என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    இந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மே 22-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்களும் மே 22-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது. ஒற்றை கேமரா, 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 7ஏ விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,250) என்றும் டூயல் பிரைமரி கேமரா, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஹானர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். புதிய ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.



    ஹானர் 7ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா (டாப்-என்ட் மாடல்)
    - 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    முன்னதாக ஹானர் 10 ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹானர் சார்பில் புதிய ஹானர் 7சி ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருக்கிறது. 



    ஹானர் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அழைப்பிதழில் ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 

    இந்தியாவில் ரூ.7,999 விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமைந்தது. ஹானர் 7X ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஹானர் 7சி சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், கோல்டு மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,235) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
    இந்தியாவில் ரூ.3399 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. #Airtel
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இந்தியா இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க இருக்கின்றன. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2600 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சுமார் 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இருநிறுவனங்களும் நாடு முழுக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய இந்த தி்ட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் முறை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்யும் போது ஸ்மார்ட்போனுக்கு ரூ.3399 விலையில் வாங்க முடியும். ஏர்டெல் இந்தியா சார்பில் 35 மாதங்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    ரூ.600 கூடுதல் கேஷ்பேக் ஏர்டெல் சேவையில் ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும். 



    ஏர்டெல் மற்றும் அமேசான் வழங்கும் ரூ.2600 கேஷ்பேக் பெறுவது எப்படி?

    - அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும். இவற்றில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவோ, மோட்டோ மற்றும் பல்வேறு இதர மாடல்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    - ஸ்மார்ட்போனினை வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் ரூ.500 திரும்ப பெற முடியும்.

    - இனி அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.

    - அடுத்து அமேசான் சார்பில் வழங்கப்படும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக் தொகையை பெற ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். இதற்கு https://www.amazon.in/hfc/mobileRecharge - முகவரியை பயன்படுத்த வேண்டும். இனி ரூ.25 மதிப்புள்ள கேஷ்பேக் தொகை 24 மாதங்களில் வழங்கப்படும். கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.

    ஏர்டெல் வழங்கும் ரூ.169 ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக சில 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் இதுபோன்ற சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் வெளியாகி இருக்கும் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 3D கெவெலர் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்பட்டுகிறது. இந்த கிளாஸ் 6 அடுக்கு ஆப்டிக்கல் கோட்டிங் செய்யப்பட்டு பின்புறம் தங்க நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. 



    இத்துடன் 5 அவெஞ்சர்ஸ் வால்பேப்பர்களும் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர் தங்க நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் லிமிட்டெட் எடிஷனின் ஒவ்வொரு பெட்டியிலும் ஐயன் மேன் கேஸ் வழங்கப்படுகிறது. 

    மற்றபடி புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலின் விலை ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை மே 29-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    முன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மற்றும் புல்லட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. வாட்டர் ரெசிஸ்டண்ட மற்றும் பல்வேறு அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கும் வயர்லெஸ் ஹெட்போன்களின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

    புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 6.29 இன்ச் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7 அப்ரேச்சர், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் முன்பக்கம் 16 எம்பி சோனி IMX371 சென்சார் மற்றும் முன்பக்கம் போர்டிரெயிட் மோட் வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1 கொண்டுள்ளது. மேலும் வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு பி பீட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் வழங்கப்பட்டு இருக்கும் கைரேகை சென்சார் வடிவம் மாற்றப்பட்டு 0.4 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் அலெர்ட் ஸ்லைடர் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் மொபைல்களில் முதல் முறையாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் புதிய கிளாஸ் பேக் வழங்கப்பட்டுள்ளது.



    ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் கொண்ட மாடலின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை மே 21-ம் தேதியும், மே 22-ம் தேதி அனைவருக்குமான விற்பனை துவங்குகிறது.
    ஹூவாயின் ஹானர் பிரான்டு தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லண்டன்:

    ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது. 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், i7 கோ-பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1 வழங்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு 2.0 தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவைப்பு ஹூவாய் P20 போன்றே காட்சியளிக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா செட்டப், முன்பக்கம் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் செல்ஃபிக்களை வழங்கும்.

    3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் 10 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கிறது. இதன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் விரல்கள் ஈரமாக இருந்தாலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    ஹானர் 10 சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
    - மாலி-G72 MP12 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 24 எம்பி செல்ஃபி கேமரா
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3400 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஃபேன்டம் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 10 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹானர் 10 அறிமுக சலுகைகள்:

    - ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.5000 வரை தள்ளுபடி
    - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி
    - ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.3300 மதிப்புடைய வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சென்னை:

    ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி விநியோகஸ்தராக இருக்கும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ஜைவ் என அழைக்கப்படுகிறது.

    புதிய வயர்லெஸ் 2.0 ப்ளூடூத் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர்கள் இரண்டு ஸ்பீக்கர் யூனிட்களாக உள்ளன. இவற்றில் தனித்தனி பேட்டரி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஸ்பீக்கர்கள் அட்டகாச வடிவமைப்பு கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி உள்ளிட்டவற்றுடன் இணைத்து பயன்படுத்த ஆக்ஸ் கேபிள் வழங்கப்பட்டுள்ளது.

    எட்டு மணி நேர ப்ளேபேக் டைம் கொண்டுள்ள புதிய ஸ்பீக்கர்கள் கருப்பு நிறம் கொண்டுள்ளன. இந்தியாவில் புதிய ஜீப்ரானிக்ஸ் ஸ்பீக்கர் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.0 ஸ்பீக்கர் இரண்டு வெவ்வேறு வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்று வேலை இயங்க வைக்க புதிய ஸ்பீக்கர் கச்சிதமாக இருக்கிறது.



    இரண்டு ஸ்பீக்கர்களும் தனித்தனி பேட்டரிகளை கொண்டுள்ளதால் முற்றிலும் வயர்லெஸ் முறையில் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்பீக்கரை 2.0 அல்லது தனித்தனியாகவும் பயன்படுத்த முடியும். ஜைவ் 2.0 ஸ்பீக்கர் வலது மற்றும் இடது புறங்களில் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருப்பதால் இதனை 2.0 போன்று பயன்படுத்துவது சுபலமாகிறது.

    புதிய ஜைவ் ஸ்பீக்கர்களில் 5W+5W RMS அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், அதிக பாஸ் மற்றும் கூடுதல் தம்ப் அனுபவம் வழங்குகிறது. இதனால் திரைப்படம் அல்லது பாடல்களை கேட்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. புதிய ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்ட மோடில் இரண்டு நொடிகளில் அழுத்தி பிடித்தால் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ இயங்கும். 

    ஸ்மார்ட்போன் மூலம் இணைக்கப்பட்ட நிலையில் இரண்டு ஸ்பீக்கர்களை ஒன்றாகவும், இன்டிவிஜூவல் மோடில் இரண்டு ஸ்பீக்கர்களை தனித்தனியாகவும் பயன்படுத்தலாம். 
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ் சீரிஸ் முதல் ஸ்மார்ட்போன் சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரெட்மி இந்தியாவின் சமீபத்திய ட்விட் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து தகவல்களை கொண்டிருக்கிறது. புதிய ட்வீட் ஸ்மார்ட்போனின் விவரங்களை அதிகம் தெரியப்படுத்தவில்லை என்றாலும், தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்ற உறுதியை வழங்கியுள்ளது. இதேபோன்று சீனாவில் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனிற்கும் சிறந்த செல்ஃபி ஸ்மார்ட்போன் என்ற தலைப்பு வழங்கப்பட்டது. 



    ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் அதிகப்படியான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    ரெட்மி இந்தியா ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ட்வீட் ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமும் செய்யப்பட இருப்பதை தெரிவிக்கிறது. இத்துடன் #FindYourSelfie மற்றும் #RealYou ஹேஷ்டேக்-களை கொண்டிருக்கிறது. மேலும் ட்வீட்டில் Y என்ற வார்த்தை அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 



    சியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    உலகின் சில முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
    வாஷிங்டன்:

    தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் மோட்டோரோலா வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கவரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மைக்ரோசாஃப்ட் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் அந்நிறுவனம் ஹின்ஜ் பகுதியில் சிறிய டிஸ்ப்ளே உள்பட மூன்று ஸ்கிரீன்களை பயன்படுத்தும் சாதனத்திற்கான காப்புரிமையை கோரியிருப்பது தெரியவந்துள்ளது. 

    டட்சு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்வதேச காப்புரிமை மையம் மோட்டோரோலாவிற்கு மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் அகலமான செவ்வக டிஸ்ப்ளே மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும், மடிக்கப்படாத நிலையில் டேப்லெட் போன்றும் வேலை செய்யும் என தெரியவந்துள்ளது.


    புகைப்படம்: நன்றி FreePatentsOnline

    மேலும் இதன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் ஹின்ஜ் அருகில் சுருட்டி வைக்கக்கூடியதாகவும்ஸ இதன் டிஸ்ப்ளேவை பாதுகாக்கவும், போனின் ஸ்டேன்ட் போன்று வேலை செய்யவும் கவர் ஒன்றும் வழங்கப்படுவது காப்புரிமையில் தெரியவந்துள்ளது. இந்த கவர் புதிய சாதனத்தின் வயர்லெஸ் சார்ஜர் போன்றும் வேலை செய்யலாம் என கூறப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் ட்விட்டரில் வெளியானது. இதில் ஸ்மார்ட்போனினை இரண்டு பக்கமும் மடிக்க முடியும் என்றும் இதில் இரண்டு பிரைமரி டிஸப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவை ஸ்மார்ட்போன் திறந்தால் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் மூன்றாவது டிஸ்ப்ளே ஹின்ஜ் பகுதியில் வழங்கப்படுகிறது. 

    நவம்பர் 9, 2016-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதற்கான காப்புரிமையை பதிவு செய்திருக்கிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் உண்மையில் உருவாக்கப்படுகிறதா அல்லது கான்செப்ட் வடிவில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் அறிவிப்பின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    நியூ யார்க்:

    பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த கீ ஓன் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். பிளாக்பெரி கீ ஒன் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக 2017-இல் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    சீனாவின் TENAA சான்றளிக்கும் வலைத்தளத்தில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் ஒரே டிஸ்ப்ளே மற்றும் க்வெர்டி கீபோர்டு கொணடிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், டூயல் பிரைமரி கேமரா, 3360 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.



    பிளாக்பெரி கீ2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4-அடுக்கு க்வெர்ட்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்பி பிரைமரி, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ்
    - இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
    - 3360 எம்ஏஹெச் பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் விழாவில் தெரியவரும். பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு ஜூன் 7-ம் தேதி காலை 10.00 மணிக்கு நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
    கூகுளின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கிறார்.
    கலிஃபோர்னியா:

    உலகின் தலைசிறந்த ஸ்மா்ட்போன்களாக கூகுளின் பிக்சன் 2 மற்றும் பிக்சல் 2XL இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

    புதிய கூகுள் ஸ்மார்ட்போனின் விவரங்களை பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் வெளியீட்டு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.


    புகைப்படம்: நன்றி Concept Creator

    முந்தைய ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் கூகுள் நிறுவனம் இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்றும் இவை பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL என அழைக்கப்பட இருப்பதாக எவான் பிளாஸ் தெரிவித்திருக்கிறார். 2018 இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களும் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இவர் தெரிவித்துள்ளார். 

    வெளியீட்டை பொருத்த வரை கடந்த ஆண்டு நடைபெற்ற ஹார்டுவேர் நிகழ்வு தேதியிலேயே இந்த ஆண்டு நிகழ்வும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் கூகுள் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார். 
     

    கோப்பு படம்

    இந்த ஆண்டு நிகழ்வு தேதியை கூகுள் இதுவரை உறுதி செய்யாத நிலையில், செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத முதல் வார காலத்தில் பிக்சல் அறிமுக நிகழ்வு நடைபெறலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார். 

    புதிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேற்கொள்ள இருக்கும் ஹார்டுவேர் மாற்றங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு ஹார்டுவேர் நிகழ்வில் கூகுள் பிக்சல் பட்ஸ் மர்றும் பிக்சல் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கூகுள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் தேதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. 

    SM-G8750 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருக்கின்றன. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் சீனாவின் JD.com வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த தகவல்கள் ட்விட்டரில் கசிந்திருக்கும் நிலையில், இதன் விளம்பர படங்களும் வெய்போ மூலம் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்9 லைட் என்ற பெயர் கொண்டிருக்கிறது. விளம்பர படத்தில் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கேமரா மாட்யூல் அருகிலேயே கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. 



    சாம்சங் எஸ் சீரிஸ் லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2220 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - அட்ரினோ 512GPU
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், யுஎஸ்பி
    - கைரேகை சென்சார்
    - ஐரிஸ் சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்த பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் மிகமுக்கிய அம்சம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ட்விட்டரில் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழக்கமான கைரேகை செனசார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதால், இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 8 உண்மையான புகைப்படங்கள், கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விவரங்களை ஐஸ் யுனிவர்ஸ் மூலம் சரியாக வெளியனது குறிப்பிடத்தக்கது.


    புகைப்படம்: நன்றி DBSDESIGNING

    புதிய ஸ்மார்ட்போனில் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாததற்கான காரணங்கள் அறியப்படவில்லை. எனினும் முந்தைய கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு சீராக வேலை செய்யவில்லை என்பதால் வழங்கப்படாமல் இருந்தது. இதே காரணத்திற்காகவே புதிய ஸ்மார்ட்போனில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் நீக்கப்பட்டிருக்கலாம்.

    விவோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழி்ல்நுட்பத்தை வழங்கும் போது சாம்சங் வழங்க ஏன் தாமதமாகிறது என்ற கேள்வி பெருமளவு எழுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விவோ தனது X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனினை குறைந்த அளவு தயாரிப்பது தான் கூறப்படுகிறது. 

    சாம்சங் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை வழங்குவது பெரிய திட்டமாகும். இதனால் தயாரிப்பு பணிகளில் விவோ போன்று சாம்சங் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

    எதுவானாலும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சாம்சங் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பது சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எஸ் சீரிஸ் 10-வது ஆண்டு விழாவை குறிக்கும் என்பதால், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,


    ×