என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
புதுடெல்லி:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி டீசரில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பார்சிலோனாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வெளியாகும் முன் அதன் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ட்விட்டரில் @evleaks மூலம் கசிந்திருக்கும் புகைப்படத்தில் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கின்றன.
புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் பார்க்க எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் முன்பக்கம் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், அதிகப்படியான சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 சீரிஸ் சிப்செட்
- மாலி G72MP18 GPU
- 4 ஜிபி ரேம், எஸ்9 பிளஸ் - 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, எஸ்9 பிளஸ் - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஒற்றை / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.4-f/1.5 அப்ரேச்சர்
- எஸ்9 பிளஸ் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- எஸ்9 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- எஸ்9 பிளஸ் 3500 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2018 விழா பார்சிலோனாவில் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 16-ம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.
புதுடெல்லி:
வோடபோன் மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு முதல் விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களை ரூ.999 எனும் விலையில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன.
பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் நடைபெறும் சிறப்பு விற்பனையில் வோடபோன் மற்றும் பிளிப்கார்ட் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் விலையில் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. ஐவூமி, யு, சோலோ, இன்டெக்ஸ், ஸ்வைப் மற்றும் ஆல்காடெல் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் வாங்கிட முடியும்.
வோடபோன் சார்பில் தேர்வு செய்யப்பட்ட என்ட்ரி-லெவல் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தின் #MyFirst4GSmartphone திட்டத்தின் கீழ் வோடபோன் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வோடபோன் சேவையை ஏற்கனவே பயன்படுத்தும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

புதிய சலுகையில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் குறைந்தபட்சம் ரூ.150க்கு ஒவ்வொரு மாதமும் ரிசார்ஜ் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 36 மாதங்கள் ரிசார்ஜ் செய்யும் போது முதல் 18 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று அடுத்த 18 மாதங்கள் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
வோடபோன் சார்பில் மட்டும் ரூ.2000 கேஷ்பேக் வாடிக்கையாள்ரகளின் எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படுகிறது. வோடபோன் மட்டுமின்றி பிளிப்கார்ட் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஏற்கனவே ஒவ்வொரு நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் நிறுவனம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இதேபோன்ற சலுகை விலையில் விற்பனை செய்து வந்த நிலையில், இம்முறை பல்வேறு பிரான்டுகளுடன் இணைந்து பிளிப்கார்ட் மூலம் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ X ஸ்மார்ட்போனின் புதிய டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதை மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.
புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் கொண்ட முதல் மோட்டோ ஸ்மார்ட்போனாக புதிய மோட்டோ X4 இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் நோட்டிஃபிகேஷன் டாட்ஸ், கூகுள் புரோடெக்ட், பிக்சர்-இன்-பிக்சர் மோட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய மோட்டோ X4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.20,999 மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜ் மற்றும் அட்ரினோ 508 GPU கொண்டிருக்கிறது. மெல்லிய கிளாஸ் மற்றும் மெட்டல் வடிவைப்பு கொண்ட மோட்டோ X4 இருபுறமும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி, f/2.0 அப்ரேச்சர் + 8 எம்பி, f/2.2 அப்ரேச்சர் கொண்ட டூயல் பிரைமரி கேமரா செட்டப், 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2018 மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 13.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் நோட்புக்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் ரூ.55,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் மேக்புக் ஏர் விற்பனை மேலும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் புதிய மேக்புக் ஏர் நோட்புக்களை அறிமுகம் செய்தது. புதிய மேக்புக் ஏர் மாடல்களில் பிராசஸர் வேகம் 1.6 ஜிகாஹெர்ட்ஸ்-இல் இருந்து 1.8 ஜிகாஹெர்ட்ஸ்-ஆக ஆப்பிள் நிறுவனம் அதிகரித்தது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 13.3 இன்ச் அளவு கொண்ட என்ட்ரி-லெவல் மேக்புக் சாதனத்தை அறிமுகம் செய்து தற்போதைய மேக்புக் ஏர் சாதனத்திற்கு மாற்றாக விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ட்ரி-லெவல் 13 இன்ச் மேக்புக் ஏர் இந்த ஆண்டின் இரணாடம் பாதியில் வெளியிடப்படலாம் என டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக்புக் சாதனத்தில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இவற்றை ஜெனரல் இன்டர்ஃபேஸ் சொல்யூஷன் (GIS) விநியோகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஜெனரல் இன்டர்ஃபேஸ் சொல்யூஷன் நிறுவனம் எல்.சி.டி. டிஸ்ப்ளேக்களை விநியோகம் செய்யும் பணிகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மேக்புக் ஏர் சாதனங்களுக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் தனது முதல் 12.0 இன்ச் மேக்புக் சாதனத்தை அறிமுகம் செய்தது. எனினும் மேக்புக் ஏர் விற்பனை 12 இன்ச் மேக்புக்களை விட அதிகமாக நடைபெற்றன. இதற்கு மேக்புக் ஏர் விலையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தற்சமயம் ஆப்பிள் வழக்கமான சிக்னேச்சர் ஸ்டைல் வடிவமைப்புகளில் உருவாகி இருக்கும் மேக்புக் ஏர், அந்நிறுவனத்தின் ரெட்டினா டிஸ்ப்ளே இல்லாத ஒரே சாதனமாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த சாதனத்தின் பிராசஸர் மட்டும் ஆப்பிள் சார்பில் மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில் புதிய மேக்புக் ஏர் எவ்வாறு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஆப்பிள் விற்பனை செய்து வரும் தற்போதைய மாடல்களை விட புதிய மாடல்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால மேக்புக் சீரிஸ்களில் ஆப்பிள் நிறுவனம் ஃபுல் ஸ்கிரீன் OLED டிஸ்ப்ளேக்களை வழங்கி, என்ட்ரி-லெவல் சாதனங்களில் எல்.சி.டி. டிஸ்ப்ளேக்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டியில் ஏர்டெல், தனது பழைய திட்டத்தில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.
புதுடெல்லி:
இந்திய டெலிகாம் சந்தையில் கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ, லாபம் பார்க்க துவங்கிவிட்ட போதிலும் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களிடைய நிலவி வரும் போட்டி தொடர்ந்து நீடிக்கிறது. டெலிகாம் நிறுவனங்களிடையே விலை போட்டி நிலவினாலும், ஆதாயம் பெறுவது நாம் தான் என்ற வகையில் நன்மை நமக்கே.
அடிக்கடி புதிய திட்டங்களை அறிவிக்கும் டிரென்ட் முடிந்து, பழைய விலையில் சலுகைகளை மட்டும் புதிதாக வழங்கும் டிரென்ட் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாக இருக்கிறது. அதன்படி டெலிகாம் வாடிக்கையில் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் இணைந்திருக்கிறது.
ஏர்டெல் ரூ.149 பிரீபெயிட் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் சில வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ரூ.149 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் திட்டத்திலேயே வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
எனினும் டேட்டாவில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், 28 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டாவையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதற்கட்டமாக இந்த மாற்றம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
முன்னதாக இதே திட்டத்தில் 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா, ஏர்டெல் எண்களுக்கு மட்டும் வாய்ஸ் கால்கள் வழங்கப்பட்டது. புதிய மாற்றம் வாடிக்கையாளர்களை எந்த நெட்வொர்க் எண்களுக்கும் (ரோமிங் உட்பட) அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்கிறது. இதேபோன்ற திட்டத்தில் ரூ.179 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது.
சமீபத்தில் ஜியோ தனது பிரீபெயிட் திட்டங்களை மாற்றியமைத்தது. இதன் சாஷெட் திட்டங்கள் ரூ.19-க்கு 0.15 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 20 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 திட்டத்தில் தினமும் 5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரே மாதிரி தோற்றம் கொண்ட ஏழு பேர் உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கிறது.
புதுடெல்லி:
உலகில் ஒருவரை போன்ற தோற்றம் கொண்ட ஏழு பேர் வாழ்ந்து வருகின்றனர் என்ற நம்பிக்கை அல்லது கருத்து நிலவி வருகிறது. எனினும் இதன் நம்பகத்தன்மை ஒவ்வொருத்தர் மனநிலை சார்ந்தது ஆகும்.
கூகுளின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் எனும் செயலி இந்த நம்பிக்கையை நம்ப வைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அழகிய மற்றும் பிரபல ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம் வாடிக்கையாளர் முக சாயலில் உலகம் முழுக்க இருக்கும் போர்டிரெயிட்களை காண்பிக்கின்றது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் வழங்கப்பட்ட அம்சம், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தயாவிலும் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளரின் செல்ஃபிக்களை உலகம் முழுக்க சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட்களுடன் ஒற்றுபோகும் புகைப்படங்களை காண்பிக்கும்.

இத்துடன் குறிப்பிட்ட நபரின் செல்ஃபி போர்டிரெயிட்களுடன் ஒற்று போகும் அளவையும் காண்பிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கிடைக்கும் கூகுள் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இதுவரை செல்ஃபி அம்சத்தை பயன்படுத்தி மூன்று கோடி பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க 70 நாடுகளில் உள்ள 1500 அருங்காட்சியகங்களில் 6000க்கும் அதிகமான கண்காட்சிகளில் உள்ள ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை என மொத்தம் பல லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் X சீரிஸ் மிலிட்டரி கிரேடு ஸ்மார்ட்போன் கொரியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சியோல்:
எல்ஜி நிறுவனத்தின் X4 பிளஸ் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ கிரேடு MIL-STD-810G ரக டியூரபிலிட்டி கொண்டுள்ள புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு நிலைகளிலும் உறுதியாக இருக்கும் படி உருவாக்கப்பட்டிருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அலுமினியம் பேக் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் எல்ஜி பே வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி X4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.3 இன்ச் 1280x720 பிக்சல் IPS டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- அட்ரினோ 308 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், எல்ஜி பே
- MIL-STD 810G சான்றிதழ்
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி X4 பிளஸ் ஸ்மார்ட்போன் மொரோக்கன் புளூ மற்றும் லாவெண்டர் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் 300,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,980) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் இன்டகிரேஷன் வசதியை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.
புதுடெல்லி:
ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் இன்டகிரேஷன் வசதி வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் இன்டகிரேஷன் வழங்கும் பணிகளை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நிலையில், ஒருவழியாக ஐபோன்களில் மட்டும் இந்த வசதியை வழங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
புதிய வசதியை பெற்றிருக்கும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இனி தங்களது வாட்ஸ்அப் சாட் திரையில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை யூடியூப் செயலி அல்லது பிரவுசர்களில் சென்று பார்க்கும் வசதி வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி வாட்ஸ்அப் 2.18.11 பதிப்பில் வழங்கப்படுகிறது. இனி வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களின் லின்க்களை கிளிக் செய்து வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த அம்சத்தில் வீடியோ திரை முழுக்க பாப்-அப் ஆவதோடு பிளே (Play), பாஸ் (Pause), குளோஸ் (Close) மற்றும் ஃபுல் ஸ்கிரீன் (Full Screen) உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ற பட்டன்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் வீடியோ அளவை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது யூடியூப் வீடியோ ஒன்று ஸ்மார்ட்போன் திரையின் மேல் அல்லது கீழ்பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. மேலும் இந்த வசதியில் வாடிக்கையாளர் சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறி மற்றொரு சாட் ஸ்கிரீன் சென்றாலும் யூடியூப் வீடியோ தொடர்ந்து ஸ்மார்ட்போனில் ஓடுகிறது.
வாட்ஸ்அப் திரையில் யூடியூப் வீடியோக்களை பிளே செய்ய குறிப்பிட்ட வீடியோ லின்க்-ஐ கிளிக் செய்தாலே போதுமானது. வாட்ஸ்அப் வாடிக்கையாளருக்கு யூடியூப் வீடியோ வரும் போது யூடியூப் பட்டன் திரையில் தோன்றுகிறது. இதனால் ஒருவர் மற்றவர்களுக்கு வீடியோ பகிர்ந்து கொள்ளும் போது செயலியில் இருந்தபடியே வீடியோவை பார்க்க முடியாது.
வாட்ஸ்அப் திரையில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் அப்டேட்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பட்ஜெட் ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.
புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மாகர்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவது தெரியவந்திருக்கிறது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 3, 2018-இல் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 120 முதல் 150 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7500 முதல் ரூ.9500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போனுடன் மோட்டோ இ5 பிளஸ் மாடலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் சார்ந்து அதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், புகைப்படத்தில் சில அம்சங்கள் தெரியவந்திருக்கிறது. அந்த வகையில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் இருக்கும் இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இம்முறை கைரேகை சென்சார் பின்புறம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மேல் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது.

முந்தைய மோட்டோ இ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஹோம் பட்டனுடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனிலும் 16:9 ரக 5.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.
பவர் மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்களும் ஸ்மார்ட்போனின் வலது புறத்திலும், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒற்றை பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்படுவது புகைப்படங்களில் தெரியவந்திருக்கிறது. இத்துடன் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் முந்தைய மாடல்களை போன்று மீடியாடெக் சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம்: MySmartPrice
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
புதுடெல்லி:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் கோ, அந்நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கூகுளுடன் இணைந்து வெளியாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்திருக்கிறது.
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) என்பது 512 எம்பி முதல் 1 ஜிபி ரேம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கூகுள் இயங்குதளம் ஆகும். இந்த திட்டத்தை கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.

குறைந்த பட்சம் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் சுத்தமான ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும்படி ஆண்ட்ராய்டு கோ வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் கூகுள் கோ, மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ, யூடியூப் கோ, கூகுள் அசிஸ்டண்ட் கோ, ஃபைல்ஸ் கோ உள்ளிட்ட செயலிகள் வழங்கப்படுகின்றன.
குவால்காம் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற சிப்செட்களை உருவாக்குவதாக ஏற்கனவே அறிவித்தன. அந்த வகையில் இவற்றில் எந்த நிறுவனத்தின் சிப்செட் முதலில் வெளியிடப்படும் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மைக்ரோமேக்ஸ் சார்பில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வழங்கப்படவில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அர்த்தம் புகட்டும் மற்றும் ஓர் கண்டுபிடிப்பு, நாய் குரைத்தலையும் மனிதர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக மொழி பெயர்க்க வழி செய்கிறது.
அரிசோனா:
தொழில்நுட்ப வளர்ச்சி எல்லை கடந்தது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணம். மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழ்ந்து வரும் செல்லப் பிராணிகளாக நாய்கள் இருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் தங்களது வீடுகளில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
உலகில் பெரும்பாலானோர் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வரும் நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இந்த வழிமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவணைகளை எளிமையான ஆங்கிலத்தில் மாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். கான் லெபோட்சிகோஃப் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகளை 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தனது ஆய்வு மட்டுமின்றி பல்வேறு இதர ஆய்வாளர்களின் தகவல்களை கொண்டு பெட் டிரான்ஸ்லேட்டர் (விலங்கு மொழிமாற்றம்) எனும் சாதனத்தை கடந்த பத்து ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றார்.

இத்துடன் நாய்கள் குரைத்தல், உறுமல் மற்றும் ஊளையிடுவதன் மூலம் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த வழிமுறை மூலம் கண்டறியும். மெஷின் லேர்னிங் மூலம் கம்ப்யூட்டர்கள் நாய்களின் உறுமல் மற்றும் வால் அசைவுகளின் மூலம் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை புரிந்து கொள்ள முடியும் என லெபோட்சிகோஃப் தெரிவித்துள்ளார்.
இன்னும் பத்து ஆண்டுகளில் நாய்கள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மனிதர்களால் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்சமயம் லெபோட்சிகோஃப் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறறையானது நாய்களின் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.
சூலிங்குவா எனும் நிறுவனத்தை துவங்கி இந்த குழுவினர் விலங்குகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களை விலங்குகள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மிக எளிமையாக புரிந்து கொள்ள வழி செய்யும்.
சாம்சங் நிறுவனத்தின் 2018 முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிப்ரவரி மாத இறுதியில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018) விழாவில் சாம்சங் கேலக்ஸி S9 வெளியிடப்பட இருக்கிறது.
உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கும் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. புகைப்படத்தில் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்திருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் AKG வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட இயர்பட்ஸ் வழங்கப்பட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போனிலும் ஆடியோ அம்சம் மேம்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் புகைப்படத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் QHD+ sAMOLED டிஸ்ப்ளே, ரவுன்டெட் கார்னர்கள், IP தர சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் 12 எம்பி டூயல் பிக்சல் கேமரா சென்சார், சூப்பர் ஸ்லோ-மோ மோட் மற்றும் சூப்பர் ஸ்பீடு தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், F/1.5 மற்றும் F/2.4 என இரண்டு அப்ரேச்சர்களை வழங்கப்படுதால் சூழலுக்கு ஏற்ப புகைப்படங்களை எடுக்க வாடிக்கையாளர்கள் இரண்டு வித அப்ரேச்சர்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.
இத்துடன் 8 எம்பி AF செல்ஃபி கேமரா, AKG வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இயர்போன்கள் வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 2 XL போன்று முன்பக்கம் ஸ்பீக்கர் மாட்யூல்கள் வழங்கப்படுமா அல்லது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களை போன்று முன்பக்கம் கீழ் பகுதியில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் முன்பக்க இயர்பீஸ் அடியில் ஒரு வழங்கப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.

கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டதை போன்றே கேலக்ஸி S9 ரீடெயில் பாக்ஸ் காட்சியளிக்கிறது என்பதால் உண்மையில் இது S9 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் தானா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.
எனினும் சி.இ.எஸ். 2018 விழாவில் சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ புதிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்திருக்கிறார். கேலக்ஸி S8 சீரிஸ் போன்றே புதிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் கேலக்ஸி S9 மற்றும் கேலக்ஸி S9 பிளஸ் என இரண்டு மாடல்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கீக்பென்ச் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர், இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் என குறிப்பிடப்பட்டது. இத்துடன் கேலக்ஸி S9 சீரிஸ் சர்வதேச எடிஷனில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






