என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரிலையன்ஸ் ஜியோ போன்றே வோடபோனின் நிறுவனத்திலும் வோல்ட்இ சேவைகளை கொண்டு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வோடபோன் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் படிப்படியாக துவங்கப்பட்டு வருகிறது. சில நகரங்களில் மட்டும் வோடபோன் வோல்ட்இ வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் மற்ற நகரங்களிலும் வழங்க வோடபோன் திட்டமிட்டு உள்ளது. 

    தற்சமயம் வகை டெல்லி, குஜராத் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே வோடபோனின் வோல்ட்இ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக கொல்கத்தா, கர்நாடகாவிலும் அதன்பின் மற்ற நகரங்களிலும் படிப்படியாக வோடபோன் வோல்ட்இ சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் வோடபோன் வோல்ட்இ சேவைகளை அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியாது. 

    மேலும் வோடபோன் வோல்ட்இ சேவை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படவில்லை. இதுவரை ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3T, ஒன்பிளஸ் 5, ஒன்பிளஸ் 5T. ஹூவாய் ஹானர் வியூ 10, ஹானர் 9i, ஹானர் 7X, ஹானர் 8 ப்ரோ, சியோமி ரெட்மி 4, Mi மிக்ஸ் 2, Mi மேக்ஸ் 2, நோக்கியா 5, நோக்கியா 8, சாம்சங் சி9 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வோடபோன் வோல்ட்இ வசதியை பயன்படுத்த முடியும். 



    மேலும் வோடபோன் வோல்ட்இ சேவையை அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கும் பணிகளில் வோடபோன் ஈடுப்பட்டு வருவதாகவும், விரைவில் மற்ற ஸ்மார்ட்போன்களிலும் வோடபோன் வோல்ட்இ சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வரவுடன் 'வோல்ட்இ' அதிக பிரபலமானது. வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கிய ஜியோ, மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு ஈடில்லா போட்டியாக அமைந்தது. வோல்ட்இ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக திறன் கொண்ட வாய்ஸ் கால்களை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள முடியும். 



    சாதாரன கட்டணத்தில் இந்த சேவைகளை பெற முடியும். தற்போதைய வோடபோன் டேட்டா திட்டங்கள் அனைத்திலும் வோல்ட்இ சேவையை சப்போர்ட் செய்யும் என வோடபோன் தெரிவித்துள்ளது. வோல்ட்இ மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் எவ்வித மொபைல் டேட்டாவும் பயன்படுத்தப்படாது. 

    வோடபோன் வோல்ட்இ சேவைகள் தேசிய அளவில் மட்டுமே வழங்கப்படுகிறது. வோடபோன் 4ஜி சிம் மற்றும் வோல்ட்இ சேவையை கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் வோல்ட்இ சேவைகளை இயக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,



    - முதலில் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போனில் 4G CHECK என டைப் செய்து 199 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

    - ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இத்துடன் 4ஜி சிம் கார்டை பயன்படுத்துவதை மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

    - ஐ.ஓ.எஸ். வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் வோல்ட்இ செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- மொபைல் டேட்டா ஆப்ஷன்ஸ் -- எனேபிள் 4ஜி -- வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

    - ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- வோல்ட்இ கால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

    - டூயல் சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் வோடபோன் சிம் கார்டு 4ஜி/3ஜி/2ஜி (ஆட்டோ) நெட்வொர்க் மோட் சப்போர்ட் செய்யும் சிம் ஸ்லாட்டில் பொருத்தியிருக்க வேண்டும். 
    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய விலை போட்டி தற்சமயம் முடிவதாய் இல்லை. முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது விலை மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றியமைத்து வந்த நிலையில், தற்சமயம் அதிரடி திட்டத்தை வகுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறுத்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரூ.500 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பாரதி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஃபீச்சர் போன்களை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரூ.60-70 விலையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவை வழங்கும் மாதாந்திர திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    இந்திய சந்தையில் ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த ஒற்றை ஃபீச்சர் போனாக ரிலையன்ஸ் ஜியோபோன் இருக்கிறது. அந்த வகையில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க துவங்கி இருக்கும் நிலையில், என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். அந்தவகையில் ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கினாலும், என்ட்ரி-லெவல் ஃபீச்சர் போன் மற்றும் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு இருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.  

    டெலிகாம் நிறுவனங்கள் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்பட்சத்தில் இந்த இடைவெளி வெகுவாக குறையும். மேலும் ஃபீச்சர்போன் வைத்திருப்போர் ஸ்மார்ட்போன்களை வாங்குவர், மேலும் டெலிகாம் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடியும்.
    டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 எனும் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனில் 20 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் சாஃப்ட் எல்இடி பிளாஷ் மற்றும் ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் சான்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் பிரஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 



    இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 சிறப்பம்சங்கள்:

    - 5.65 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D ஃபுல் வியூ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, F/2.0 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, F/2.0 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ரேம் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை பிப்ரவரி 12-ம் தேதி துவங்க இருக்கிறது.
    ஹெச்.டி.சி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான யு11 பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹெச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. 

    ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி.சி. நிறுவனத்தின் யு11 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யு11 பிளஸ் ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், சென்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.



    ஹெச்.டி.சி. யு11 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த ஹெச்.டி.சி. சென்ஸ் U.I
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. அல்ட்ராபிக்சல் 3 பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3930 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0

    ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசிங் சில்வர் நிறத்தில் கிடைப்பதோடு இந்தியாவில் ரூ.56,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. விரைவில் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்திலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போனின் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,


    விவோ நிறுவனத்தின் வி7 பிளஸ் காலதர் தின ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    விவோ நிறுவனத்தின் செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போனான வி7 பிளஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக ஷேம்பெயின் கோல்டு, மேட் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட வி7 பிளஸ் பின் எனர்ஜெடிக் புளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில் விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் இன்ஃபனைடே ரெட் நிற ஸ்மார்ட்போன் காதலர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவுடன் இணந்து புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்களை கவரும் வகையில் காதலுக்கு எல்லையில்லை என்ற தலைப்பில் காதலின் சர்வதேச நிறத்தில் பல்வேறு எமோடிகான்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



    விவோ வி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3225 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் விவோ வி7 பிளஸ் இன்ஃபனைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு புக் மை ஷோ, ஃபெர்னஸ் என் பெட்டல் வழங்கும் சிறப்பு கூப்பன்கள் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விவோ வி7 பிளஸ் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோவை கீழே காணலாம்..,


    ஒப்போ நிறுவனத்தின் எஃப்5 ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒப்போ நிறுவனம் தனது எஃப்5 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் எஃப் 5 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல்களில் மட்டும் அறிமுகமானது. 

    சிவப்பு நிறத்தை தொடர்ந்து டேஷிங் புளூ எடிஷன் எஃப்5 ஸ்மார்ட்போனினை ஒப்போ அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பாலிவுட் பிரபல நடிகரும், ஒப்போ நிறுவன விளம்பர தூதருமான சித்தார்த் மல்ஹோத்ரா பெயரில் அறிமுகமாகி உள்ளது. 



    ஒப்போ எஃப்5 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 FHD + ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்
    - 800MHz ARM மாலி G71 MP2 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 (நௌக்கட்) சார்ந்த கலர்ஓ.எஸ். 3.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 அப்ரேச்சர்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 1/2.8″ சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஒப்போ எஃப்5 சித்தார்த் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியவில் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் ஆன்லைனிலும், பிப்ரவரி 9-ம் தேதி முதல் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஹூவாய் ஹானர் பிரான்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரே நிறத்தில் கிடைக்கும் புதிய ஹானர் 9 லடை் ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது. 

    மிட்நைட் பிளாக மற்றும் சஃபையர் பிளாக் நிறங்களிலும் ஹானர் 9 லைட் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9 லடை் ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999 (3 ஜிபி ரேம் மாடல்) முதல் துவங்குகிறது. ஹானர் 9 லடை் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.14,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    ஹானர் 9 லைட் சிறப்பம்சங்கள்:

    - 5.65 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே
    - ஹுவாய் கிரின் 659 ஆக்டாகோர் சிப்செட்
    - 13 எம்பி + 2 எம்பி டூயல் பிரைமரி கேமரா
    - 13 எம்பி + 2 எம்பி டூயல் செல்ஃபி கேமரா
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், வைபை
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கைரேகை சென்சார்
    - EMUI 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0

    ஹூவாய் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனினை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5% வரை தள்ளுபடி மற்றும் ரூ.7000 வரை பைபேக் கியாரண்டி வழங்கப்படுகிறது.
    இன்ஃபோகஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போனில் அசத்தும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    இன்ஃபோகஸ் நிறுவனத்தின் ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி கேமராவுடன் எல்.இ.டி. பிளாஷ் மற்றும் செல்ஃபி கேமராவுடன் ஃபேஸ் பியூட்டி, கேமரா ஃபில்ட்டர் மற்றும் ப்ரோ மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபோகஸ் ஏ2 சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC9832 பிராசஸர்
    - மாலி-400 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபோகஸ் ஏ2 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் இன்ஃபோகஸ் ஏ2 விலை ரூ.5,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மொபிகுவிக் ரூ.300 கேஷ்பேக் மற்றும் 30 ஜிபி 4ஜி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெட்மி இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியான டீசர்களை தொடர்ந்து ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் ரோஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5A டார்க் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    எனினும் ரோஸ் கோல்டு நிற ரெட்மி 5A  விற்பனை செய்யப்படாமல் இருந்தது. கடந்த மாதம் சியோமி வெளியிட்ட தகவல்களில் இந்தியாவில் இதுவரை சுமார் 10 லட்சம் ரெட்மி 5A ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதிய நிறம் தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் எச்டி IPS 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    - ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
    - இன்ஃப்ராரெட் சென்சார்

    சியோமி ரெட்மி 5A மூன்று நிற ஸ்மார்ட்போன்களும் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 5A ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் Mi.காம் வலைத்தளங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.4,999 முதல் துவங்குகிறது.
    10 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன்களில் அறிமுகமாகும் பல்வேறு சிறப்பம்சங்களை முதலில் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக விவோ இருக்கிறது. சமீபத்தில் கசிந்திருக்கும் தகவல்களில் விவோவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 10 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுவரை வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 6 அல்லது 8 ஜிபி ரேம் வரை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இரட்டை இலக்கு எண் (10 ஜிபி) ரேம் பெறும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். 

    விவோ Xபிளே7 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 4K OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீன சமூக வலைத்தளமான வெய்போவில் வெளியாகியுள்ளது.


    புகைப்படம்: நன்றி வெய்போ

    விவோ 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்த விவோ Xபிளே 6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக Xபிளே 7 உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களை வைத்து பார்க்கும் போது 2018-ம் ஆண்டின் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக விவோ வெளியிட்ட X20 பிளஸ் UD ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக அமைந்தது. புதிய விவோ ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய Xபிளே 7 ஸ்மார்ட்போனிலும் சினாப்டிக்ஸ் தயாரித்த கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க டூயல் கேமரா அமைப்பு மற்றும் 4X ஆப்டிக்கல் சூம் வழங்கப்படும். இத்துடன் 4K OLED டிஸ்ப்ளே, 92.9% ஸ்கிரீன்-பாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 10 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விவோ Xபிளே 7 விலை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் இதன் விலை 500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.31,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
    பீஜிங்

    சீனாவில் சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட நிலையில், மூன்றாவது மாடல் முதற்கட்டமாக சீனாவில் மட்டும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.11,000) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் ரேம் தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவன வலைத்தளத்தில் மட்டும் சத்தமில்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது. கருப்பு, இளஞ்சிவப்பு, நீலம், மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 7202x1440 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - 2 / 3 / 4 ஜிபி ரேம்
    - 16 / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, PDAF, F/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
    2018-ம் ஆண்டில் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக டிஜிடைம்ஸ் நிறுவன மூத்த ஆய்வாளர் லூக் லின் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்களும், OLED டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்கள் என மொத்தம் நான்கு ஐபோன்களை ஆப்பிள் வெளியிட இருப்பதாக லூக் லின் தெரிவித்துள்ளார். 

    இதில் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஐபோன்களும் முறையே 5.7 - 5.8 அல்லது 6.0 - 6.1 இன்ச் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம் என்றும் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களில் 6.0 - 6.1 இன்ச் அல்லது 6.4 - 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. 

    இந்நிலையில் 6.0 இன்ச் ஸ்கிரீன் கொண்ட OLED ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடாது என டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் ஐபோன் 8 சீரிஸ் போன்று இரண்டு ஐபோன்களில் எல்.சி.டி. பேனல்களும், ஐபோன் X போன்ற OLED சார்ந்த ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3D சென்சிங் அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



    சமீபத்திய தகவல்கள் பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களை சார்ந்து வெளியாகி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிடலாம் என்றும் இவற்றில் இரண்டு ஐபோன்களில் OLED ரக டிஸ்ப்ளேவும், ஒரு ஐபோனில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

    மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன்களில் OLED ஸ்கிரீன் கொண்டவை 5.8 இன்ச் (புதிய ஐபோன் X) மற்றும் 6.5 இன்ச் (ஐபோன் X பிளஸ்) கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்ட மாடலில் 6.1 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் இது ஐபோன் எஸ்.இ. 2 என அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

    புதிய ஐபோன் எஸ்.இ. 2 பிரீமியம் பிரிவில் சற்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் X ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் அரையாண்டு வாக்கில் விற்பனை நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சீனா போன்ற சந்தைகளில் புதிய ஐபோன் X விற்பனை மந்தமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

    எனினும் சீனாவில் மட்டும் இதுவரை 70 லட்சம் ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×