என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஹானர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
ஹூவாய் சப்-பிரான்டு நிறுவனமான ஹானர் தனது க்ளியர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
ஹானர் க்ளியர் ஹெட்போன் உலகில் முதல்முறையாக ரியல்-டைம் இதயத்துடிப்பு டிட்டெக்ஷன் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்களது இதயத்துடிப்பை டிராக் செய்து, உங்களை அமைதிப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability-HRV) அளவுகளை ஆய்வு செய்து, உடனடி பரிந்துரைகளை இந்த ஹெட்போன் வழங்கும்.
ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக் வசதியை ஹானர் க்ளியர் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ அனுபவமானது குறைந்த பிட்ரேட் கொண்ட ஆடியோக்களையும் அதிக துல்லியமாக, உயர் ரகத்தில் கேட்க வழி செய்யும். இதன் ரியல்-டைம் ஹார்ட் ரேட் டிட்டெக்ஷன் வலது புற இயர்பட்-இல் பொருத்தப்பட்டிருக்கும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மானிட்டர் மூலம் டிராக் செய்யப்படுகிறது.
ஹார்ட் ரேட் மானிட்டரிங் அம்சம் ஹூவாய், ஹானர் ஸ்மார்ட்போன்களை போன்றே ஹூவாய் ஹெல்த் ஆப் கொண்டிருக்கும் மற்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் என ஹானர் தெரிவித்துள்ளது. இந்த ஹெட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் சீனாவை சேர்ந்த அறிவியில் குழுமத்தின் உளவியல் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் பயனரின் உளவியல் சார்ந்து மன அழுத்தத்தை இயக்கி, அதற்கேற்ற ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் தகவல்களை வழங்கும். இதன் இயர்பட்கள் மிகவும் மென்மையாகவும், மனித தோல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலும், நீண்ட நேர பயன்பாடுகளிலும் சவுரகரியமாக இருக்கும் படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹானர் க்ளியர் ஹெட்போன்களின் இயர் ஃபின்கள் மற்றும் இயர்-டிப்கள் மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் MEMS மைக்ரோபோன், இன்-லைன் மியூசிக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.
வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் க்ளியர் ஹெட்போன் சீனாவில் 129 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,350) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சீனாவில் இன்று (ஜூன் 7) முதல் துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் சீன வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீன வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ரெட்மி 6 இருக்கிறது. கடந்த மாதம் M1804C3CC, M1804C3DE மற்றும் M1804C3CE மாடல் எண்களை கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்கள் சீன வலைத்தளமான TENAA-வில் கசிந்திருந்தது. அந்த வகையில் இவை ரெட்மி 6 சீரிஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்டா கோர் சிப்செட், டூயல் பிரைமரி மற்றொரு மாடலில் குவாட்-கோர் சிப்செட் மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா என இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் / ஆக்டா-கோர் பிராசஸர்
- 2 ஜிபி / 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- உயர் ரக மாடலில் இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஹெச் பேட்டரி
ரெட்மி 6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக், சில்வர், வைட், கோல்டு, ரோஸ் கோல்டு, பர்ப்பிள் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் சியோமி நிறுவனம் விரைவில் Mi A2 லைட் ஸ்மார்ட்போனினை சிங்கப்பூரில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 12 இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #watchos5
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் டிவி 4K சாதனத்துக்கான டிவி ஓஎஸ் இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 முக்கிய அம்சங்கள்:
- ஆக்டிவிட்டி ஷேரிங்: வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளம் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆப்பிள் வாட்ச் பயனரை ஏழு நாட்கள் போட்டிக்கு அழைப்பு விடுக்க முடியும். இதன் மூலம் இருவரும் உடற்பயிற்சிகளில் போட்டியிட முடியும்.
- ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன்: இந்த அம்சம் பயனருக்கு சரியான உடற்பயிற்சியை துவங்க அலெர்ட் வழங்குவதோடு, அவர்களுக்கு ரெட்ரோஆக்டிவ் கிரெடிட் வழங்குகிறது. இந்த அம்சம் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கும் நினைவூட்டுகிறது.
- யோகா மற்றும் ஹைக்கிங்: ஆப்பிள் வாட்ச் புதிய இயங்குதளம் பயனர் யோகா மற்றும் இதர பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மிக துல்லியமாக டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.
- வாக்கி டாக்கி: புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாக்கி டாக்கி அம்சம், மூலம் சிறிய வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியும். ஒரு வாட்ச் சாதனத்தில் இருந்து மற்றொரு வாட்ச் சாதனத்துக்கு ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் பதிப்பு வாட்ச் 3 மூலம் இயங்குகிறது.
- பாட்கேஸ்ட்: சிரியை பயன்படுத்தி பயனர்கள் இனி ஆப்பிள் பாட்கேஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
- வாட்ச் ஓஎஸ் 5-இல் சிரி: சிரி வாட்ச் ஃபேஸ் இனி மூன்றாம் தரப்பு செயலிகளா நைக்ஃ ரன் கிளப், க்ளோ பேபி மற்றும் மோபைக் உல்ளிட்டவற்றில் இருந்து ஆக்ஷனபிள் தரவுகளை காண்பிக்கும்.
- ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன்கள்: மூன்றாம் தரப்பு செயலிகளில் இனி இன்டராக்டிவ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் செயலிகளை திறக்காமலே அவற்றை பயன்படுத்த முடியும். இத்துடன் புதிய பிரைட் பேன்ட் மற்றும் வாட்ச் ஃபேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவி ஓஎஸ் 12 முக்கிய அம்சங்கள்:
புதிய டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.
ஹோம் கன்ட்ரோல் சிஸ்டம்களான கன்ட்ரோல்14, க்ரெஸ்ட்ரான் மற்றும் சாவன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு ஆப்பிள் டிவியை இயக்க முடியும். இத்துடன் சிரியை பயன்படுத்தி வாய்ஸ் சர்ச் மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும்.
டிவி ஓஎஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டால்பி அட்மோஸ் வசதி டிவி ஓஎஸ் 12 தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்பிள் டிவி 4K சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஐடியூன்ஸ் ஆப் அதிகளவு 4K ஹெச்டிஆர் திரைப்படங்களை வழங்குகிறது. அந்த வகையில் அட்மோஸ் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது ஆப்பிள் டிவி தரவுகளுக்கு சிறப்பான ஆடியோ அனுபவத்தை இதுவரை இல்லாத அளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஐடியூன்ஸ் கொண்டிருக்கும் அனைத்து தரவுகளிலும் டால்பி அட்மோஸ் வசதி தானாக அப்டேட் செய்யப்படும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. டிவி ஆப் மட்டுமே தற்சமயம் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதியை வழங்குகிறது. டிவி ஆப் தற்சமயம் வரை 100 சேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் நேரலை விளையாட்டு மற்றும் செய்திகளும் அடங்கும். #WWDC2018 #watchos5 #tvOS12
கூகுள் நிறுவனம் மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. கூகுள் வழக்கப்படி இந்த ஆண்டும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரோலன்ட் குவான்ட் வெளியிட்டிருக்கும் தகவலில் கூகுள் நிறுவனம் பட்ஜெட் விலையில் பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மே 2019-இல் வெளியிடப்படும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான பணிகளை ஒரு மாதத்திற்கு முன் கூகுள் துவங்கியுள்ளதாகவும், இதுவரை சிப்செட் தவிர மற்ற விவரங்கள் அறியப்படவில்லை. முன்னதாக இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போனினை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.
அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் மீண்டும் வெளியாக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் குறித்த மற்ற விவரங்கள் இதுவரை அறியப்படாத நிலையில், வரும் நாட்களில் மேலும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
6.5 இன்ச் அளவு கொண்ட ஐபோன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய மாடல் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
கேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.

புகைப்படம்: நன்றி OnLeaks
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.
2018 6.5 இன்ச் ஐபோனின் முதல் வீடியோவை கீழே காணலாம்..,
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் MIUI 10 ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் MIUI 10 குளோபல் ரோம் வெளியீடும் இதே தேதியில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
முன்னதாக சீனாவில் நடைபெற்ற Mi8 நிகழ்வில் சியோமி நிறுவனம் MIUI 10 அறிமுகம் செய்தது. அந்த வகையில் இம்முறை MIUI 10 குளோபல் ரோம் வெளியிடப்படலாம் என சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் வெளியீட்டு விவரங்களுடன் இவை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சியோமி கம்யூனிட்டி ஃபோரமில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் டீசரை சியோமி இந்தியா துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ரெட்மி வை1 அறிமுக நிகழ்விலேயே MIUI 9 அறிவிக்கப்பட்ட நிலையில், இதே ஆண்டும் முந்தைய வழக்கத்தை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு சார்ந்து இயங்கும் MIUI 10 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சக்தியூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யூசர் இன்டர்ஃபேஸ் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட் அம்சம் இருக்கிறது. இந்த அம்சம் புதிய இயங்குதளம் கொண்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒற்றை அல்லது இரட்டை கேமரா கொண்டிருக்கும் எவ்வித ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் பெற முடியும். இத்துடன் விட்ஜெட், ஏஐ பிரீலோடு மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சியோமியின் MIUI 10 சீனா டெவலப்பர் ரோம் மற்றும் இதை சப்போர்ட் செய்யுயம் சாதனங்களின் பட்டியல் Mi8 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், MIUI 10 குளோபல் ரோம் வெளியீட்டு விவரம் மற்றும் இதனை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் ஜூன் 7-ம் தேதி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi பேன்ட் 3 சீனாவில் நடைபெற்ற Mi8 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது எஸ்எம்எஸ் மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும்.
முந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.
புதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை வழங்குகிறது. முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது.
மேலும் இன்கமிங் அழைப்புகளின் பெயரை பேன்ட்-இல் பார்க்கவும், பட்டனை அழுத்திப்பிடித்து அழைப்புகளை நிராகரிக்கவும் முடியும். சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:
- 0.78 இன்ச் OLED 128x80 பிக்சல் டிஸ்ப்ளே
- கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
- போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography - PPG)
- இதய துடிப்பு சென்சார்
- உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
- செடன்ட்டரி ரிமைன்டர்
- 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
- 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
- ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
- 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி
சியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஜூன் 5-ம் தேதி முதல் Mi பேன்ட் 3 விற்பனை செய்யப்படுகிறது.
Mi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் வை83 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
விவோ நிறுவனத்தின் வை83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட வை83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ வை83 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.15மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 88% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 4 மூலம் இயங்கும் விவோ வை83 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிரர் பேக் கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கோணங்களில் ஸ்மார்ட்போனின் பின்புறம் வெளிச்சம் படும்போது நிறம் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வை83 சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3260 எம்ஏஹெச் பேட்டரி
இந்தியாவில் விவோ வை83 ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் விவோ வை83 விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Mi8 முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.21 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 88.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கிளாஸ் பேக் மற்றும் பிரத்யேக வாட்டர் டிராப் ஆர்க் டிசைன், 4 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 7-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI, 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபி எடுக்க 20 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் பேக்கிரவுன்டு பிளர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டூடியோ லைட்டிங் எஃபெக்ட், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi8 ஸ்மார்ட்போன் 3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சியோமி Mi 8 / Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 6.21 இன்ச் 2248x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி
- 8 ஜிபி ரேம் / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி எக்ஸ்ப்ளோரர் எடிஷன்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
- 20 எம்பி செல்ஃபி கேமரா
- IR ஃபேஸ் அன்லாக் (Mi 8) / 3D ஃபேஸ் அன்லாக் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்)
- கைரேகை சென்சார் (Mi 8) / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3400 எம்ஏஹெச் பேட்டரி, QC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி Mi8 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi8 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 2699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,460), 128 ஜிபி, 256 ஜிபி வேரியன்ட்கள் முறையே 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,620), 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,785) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 3699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.39,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 5-ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்ஹெய்சர் நிறுவனத்தின் புதிய இன்-இயர் வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
சென்ஹெய்சர் நிறுவனத்தின் CX SPORT இன்-இயர் வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
எடை குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹெட்செட், வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ள நிலையில், இந்த இயர்போன் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இதில் வழங்கப்பட்டு இருக்கும் ரிமோட் மூன்று பட்டன் கொண்டிருப்பதால் மிக எளிமையாக இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் பிராம்ப்டகளையும் மிக சுலபமாக வழங்க முடியும். ஹெட்செட்-இன் ஃபின்கள் இயர்பட்களை சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
இந்த ஹெட்செட்-ஐ கழுத்தில் மாட்டிக் கொண்டோ அல்லது முன்பக்கம் வைத்து பயன்படுத்தவும் முடியும். இதற்கென கேபிள் ஆர்கனைசர் வழங்கப்பட்டிருப்பதோடு காலரில் பொருத்திக் கொள்ள க்ளிப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

சென்ஹெய்சர் CX SPORT சிறப்பம்சங்கள்:
ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட, சென்ஹெய்சர் டிரான்ஸ்டியூசர்கள்
தெளிவான ஆடியோ மற்றும் டைனமிக் பேஸ் வசதி
இம்பென்டன்ஸ்: 28 Ohm (பேசிவ்), 480 Ohm (ஆக்டிவ்)
வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டண்ட்
ப்ளூடூத் 4.2 மற்றும் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்டி
ஆடியோ கோடெக்கள்: apt-X / apt-X LL / AAC / SBC
சென்ஹெய்சர் புதிய இன்-இயர் ஹெட்செட்கள் (S/M/L) என மூன்று வித ஃபின் அளவுகளிலும், (XS, S, M, L) என நான்கு வித அளவுகளில் இயர் அடாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வெளிப்புற ஒலியை கட்டுப்படுத்தி அதிகபட்சம் ஆறு மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும்.
இத்துடன் க்விக் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்தால் பத்தே நிமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கும், 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
சென்ஹெய்சர் CX SPORT மாடலின் விலை இந்தியாவில் ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஜூன் 1-ம் தேதி துவங்குகிறது. ஜூன் 15-ம் தேதி வரை புதிய சென்ஹெய்சர் CX SPORT இயர்போன் முன்பதிவு செய்வோருக்கு புதிய இன்-இயர் ஹெட்செட் வாங்குவோருக்கு ரூ.3,990 மதிப்புடைய ஹெட்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன்கள் ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
மாஸ்கோ:
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த நோக்கியா 1, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் அதிநவீன அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு கொண்டுள்ளன. மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 1 ஜிபி ரேம், புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பாலிகார்பனேட் பேக் மற்றும் வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ளதோடு, மெட்டாலிக் அக்சென்ட்கள், முன்பக்கம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2.1 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
- அட்ரினோ 308 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4100 எம்ஏஹெச் பேட்டரி
புதிய நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் புளு/காப்பர், புளு/சில்வர் மற்றும் கிரே/சில்வர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 115 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,801) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, மீடியாடெக் MT6750 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பாலிகார்போனேட் பேக், பக்கவாட்டுகளில் அலுமினியம் மற்றும் டைமன்ட் கட் வடிவமைப்பு கொண்டுள்ளது.

நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N சிப்செட்
- மாலி T860 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2990 எம்ஏஹெச் பேட்டரி
புதிய நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் புளு/காப்பர், பிளாக்/க்ரோம் மற்றும் வைட்/ஐயன் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 160 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10,870) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P18 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5.1 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 1080x2160 FHD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் P18 பிராசஸர்
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் காப்பர், டெம்ப்பர்டு புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 218 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,795) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 5.1 விற்பனை ஜூலை 2018 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் X21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
விவோ இந்தியா ஏற்கனவே அறிவித்ததை போன்று இந்தியாவில் விவோ X21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
இந்தியாவின் முதல் இன்-டிஸ்ப்ளே கைரைகே சென்சார் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனாக விவோ X21 இருக்கிறது. முன்னதாக சீனாவில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் அறிமுகமாக விவோ X21 இன்-டிஸ்ப்ளே கைரைகே சென்சார் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது.
புதிய விவோ X21 ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் FHD பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90.3% ஸ்கிரீன் அளவு, 1.66 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. 3D கிளாஸ் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருப்பதால் கைககளில் பயன்படுத்த சிறப்பான அனுபவம் வழங்குகிறது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 மற்றும் குவால்காம் மூலம் இயங்கும் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா, சாம்சங் 2L9 சென்சார், டூயல் பிக்சல் தொழில்நுட்பம், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அதிநவீன டூயல் பிக்சல் கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழி்ல்நுட்பம் பயன்படுத்தி குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை வழங்குகிறது. இது அதிகபட்சம் 24 எம்.பி. தரமுள்ள புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ X21 சிறப்பம்சங்கள்:
- 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ X21 ஸ்மார்ட்போன் பிளாக், அரோரா வைட் மற்றும் ரூபி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.35,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ X21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.






