என் மலர்

  நீங்கள் தேடியது "JBL GO 2"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  ஜெபிஎல் கோ 2 ப்ளூடூத் ஸ்பீக்கரை ஹார்மன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

  புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறியதாகவும், IPX7 தரச்சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதியை கொண்டுல்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர் என்பதால் வாடிக்கையாளர்கள் மியூசிக் அல்லது வீடியோ என எவ்வித ஆடியோவையும் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களை கொண்டு வயர்லெஸ் முறையிஸ் ஸ்டிரீம் செய்ய முடியும்.

  ஜெபிஎல் கோ2 ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு தொடர்ச்சியான பிளேடைம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பில்ட்-இன் எக்கோ மற்றும் நாய்ஸ் கான்செலிங் ஸ்பீக்கர்போன் கொண்டிருப்பதால் ஜெபிஎல் கோ 2 ஸ்பீக்கர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது க்ரிஸ்டல் க்ளியர் ஆடியோவை வழங்கும்.  அழகிய பெட்டி போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் ஜெபிஎல் கோ 2 மென்மையான வடிவமைப்பு மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. ஆஷ் கிரே, ஐஸ் க்யூப் சியான், சீஃபோம் மின்ட், லெமனேட் எல்லோ, சன்கிஸ்டு சினமன், பியல் ஷேம்பெயின், மிட்நைட் பிளாக், டீப் சீ புளு, மாஸ் கிரீன், கோரல் ஆரஞ்சு, ரூபி ரெட் மற்றும் ஸ்லேட் நேவி என 12 கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது.

  இந்தியாவில் ஜெபிஎல் கோ2 ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியா முழுக்க பல்வேறு விற்பனை மையங்கள் மற்றும் 350-க்கும் அதிகமான சாம்சங் பிரான்டு ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  ×