search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மலிவு விலையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை

    ஐபிஎல் 2018 கிரிகெட் காலத்தை பயன்படுத்தி கொள்ள பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு 153 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 கிரிகெட் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கிரிகெட் ப்ரியர்களை குறிவைத்து புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் பயனர்கள் 153 ஜிபி டேட்டா பெற முடியும். 

    ரூ.258-க்கு கிடைக்கும் புதிய சலுகையில் 51 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 153 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்என்எல் பயனர்கள் ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசிக்க சிறப்பானதாக இருக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ 102 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை ரூ.251 விலையில் அறிவித்தது. இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை தனது மைஏர்டெல் டிவி செயலியில் பயனர்களுக்கு இலவசமாக நேரலையில் வழங்குவதாக அறிவித்தது. 


    கோப்பு படம்

    மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ரூ.253 சலுகை விலை குறைவானதாக இருக்கிறது. எனினும் பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டா அனைத்தும் 3ஜி வேகத்தில் கிடைக்கும், ஜியோ சலுகைகளில் பயனர்கள் அதிவேக 4ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.

    பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2018 வரை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த காலக்கட்டத்திற்குள் புதிய சலுகையில் ரீசார்ஜ் செய்து ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை பார்த்து ரசிக்க முடியும்.
    Next Story
    ×