search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 2
    X
    சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 2

    அமெரிக்காவில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை நிறுத்தம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    தற்போது கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் சில வாரங்களில் புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 2

    கடந்த ஆண்டும் கேலக்ஸி போல்டு 2 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கேலக்ஸி இசட் போல்டு விற்பனை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் கேலக்ஸி இசட் போல்டு 2 பல்வேறு நெட்வொர்க் வேரியண்ட்களும் விற்று தீர்ந்ததாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    சில வலைதளங்களில் மட்டும் கேலக்ஸி இசட் போல்டு 2 கிடைக்கிறது. இந்த தளங்களிலும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்று முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம். முந்தைய தகவல்களில் சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.
    Next Story
    ×