என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் விரைவில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஃபீச்சர்போன் ஜியோபோன் லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. கை ஓஎஸ் என அழைக்கப்படும் ஜியோபோன் இயங்குதளத்தில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலி சார்ந்த விவரங்களை முன்கூட்டியே கச்சிதமாக வழங்குவதில் பெயர்பெற்ற WABetaInfo சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் விண்டோஸ் போன் பீட்டாவில் கை ஓஎஸ்இ-ல் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுல்ளது. 

    லினக்ஸ் சார்ந்து இயங்கும் கை ஓஎஸ் மிகவும் குறைந்த மெமரி கொண்ட சாதனங்களில் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தொடு திரை வசதியில்லாத மொபைல் போன்களில் வேலை செய்யும் படி இது உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஃபீச்சர்போன்களுக்கு ஏற்ற இயங்குதளமாக இது இருக்கிறது.



    கோப்பு படம்: ஜியோபோன்

    இந்தியாவில் ரூ.1,500க்கு கிடைக்கும் ஜியோபோன் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் கை ஓஎஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஃபேஸ்புக் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்து இருந்து. அந்த வகையில் இதுபோன்ற செயலிகள் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    தற்சமயம் வாட்ஸ்அப் செயலி சிம்பயன் 40 என ஃபீச்சர் போன் இயங்குதளத்தில் வேலை செய்கிறது. எனினும் இதற்கான சப்போர்ட் இந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட இருக்கிறது. கூகுள் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் கை ஓஎஸ் நிறுவனத்துடன் இணைந்து அசிஸ்டண்ட் சேவையை வழங்க இருக்கின்றன.
    சீன வலைத்தளமான வெய்போவில் மோட்டோரோலா மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    மோட்டோரோலாவின் மோட்டோ இ5, மோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் மோட்டோ இ4 சீரிஸ் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மோட்டோ இ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சற்று முன்னதாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருவதால் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெய்போ தளத்தில் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.

    வெய்போ பதிவில் இடம்பெற்றிருக்கும் மோட்டோ இ5 பிளஸ் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஸ்மார்ட்போனின் முன்பக்கம் மற்றும் பின்புறம் தெளிவாக காட்சியளிக்கும் புகைப்படங்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    இத்துடன் வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் கேமராக்கள் பார்க்க மோட்டோ X4 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது. தற்போதைய புகைப்படத்தில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. 

    முன்னதாக எவான் பிளாஸ் வெளியிட்ட தகவல்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா அமைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படம் மற்றும் ஏற்கனவே வெளியான புகைப்படங்களின் வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 430 மற்றும் மீடியாடெக் MT675X சிப்செட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.8 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி + 8 எம்பி டூயல் கேமரா செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி வெய்போ
    விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று X21 டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
    பீஜிங்:

    விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று X21 டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் 6.28 இன்ச் FHD பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90.3% ஸ்கிரீன் அளவு, 1.66 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 மற்றும் குவால்காம் மூலம் இயங்கும் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என இருவித மாடல்களில் விவோ X21 வெளியிடப்பட்டுள்ளது.

    டூயல் பிரைமரி கேமரா, சாம்சங் 2L9 சென்சார், டூயல் பிக்சல் தொழில்நுட்பம், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 24 எம்.பி. தரமுள்ள புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    விவோ X21 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார் / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ X21 ஸ்மார்ட்போன் பிளாக், அரோரா வைட் மற்றும் ரூபி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 2989 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.29,870), 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் 3198 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.32,960), 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மாடல் 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,085) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விவோ X21 ஸ்டான்டர்டு மாடல் விற்பனை மார்ச் 24-ம் தேதியும், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல் மார்ச் 28-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    மொபைல் போன் பயன்படுத்துவோர் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு மாற மேற்கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய டெலிகாம் வாடிக்கைாயளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற்றிக் கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (MNP) வழிமுறையை மாற்ற டிராய் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்த ஆலோசனை கடிதம் இம்மாத இறுதியில் வழங்கப்பட இருக்கிறது. இதில் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு ஏற்படும் கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்டவை எளிமையாக்கப்பட இருப்பது குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது என டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கால அவகாசம் சிலகாலம் எடுத்துக் கொள்கிறது. ஆலோசனை கடிதத்தின் படி இந்த நேரம் குறைக்கப்படுவதோடு, வழிமுறைகளும் மாற்றப்படும். இதுகுறித்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

    இதுவரை மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வதற்கான கட்டணம் ரூ.19 ஆக இருந்த நிலையில், இவை ரூ.4 என மாற்றியமைக்கப்பட்டது. விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கான வழிமுறைகள் மற்றும் கால அவகாசம் மாற்றப்பட இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


    கோப்பு படம்

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி புதிய வழிமுறைகள் மற்றும் அதிக பாதுக்காப்புடன் மாற்றுவது குறித்த டெலிகாம் துறையின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள டிராய் முடிவு செய்திருக்கிறது. 

    உலகில் உள்ள மற்ற நாடுகளில் மொபைல் நம்பர் போர்ட்பிலிட்டி செய்யும் வழிமுறைகள் சில மணி நேரங்களில் நிறைவுறும் நிலையில், இந்தியாவில் இதற்கு ஏழு நாட்கள் ஆகிறது என டிராய் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய வழிமுறைகள் மிகவும் நேர்த்தியாகவும், வாடிககையாளர்களுக்கு எவ்வித பிழையும் இல்லாதபடி மேற்கொள்வதை உறுதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மொபைல் நம்பரை மாற்றாமல் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற முடியும்.
    சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் எனும் புதிய ஸ்மார்ட்போனினை தயாரித்து வருவது பென்ச்மார்க்கிங் வலைத்தளம் மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன சியோமி பிளாக்ஷார்க் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அன்டுடு (AnTuTu) பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சியோமி ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர்களில் 2452 புள்ளிகளும் மல்டிகோர்களில் 8452 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    கீக்பென்ச் ஆப் 4.2.2 செயலியில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 1080x2160 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    இதேபோன்று இந்த ஸ்மார்ட்போன் அன்டுடு பென்ச்மார்க்கில்ல 270,680 புள்ளிகளை பெற்றிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக பிளாக் ஷார்க் என்ற பெயரில் மொபைல் கேமிங் நிறுவனத்தை சியோமி துவங்கிய நிலையில், புதிய ஸ்மார்ட்போன் தயாராவது குறித்த தகவல்கள் நம்பும் படியாக உள்ளது. 

    பிளாக் ஷார்க் வலைத்தளத்தில் சியோமி முக்கிய முதலீட்டாளர் என்பது தெரியவந்துள்ளது. எனினும் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் விரிவாக அறியப்படாத நிலையில், உயர்-ரக கேமிங் அம்சங்களுக்கான ஹார்டுவேர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய சியோமி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அந்த வகையில் மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் சியோமி வழங்க இருக்கும் சிப்செட் குறித்த தகவல்கள் தெரியவரும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 வெளியாவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், இதனை உறுதி செய்யும் வகையில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) புதிய ஐபேட்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய ஐபோன் வெளியாகலாம் என்ற வாக்கில் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. 

    புதிய வீடியோவில் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஐபோன் X போன்ற நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் கேமரா செட்டப், எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஐபோன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோவில் உள்ள ஐபோன் போலியானது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஐபோன் எஸ்.இ. 2 தயாராவது குறித்து முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பிரபல ஐபோன் வல்லுநரான மிங்-சி-கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஐபோன் எஸ்.இ.2 இந்த ஆண்டு வெளியாகாமல், மூன்று ஐபோன் மாடல்கள் வெளியிடப்படலாம் என தெரிவித்திருக்கிறார். இத்துடன் அடுத்த தலைமுறை ஐபோன் X மாடல் இந்த ஆண்டு வெளியாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான தகவல்களின் படி 2018 புதிய ஐபோன் மாடல்களின் தயாரிப்பு பணிகள் மே அல்லது ஜூன் மாத வாக்கில் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மார்ச் 2016-இல் வெளியான ஐபோன் எஸ்.இ. இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    யூடியூபில் வெளியாகி இருக்கும் ஐபோன் எஸ்.இ. 2 வீடியோவை கீழே காணலாம்..,


    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 ப்ரோ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 5 மற்றும் பாரத் 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற ஃபேஸ் அன்லாக் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. புதிய பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமராவும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கிறது.



    மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    அதிவேக ஆட்டோ ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீடு குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    எல்.ஜி. ஜி7 மற்றும் எல்.ஜி. ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய எல்.ஜி. திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் வழக்கத்தை மாற்றுவதாக எல்.ஜி. தெரிவித்து இருந்த நிலையில், எல்.ஜி. ஜி சீரிஸ் மற்றும் வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எந்நேரத்திலும் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முந்தைய எல்.ஜி. ஜி6 ஸ்மார்ட்போனினை விட புதிய எல்.ஜி. ஜி7 ஸ்மார்ட்போன் விலை ரூ.6,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    எல்.ஜி. ஜி7 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச், செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட கேமரா அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சம் எல்.ஜி. வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இபருப்பது குறிப்பிடத்தக்கது.



    எல்.ஜி. ஜி7 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா, குவாட்-DAC ஆடியோ சிஸ்டம், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், மேம்படுத்தப்பட்ட ரேம், இன்டெர்னல் மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    கொரியாவில் இதன் விலை முந்தைய மாடலை விட அதிகமாக அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கொரியாவில் எல்.ஜி. ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் KRW 957,000 (இந்திய மதிப்பில் ரூ.58,300), எல்.ஜி. ஜி6 (32 ஜிபி) KRW 819,500 (இந்திய மதிப்பில் ரூ.49,900) என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோன்று எல்ஜி வி40 ஸ்மார்ட்போனின் வெளியீடு 2018 நவம்பரில் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக எல்.ஜி. வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன. இந்த ஆண்டு எல்.ஜி. ஜி7 வெளியீடு காரணமாக எல்.ஜி. வி30 அறிமுகம் தாமதமாகியுள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எல்.ஜி. ஜி7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் OLED, 1440x3120 பிக்சல் டிஸ்ப்ளே, 19:5:9 மற்றும் 900 ppi கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹெச்.எம்.டி குளோபல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்த நிலையில், நோக்கியா 9 விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஹெச்.எம்.டி. குளோபல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. 

    நோக்கியா 1 பட்ஜெட் ஸ்மார்ட்போன் முதல் நோக்கியா 8 சிரோக்கோ பிரீமியம் ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 8110 மொபைல் போன்களை அறிமுகம் செய்த ஹெச்.எம்.டி. குளோபல் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யாமல் சஸ்பென்ஸ் வைத்துவிட்டது. 

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் மற்றொரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 9 இருக்கலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அதன்படி ஃபிளாக்ஷிப் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், ஐபோன் X போன்று முன்பக்கம் நாட்ச் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்பக்கம் நாட்ச் வழங்கப்படும் பட்சத்தில் இதுவரை வெளியாகியுள்ள நோக்கியா ஸ்மார்ட்போன்களை விட புதிய ஸ்மார்ட்போனி்ல் மிகவும் மெல்லிய பெசல்கள் இடம்பெறலாம். இதுமட்டுமின்றி இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் முதல் நோக்கியா ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கலாம்.


    கோப்பு படம்: நோக்கியா 7 பிளஸ்

    உலகில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போனாக விவோ X20 பிளஸ் UD இருக்கிறது. இத்துடன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பகுதி நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனின் நிறங்களை சரியாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் நாட்ச் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இவை வெறும் ப்ரோடோடைப் தான் என்றும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. இத்துடன் நோக்கியா-பவர்-யூசர் வெளியிட்டிருக்கும் தகவல்களி்ல் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்.எம்.டி. குளோபல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், ஐந்து கேமரா செட்டப் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ விரைவில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. 

    கடந்த ஆண்டு செல்ஃபி  எக்ஸ்பெர்ட் எஃப் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்ட ஒப்போ, இந்த ஆண்டு எஃப் 7 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

    ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனின் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே ஐபோன் X தோற்றத்தை கொண்டிருக்கிறது. ஒப்போ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் புதிய ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனினை தன் முகத்தை மறைக்கும் வகையில் வைத்திருக்கிறார்.

    முன்னதாக இதே புகைப்படத்தில் மார்ச் 26 என தேதியுடனும், அதன் பின் தேதி நீக்கப்பட்டு புகைப்படம் மட்டும் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் சீனாவில் வெளியாக இருப்பதாக கூறப்படும் ஒப்போ ஆர்15 போன்றே புதிய ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனும் காட்சியளிக்கிறது. 

    ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் ஒப்போ ஆர்15 சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் ஒப்போ ஆர்1 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

    ஒப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு மற்றும் நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. நாட்ச் ஒருபுறம் ஸ்வைப் செய்தால் செயலிகளையும், மறுபுறம் ஷார்ட்கட்களை இயக்கும் வசதி வழங்கப்படிருக்கலாம் என கூறப்படுகிறது.
    ஜியோ டிவி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய இன்டராக்டிவ் அனுபவம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டிவி ஆப் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்டராக்டிவ் ஸ்போர்ட்ஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய சேவை இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரையொட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    இலங்கை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஜியோ டிவி செயலியி்ல் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜியோ டிவி செயிலியிலேயே விளையாட்டுடன் ஒன்றிய அனுபவத்தை பெற முடியும். 

    இந்தியாவில் விளையாட்டு பார்த்து ரசிக்கப்படும் விதத்தையே இன்டராக்டிவிட்டி ஸ்போர்ட்ஸ் அனுபவம் முற்றிலுமாக மாற்றிவிடும். ஜியோ செயலியில் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. கூடுதலாக வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை ஐந்து வித கேமரா கோணங்களிலும், ஆடியோவினை மைதானத்தில் உள்ள சத்தம், ஸ்டம்ப் மைக் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்யும் வசதி மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் மொழியில் வர்ணனை
    உள்ளிடவற்றை தேர்வு செய்ய முடியும். 

    இத்துடன் ஒற்றை கிளிக் செய்து முன்னணி கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள், ஸ்கோர் மற்றும் இதர தகவல்களை பார்க்க முடியும். நேரலையின் போது சில இடங்களில் பார்க்காமல் விட்ட பந்து அல்லது சிக்சரை பேக்வேர்டு சென்று பார்க்கும் வசதியும் செயலியில் வழங்கப்படுகிறது.
    விவோ நிறுவனத்தின் வி9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய வி9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வி7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
    புதுடெல்லி:

    விவோ நிறுவனத்தின் வி9 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. டூயல் பிரைமரி கேமரா, ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் விவோ வி9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    விவோ வி7 சீரிஸ் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய வி9 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் புதிய விவோ வி9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய வி7 மற்றும் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.18,990 மற்றும் ரூ.21,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    முன்னதாக வெளியான டீசரில் புதிய ஸ்மார்ட்போனில் 24 எம்பி கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. முன்பக்க நாட்ச் இயர்பீஸ், முன்பக்க கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் டீசர் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போனில் புதிய 24 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றிருப்பதை தெரிவித்துள்ளது. 

    இதனால் புதிய ஸ்மார்ட்போனில் தற்போதைய வி7 கேமராவை விட மேம்படுத்தப்பட்ட கேமராவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் விவோ வி9 ஸ்மார்ட்போனில் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுமா அல்லது ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    வரும் வாரங்களில் புதிய விவோ ஸ்மார்ட்போனின் முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மற்ற ஆசிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ×