என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோன் எஸ்இ தற்போதைய எஸ்இ மாடலின் அளவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 

    அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல்களின் விற்பனையை செப்டம்பர் மாதம் முதல் ஆப்பிள் நிறுத்தலாம் என்றும், அதன்பின் ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன் ஜாக் கொண்ட ஐபோன் மாடல்களை விற்பனை செய்யாது என்றும் கூறப்படுகிறது. 


    கோப்பு படம்

    புதிய ஐபோன் எஸ்இ2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ2 ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த மாநாடு ஜூன் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.  

    பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் அளவுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும், ஃபேஸ் ஐடி வழங்கப்படாமல், டச் ஐடி மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சீன சமூக வலைத்தளமான வெய்போவில் ஐபோன் எஸ்இ 2 வீடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இதில் ஐபோன் X போன்றே புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனும் நாட்ச் வகை டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஐஓஎஸ் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ், டூயல் பிரைமரி கேமரா செட்டப், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்பிளஸ் தனது புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது. 

    ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அல்லது அடுத்த ஸ்மார்ட்போனாக புதிய ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஒன்பிளஸ் 6 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் புத்தம் புதிய அதிநவீன குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் 6 குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் சார்பில் பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டி வரும் நிலையில், தற்போதைய தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.



    அதிவேக ஸ்மார்ட்போன் என்ற பெயரில் புதிய ஒன்பிளஸ் 6 அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. முந்தைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் வழங்க இருப்பதாக இதுவரை அறிவித்திருக்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் முன்பக்கம் நாட்ச் வழங்கப்பட இருக்கிறது. சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் முன்பக்கம் நாட்ச் வழங்குவது டிரென்ட் ஆக இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் திரை அளவு முன்பை விட அதிகமாக கிடைக்கும். 



    இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்தும் போதும் புதிய ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத வேகம் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்கும் போதும் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் ஆய்வு குழுவில் டீம் FSE (Fast, Stable, Efficient) உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு ஒன்பிளஸ் சாதனங்களின் திறனை அதிகரிக்கும் பணியை பிரத்யேகமாக மேற்கொள்ளும். இதுதவிர ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் மற்ற சாதனங்களை போன்று அலெர்ட் ஸ்லைடர் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. 



    அந்த வகையில் ஆக்சிஜன் ஓஎஸ் கொண்டு ஸ்டே அவேக், அக்சென்ட் கலர் கஸ்டமைசேஷன், அலெர்ட் ஸ்லைடர் அப்டேட் மற்றும் இதர அம்சங்களை வழங்க ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பதை ஒன்பிளஸ் டீசர் தெரியப்படுத்தியுள்ளது. 

    சமீபத்தில் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்திற்கு மார்வெல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்திருப்பதை ஒன்பிளஸ் அறிவித்தது. இதனால் புதிய ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் புதிய ஐபோனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கலிபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று ஐபோன்களை வெளியிட இருக்கிறது, இதில் ஒன்று ஐபோன் X மேம்படுத்தப்பட்ட மாடல் என கூறப்படுகிறது.

    மூன்று ஐபோன்களும் பெரிய மாடல்கள் என்ற வாக்கில் குறைந்த விலையில் மற்றொரு ஐபோன் மாடலை ஆப்பிள் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விலை குறைந்த ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்றும் கூறப்படுகிறது.

    ஐபோன் எஸ்இ2 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், புதிய விலை குறைந்த ஐபோனின் தெளிவான தகவல்கள் வெளியாகாமல் உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் விலை குறைந்த ஐபோன் மாடல் 2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு ஜூன் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஐபோன் எஸ்இ2 அறிமுகம் செய்யப்படலாம்.


    கோப்பு படம்: ஐபோன் எஸ்இ

    புதிய ஐபோன் வெளியீட்டுக்கு முன் யூரேஷியன் எகனாமிக் கமிஷனில் (ECC) ஆப்பிள் பதிவு செய்திருக்கும் சில ஐபோன் மாடல்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. ECC பட்டியலின் படி மொத்தம் 11 ஐபோன் மாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை முறையே A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2014, A2015 மற்றும் A2016 என பெயரிடப்பட்டுள்ளன.

    இந்த 11 ஐபோன் மாடல்களில் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இத்துடன் இந்த பெயர்கள் அனைத்தும் மற்ற சாத்னங்களுக்கு என இதுவரை பயன்படுத்தப்படவில்லை என ஆப்பிள் இன்சைடர் தெரிவித்துள்ளது. ECC பட்டியலில் ஐபோனின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவை ஐபேட்களின் பெயர் கிடையாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் தனது புதிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்திருந்தது.

    ஆப்பிள் உயர் ரக ஐபோன் மாடல்கள் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டும் இதே வழிமுறையை பின்பற்றலாம். அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 விரைவில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.


    கோப்பு படம்: ஐபோன் எஸ்இ

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ட்போனில் 4.0 இன்ச் ஸ்கிரீன், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கிளாஸ் பேனல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் அளவுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும், ஃபேஸ் ஐடி வழங்கப்படாமல், டச் ஐடி மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சீன சமூக வலைத்தளமான வெய்போவில் ஐபோன் எஸ்இ 2 வீடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இதில் ஐபோன் X போன்றே புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனும் நாட்ச் வகை டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஐஓஎஸ் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ், டூயல் பிரைமரி கேமரா செட்டப், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது.
    உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. 

    அந்த வகையில் 2019-ம் ஆண்டு 5ஜி சந்தை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 2019 மூன்றாவது காலாண்டு வாக்கில் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.  

    ஹூவாய் சமீபத்தில் அறிமுகம் செய்த மேட் 20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹூவாய் மேட் 30 அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனத்தின் சொந்த 5ஜி மோடெம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 



    ஹூவாய் நிறுவனம் தனது பலொங் 5G01 சிப்செட்-ஐ சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப்செட் 2.3 Gbps அளவு பேன்ட்வித் வழங்கு்ம திறன் கொண்டதாகும். புதிய பலொங் சிப்செட் அளவை வைத்து பார்க்கும் போது இவை மொபைல் ஹாட்ஸ்பாட், தானியங்கி கார்களில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும் மொபைல் போன்களுக்கென பிரத்யேக 5ஜி மோடெம் ஒன்றை ஹூவாய் உருவாக்கி வருகிறது. இத்துடன் முழுமையான 5ஜி சேவையை வழங்கவும் ஹூவாய் திட்டமிட்டுள்ளது. நுகர்வோருக்கு 5ஜி வன்பொருள் தயாரானதும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் என கூறப்படுகிறது.

    2025-ம் ஆண்டு வாக்கில் சுமார் 110 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் 20 கோடி இணைக்கப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என ஹூவாய் எதிர்பார்க்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் கோல்டு என இரண்டு நிறங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அந்த வகையில் கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே எனும் புதிய நிறத்தில் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2960x1440 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 சீரிஸ் 8895 பிராசஸர்
    - மாலி-G71 MP20 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, f2.4 அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே வேரியன்ட் ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் வலைத்தளம் மற்றும் சாம்சங் ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய நிறத்தில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 8 விலை ரூ.67,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு பேடிஎம் சார்பில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி பிளாக் ஷார்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    சியோமி பிளாக் ஷார்க் என அழைக்கப்படும் புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் சிஸ்டம், ஸ்பெஷல் பட்டன் மற்றும் கழற்றக்கூடிய கேம்பேட் மற்றும் தலைசிறந்த பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
     


    சியோமி பிளாக் ஷார்க் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம்
    - 12 எம்பி + 20 எம்பி டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0

    சீனாவில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் போலார் நைட் பிளாக் அல்லது ஸ்கை கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.31,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனம் ஏப்ரல் 25-இல் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவன புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 25-ம் தேதி இதற்கான அறிமுக நிகழ்வு நடைபெற இருப்பதாக அந்நிறுவன அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இம்மாதம் நடைபெற இருக்கும் விழாவில் சியோமி நிறுவனம் Mi A1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான Mi A2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்த Mi 5X ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi A1 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமாகும் Mi 6X ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi A2 என்ற பிரான்டிங் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெய்போவில் சியோமி Mi பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஏப்ரல் 25-ம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று சியோமி நிறுவன மூத்த துணை தலைவர் வாங் சியாங் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு வுஹான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    முன்னதாக சியோமி Mi A2 அல்லது Mi 6X ஸ்மார்ட்போன் TENAA எனும் வலைத்தளத்தில் கசிந்திருந்தது. இந்த தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் வெளியாகியிருந்தது. அதன்படி ஸ்மார்ட்போனில் 5.99 இனஅச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2910 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.

    பல்வேறு அம்சங்களில் புதிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலை நினைவூட்டுகிறது. இதன் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

    இதேபோன்று வெளயாகி இருந்த தகவல்களில் Mi 6X ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டூயல் கேமரா செட்டப் 20எம்பி மற்றும் 8 எம்பி பிரைமரி கேமரா, முன்பக்கம் 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டது. 

    ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு ஃபிரேம் மட்டும் டீசர் புகைப்படத்தில் காட்சியளிக்கிறது. புதிய ஒன்பிளஸ் 6 முந்தைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு ஸ்மார்ட்போன்களும் ஒரே அளவு கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

    முந்தைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் ராப்-அரவுண்டு டிசைன் கொண்டிருந்த நிலையில் புதிய ஸ்மார்ட்போனில் புதிய ஆன்டெனா
    இடம்பெற்றிருப்பது தெரியந்துள்ளது. இதன் சிம் ஸ்லாட் மற்றும் வால்யூம் ராக்கர்கள் ஸ்மார்ட்போனின் இடது புறமாக வழங்கப்பட இருக்கிறது.



    முன்னதாக வெளியான புகைப்படங்களை போன்றே மூன்றடுக்கு ஸ்லைடர் ஸ்மார்ட்போனின் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    இத்துடன் டூயல் கேமரா வடிவமைப்பு, பின்புற கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் மற்ற தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிளாக்பெரி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டிருக்கும் அத்னா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    பிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன் கசிந்திருந்தது. அந்த வகையில் அத்னா ஸ்மார்ட்போனின் முதல் தோற்றம் வெளியாகி இருக்கிறது. பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்பட இருக்கிறது.

    முதல் தோற்றத்தில் ஸ்மார்ட்போனின் தோற்றம் தெளிவாக காட்சியளிக்கிறது. புதிய அத்னா ஸ்மார்ட்போன் பிளாக்பெரி கீஒன் போன்று வழக்கமான க்வெர்டி கீபேட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, செவ்வக ஸ்லாப் டிசைன் கொண்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் கீழ்புறம் க்வெர்டி கீபேட் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் கீஒன் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற தொடுதிரை வசதி கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புதிய ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா வடிவைப்பு வழக்கமான ரக்டு அமைப்பு கொண்டிருக்கிறது. இதன் டூயல் கேமரா அமைப்பு கிடைமட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 8 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதுதவிர 6 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பிளாக்பெரி அத்னா மட்டுமின்றி லூனா மற்றும் யுனி என்ற ஸ்மார்ட்போன்களையும் பிளாக்பெரி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஸ்பெஷல் எடிஷன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் புதிய ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மொபைல் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இன்று (ஏப்ரல் 10) மாலை 6.00 மணி முதல் முன்பதிவு செய்யப்படும் சிவப்பு நிற ஐபோன் 8 சீரிஸ் மே மாத வாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிய ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சிவப்பு நிற எடிஷன் விலை ரூ.67,940 முதல் துவங்குகிறது. 

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய ஐபோன் 8 சீரிஸ் மாடலில் வழக்கமான ஐபோன் 8 மாடல்களில் காணப்பட்ட கிளாஸ் என்க்ளோஷர் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் புதிய அம்சமாக மிளிரும் சிவப்பு நிறம், இதற்கு ஏற்றார் போல் அலுமினியம் பேன்ட் வழங்கப்பட்டுள்ளது.



    மற்றபடி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களில் உள்ளதை தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஐபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் புதிய சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் புதிய லெதர் ஃபோலியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் இந்த லெதர் ஃபோலியோ விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.7,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லெதர் ஃபோலியோவுடன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டும் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஹெட்போன்களும் கிடைக்கிறது.

    ஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் வெளியீடு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகியுள்ளது.

    ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக இருக்கும் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போனில் சியோமி முதலீடு செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போனின் முதல் டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

    மெட்டல் ஃபிரேம் மற்றும் பச்சை நிற பவர் பட்டன் கொண்டிருக்கும் புசிய ஸ்மார்ட்போன் X ஆன்டெனா வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் ஜிபிஎஸ், வைபை மற்றும் எல்டிஇ உள்ளிட்டவற்றிற்கு அன்டெனா கட்கள் இருக்கிறது. X ஆன்டெனா வடிவைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    முன்னதாக இந்க ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 2160x1080 FHD ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

    ரேசர் ஸ்மார்ட்போனுடன் போட்டியிட ஏதுவாக புதிய ஸ்மார்ட்போனில் 120 Hz ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரத்தில் தெரியவரும்.
    ஐபிஎல் 2018 கிரிகெட் காலத்தை பயன்படுத்தி கொள்ள பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு 153 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 கிரிகெட் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கிரிகெட் ப்ரியர்களை குறிவைத்து புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் பயனர்கள் 153 ஜிபி டேட்டா பெற முடியும். 

    ரூ.258-க்கு கிடைக்கும் புதிய சலுகையில் 51 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்என்எல் பயனர்கள் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிக்க சிறப்பானதாக இருக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ 102 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை ரூ.251 விலையில் அறிவித்தது. இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை தனது மைஏர்டெல் டிவி செயலியில் பயனர்களுக்கு இலவசமாக நேரலையில் வழங்குவதாக அறிவித்தது. 


    கோப்பு படம்

    மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ரூ.253 சலுகை விலை குறைவானதாக இருக்கிறது. எனினும் பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டா அனைத்தும் 3ஜி வேகத்தில் கிடைக்கும், ஜியோ சலுகைகளில் பயனர்கள் அதிவேக 4ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.

    பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2018 வரை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த காலக்கட்டத்திற்குள் புதிய சலுகையில் ரீசார்ஜ் செய்து ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை பார்த்து ரசிக்க முடியும்.
    ×