என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    எல்ஜி நிறுவனத்தின் K8 2018 மற்றும் K10 2018 என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    எல்ஜி நிறுவனம் புதிய K8 மற்றும் K10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு முன் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ் K8 2018, K10 2018, K10 பிளஸ் 2018 மற்றும் K α 2018 ஸ்மார்ட்போன்களும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

    தற்சமயம் எல்ஜி அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 2.5D ஆர்க் கிளாஸ் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. K8 ஸ்மார்ட்போனில் மெட்டல் வடிவமைப்பு மற்றும் மெட்டல் யு-ஃபிரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கேமரா தொழில்நுட்பம் எல்ஜி ஜ6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு கேமராக்களிலும் பொக்கே அம்சம் கொண்டுள்ளது. 

    ஸ்மார்ட் ரியர் கீ எனும் புதிய அம்சம் ஸ்மார்ட்போனினை கைரேகை சென்சார் மூலம் மிக வேகமாக அன்லாக் செய்கிறது. இத்துடன் புகைப்படங்களை வேகமாக படமெடுக்கவும், ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் இந்த அம்சம் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய எல்ஜி K8 ஸ்மார்ட்போனில் ஆட்டோ ஷாட், ஜெஸ்ட்யூர் ஷாட், செல்ஃபிக்களுக்கான ஃபிளாஷ், க்விக் ஷேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 



    எல்ஜி K8 (2018) சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஆன்-செல் டச் 2.5D வளைந்த கிளாஸ் IPS டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
    - சிங்கிள் / டூயல் சிம்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா (K10 α)
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    எல்ஜி K10 (2018) சிறப்பம்சங்கள்:

    - 5.3 இன்ச் 1280x720 பிக்சல் ஆன்-செல் டச் 2.5D வளைந்த கிளாஸ் IPS டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
    - 2 ஜிபி, 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி, 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
    - சிங்கிள் / டூயல் சிம்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்ஜி K8 2018, எல்ஜி K10 2018 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அரோரா பிளாக், மொராக்கன் புளூ மற்றும் டெர்ரா கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இவை ஐரோப்பியா, ஆசியா, லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஐபோன் எஸ்இ2 வெளியீடு குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் எஸ்இ வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) வெளியிடப்படலாம் என சீன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய ஐபோன் எஸ்இ2 முந்தைய மாடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெட்டல் பேக், ஃபிரேம், முன்பக்க பெசல்கள், ஹோம் பட்டன் உள்ளிட்டவற்றுடன் பெரிய 4.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்இ 2 முன்பக்கம் இப்போதைய டிரெண்ட் பின்பற்றும் வகையில் சற்றே மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    எனினும் ஃபேஸ் ஐடி மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் A10 ஃபியூஷன் சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் ஐபோன்களை டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்ததில்லை.

    அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ2 மென்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த டெவலப்பர்களுக்கான விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை வழங்கியிருக்கும் வலைத்தளம் லீக்ஸ் மற்றும் தகவல்களை முடிந்த வரை உண்மையாகலாம் என்றாலும் இதுவரை ஆப்பிள் சார்பில் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. 

    இதேபோன்று பிரபல ஆப்பிள் டிப்ஸ்டரான மிங் சி கியோ ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தார்.
    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. 

    முன்னதாக ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருந்த நிலையில், இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களில் பெரும்பாலான சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்ட்ரய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் முந்தைய கேலக்ஸி எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுவதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவில் f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 12 எம்பி இரண்டாவது கேமராவுடன் f/2.4 அப்ரேச்சர், 8 எம்பி செல்ஃபி கேமராவுடன் f/1.7 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஒற்றை பிரைமரி கேமரா 12 எம்பி சென்சார், f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. இவ்வகை அப்ரேச்சர் வீடியோக்களை (960 fps) நொடிக்கு 960 ஃபிரேம் வேகத்தில் பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். 



    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி பிளஸ் 1440x2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 1440x2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்-இன் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் IP68 சான்று, கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், ஐரிஸ் ஸ்கேனர், முக அங்கீகார வசதி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.



    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு.எஸ்.பி டைப்-சி, எல்டிஇ, ப்ளூடூத் 5.0, டூயல் சிம் ஸ்லாட், டூயல் பேண்ட் வைபை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் எஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தகியூட்டப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, லிலாக் பர்ப்பிள் மற்றும் கோரல் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்9 சீரிஸ் முன்பதிவுகள் அறிமுக நிகழ்வில் துவங்கி மார்ச் 8-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எஸ்9 சீரிஸ் விலையை பொருத்த வரை எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை முந்தைய எஸ்8 சீரிஸ்-ஐ விட 100 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி WinFuture, @evleaks
    ஜிவி மொபைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து எனர்ஜி இ3 எனும் ஸ்மார்ட்போனினை ரூ.699 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
    புதுடெல்லி:

    ஜிவி மொபைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து எனர்ஜி இ3 எனும் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.699 விலையில் வெளியிட்டுள்ளன. இதன் உண்மை விலை ரூ.3,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ஃபுட்பால் ஆஃபரில் ரூ.2200 கேஷ்பேக் சலுகையுடன் ரூ.699க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஃபுட்பால் கேஷ்பேக் ஆஃபரில் ரூ.50 மதிப்புடைய 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படும். இந்த சலுகையை பெற மார்ச் 31, 2018-க்குள் ரூ.198 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ வழங்கும் கேஷ்பேக் தொகையை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தி கொள்ள முடியும்.  



    ஜிவி எனர்ஜி இ3 சிறப்பம்சங்கள்:

    - 4.0 இன்ச் WVGA டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 5 எம்பி பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
    - 4ஜி வோல்ட்இ
    - 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
     
    ஜிவி எனர்ஜி இ3 மட்டுமின்றி பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கேஷ்பேக் சலுகையில் கிடைக்கின்றன. ஜிவி எனர்ஜி இ12, ரெவல்யூஷன் பி30, பிரைம் பி300 மற்றும் பிரைம்444 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகின்றது.

    ஜிவி மொபைல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஃபுட்பால் சலுகையை பெற முதற்கட்டமாக ரூ.199 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 56 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் தினமும் 2 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது.
    தாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி. இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை 18:9 ரக டிஸ்ப்ளேவுடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன்களை அதிக தரத்துடன் வெளியாவதில் பெயர்பெற்ற ஹெச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் ஹெச்.டி.சி. டிசையர் 12 ஸ்மார்ட்போனினை வெளியிட திட்டமிட்டிருக்கிறது. 

    புதிய ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் டிசையர் 12 ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன், 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எண்ட்ரி-லெவல் அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    ஹெச்.டி.சி. யு12 ஸ்மார்ட்போன் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்படாது என்பதால் புதிய எண்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் விரைவில் வெளியாக இருக்கும் ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    பிரீஸ் (Breeze) என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் ஹெச்.டி.சி. டிசையர் 12 என அழைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதன் வெளியீடு மற்றும் விற்பனை குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. எண்ட்ரி-லெவல் போன் என்பதால் இதன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படாது என்பதை மட்டும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஹெச்.டி.சி. டிசையர் 12 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே (ஃபுல் ஹெச்.டி பிளஸ் அல்லது ஹெச்.டி. பிளஸ்), மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என எவான் குறிப்பிட்டுள்ளார்.
    ஆண்ட்ராய்டு 8.1 கோ (ஓரியோ) இயங்குதளத்திற்கான ஜிமெயில் கோ செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுள் அசிஸ்டண்ட் கோ, ஜிபோர்டு கோ, யூடியூப் கோ, மேப்ஸ் கோ செயலிகளை தொடர்ந்து ஜிமெயில் கோ செயலி வெளியிடப்பட்டுள்ளது. புதிய செயலி குறைந்த அளவு ரேம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கூகுளின் கோ எடிஷன் செயலிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்) இயங்குதளத்தில் வேலை செய்யும். மற்ற கோ எடிஷன் செயலிகளை போன்றே புதிய செயலியும் குறைந்த மெமரியில் ஜிமெயில் போன்ற வேகத்தில் இயங்குகிறது. இதன் ஸ்மார்ட் இன்பாக்ஸ் அம்சம் அனைத்து தகவல்களையும் பாதுகாப்பாகவும், ஒருங்கிணைத்தும் வைத்து கொள்கிறது. 

    ஜிமெயில் கோ செயலியில் மின்னஞ்சல் வரும் போதே நோட்டிபிகேஷன்கள் வருகிறது. இவற்றை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் படித்து, பதில் அனுப்ப முடியும். மின்னஞ்சல்களை தேடும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது, எனினும் இந்த அம்சம் ஆஃப்லைனில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜிமெயில் கோ செயலியில் டிரைவ் அட்டாச்மெண்ட் ஆப்ஷன் மற்றும் பணம் அனுப்பும் வசதிகள் வேலை செய்யாது. ஜிமெயில் செயலி போன்றே ஜிமெயில் கோ செயலியிலும் 15 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு கணக்குகளை சப்போர்ட் செய்கிறது. இதனால் ஜிமெயில் மற்றும் இதர மின்னஞ்சல் முகவரிகளை செட்டப் செய்து கொள்ள முடியும். 

    கோ எடிஷன் செயலி என்பதால் இந்த செயலி குறைந்த ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜிமெயில் கோ செயலியை வாடிக்கையாளர்கள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் குவாட் ஹெச்.டி. AMOLED ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

    7000 சீரிஸ் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் 6.1 மில்லிமீட்டர் மெல்லியதாக இருக்கிறது. 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. சில நிமிடங்கள் சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும் திறன் கொண்ட டர்போ சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  

    புதிய மோட்டோ ஸ்மார்ட்போனுடன் 3490 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட மோட்டோ டர்போபவர் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.5,999 ஆகும். இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மோட்டோ இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பேட்டரி மாட்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மோட்டோ பேட்டரி மாட்களில் 15வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, எல்இடி இன்டிகேட்டர்கள் கொண்ட பட்டன், 20 நிமிடம் சார்ஜ் செய்து 50% போன் சார்ஜ் ஆகும் திறன் வழங்கப்பட்டிருக்கிறது. 



    மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1440x2560 பிக்சல் குவாட் ஹெச்டி AMOLED POLED ஷேட்டர்ஷீல்டு, ஷேட்டர்ப்ரூஃப் டிஸ்ப்ளே
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - டர்போ சார்ஜிங் வசதி

    இந்தியாவில் மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் சூப்பர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் நிலையில், இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிப்ரவரி 25-ம் தேதி வெளியிட இருக்கிறது. நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இவான் பிளாஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படம் மற்றும் இதர தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஒன் எடிஷனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனுடன் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான சிறப்பம்சங்களையை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. புதிய நோக்கியா 7 பிளஸ் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் கிரே நிறங்களில் வடிவமைக்கப்பட்டு இருப்பதை புதிய புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.



    நோக்கியா 7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே 
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - ஃபாஸ்ட் சார்ஜிங்



    இத்துடன் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் வெளியாகி இருக்கிறது. மற்ற விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய நோக்கியா 1 ஸ்மார்ட்போனிலும் ஸ்கிரீனை சுற்றி பெரிய பெசல்கள் இடம்பெற்றிருக்கிறது.

    புகைப்படம்: நன்றி @evleaks
    காதலர் தினத்தை முன்னிட்டு காதலுக்கான உலகளாவிய நிறத்தில் தங்களது ஸ்மார்ட்போன்களை ஸ்பெஷல் எடிஷன்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
    புதுடெல்லி:

    உலகளவில் காதலை அடையாளப்படுத்தும் நிறமாக சிவப்பு இருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை சிவப்பு நிறத்தில் ஸ்பெஷல் எடிஷனாக வெளியிட்டுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இவை குறுகிய காலத்திற்கு ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    காதலர் தினத்தில் உங்கள் காதலை சிவப்பு நிற பரிசுடன் வெளிப்படுத்த திட்டமா? காதலர் தின ஸ்பெஷல் எடிஷனாக சிவப்பு நிறத்தில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். 



    ஒன்பிளஸ் 5T லாவா ரெட் லிமிட்டெட் எடிஷன்:

    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி 
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா ரெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் விற்பனை ஜனவரி 20-ம் தேதி துவங்கியது.



    ஒப்போ எஃப்5 ரெட் எடிஷன்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 FHD + ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்
    - 800MHz ARM மாலி G71 MP2 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 (நௌக்கட்) சார்ந்த கலர்ஓ.எஸ். 3.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 அப்ரேச்சர்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 1/2.8″ சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஒப்போ எஃப்5 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவி் வோக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது. இந்தியாவில் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வோக் இந்தியா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்5 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியில் மட்டும் கிடைப்பதோடு இதன் விலை ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    விவோ வி7 பிளஸ் இன்ஃபனைட் லவ்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3225 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் விவோ வி7 பிளஸ் இன்ஃபனைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு புக் மை ஷோ, ஃபெர்னஸ் என் பெட்டல் வழங்கும் சிறப்பு கூப்பன்கள் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  



    ஹானர் 7X சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 3340 எம்ஏஎச் பேட்டரி
     
    முழுமையான மெட்டல் வடிவைப்பு கொண்ட புதிய ஹானர் 7X ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7X  ரெட் எடிஷன் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோஃபைபர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் மலிவு விலை பிராட்பேண்ட் சேவையை வழங்கும் நோக்கில் ரிலையன்ஸ் ஜியோஃபைபர் சேவைகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவு பல்வேறு போட்டி நிறுவனங்களின் விலையை முற்றிலும் மாற்றியமைத்து அவற்றை பெருமளவு குறைக்க வைத்தது. 

    அந்த வகையில் டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேண்ட் பிரிவிலும் விரைவில் கால்பதிக்க ஜியோ திட்டமிட்டு பணியாற்றி வருவதாக தகவல் வெளியானது. ஜியோஃபைபர் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்கள் பட்ஜெட் விலையில் நொடிக்கு 1 ஜி.பி. (1 Gbps) வேகத்தில் இண்டர்நெட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதன் வெளியீடு குறித்து எவ்வித தகவல் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் ஜியோஃபைபர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்தியாவில் ஜியோஃபைபர் சேவை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோஃபைபர் சேவைகள் இந்தியாவின் பத்து நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட இடங்களில் ஜியோஃபைபர் வழங்கப்படுகிறது.



    ஜியோஃபைபர் பிரீவியூ திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ஜியோஃபைபர் திட்டங்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், இவை மொபைல் சேவைகளை போன்று நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு ஜியோஃபைபர் அறிமுகம் செய்யப்படும் வரை, இலவச பிரீவியூ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஜியோ முடிவு செய்திருக்கிறது.

    அறிமுக சலுகை நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.500க்கு 600 ஜிபி டேட்டாவும், ரூ.2000க்கு 1000 ஜிபி டேட்டா நொடிக்கு 100 எம்.பி. (100 Mbps) வேகத்தில் வழங்க இருக்கிறது. இந்த திட்டங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியான தகவல்களை சார்ந்தது என்பதால், இம்முறை விலை பட்டியல் மாற்றப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோ அறிமுகமானது முதல் மற்ற நிறுவனங்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், ஜியோஃபைபர் வெளியீட்டை தொடர்ந்து பிராட்பேண்ட் சேவைகளின் விலையும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வி.எல்.சி. ஆண்ட்ராய்டு பிளேரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 3.0-வில் வழங்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    வி.எல்.சி. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.9 பீட்டாவில் குரோம்காஸ்ட் வசசி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வி.எல்.சி. வெர்ஷன் 3.0 பதிப்பில் ஃபாஸ்ட் சீக், பிளேலிஸ்ட் ஃபைல்ஸ், பிழை திருத்தங்கள் உள்ளிட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டெஸ்க்டாப் மற்றும் மொபைல் செயலியின் முதல் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட வெளியீடாக வி.எல்.சி. 3.0 இருக்கிறது. புதிய குரோம்காஸ்ட் வசதி மூலம் வீடியோ அல்லது ஆடியோ உள்ளிட்டவற்றை பெரியை திரையில் ஸ்டிரீம் செய்ய முடியும். நீங்கள் இயக்கும் வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் குரோம்காஸ்ட் சப்போர்ட் செய்யும் போது வி.எல்.சி. ஸ்டிரீமிங் சர்வர் போன்று வேலை செய்யும். 

    குரோம்காஸ்ட் சப்போர்ட் செய்யாத பட்சத்தில் வி.எல்.சி. டிரான்ஸ்கோடு மூலம் மீடியாக்களை பிளே செய்யும். இந்த வழிமுறையில் சி.பி.யு. அதிகளவு பயன்படுத்தப்படும் என்பதால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். அடுத்தக்கட்ட வெளியீடுகளில் குரோம்காஸ்ட் வசதி மேம்படுத்தப்படும் என வி.எல்.சி. தெரிவித்துள்ளது.



    குரோம்காஸ்ட் தவிர, டெக்ஸ், குரோம்புக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவற்றில் வி.எல்.சி. இறுக்கிறது. மற்ற செயலிகளில் இருந்து மீடியா ஃபைல்களை நேரடியாக வி.எல்.சி.-யில் டிராப் செய்து பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு ஆட்டோவில் வாய்ஸ் கமாண்டு மூலமாகவும் தரவுகளை இயக்கும் வகையில் யூசர் இன்டர்ஃபேஸ் எளிமையாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை வி.எல்.சி. 3.0-வில் பிளேலிஸ்ட் ஃபைல்ஸ், டெலீட் பட்டன், ஃபாஸ்ட் சீக் (செட்டிங்ஸ் மூலம் எனேபிள் செய்ய வேண்டும்), சப்டைட்டிள்கள் ஆட்டோலோடு ஆவதை டிசேபிள் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
    வி.எல்.சி. செயலி 100% ஓபன்சோர்ஸ் தளத்தில் இருப்பதால் வி.எல்.சி.-யில் குரோம்காஸ்ட் வசதி வழங்குவதற்கு தாமதமானதாக வி.எல்.சி. தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட வி.எல்.சி. வெர்ஷன் 3.0 செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் முழுமையான பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
    பீஜிங்:

    விவோ நிறுவனம் X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் விவோ X20 பிளஸ் UD அறிமுகம் செய்யப்பட்டது. 

    விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருந்த நிலையில், ஸ்கிரீனை சுற்றி பெசல்கள் இடம்பெற்றிருந்தது. இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போனில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    புதிய புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் பார்க்க சியோமி Mi மிக்ஸ் 2 போன்று காட்சியளிக்கிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் X30 மாடலாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் மற்றும் முன்பக்க கேமரா இடம்பெறாத நிலையில், 95% ஸ்கிரீன்-டூ-பாடி ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    புதிய விவோ ஸ்மார்ட்போன் வழக்கமான இயர்பீஸ்-க்கு மாற்றாக கேன்டிலீவர் பெய்சோஎலெக்ட்ரிக் செராமிக் அகௌஸ்டிக் சிஸ்டம் மற்றும் Mi மிக்ஸ் போன்று பிராக்சிமிட்டி சென்சார் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமரா இடம்பெறாத நிலையில் புகைப்படத்தின் உண்மை தன்மை கேள்வி குறியாகவே உள்ளது.

    விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் சினாப்டிக்ஸ் நிறுவனத்தின் க்ளியர் ஐடி FS9500 ஆப்டிக்கல் கைரேகை சென்சார் பயன்படுத்துகிறது. தற்போதைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மற்ற பாதுகாப்பு அம்சங்களை விட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் பல்வேறு வகையில் சிறப்பாக செயல்படுவதாக விவோ தெரிவித்துள்ளது.
    ×