என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுளின் ஜிமெயில் சேவையில் விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் I/O 2018 விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    கூகுளின் ஜிமெயில் சேவை சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்களை வழங்கப்பட்ட நிலையில் விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதி வழங்கப்பட இருக்கிறது. கூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த வசதி மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய உதவுகிறது. ஜிமெயில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் சொற்றொடர்களை பரிந்துரைக்கும், இவற்றை தேர்வு செய்ய கீபோர்டில் டேப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நேரம் மிச்சப்படுத்துவதோடு எழுத்து மற்றும் இலக்கிய பிழைகளை பெருமளவு தவிர்க்க முடியும்.



    ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசூட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் வரயிருக்கும் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் சேவையை இயக்க வாடிக்கையாளர்கள் ஜிமெயில் Settings - Try the new Gmail ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். 

    கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் இது பயன்படுத்தப்பட இருக்கும் பல்வேறு இதர துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளும், விளக்க வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டன.

    அந்த வகையில் ஜிமெயில், கூகுள் அசிஸ்டண்ட், மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் இது சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் வெளியிடப்பட்டன.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், ஆன்லைன் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் மே 10-ம் தேதி சீனாவில் வெளியிடப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் அலிஎக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.

    இத்துடன் சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    சியோமி வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ டீசரில் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட் மோட் மற்றும் ஏஐ (AI) பியூட்டி மோட்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது. 



    சியோமி ரெட்மி எஸ்2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், PDAF, EIS
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சீன வலைத்தளத்தில் சியோமி ரெட்மி எஸ்2 பேஸ் வெர்ஷன் விலை 165.99 முதல் 193.99 டாலர்கள் அதாவது 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,480) முதல் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 1100 ஜிபி அளவு இலவச டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    மும்பை:

    இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் துவங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் சோதனை துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது.

    சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. 

    விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஃபைபர் சேவை துவங்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும்.



    கூடுதலாக வழங்கப்படும் 1000 ஜிபி டேட்டாவும் 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஜியோ ஃபைபர் சேவைகள் ஒரே கட்டமாக பொது பயன்பாடு மற்றும் வணிக ரீதியிலும் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    முந்தைய பிரீவியூ சலுகைகளில் முதல் மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டதாகவும், இலவச டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    துவக்கத்தில் ஜியோ ஃபைபர் இணைப்புக்கு பாதுகாப்பு முன்பணமாக ரூ.4500 வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் ஜியோ ரவுட்டர் இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், இதே ரவுட்டர் கொண்டு IPTV மூலம் தொலைகாட்சி சேனல்களை பார்க்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தலைமை தி்ட்ட வல்லுநர் அனுஷ்மன் தாக்குர் தெரிவித்திருக்கிறார். 

    இதுவரை இந்தியா முழுக்க சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவியிருப்பதால், ஃபைபர் சேவைகள் அதிவேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மே 11-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் இந்தியாவில் மே 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் புதிய வாட்ச் 3 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்களின் வலைத்தள பக்கங்களில் ஆப்பிள் வாட்ச் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. 



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3:

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இசிம் பயன்படுத்துவதால், பிரத்யேக சிம் கார்டு தேவைப்படாது. ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் (JioEverywhereConnect) சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை கொண்டு ஒரே ஜியோ நம்பரை ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஜியோ எவ்ரிவேர் கனெக்ட் சேவை ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 70% வேகமாக இயங்கும், புதிய W2 வயர்லெஸ் சிப் 85% வேகமான வைபை, 50% சீரான ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளையும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாடி கொண்டுள்ளது.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடலை ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இவற்றின் விநியோகம் மே 11-ம் தேது துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் மே 11-ம் தேதி முதல் கிடைக்கும்.



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இந்திய விலை:

    புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (ஜிபிஎஸ் + செல்லுலார்) மாடல் 38 மில்லிமீட்டர் சில்வர் அலுமினியம் கேஸ் ஃபாக் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / கோல்டு அலுமினியம் கேஸ் மற்றும் பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், கிரே ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.39,080 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ஆரம்ப விலை ரூ.39,080 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு கேஸ்கள், மற்றும் நிறங்களுக்கு ஏற்ப விலை மாறுகிறது. ஆப்பிள் வாட்ச் எடிஷன் (ஜிபிஎஸ் + செல்லுலார்) 42 மில்லிமீட்டர் செராமிக் கேஸ், சாஃப்ட் வைட் / பெப்பிள் ஸ்போர்ட் பேன்ட் கொண்ட மாடலின் விலை ரூ.1,22,090 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் விலை உயர்ந்த் சீரிஸ் 3 வாட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் லைவ் எல்1 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தோனேஷியா:

    தாய்வான் நாட்டை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

    அசுஸ் சென்ஃபோன் லைவ் எல்1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் மே 17-ம் தேதி இந்தோனேஷியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இத்துடன் அசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு கோ எடிஷன் கொண்டிருக்கும். 

    இத்துடன் ஃபேஸ் அன்லாக், 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, மூன்று சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு டிரே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்ட முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய அசுஸ் ஸ்மார்ட்போனின் 1 ஜிபி ரேம் மாடலில் ஆன்ட்ராய்டு கோ செயலிகளான மேப்ஸ் கோ, கூகுள் கோ மற்றும் ஃபைல்ஸ் கோ உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தோனேஷியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிவிக்கப்படவில்லை. 


    புகைப்படம்: நன்றி Gadgetren

    எனினும் இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் அசுஸ் ஸ்மார்ட்போன் விலை IDR 15 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.7200) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் ரோஸ் பின்க், மிட்நைட் பிளாக், வைட் மற்றும் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்ட சென்ஃபோன் லைவ் எல்1 ZenUI5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 2 ஜிபி ரேம், ஸ்டாக் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) மாடலில் 1 ஜிபி ரேம் கொண்டிருக்கும். 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1440 பிக்சல் ஐபிஎஸ், 18:9 ரக டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 1 ஜிபி / 2 ஜிபி ரேம், ஆட்ரினோ 308 GPU கொண்டிருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க சென்ஃபோன் லைவ் எல்1 மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி ஃபிளாஷ், அழகிய செல்ஃபிக்களை எடுக்க 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை சென்ஃபோன் லைவ் எல்1 மாடலில் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் ஒடிஜி சப்போர்ட் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.
    சியோமி நிறுவனத்தின் Mi மியூசிக் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஹங்காமா மியூசிக் இன்டகிரேஷன் செய்யப்பட்டிருக்கும் புதிய ஆப் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    மும்பை:

    சியோமி நிறுவனத்தின் Mi பாப் நிகழ்வில் Mi மியூசிக் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Mi மியூசிக் ஆப் ஹங்காமா மியூசிக் இன்டகிரேஷன் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதே செயலி கடந்த மாதம் பீட்டா வடிவில் சில சியோமி வாடிக்கயாளர்களுக்கு வழங்கப்பட்டது. 

    புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான மியூசிக் டிராக்களை இலவசமாக பயன்படுத்த முடியும். 13 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகளில் பாடல்களை கேட்க முடியும். Mi மியூசிக் செயலியில் பாடல்களை ஆஃப்லைனில் டவுன்லோடு செய்ய விரும்புவோர் ஹங்காமா ப்ரோ பேக்கேஜ் வாங்க வேண்டியிருக்கும். 

    இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாவாக ரூ.499 செலுத்த வேண்டும், எனினும் இந்த சலுகை முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஹங்காமா ப்ரோ பேக்கேஜ் ஆண்டு சந்தா உண்மை விலை ரூ.899 ஆகும். இதுவரை மட்டும் Mi மியூசிக் செயலியை தினமும் சுமார் 70 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதாக சியோமி அறிவித்துள்ளது.



    Mi மியூசிக் செயலியில் கரோக்கி ப்ரியர்களுக்கு டைனமிக் லிரிக்கள் வழங்கப்படுவதால், பாடல்களை கேட்கும் போது ஒரே கிளிக் மூலம் பாடலின் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியும். இதேபோன்று மியூசிக் வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தேர்வுகள், தீம் மற்றும் மேலும் அதிகப்படியான பாடல்களை Mi மியூசிக் செயலியில் சேர்க்க சியோமி திட்டமிட்டுள்ளது. 

    Mi வீடியோ செயலியில் வீடியோ கன்டென்ட் இன்டகிரேஷன் மற்றும் சக்திவாயந்த லோக்கல் வீடியோ பிளேயர் வழங்கப்படுகிறது. இந்த செயலியின் பீட்டா டீசர் மார்ச் மாத வாக்கில் வெளியிடப்பட்டது. Mi வீடியோ தரவுகள் ஹங்காமா பிளே, சோனிலிவ் மற்றும் வூட் போன்ற சேவைகளின் மூலம் இயக்கப்படுகிறது. 

    இதைத் தொட்ந்து சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, சீ5, வியூ, டிவிஎஃப் மற்றும் ஃப்ளிக்ஸ்ட்ரீ உள்ளிட்ட சேவைகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது. தற்சமயம் வரை Mi வீடியோ செயலியில் சுமார் 500,000 மணி நேரத்திற்கான தரவுகள் கிடைக்கின்றன. இவற்றில் அதிகபட்சம் 80% தரவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.



    Mi வீடியோ செயலியில் தற்சமயம் வரை 12-க்கும் அதிகமான வீடியோ ஃபார்மேட்கள் AVI, MP4, MOV, MKV, and MKA, MPEG, M2TS சப்போர்ட் செய்கிறது. இத்துடன் பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்கள், பிரைவேட் ஃபோல்டர்கள், பல்வேறு ஆடியோ டிராக்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

    இத்துடன் DLNA மற்றும் மிராகேஸ்ட் சப்போர்ட் கொண்டு எவ்வித ஸ்மார்ட் டிவிக்களிலும் ஒரே கிளிக்-இல் Mi வீடியோ ஆப் இணைந்து கொள்ளும். இந்த செயலியை வாடிக்கையாளர்கள் 15 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் பல்வேறு கூடுதல் தரவுகள், ஃப்ளோட்டிங் பிளேயர், புதிய மொழிகள், ஜெனர் ஃபில்ட்டர், பிளேபேக் ஸ்பீட் உள்ளிட்ட வசதிகளை Mi வீடியோ செயலியில் சேர்க்க சியோமி திட்டமிட்டுள்ளது.
    கூல்பேட் நிறுவனத்தின் நோட் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூல்பேட் நிறுவனத்தின் புதிய நோட் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆஃப்லைனில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோட் 6 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டராகன் 435 சிப்செட், ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகபைப்டங்களை எடுக்க 8 எம்பி செல்ஃபி கேமரா, 5 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா, ஃபிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4070 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    கூல்பேட் நோட் 6 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல்ஃபுல் ஹெச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது 5 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4070 எம்ஏஹெச் பேட்டரி

    கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் கொண்ட கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட நோட் 6 ஸ்மார்ட்போனின் வலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க எட்டு மாநிலங்களில் 300-க்கும் அதிக ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தமிழ் நாடு, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் எஸ்2 ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் கசிந்திருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் வீடியோ வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் TENAA வலைத்தில் சில தினங்களுக்கு முன் காணப்பட்ட சியோமி எஸ்2 ஸ்மார்ட்போன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய வீடியோவில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளன. 

    அதன் படி சியோமி எஸ்2 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி பிரைமரி சென்சார், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது.

    அழகிய செல்ஃபி எடுக்க 16 எம்பி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இங்குதளம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி எஸ்2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் பிளாக், ரோஸ் கோல்டு, வைட், புளு, ரெட், பின்க், கிரே மற்றும் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    சியோமி ரெட்மி எஸ்2 வீடியோவை கீழே காணலாம்.., 


    நோக்கியா நிறுவனத்தின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றான நோக்கியா N8 புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் நேற்று அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா X6 அறிமுகமாகவில்லை. ஐபோன் X தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படத்துடன் நோக்கியா இத்தகவலை அறிவித்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X6 என்ற பெயருக்கு பதில் நோக்கியா X என்று அழைக்கப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனுடன் நோக்கியா N8-00 ஸ்மார்ட்போனினை மீண்டும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் சார்பில் பதிவிடப்பட்டிருக்கும் இரண்டு வெய்போ போஸ்ட்களில் நோக்கியா X ஸ்மார்ட்போன் மே 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவிடப்பட்டிருக்கு்ம முதல் புகைப்படத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.



    முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா X ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஒன் சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. 

    இத்துடன் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 அல்லது மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட், 4 ஜிபி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும். புகைப்படங்களை எடுக்க டூயல் 12 எம்பி கார்ல் செய்ஸ் லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதுதவிர ஹெச்எம்டி பதிவு செய்திருந்த டீசரில் நோக்கியா N சீரிஸ் அதிநவீன மாடல் வெளியாக இருப்பதை உணர்த்தியிருக்கிறது. நோக்கியா N சீரிஸ் மொபைல் போன் ஏப்ரல் 27, 2005-ம் ஆண்டு சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. தற்சமயம் பதிவிடப்பட்டிருக்கும் டீசரின் படி புதிய மொபைல் ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் மீண்டும் வெளியிடப்படலாம் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போனில் மேட் ரெட் நிற அலுமினியம் ஃபினிஷ், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ஐபோன் 8 ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.67,940 என்றும் 128 ஜிபி விலை ரூ.81,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.77,560, 256 ஜிபி விலை ரூ.91,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, ப்ரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரெட் எடிஷன் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட்டது. 



    இந்த நாடுகளில் ஐபோன் 8 சீரிஸ் ரெட் எடிஷன் ஏப்ரல் 13-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்விலேயே ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    அவென்ஜர்ஸ் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்க ஒன்பிளஸ் மார்வெல் ஸ்டூடியோஸ் உடனான ஒப்பந்தத்தை கடந்த வாரம் அறிவித்தது. அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் மே 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதே நிகழ்வில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வெளியான சில மாதங்களில் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் டிஸ்னியுடன் ஒப்பந்தமிட்டிருந்தது.

    புதிய அறிவிப்புடன் ஒன்பிளஸ் 6 மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிட்டெட் எடிஷன், 19:9 ரரக டிஸ்ப்ளே, பிரத்யேக டெக்ஸ்ச்சர் கொண்ட பின்புறம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தில் இருந்து எடிக்கப்பட்ட வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.



    ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கும் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்திற்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கியது. ஏப்ரல் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில் வாடிக்கையாளர்கள் வசிக்கும் நகரங்களில், விரும்பும் தேதியில் திரைப்படத்திற்கான டிக்கெட்களை ஒன்பிளஸ் வலைத்தளத்தில் பெற முடியும் என அறிவித்தது. 

    இந்தியாவில் மே 170ம் தேதி ஒன்பிளஸ் 6 வெளியாக இருக்கிறது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை மே 21-ம் தேதி 12.00 மணி முதல் பிரத்யேகமாக வாங்கிட முடியும். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.999 கட்டணம் செலுத்தி கலந்து கொள்ள முடியும்.

    அறிமுக விழாவுக்கான அனுமதி சீட்டுகளை வாடிக்கையாளர்கள் மே 8-ம் தேதி காலை 10.00 மணி முதல் பெற முடியும். விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கும் ஒன்பிளஸ் டோட் பேக், பரிசு கூப்பன், மார்வெல் அவென்ஜர்ஸ் தொப்பி, மார்வெல் அவென்ஜர்ஸ் டீ-சர்ட், ஒன்பிளஸ் நோட்புக், கேஷ் கேனான், ரூ.999 மதிப்புடைய ஒன்பிளஸ் வவுச்சர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


    ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.  

    ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 970 10 என்எம் i7 கோ-பிராசஸர், பிரத்யேக நியூரல் நெட்வொர்க், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.  

    புகைப்படங்களை எடுக்க ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 எம்பி (RGB, f/1.8) + 20 எம்பி (Monochrome, f/1.6) + 8 எம்பி (Telephoto, f/2.4), கேமரா, லெய்கா VARIO-SUMMILUX-H lலென்ஸ், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், லேசர் ஃபோகஸ், டீப் ஃபோகஸ், PDAF, CAF, 960fps சூப்பர் ஸ்லோ-மோ உள்ளிட்ட கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.



    ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 2240x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
    - மாலி-G72 MP12 GPU, NPU
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.1
    - சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்
    - 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி லெய்கா VARIO-SUMMILUX-H லென்ஸ்
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், f/2.0
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிடநைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் P20 ப்ரோ அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதி துவங்க இருக்கிறது.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் + 19:9 ஸ்கிரீன், நாட்ச், கிரின் 659, 4ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் P20 லைட் சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 659 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
    - மாலி-T830 MP2 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன் கிளைன் புளு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை மே 3-ம் தேதி துவங்குகிறது.
    ×