search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஃபேஸ்புக்கின் டெராகிராஃப் நொடிக்கு 40 ஜிபி வேகத்தில் இன்டர்நெட் வசதியை வழங்கும்
    X

    ஃபேஸ்புக்கின் டெராகிராஃப் நொடிக்கு 40 ஜிபி வேகத்தில் இன்டர்நெட் வசதியை வழங்கும்

    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து நகர்ப்புறகளில் அதிவேக வைபை வழங்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றன.
    கலிஃபோர்னியா:

    உலகம் முழுக்க இன்டர்நெட் வசதியை கட்டமைக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

    ஃபேஸ்புக் அறிமுகம் செய்த டெராகிராஃப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை பாய்ச்சும். இந்த தொழில்நுட்பம் நகர்ப்புற பகுதிகளில் கட்டிடங்களை கடந்தும் அதிவேக இணைய வசதியை சீராக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    டெராகிராஃப் ப்ரோடோடைப்

    அதிவேக இணைய வசதியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் பொருத்த இருக்கிறது. இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019-ம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் தொழில்நுட்பம் 802.11ay WLAN தரத்தில் 60 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். எனினும் பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


    டெராகிராஃப் நெட்வொர்க்

    புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் இருக்கும் இடையூறுகளை கடந்து அதிக பயனர்களுக்கு இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து இருநிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும் சான் ஜோஸ் நகரில் டெராகிராஃப் தொழில்நுட்பம் சோதனை செய்யப்படலாம் என ஃபேஸ்புக் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. ஃபைபர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும்.

    புகைப்படங்கள்: நன்றி ஃபேஸ்புக், பிக்சாபே
    Next Story
    ×