில் 9013151515 எனும் மொபைல் நம்பரை சேமிக்க வேண்டும். 

     கோப்புப்படம்

    வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?

    - ஏற்கனவே செய்யவில்லை எனில், 9013151515 எனும் மொபைல் நம்பரை போனில் சேமிக்க வேண்டும்.

    - வாட்ஸ்அப் செயலியில் mygov corona helpdesk என தேட வேண்டும்.

    - பின் 'Book Slot' என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

    - இனி மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஒ.டி.பி. அனுப்பப்படும். இந்த ஒ.டி.பி.-யை சாட்டில் அனுப்ப வேண்டும்.

    - உங்கள் மொபைல் நம்பரில் பலருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால், யாருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என பெயரை தேர்வு செய்யவும்.

    - உங்களுக்கு தேவையான தேதி, நேரம், இடம் மற்றும் தடுப்பூசி விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    - முன்பதிவை சாட் பாட் உறுதிப்படுத்தும்.
    சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு வருகிறது. புது ரெட்மி ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகிறது.

    புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், அடாப்டிவ் டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 பிரைம் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

     ரெட்மி டீசர்

    இந்தியாவில் முன்னதாக ரெட்மி நோட் 10 மாடல் விலை மாற்றப்பட்டது. அதன்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 என மாறி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 பிரைம் விலை ரூ. 10 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனின் குறைந்த விலை மாடலை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
    ஆப்பிள் நிறுவனம் மற்றும் எபிக் கேம்ஸ் நிறுவனங்கள் இடையிலான சட்ட போராட்டம் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்று விவரங்கள் இதுவரை இல்லாத வகையில், அதிகளவு வெளி உலகிற்கு அம்பலமாகி வருகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் பில் ஸ்கில்லர் ஆப் ஸ்டோர் கமிஷனை குறைக்க திட்டமிட்ட விவகாரம் அம்பலமானது. இந்த விவகாரம் எபிக் கேம்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்பித்த சுமார் பத்து ஆண்டுகள் பழைய மின்னஞ்சல் மூலம் வெளியாகி இருந்தது.

    ஐபோன் 4எஸ் - கோப்புப்படம்

    அந்த வரிசையில் தற்போது, ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் நானோ எனும் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோன் 4 ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மற்றும் அளவில் சிறிய ஐபோனினை 2010 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

    ஐபோன் நானோ பற்றிய முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஐபாட் டச் மாடலை சார்ந்து குறைந்த விலை ஐபோனினை உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இன் 2பி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


    இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான மைக்ரோமேக்ஸ் தனது மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தி இருக்கிறது. ஜூலை மாத வாக்கில் ரூ. 7,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை உயர்வு குறித்து மைக்ரோமேக்ஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இன் 2பி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. புதிய விலை மைக்ரோமேக்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டுவிட்டது. 

     மைக்ரோமேக்ஸ் இன் 2பி

    மைக்ரோமேக்ஸ் இன் 2பி புதிய விலை விவரம்

    விலை உயர்வை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மாடல் விலை ரூ. 8,499 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    மைக்ரோமேக்ஸ் இன் 2பி 6 ஜிபி மாடல் விலை ரூ. 8,999-இல் இருந்து தற்போது ரூ. 9,449 என மாறி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் தற்போது ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 10 இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகமாக இருக்கிறது.


    ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ரெட்மி 10 பிரைம் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக ரெட்மி 10 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி 10 பிரைம் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களின்படி ரெட்மி 10 பிரைம் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படும் என கூறப்பட்டது. புதிய ரெட்மி 10 பிரைம் 2106119BI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 மற்றும் ப்ளூடூத் 5.2 வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ரெட்மி 10

    முன்னதாக இதே மாடல் நம்பர் கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்திலும் இடம்பெற்றது. ரெட்மி 10 பிரைம் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி 10 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 பிரைம் இந்திய வெளியீடு குறித்து சியோமி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
    ×