என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் சந்தையில் தற்சமயம் அறிமுகமாகும் புதிய மாடல்களில் ஐபோன் X சாயல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

    பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் P20, P20 லைட் மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல்-லெஸ் ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனின் அடிபகுதி சற்றே தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் திரையின் கீழ் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், P20 லைட் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது. 


    புகைப்படம்: நன்றி எவான் பிளாஸ்

    இத்துடன் P20 மற்றும் P20 லைட் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா செட்டப், P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இந்த விழா பாரிஸ் நகரில் நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    விலையை பொருத்த வரை ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் 679 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.54,000), P20 லைட் 369 யூரோ (இந்திய விலை ரூ.30,000) மற்றும் P20 ப்ரோ விலை 899 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.73,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹெச்.டி.சி. நிறுவனத்தின் யு12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹெச்.டி.சி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் யு12 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வடிவமைப்பு முந்தைய ஹெச்.டி.சி. யு11 மற்றும் யு11 பிளஸ் போன்று இருக்கும் என்றாலும் சில அம்சங்கள் பிரத்யேகமாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஹெச்.டி.சி. யு12 ஸ்மார்ட்போனில் மெட்டல் ஃபிரேம், இருபுறமும் வளைந்த கிளாஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, புதிய மேட் ஃபினிஷ் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு வித்தியாச தோற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கோப்பு படம்: ஹெச்.டி.சி. யு11 பிளஸ்

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹெச்.டி.சி. யு12 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. + ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா, போர்டிரெயிட் மோட் மற்றும் முக அங்கீகார அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த ஹெச்.டி.சி. சென்ஸ் 10 ஸ்கின் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஹெச்.டி.சி. எட்ஜ். சென்ஸ் தொழில்நுட்பம் 2.0 அப்கிரேடு பெற்று பல்வேறு புதிய வசதிகளை வழங்கலாம் என கூறப்படுகிறது. 3420 எம்.ஏ.ஹெச். பேட்டரி, IP)68 சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சர்வதேச சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் எதிர்பார்க்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள சில காலம் காத்திருக்க வேண்டும்.
    எல்ஜி நிறுவனத்தின் X சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக X4 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனினை எல்ஜி அறிமுகம் செய்திருந்தது.
    சீயோல்:

    எல்ஜி நிறுவனம் X4 பிளஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து எல்ஜி X4 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் 5.3 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    எல்ஜி நிறுவனத்தின் பேமெண்ட் வசதியுடன் வெளியாகி இருக்கும் புதிய X4 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்வது மட்டுமின்றி கைரேகை சென்சார் கொண்டு செல்ஃபி கேமராவினை இயக்க முடியும். இத்துடன் ஹெச்.டி. டி.எம்.பி. (DMB) வசதி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    எல்ஜி X4 சிறப்பம்சங்கள்:

    - 5.3 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. IPS டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - எல்ஜி பே
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்ஜி X4 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2,97,000 வொன் (இந்திய மதிப்பில் ரூ.17,780) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை கொரியாவில் ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறது.
    மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருக்கும் சவுண்ட்ஸ்கேப் எனும் புதிய செயலி, பார்வையற்றோருக்கு வழிகாட்டும் வேலையை 3D ஆடியோ தொழில்நுட்பம் மூலம் செய்கிறது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சவுண்ட்ஸ்கேப் செயலி பார்வையற்றோருக்காக வெளியிடப்பட்டுள்ளது. 3D ஆடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சவுண்ட்ஸ்கேப் செயலி பார்வையற்றோருக்கு ஆடியோ வடிவில் வழிகாட்டும் படி உருவாக்கப்பட்டுள்ளது. 

    முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் சவுண்ட்ஸ்கேப் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஸ்டீரியோ ஹெட்செட்களை பயன்படுத்த வேண்டும். தற்சமயம் வரை சவுண்ட்ஸ்கேப் செயலி ஆண்ட்ராய்டு பதிப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    மைக்ரோசாஃப்ட் தளத்தில் சவுண்ட்ஸ்கேப் குறித்த தகவல்களில் இந்த செயலி ஆடியோ கியூ மற்றும் லேபெல்களை 3D வடிவில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செயலி வழங்கும் ஆடியோ தகவல்கள் குறிப்பிட்ட இடம் இருக்கும் திசையை பார்வையற்றோருக்கு உணர்த்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக இருக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.



    இந்த செயலியை கண் பார்வை உள்ளவர்களும் பயன்படுத்த முடியும், இதனால் அவர்கள் அருகில் இருப்பனவற்றை மிகவும் நேர்த்தியாக கேட்டறிந்து கொள்ள வசதியாக இருக்கும். சவுண்ட்ஸ்கேப் செயலியை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுதவிர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கேமரா செயலி பார்வையற்றோருக்காக மைக்ரோசாஃப்ட் உருவாக்குகிறது. புதிய சவுண்ட்ஸ்கேப் செயலி போன் கன்டகஷன் ஹெட்செட், ஆப்பிள் ஏர்பாட்கள், இன்-இயர் ஓபன் ஹெட்போன் மாடல்களில் சீராக வேலை செய்யும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

    சவுண்ட்ஸ்கேப் செயலியின் மற்ற அம்சங்களை பொருத்த வரை பயன்படுத்துபவர் தன்னை சுற்றி இருக்கும் விஷயங்களை கேட்டறிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட இடம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மற்ற இடங்கள் குறித்த விவரங்கள், பயனர் முன் இருப்பனவற்றையும் தெரிவிக்கும்.

    ஆப்பிள் பிளே ஸ்டோரில் தற்சமயம் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி ஐ.ஓ.எஸ். 10.0 இயங்குதளம், ஐபோன் 5எஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன் மாடல்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் ஆடியோ தகவல்களை வழங்கும் மைக்ரோசாஃப்ட் சவுண்ட்ஸ்கேப் 447.1 எம்.பி. மெமரி அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் 40 இன்ச் Mi டி.வி. 4A ஸ்மார்ட் டி.வி. மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனம் 43 இன்ச் மற்றும் 49 இன்ச் 1080 பிக்சல், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 4K ஹெச்.டி.ஆர். டி.வி. மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இத்துடன் அறிமுகமான 32 இன்ச் Mi டி.வி. 4A மற்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஜனவரி மாதத்தில் அந்நிறுவனம் 50 இன்ச் 4K HDR டி.வி. மாடலினை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்சமயம் புத்தம் புதிய 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டி.வி. மாடலை சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் Mi டி.வி. 4A சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை அவர்களுக்கு பரிந்துரைக்கும் வசதி கொண்டது. 

    இத்துடன் டால்பி, டி.டி.எஸ். ஆடியோ வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த Mi ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது இன்ஃப்ராரெட் மற்றும் ப்ளூடூத் சார்ந்து இயங்குகிறது. இத்துடன் குரல் அங்கீகார வசதி வழங்கப்பட்டு இருப்பதால், குரல் மூலமாகவும் இயக்க முடியும். 



    சியோமி Mi டி.வி. 4A 40-இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 40- இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் L962-H8X கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
    - மாலி-450 MP3 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2 LE, 2 x HDMI, AV, 2 x யு.எஸ்.பி, ஈத்தர்நெட்
    - H.263, H.264, H.265, MPEG1 / 2/4 வசதி
    - 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- ஹெச்.டி. ஆடியோ டூயல் டீகோடிங்

    சியோமி Mi டி.வி. 4A 40 இன்ச் மாடல் 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் சீனாவில் இதன் விற்பனை மார்ச் 6-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டி.வி. கட்டணத்தில் இருந்து 100 யுவான் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. சீரிஸ் புதிய ஸ்மார்ட் டி.வி. விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் புதிய Mi ஸ்மார்ட் டி.வி. விரைவில் வெளியாக இருப்பது அந்நிறுவன வலைத்தளத்தின் மூலமாகவே தெரியவந்துள்ளது. 32 இன்ச் Mi டி.வி. 4A இந்திய விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு டி.வி. மாடல் பெயர் இடம்பெறவில்லை என்றாலும் இதன் விலை ரூ.21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இரண்டாவது சியோமி ஸ்மார்ட் டி.வி. மாடலில் 43 இன்ச் திரை மற்றும் இந்த மாடல் Mi டி.வி. 4A என அழைக்கப்படலாம் என இதன் சோர்ஸ் கோடு மூலம் தெரியவந்திருக்கிறது. முன்னதாக ரெட்மி நோட் 5 சிறப்பம்சங்களை வெளியிட்ட ட்விட்டர் பயனர் மூலம் புதிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.



    சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
    - மாலி-450 MP3  GPU
    - 1 ஜிபி ரேம் 
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - வைபை, 2 x HDMI, AV,  USB 2.0 x 1, ஈத்தர்நெட்
    - 2 x 5 வாட் ஸ்பீக்கர்



    சியோமி Mi டி.வி. 4A 43-இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 43 இன்ச் 1920x1080 பிக்சல் ஹெச்.டி. எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
    - மாலி-450 MP3  GPU
    - 1 ஜிபி ரேம் 
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - வைபை, 2 x HDMI, AV,  USB 2.0 x 1, ஈத்தர்நெட்
    - 2 x 5 வாட் ஸ்பீக்கர்
    - டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்

    சியோமியின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தற்சமயம் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2018 #AsusZenFone5
    பார்சிலோனா:

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசுஸ் சென்ஃபோன் 5Z என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    புதிய அசுஸ் சென்ஃபோன் 5Z ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் சோனி எக்ஸ்பீரியா XZ2 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.



    அசுஸ் சென்ஃபோன் 5Z சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் சூப்பர் IPS டிஸ்ப்ளே 
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சா்ந்த ZenUI 5.0, ஆண்ட்ராய்டு பி அப்கிரேடு
    - ஹைப்ரிட் டூயல் சிம் மற்றும் டூயல் வோல்ட்இ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
    - சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8,
    - 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.0, OV8856 சென்சார்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, OV8856 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - டூயல் ஸ்பீக்கர்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அசுஸ் பூஸ்ட்மாஸ்டர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய அசுஸ் சென்ஃபோன் 5Z ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் மெட்டார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. அசுஸ் சென்ஃபோன் 5Z விலை ஐரோப்பியாவில் 479 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.38,179) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வெளியீடு ஜூன் மாதம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MWC2018 #smartphone
    சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2018 #SonyMWC
    பார்சிலோனா:

    2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் தனது வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பீரியா இயர் டுயோ என அழைக்கப்படும் புதிய ஹெட்போன்களில் நாய்ஸ்-கேன்சலிங், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. 

    புதிய ஹெட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் டூயல் லிஸ்டிங் எக்ஸ்பீரியன்ஸ் எனும் அம்சம் வெளிப்புற சத்தத்தை குறைத்து முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது. எக்ஸ்பீரியா டுயோ வயர்லெஸ் ஹெட்போன்களை கொண்டு காலண்டர், செய்திகள் மற்றும் இதர தகவல்களை ஆடியோ நோட்டிபிகேஷன் வடிவில் அனுப்பும் வசதியை கொண்டுள்ளது.  

    இதன் அதிநவீன டெய்லி அசிஸ்ட் அம்சம் வாடிக்கையாளர் ஒரு நாள் முழுக்க செய்யும் பணிகள் சார்ந்த விவரங்களை சேகரித்து அதற்கேற்ற தகவல்களை பரிந்துரை செய்யும். வாடிக்கையாளர் பயன்படுத்தும் போது இனிமையான இசை அனுபவத்தை வழங்க சோனி தயாரித்த ஸ்பேடியல் அகௌஸ்டிக் கண்டக்டர் வழி செய்கிறது.



    இத்துடன் சோனியின் க்ளியர் ஃபேஸ் ஆடியோ தொழில்நுட்பம் ஹெட்போன் பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ஹெட்போன் ஒலியை தானாக மாற்றிமைக்கும் வசதி கொண்டுள்ளது. இதனால் இசையை முழுமையாக அனுப்பவிக்க முடியும். இது சோனியின் CXD5602 சிப் மூலம் இயங்குகிறது. இந்த சிப்செட் மிக குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களில் பயணம் செய்யும் போது வரும் அழைப்புகளை ஸ்மார்ட்போனினை கையில் எடுக்காமல் தலையை மட்டும் அசைத்தே அழைப்பை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். அதிநவீன ஜெஸ்ட்யூர் அம்சம் இந்த வசதியை வழங்குகிறது. இத்துடன் ஹெட்போன்களை தழுவியே இசையை தேர்வு செய்வதும், ஒலியை மாற்றியமைக்கவும் முடியும். 

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் வகையில் அசிஸ்டண்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா இயர் டுயோ கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் இதன் வெளியீடு மார்ச் மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #MWC2018 #XperiaEarDuo
    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
    பார்சிலோனா:

    சர்வதேச ஸ்மார்ட்போன் ப்ரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கியது. இவ்விழாவில் நோக்கியா ஏற்கனவே அறிவித்தப்படி 2018-ம் ஆண்டிற்கான புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    அந்த வகையில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 8110, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ், புதிய நோக்கியா 6 நோக்கியா 1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்விலேயே ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் வெளியீட்டு தகவல்களையும் ஹெச்.எம்.டி. குளோபல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்திய வெளியீடு மற்றும் விலை குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. 



    நோக்கியா 8810 4ஜி:

    நோக்கியாவின் பிரபல 8810 மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது. இம்முறை 4ஜி வசதி, ஸ்லைடர் கொண்ட அதிநவீன வாழைப்பழ தோற்றம் பெற்றிருக்கிறது. புதிய 8810 4ஜி மொபைல் 4ஜி வோல்ட்இ அழைப்புகள் மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 8810 4ஜி சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 205 சிப்செட்
    - அட்ரினோ 304 GPU
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி ரேம்
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்
    - ஸ்மார்ட் ஃபீச்சர் ஓ.எஸ்.
    - 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - ட்ரிப் பாதுகாப்பு (IP52)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியாவின் பிரபல ஸ்நேக் கேம் கொண்ட புதிய நோக்கியா 8810 4ஜி மே மாதம் முதல் ஐரோப்பியாவில் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை EUR 79 (இந்திய மதிப்பில் ரூ.6,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 1:

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக நோக்கியா 1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வார்ம் ரெட் மற்றும் டார்க் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    நோக்கியா 1 சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 854x480 பிக்சல் FWVGA IPS டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737M சிப்செட்
    - அட்ரினோ 304 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2150 எம்.ஏ.ஹெச். பேட்டரி
     
    ஐரோப்பியாவில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்படும் என்றும் இதன் விலை 85 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    புதிய நோக்கியா 6:

    ஹெச்.எம்.டி. குளோபல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6 இம்முறை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய நோக்கியா 6 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    புதிய நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய நோக்கியா 6 பிளாக், காப்பர் வைட், ஐயன் மற்றும் புளூ, கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஐரோப்பியாவில் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரயிருக்கும் புதிய நோக்கியா 6 விலை EUR249 (இந்திய மதிப்பில் ரூ.19,810) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 7 பிளஸ்:

    சரவ்தேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக நோக்கியா 7 பிளஸ் இருந்தது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய நோக்கியா 7 பிளஸ் 6.0 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டிருக்கிறது.

    நோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, செய்ஸ் ஆப்டிக்ஸ்
    - 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, F/2.6
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஐரோப்பியாவில் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரயிருக்கும் நோக்கியா 7 பிளஸ் விலை EUR399 (இந்திய மதிப்பில் ரூ.32,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 8 சிரோக்கா:

    நோக்கியா 8 சிரோக்கா ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கிறது. வளைந்த எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் நோக்கியா 8 சிரோக்கோ டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது.

    நோக்கியா 8 சிரோக்கோ சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 2560x1440 பிக்சல் pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7
    - 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, F/2.6
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், பாரோமீட்டர்
    - ஸ்ப்லஷ் ப்ரூஃப் (IP54)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, Qi வயர்லெஸ் சார்ஜிங்

    நோக்கியாவின் சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை EUR749 (இந்திய மதிப்பில் ரூ.60,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் இதன் விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கும் 7 நானோமீட்டர் சிப்செட்களை உருவாக்க இருக்கின்றன.
    புதுடெல்லி:

    சாம்சங் எலெக்ட்ராணிக்ஸ் கோ மற்றும் குவால்காம் டெக்னாலஜீஸ் இன்க் நிறுவனங்கள் இணைந்து ஐந்தாம் தலைமுறை (5ஜி) நெட்வொர்க் சேவைக்கான 7 நானோமீட்டர் சிப்செட்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இரு நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வைலட் லித்தோகிராப்பி வழிமுறையை கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி மொபைல் சிப்செட்களை உருவாக்க இருக்கின்றன. இவற்றில் சாம்சங்-இன் 7 நானோமீட்டர் லோ பவர் பிளஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    ஏற்கனவே சாம்சங் மற்றும் குவால்காம் இணைந்து 10 என்.எம். மற்றும் 14 என்.எம். தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் குவால்காம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டித்து 5ஜி தொழில்நுட்பங்களை உருவாக்குவது மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது. என சாம்சங் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவர் சார்லி பே தெரிவித்துள்ளார்.


    கோப்பு படம்: குவால்காம்

    இரு நிறுவனங்களுக்கும் இந்த கூட்டணி மைல்கல் அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஃபவுண்ட்ரி பிஸ்னஸ் (Foundry Business) அடிப்படையில் சிப்செட்களை போதுமான தொழில்நுட்ப வசதிகளற்ற இதர நிறுவனங்களுக்கு தயாரித்து வழங்குவது ஆகும்.

    சாம்சங் மற்றும் குவால்காம் தயாரிக்க இருக்கும் புதிய 7LLP EUV வழிமுறை சார்ந்த தொழில்நுட்பம் 5ஜி மொபைல் சிப்செட்களுக்கு சிறிய அளவில் உருவாக்க வழி செய்யும். இதனால் இந்த சிப்செட்களை பயன்படுத்தும் சாதனங்களில் பெரிய பேட்டரி மற்றும் மெல்லிய வடிவமைப்புகளை வழங்க முடியும். 

    முன்னதாக 7LLP EUV வழிமுறை சார்ந்த தொழில்நுட்பத்தை மே 2017-இல் சாம்சங் அறிமுகம் செய்தது. இது சாம்சங் நிறுவனத்தின் முதல் செமி கண்டக்டர் வழிமுறை சார்ந்த தொழில்நுட்பம் ஆகும்.
    ஏர்டெல் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வழங்கி வருகின்றன.
    புதுடெல்லி:

    இன்டெக்ஸ், கார்பன் மற்றும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் தற்சமயம் லெனோவோ / மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய இருக்கின்றன. ஏர்டெல் மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் மற்றும் லெனோவோ / மோட்டோரோலா இடையேயான கூட்டணியில் மோட்டோ சி, மோட்டோ இ4 மற்றும் லெனோவோ K8 நோட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுவதாக ஏர்டெல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன்களுடன் ஏர்டெல் வழங்கும் ரூ.169 சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி 4ஜி 
    டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் சலுகையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக மோட்டோ சி, மோட்டோ இ4 மற்றும் லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ.5,999, ரூ.8,499 மற்றும் ரூ.12,999 செலுத்த வேண்டும். பின் தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ் செய்ய வேண்டும். 

    இவ்வாறு ரீசார்ஜ் செய்யும் போது முதல் 18 மாதங்களில் ரூ.500 மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.1500 என 36 மாத இறுதியில் மொத்தம் ரூ.2000 வரை திரும்ப பெற முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு 2018-இல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன் வியாபாராத்தை விரிவுப்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அந்த வகையில் ஆப்பிள் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் புதிய அப்டேட் பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஹார்டுவேர் அம்சங்களுடன் ஏர்பாட்ஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்று ஏர்பாட்ஸ்-ம் 2018-இல் புதிய அப்டேட் பெற இருக்கிறது.

    புதிய மாடல் ஏர்பாட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய மாடலில் இயர்போன்களை தொடாமல் சிரியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படலாம். இது ஐபோன் அல்லது ஹோம்பாட்களில் சிரி வேலை செய்வதை போன்றே வயர்லெஸ் இயர்போன்களிலும் வேலை செய்யும் என கூறப்படுகிறது.

    ப்ளூடூத் இணைப்புகளை சீராக இயக்க மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வயர்லெஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இந்த சிப்செட் ஆப்பிள் ஆய்வு மையங்களில் B288 என அழைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி நீர் துளிகள் இயர்போன் மீது விழுந்தாலோ அல்லது மழைத்துளிகளிலும் பாதிக்காத வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.



    தண்ணீரில் மூழ்கடிக்கும் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இடம்பெறாது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஐபோன்களும் ஸ்விம்-ப்ரூஃப் அளவு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பெற்றிருக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள போதிலும் வெளியீடு நீட்டிக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆப்பிள் அதிகாரிகள் எவ்வித பதிலும் வழங்கவில்லை.

    ஆப்பிள் ஹோம்பாட் ஸ்பீக்கரை உருவாக்கிய குழுவினரே புதிய ஏர்பாட்ஸ்-யும் தயாரித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதல் ஏர்பாட்ஸ் இயர்போன்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 7 உடன் அறிமுகம் செய்யப்பட்ட வயர்லெஸ் இயர்போன் வயர் வைத்த ஹெட்போன்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆப்பிள் ஏர்பாட்ஸ் விற்பனையில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இது வயர்லெஸ் சாதனங்களுக்கு புதிய மாற்றாக அமைந்திருக்கிறது. ஹெட்செட்-ஐ சார்ஜ் செய்யும் வகையில் முழுமையான வயர்லெஸ் ஹெட்போனாக ஏர்பாட்ஸ் அமைந்தது.
    ×