என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.2400க்கு லாவா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ.2400க்கு லாவா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    லாவா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளன.
    புதுடெல்லி:

    லாவா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லாவா இசட்50 ஸ்மார்ட்போன் ஏர்டெல் சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    லாவா இசட் 50 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே, VGA ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்) இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 2000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    லாவா இசட் 50 சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே, VGA ரெசல்யூஷன்
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட்
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு கோ (ஓரியோ எடிஷன்)
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    லாவா இசட் 50 ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒருமுறை ஸ்கிரீனினை இலவசமாக மாற்றிக் கொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களும் பொக்கே எஃபெக்ட்களை கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் லாவா இசட் 50 ஸ்மார்ட்போன் விலை ரூ.4400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் ஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் சலுகையின் படி புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,400க்கு பெற முடியும். புதிய லாவா இசட் 50 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் வலைத்தளங்களில் வாங்கிட முடியும்.

    ஏர்டெல் அறிவித்திருக்கும் ரூ.2000 கேஷ்பேக் சலுகையை பெற ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.169க்கு தொடர்ச்சியாக 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×