என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்களிலும் ஒரேமாதிரியான டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சியோல்:

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

    ஐபோன் மாடல்களில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்.சி.டி.) ஸ்கிரீன்களை விநியோகம் செய்தில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பான் டிஸ்ப்ளே இருந்தது. எனினும் எல்ஜி நிறுவனம் தயாரித்த OLED ஸ்கிரீன்களால் ஜப்பான் டிஸ்ப்ளே பின்னடைவை சந்தித்தது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்க இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED (ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு பேனல்கள்) பயன்படுத்தப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஆப்பிள் நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வழங்ப்படவில்லை.


    கோப்பு படம்
     
    இதேபோன்று ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் ஐபோன்களுக்கான OLED பேனல்களை 2019-ம் ஆண்டு முதல் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

    அந்த வகையில் இந்நிறுவனம் புதிய தயாரிப்பு ஆலையை துவங்க முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன்களில் OLED பயன்படுத்தும் பட்சத்தில் எல்ஜி நிறுவனம் அதிகளவு பேனல்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்கும் என தெரிகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சீன வலைத்தளத்தில் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் லீக் ஆன நிலையில், இம்முறை எக்சைனோஸ் சிப்செட் கொண்ட வேரியன்ட் விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

    இந்த ஆண்டு வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக்டாகோர் சிப்செட் 1.79 ஜிகாஹெர்ட்ஸ் கொண்டிருப்பதோடு, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சிங்கிள் கோர் சோதனையில் இந்த சாதனம் 2737 புள்ளிகளை பெற்றிருக்கும் நிலையில், மல்டி-கோர் சாதனம் 9064 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் பெற்றிருந்த வேரியன்ட்-ஐ விட அதிகம் ஆகும். ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட வேரியன்ட் சோதனையில் 2190 மற்றும் 8806 புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அறிமுக நிகழ்வு ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி நோட் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதன் கைரேகை சென்சார் வழக்கமான கேலக்ஸி மாடல்களை போன்றே பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.
    ஒப்போவின் சப்-பிரான்டு ரியல்மி 1 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த நிலையில், இதன் அடுத்த விற்பனை தேதி மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஒப்போ நிறுவனத்தின் சப்-பிரான்டு ரியல்மி 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டே நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது.

    இந்தியாவில் 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரண்டுமே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுதவிர அமேசான் இந்தியா வலைத்தளத்தில் அதிகம் விற்பனையான சாதனங்களில் ஒன்றாக ரியல்மி 1 அறிவிக்கப்பட்டுள்ளது.



    முதல் விற்பனை இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த நிலையில் அடுத்த விற்பனை ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதேவ் ஷெத் தெரிவித்திருக்கிறார். இத்துடன் முதல் விற்பனைக்கு கிடைத்த வரவேற்புக்கு இந்திய வாடிக்கைாயளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஃபிளாஷ் விற்பனைக்கு நாங்கள் திட்டமிடவில்லை, எனினும் இந்திய வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் வரவேற்பு நாங்கள் எதிர்பாராத ஒன்று. வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தயாரிப்பு பணிகளை அதிகரித்து இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவிவித்துள்ளார்.



    ரியல்மி 1 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
    - மாலி-G72 MP3 GPU
    - 3 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3410 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் டையமன்ட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.8,990 மற்றும் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட விவோ X21 ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மே 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கியுள்ளது. விவோ ஆன்லைன் ஸ்டோரில் X21 ஸ்மார்ட்போனின் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்வோர் ரூ.2000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

    புதிய விவோ X21 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள், கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவனை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. விவோ X21 விலை இந்தியாவில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் மாத வாக்கில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய விவோ X21 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்ய ரூ.2000 முன்பணம் செலுத்த வேண்டும். பின் நீ்ங்க்ள் செலுத்திய கட்டணத்துக்கு இணையான கூப்பனை விவோ அனுப்பும். இதை கொண்டு மே 29-ம் தேதி மீதி தொகையை செலுத்த வேண்டும். இத்துடன் ஃபெர்ன்ஸ் என் பெட்டல்ஸ் வழங்கும் ரூ.1000 பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு 280 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    விவோ X21 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 12 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் விவோ X21 விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சீனாவில் இதன் விலை CNY 3,598 (இந்திய மதிப்பில் ரூ.37,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதன் விலை SGD 799 (இந்திய மதிப்பில் ரூ.39,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஜூன் 7-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர் பதிவிடப்பட்டு இருந்தது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் ஜூன் 7-இல் புதிய சாதனம் புது டெல்லியில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அழைப்பிதழில் கேமரா லென்ஸ் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி வை2 ஸ்மார்ட்போனினை இவ்விழாவில் அறிமுகம் செய்யவாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் டீசருடன் #FindYourSelfie மற்றும் #RealYou போன்ற ஹேஷ்டேக் மற்றும் Y என்ற எழுத்து சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. இவையே புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி வை சீரிஸ் ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணமாய் அமைந்துள்ளது.



    ஸ்மார்ட்போனின் எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், சியோமி வெளியிட்டிருக்கும் அழைபிதழில் மனித முகத்தின் ஸ்கெட்ச் ஒருபுறமும், மறுபுறம் கேமரா சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இவை புதிய ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

    முன்னதாக சியோமி வெளியிட்டு இருந்த ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் தலைசிறந்த கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது. இரண்டு வேரியன்ட்களில் வெளியிடப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி வை1 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    புதிய சியோமி ஸ்மார்ட்போனின் விலை ஜூன் 7-ம் தேதி நடைபெறும் விழாவில் தெரியவரும். எனினும் இதன் விலை ரூ.15,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    சியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஜெபிஎல் கோ 2 ப்ளூடூத் ஸ்பீக்கரை ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

    புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறியதாகவும், IPX7 தரச்சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதியை கொண்டுல்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர் என்பதால் வாடிக்கையாளர்கள் மியூசிக் அல்லது வீடியோ என எவ்வித ஆடியோவையும் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களை கொண்டு வயர்லெஸ் முறையிஸ் ஸ்டிரீம் செய்ய முடியும்.

    ஜெபிஎல் கோ2 ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு தொடர்ச்சியான பிளேடைம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பில்ட்-இன் எக்கோ மற்றும் நாய்ஸ் கான்செலிங் ஸ்பீக்கர்போன் கொண்டிருப்பதால் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது க்ரிஸ்டல் க்ளியர் ஆடியோவை வழங்கும்.



    அழகிய பெட்டி போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் ஜெபிஎல் கோ 2 மென்மையான வடிவமைப்பு மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. ஆஷ் கிரே, ஐஸ் க்யூப் சியான், சீஃபோம் மின்ட், லெமனேட் எல்லோ, சன்கிஸ்டு சினமன், பியல் ஷேம்பெயின், மிட்நைட் பிளாக், டீப் சீ புளு, மாஸ் கிரீன், கோரல் ஆரஞ்சு, ரூபி ரெட் மற்றும் ஸ்லேட் நேவி என 12 கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ஜெபிஎல் கோ2 ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியா முழுக்க பல்வேறு விற்பனை மையங்கள் மற்றும் 350-க்கும் அதிகமான சாம்சங் பிரான்டு ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சீன வலைத்தளத்தில் சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைத்தளமான TENAA மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் M1804C3CC, M1804C3DE மற்றும் M1804C3CE என்ற மாடல் எண்களை கொண்டுள்ளன. 

    இதன் மூலம் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 5.45 இன்தச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கொண்ட மாடல் ரெட்மி 6ஏ என்றும் கைரேகை சென்சார் இல்லாத மாடல் ரெட்மி6 என்று அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    சியோமி ரெட்மி 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
    - 2 ஜிபி / 3ஜிபி / 4ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    சியோமி ரெட்மி 6ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
    - 2 ஜிபி / 3ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களும் புளு, பிளாக், சில்வர், வைட், கோல்டு, ரோஸ் கோல்டு, பர்ப்பிள் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    முற்றிலும் பெசல்-லெஸ் ஸ்கிரீன் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ வெளியிட இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    விவோ நிறுவனத்தின் அபெக்ஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் முற்றிலும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது அமைந்தது. 

    அறிமுக நிகழ்வில் அபெக்ஸ் ஸ்மார்ட்போன் கான்செப்ட் நிலையில் இருப்பதாகவும், இதன் தயாரிப்பு பணிகள் இந்த  ஆண்டிலேயே துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவோ அபெக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி கேமரா, ஸ்பீக்கர் மற்றும் சென்சர் அம்சங்களை வழங்குவதால் ஏற்படும் இட பிரச்சனையை கடந்தும் ஃபுல் வியூ தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருவதாக விவோ அறிவித்துள்ளது. மேலும் இது உலகின் முதல் பாதி-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் என்பதோடு உலகில் அதிகளவு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் தயாரிக்கப்படுவதும் இதுவே முதல் முறை ஆகும். 

    விவோ நிறுவனத்தின் X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 98% அளவு மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இதன் சவுன்கேஸ்டிங் தொழில்நுட்பம் ஃபுல்வியூ டிஸ்ப்ளேவை ஸ்பீக்கராக மாற்றுகிறது. இது வழக்கமான லவுட்ஸ்பீக்கருக்கான தேவையின்றி டிஸ்ப்ளேவில் அதிர்வலைகளை அனுப்பும். இதனால் மின்திறன் சேமிக்கப்பட்டு, சவுன்ட் லீக்கேஜ் தடுக்கப்படுகிறது. மேலும் ஆடியோவை சீராக வெளியிடவும் இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்யும். 

    செல்ஃபிக்களை எடுக்க புதிய விவோ ஸ்மார்ட்போனில் 8 எம்பி எலிவேட்டிங் கேமரா வழங்கப்படுகிறது. இந்த கேமரா 0.8 நொடிகளில் வெளியேவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் Mi 8ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மே 31-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு Mi 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நேரடியாக Mi 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டிருக்கிறது. 

    சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 8 என அழைக்கப்படுகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி சொந்தமாக உருவாக்கிய 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    Mi 8 ஸ்மார்ட்போன் ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது வெய்போ மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், சியோமி குளோபல் செய்தி தொடர்பாளர் புதிய வெளியீடு எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.



    முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி வெளியீட்டு நிகழ்வுக்கான அனுமதி சீட்டுக்கள் ஏற்கனவே விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் Mi 8 ஸ்மார்ட்போன், Mi பேன்ட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியீட்டு நிகழ்வில் 5000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி Mi 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    புதிய Mi 8 ஸ்மார்ட்போனில் நாட்ச் வடிவமைப்பு கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI புதிய பதிப்பு வழங்கப்படும் என்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு இணையான முக அங்கீகார வசதியை வழங்கும் நோக்கில் சியோமி நிறுவனம் Mi 8 ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பிரத்யேக கேமரா யூனிட் வழங்கலாம் என கூறப்படுகிறது. புதிய Mi 8 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ மற்றும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6, கேலக்ஸி ஏ6 பிளஸ் மற்றும் ஜெ6 மற்றும் ஜெ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 18:5:9 ரக ஸ்கிரீன் கொண்டுள்ள நிலையில், கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 இன்ச் FHD பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, லைவ் ஃபோகஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்களை எடுக்கும் முன்போ அல்லது எடுத்த பின்னரோ டெப்த் ஆஃப் ஃபீல்டை இயக்க வழி செய்கிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமராவும், ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 24 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ6 சீரிஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய மெட்டல் வடிவமைப்பு, அதிக உறுதியுடனும் கையில் இருந்து நழுவமால் இருக்க ஏதுவான வடிவைப்பு கொண்டுள்ளது. இத்துடன் முக அங்கீகார வசதி, கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, பிக்ஸ்பி விஷன், ஹோம், ரிமைன்டர் மற்றும் சாம்சங் பே மினி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.



    சாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:

    - 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட்
    - மாலி T830 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் FHD பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி விலை ரூ.21,990 என்றும் 64 ஜிபி விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6 சீரிஸ் தவிர அந்நிறுவனத்தின் ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 மற்றும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 ரக இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளன. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட், கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளன.

    கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவும், இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சப் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளன.



    சாம்சங் கேலக்ஸி ஜெ6 சிறப்பம்சங்கள்:

    - 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட்
    - மாலி T830 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ8 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்கள் பிளாக், கோல்டு மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.13,990 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.16,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் மால் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் விற்பனை மட்டும் ஜூலை மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக சலுகைகள்:

    சாம்சங் கேலக்ஸி ஜெ6, கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று (மே 22-ம் தேதி) துவங்குகிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் பேடிஎம் மால், சாம்சங் இ ஸ்டோர் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்திலும், கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியா தளத்தில் நடைபெறுகிறது. 

    கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினாலோ அல்லது பேடிஎம் மால் தளத்தில் வாங்கும் போது ரூ.3,000 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினாலோ அல்லது பேடிஎம் மால் தளத்தில் வாங்கும் போது ரூ.1,500 வரை கேஷ்பேக் பெற முடியும்.
    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து நகர்ப்புறகளில் அதிவேக வைபை வழங்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றன.
    கலிஃபோர்னியா:

    உலகம் முழுக்க இன்டர்நெட் வசதியை கட்டமைக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

    ஃபேஸ்புக் அறிமுகம் செய்த டெராகிராஃப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை பாய்ச்சும். இந்த தொழில்நுட்பம் நகர்ப்புற பகுதிகளில் கட்டிடங்களை கடந்தும் அதிவேக இணைய வசதியை சீராக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    டெராகிராஃப் ப்ரோடோடைப்

    அதிவேக இணைய வசதியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் பொருத்த இருக்கிறது. இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019-ம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் தொழில்நுட்பம் 802.11ay WLAN தரத்தில் 60 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். எனினும் பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


    டெராகிராஃப் நெட்வொர்க்

    புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் இருக்கும் இடையூறுகளை கடந்து அதிக பயனர்களுக்கு இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து இருநிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும் சான் ஜோஸ் நகரில் டெராகிராஃப் தொழில்நுட்பம் சோதனை செய்யப்படலாம் என ஃபேஸ்புக் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. ஃபைபர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும்.

    புகைப்படங்கள்: நன்றி ஃபேஸ்புக், பிக்சாபே
    ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது.
    பீஜிங்:

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் முதல் டீசரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன துணை தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்திருந்த நிலையில், இசட்5 ஸ்மார்ட்போனின் மற்றொரு அம்சத்தை புதிய டீசரில் தெரிவித்திருக்கிறார்.

    புதிய டீசரில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இன்டெர்னல் மெமரி கொண்டு ஸ்மார்ட்போனில் 10 லட்சம் புகைப்படங்கள், 2000 ஹெச்டி திரைப்படங்கள் மற்றும் 1,50,000 பாடல்களை சேமிக்க முடியும். இன்டெர்னல் மெமரி தவிர புதிய ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.



    சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 128 ஜிபி அல்லது 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு வரும் நிலையில், லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    4000 ஜிபி இன்டெர்னல் மெமரி மட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போன் சுமார் 95% அதிகமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் முழுமையான ஸ்கிரீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெறலாம் என தோன்றினாலும், புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் இருக்காது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்பக்கம் உள்ள பெரிய பெசல்களை அகற்றும் வழிமுறையை லெனோவோ கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.



    ஐபோன் X போன்று இல்லாமல் புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்கம் செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் போன்றவை இடம்பெறவில்லை. அந்த வகையில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமராவும், ஆடியோ வைப்ரேஷன் மூலமாக டிரான்ஸ்மிட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    லெனோவோ நிறுவன துணை தலைவரின் முந்தைய போஸ்ட்களில் புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்த 18 காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பங்களும், நான்கு தொழில்நுட்ப திருப்புமுனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×