என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சியோமி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் Mi ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் புதிய Mi ஸ்மார்ட்போன் இம்மாத வாக்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சியோமி Mi 7 ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. புதிய Mi ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய தகவல் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து கசிந்துள்ளது.
சியோமி தலைமை செயல் அதிகாரியான லெஸ் ஜூன் வெளியிட்டிருக்கும் தகவல்களில் Mi 7 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார். வெய்போ வலைத்தளத்தின் உரையாடலில் இத்தகவலை அவர் தெரிவித்திருந்தார்.
இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தவிர மற்ற அம்சங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை. 2017-இல் சியோமி மற்றும் சாம்சங் டிஸ்ப்ளே 6.01 இன்ச் OLED பேனல்களுக்கு இணைந்தன. கீக்பென்ச் தகவல்களின் படி Mi 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சியோமி டிப்பர் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம்ஸ ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்கள் ஒருபுறம் இருந்தாலும் புதிய ஸ்மார்ட்போன் எவ்வாறு அழைக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. முந்தைய Mi 5எஸ் மற்றும் Mi 5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களை ஜெமினி மற்றும் கேப்ரிகான் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருந்தது.
ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் வழங்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் வளைந்த திரைகளை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டச்லெஸ் ஜெஸ்ட்யூர் தொழில்நுட்பம் பயனர்கள் ஐபோனினை தொடாமலேயே அவற்றை இயக்க வழி செய்யும். ஐபோன்களில் இதனை வழங்க ஆப்பிள் முடிவு செய்தாலும் இத்தகைய தொழில்நுட்பம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளியாகாது என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மவுஸ் சாதனத்தை பிரபலப்படுத்தினார். சமீபத்திய ஐபோன்களில் 3டி டச் தொழில்நுட்பம் புதிய வசதிகளை வழங்கி வரும் நிலையில் புதிய தொழில்நுட்பமும் ஆப்பிள் வரலாற்று அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் உருவாக்கி வரும் புதிய ஐபோன் டிஸ்ப்ளேக்கள் திரையின் மேல்புறத்தில் இருந்து உள்புறமாக வளையும் தன்மை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போதைய சாம்சங் ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமானதாகும். ஐபோன் X மாடலின் OLED ஸ்கிரீன் கீழ்புறமாக வளைந்திருந்தாலும், இது மனித கண்களுக்கு தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன்களில் பயன்படுத்தப்படும் வளையும் தன்மை கொண்ட எல்சிடி ஸ்கிரீன்களை விட OLED (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோடு) ரக டிஸ்ப்ளேக்களை பலவித வடிவங்கலில் வளைக்கவோ அல்லது மடிக்கவோ முடியும். வளையும் தன்மை கொண்ட ஐபோன்கள் வெளியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரையாகும் என கூறப்படுகிறது.
ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. கடந்த மாதம் ஹெச்டிசி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் லீக் ஆன நிலையில் ஸ்மார்ட்போனின் புதிய படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.
முந்தைய தகவல்களில் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போன் யு12 பிளஸ் என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்துடன் 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா மற்றும் பொக்கே எஃபெக்ட் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் QHD பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845, 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0, 12 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய புகைப்படங்களில் ஹெச்டிசி ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஹெச்டிசி யு12 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் LCD 6 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI
- 12 எம்பி ஹெச்டிசி அல்ட்ராபிக்சல் பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்ண்ட் (IP68)
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3420 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹெச்டிசி யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜி7 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடப்படவில்லை. எனினும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) பட்டன் மற்றும் f/1.5 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீயோல் நகரில் அறிமுகம் செய்யப்பட்டு கொரியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பிரத்யேக ஏ.ஐ. பட்டன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கும் என சமீபத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. இவை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்று பிரத்யேக பட்டன் எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படும்.

புதிய ஏ.ஐ. பட்டன் வாடிக்கையாளர்கள் ல்மார்ட்போனின் ஏ.ஐ. அம்சங்களை மிக சுலபமாக பயன்படுத்த வழி செய்யும். கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் எல்ஜி நிறுவனத்தின் கியூ லென்ஸ் மற்றும் கியூ வாய்ஸ் உள்ளிட்ட ஏ.ஐ. சேவைகளை பயன்படுத்த முடியும். ஏ.ஐ. சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போனில் அதற்கான சென்சார் மட்டும் பிரத்யேக பட்டன் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் எல்ஜி வெளியிட்ட வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அதிகளவு வழங்கப்பட்டு இருந்தது. இதே போன்று கேலக்ஸி எஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்ட பிக்ஸ்பி பட்டன் அனைவராலும் விரும்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எல்ஜி இந்த அம்சத்தை எவ்வாறு வழங்கும் என்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.
புதிய ஸ்மார்ட்போனின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக f/1.5 அப்ரேச்சர் கூறப்படுகிறது. இந்த அம்சம் புகைப்படங்களை எடுக்கும் போது அதிகளவு வெளிச்சத்தை கேமராவினுள் அனுப்பும். இந்த அம்சம் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக இருக்கும். மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் MLCD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் சந்தையின் அடுத்த டிரென்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களாகவே இருக்க வேண்டும். சாம்சங், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் வரிசையில் ஹூவாய் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் மடிக்கும் வசதி கொண்ட சாதனத்தை உருவாக்க காப்புரிமை கோரியிருப்பதாக கூறப்படுகிறது. மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும், மடிக்கப்படாத நிலையில் டேப்லெட் போன்றும் இந்த சாதனம் காட்சியளிக்கும் என காப்புரிமையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவன நுகர்வோர் வியாபார பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யு இந்த சாதனத்தின் ப்ரோடோடைப் ஹூவாய் உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களின் இடையே இடைவெளி இருப்பதாகவும், இதனை முழுமையாக சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

காப்புரிமையில் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த சாதனம் நோட்புக் போன்று காட்சியளிக்கிறது. சாதனத்தை திறந்தால் செவ்வக வடிவம் கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. சமீபத்தில் ஹூவாய் நிறுவனம் P சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
புதிய ஹூவாய் P20 மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்ட்டிருக்கிறது. இதன் மேட் ஆர்எஸ் மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெறுவதற்கான காரணத்தை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X போன்று முன்பக்கம் நாட்ச் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்ற வடிவமைப்பு புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படுவதற்கான காரணத்தை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ அறிவித்துள்ளார்.
வழக்கமான வடிவைப்பில் முன்பக்கம் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் ஐபோன் X போன்ற நாட்ச் தற்சமயம் சாத்தியமான ஒற்றை தீர்வாக இருக்கிறது என பீட் லௌ தெரிவித்துள்ளார். புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அதாவது மே அல்லது ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்பக்கம் டாப் பெசல்களில் அதிகப்படியான பாகங்கள் இடம்பெறாது என்பதால் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதேபோன்ற வடிவமைப்பு சமீபத்தில் அறிமுகமாகும் பெரும்பாலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுகிறது என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரியின் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் பாப்-அவுட் போன்ற கேமரா தொழில்நுட்பம் சாத்தியமற்றது என்பதால் முன்பக்க நாட்ச் செல்ஃபி கேமராவிற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. தற்சமயம் செல்ஃபி கேமரா சிறப்பான இடத்தில் இருப்பதோடு, ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சத்தை சிறப்பாக பயன்படுத்த வழி செய்யும் படி உள்ளது என பீட் லௌ தெரிவித்துள்ளார்.
இத்துடன் ஒன்பிளஸ் 6 டிஸ்ப்ளேக்கள் நாட்ச் போன்ற வடிவமைப்பிற்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதாக பீட் லௌ தெரிவித்துள்ளார். இவை டிஸ்ப்ளேக்களின் ஒவ்வொரு அம்சத்திலும் திறம்பட பிரதிபலிக்க ஏற்றதாக இருக்கும். அசுஸ் மற்றும் ஹூவாய் போன்ற உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களால் ஒன்பிளஸ் இதுபோன்ற டிஸ்ப்ளேக்களை வழங்க முடிகிறது.
டிஸ்ப்ளே மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் நாட்ச்-சார்ந்த இயங்குதளத்தை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. இவற்றில் நோட்டிபிகேஷன்கள் மற்றும் இதர ஷார்ட்கட்கள் சீராக இயங்கும் படி ஆக்சிஜன் ஓஎஸ் மேம்படுத்தப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வீடியோ இணையத்தில் கசிந்திருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி கடந்த ஆண்டே அறிவித்து இருந்தார்.
கடந்த சில வாரங்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் லீக் ஆகி வந்த நிலையில், ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. @evleaks மூலம் வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் மெட்டல் ஃபிரேம், செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமராக்கள், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் செராமிக் வெர்ஷன் உள்பட பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. எனினும் அழகிய பேக் கவர்கள் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி, 8 ஜிபி, ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6 வீடியோவை கீழே காணலாம்..,
ஆப்பிள் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் சாதனத்துடன் ஆசிரியர்களுக்கு என பிரத்யேக செயலிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சிகாகோ:
ஆப்பிள் நிறுவனம் ஆசிரியர்களுக்கான புதிய ஐபேட் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கூல்வொர்க் என அழைக்கப்படும் புதிய செயலி கிளவுட் சார்ந்து இயங்குகிறது. ஆசிரியர்கள் இலவசமாக பயன்படுத்த வழி செய்யும் புதிய செயலி ஆசிரியர்களை பிடிஎஃப் மற்றும் இதர தரவுகளை ஹேன்ட்-அவுட் போன்று உருவாக்க வழி செய்கிறது.
இத்துடன் புதிய அசைன்மென்ட், பணிகள் உள்ளிட்டவற்றை செயலியிலேயே உருவாக்க வழி செய்கிறது. ஆசிரியர்கள் இவை அனைத்தையும் ஐபேட் கொண்டு செய்ய முடியும். இந்த செயலி ஆசிரியர்கள் நடத்தும் பாடத்திட்டத்திற்கான வீட்டுப்பாடம், அல்லது அது குறித்து மற்ற பணிகளை ஸ்கூல்வொர்க் செயலியில் இருந்து மாணவர்களுக்கு வழங்க முடியும்.

செயலியில் பணி வழங்கும் பட்சத்தில் மாணவர்கள் எத்தனை நேரம் செயலியை பயன்படுத்தினார்கள் உள்ளிட்ட தகவல்களை ஆசிரியர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஜூன் மாதம் முதல் டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் கிடைக்கும் இந்த செயலியில் பிரைவசி கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிளின் புதிய கிளாஸ்ரூம் செயலி ஆசிரியர்கள் ஐபேட்களை கொண்டு வருகையை சரிபார்க்க வழி செய்தது. அந்த வகையில் புதிய அப்டேட் பெற்றிருக்கும் இந்த செயலியில் ஆசிரியர்கள் பல்வேறு மாணவர்களை ஒரே சமயத்தில் டிராக் செய்ய உதவுகிறது. இந்த செயலியை இனி மேக் கணினிகளிலும் வேலை செய்யும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.
இத்துடன் காரேஜ் பேண்ட், ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உள்ளிட்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் செயற்கை நுண்ணறிவு கிட் ஆக்ஷன்கள், மாணவர்கள் புதிய ப்ராஜெக்ட்களை உருவாக்க ஏதுவான புதிய டூல்கள் வழங்கப்பட்டுள்ளன. #AppleEdu
ஆப்பிள் ஹோம்வொர்க் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:
சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மும்மடங்கு வரை அதிவேகமாக செயல்படுத்தும் என சியோமி அறிவித்துள்ளது.
அழகிய புகைப்படங்களை எடுக்க டூயல் பிக்சல் செயற்கை நுண்ணறிவு 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய டூயல் கேமரா செட்டப் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. டி எக்ஸோ மார்க் Mi மிக்ஸ் 2 எஸ் ஸ்மார்ட்போன் கேமராவிற்கு 101 புள்ளிகளை வழங்கியுள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 2எஸ் சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- 7-சீரிஸ் வளைந்த அலுமினியம் ஃபிரேம்
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி, 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 12 எம்பி டூயல் பிக்சல் செயற்கை நுண்ணறிவு பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட்
- ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3300 எம்ஏஹெச் பேட்டரி, கியூ.சி. 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
- 7.5W Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
சியோமி Mi மிக்ஸ் 2 எஸ் ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம் மாடலின் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,170), 128 ஜிபி மாடல் 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ரேம் மாடல் 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,420) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய Mi மிக்ஸ் 2 எஸ் ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. சியோமி வயர்லெஸ் சார்ஜர் 99 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,025) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் தனியாக வாங்க வேண்டும். இதற்கான முன்பதிவு இன்று துவங்கி, விற்பனை ஏப்ரல் 3-ம் தேதி முதல் துவங்குகிறது.
லாவா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளன.
புதுடெல்லி:
லாவா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லாவா இசட்50 ஸ்மார்ட்போன் ஏர்டெல் சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
லாவா இசட் 50 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே, VGA ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்) இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 2000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

லாவா இசட் 50 சிறப்பம்சங்கள்:
- 4.5 இன்ச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே, VGA ரெசல்யூஷன்
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்)
- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- 2000 எம்ஏஹெச் பேட்டரி
லாவா இசட் 50 ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒருமுறை ஸ்கிரீனினை இலவசமாக மாற்றிக் கொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களும் பொக்கே எஃபெக்ட்களை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் லாவா இசட் 50 ஸ்மார்ட்போன் விலை ரூ.4400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் சலுகையின் படி புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,400க்கு பெற முடியும். புதிய லாவா இசட் 50 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் வலைத்தளங்களில் வாங்கிட முடியும்.
ஏர்டெல் அறிவித்திருக்கும் ரூ.2000 கேஷ்பேக் சலுகையை பெற ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.169க்கு தொடர்ச்சியாக 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருக்கும் நிலையில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2018, இரண்டாவது காலாண்டில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
முன்னதாக புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளியான நிலையில், இம்முறை ஒன்பிளஸ் 6 ஸ்பெக் ஷீட் கசிந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கேமரா செட்டப் அந்நிறுவனத்தின் முந்தைய ஒன்பிளஸ் 5T போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்ஸ்லைஸ் மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் தகவல் அட்டை புகைப்படம் போன்று காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பார்க்க சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒப்போ ஆர்15 போன்று காட்சியளிக்கலாம் என கூறப்பட்டது.

ஒன்பிளஸ் 6 லீக் ஆன சிறப்பம்சங்கள்:
- 6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
- 2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 20 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7
- 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 3450 எம்ஏஹெச் பேட்டரி

புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 7.5 மில்லிமீட்டர் தடிமனாகவும், 175 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. இதன் விலை CAD 749 (இந்திய மதிப்பில் ரூ.37,700) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
விவோ போன்றே சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் அம்சம் பிரபலமாகி வருகிறது. விவோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போனில் முதல் முறையாக அறிமுகம் செய்தது. விவோவை தொடர்ந்து பெரும்பாலான நிறுவன ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது.
விவோ நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய முடிவு அடுத்த மாத இறுதியில் சாம்சங் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்குவது குறித்து முரணான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கொரியா ஹெரால்டு வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி சாம்சங் ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்குவது குறித்த முடிவினை சாம்சங் விரைவில் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் சாம்சங் சாதனங்களுக்கான டிஸ்ப்ளேக்களை தயாரிக்கும் பிரிவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்க ஏதுவாக மூன்று முதல் நான்கு வித பேனல்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கோப்பு படம்: சாம்சங் கேலக்ஸி நோட் 8
கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்குவது தொடர்பாக சாம்சங் டிஸ்ப்ளே மற்றும் சாம்சங் எலெக்ட்ராணிக்ஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் குறைந்தபட்சம் இம்மாத இறுதியில் முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகறது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களை மற்ற சாதனங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுத்தும் வகையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும், இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய சாம்சங் அறிவிப்பின் படி புதிய தொழில்நுட்பங்களை முதலில் வழங்குவதை விட, அவற்றை மிகவும் சிறப்பாகவும், சீராகவும் வேலை செய்யும் படி வழங்குவதே சாம்சங் நோக்கம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் மட்டுமின்றி புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் சீராக வேலை செய்யும் போதே வழங்கப்படும்.






