என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூன் 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பல்வேறு டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார் வழங்கப்படுகிறது. இதனால் ரெட்மி 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் ஏஐ சார்ந்த போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும்.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது சமீபத்திய டீசரில் தெரியவந்தது. ரோஸ் கோல்டு, கோல்டு, புளு, பிளாக் மற்றும் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் மேல்புறம் இன்ஃப்ராரெட் சென்சார் வழங்கப்படுகிறது. 

    பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மெமரி அம்சங்களை பொருத்த வரை ரெட்மி 6 போன்றே 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இருவித மாடல்களில் வெளியிடப்படுகிறது.



    சியோமி ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், 1.25um, PDAF, f/2.2
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார், 1.12um, f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை மற்றும் Mi பேட் 4 சாதனத்தின் இதர விவரங்கள் அறிமுக தினத்தன்று தெரியவரும்.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52  மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது.

    இத்துடன் விண்டோஸ் தளங்களிலும் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பீட்டா பதிப்புகளில் க்ரூப் காலிங் வசதி சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த அம்சம் அனைத்து சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த முதலில் வீடியோ அல்லது வாய்ஸ் கால் மேற்கொள்ள வேண்டும். பின் அழைப்பு இணைக்கப்பட்டதும், திரையில் ஆட் பெர்சன் (Add Person) ஐகான் வலதுபுறம் காணப்படும். இதை க்ளிக் செய்தால் பெயர் பட்டியல் தெரியும். 

    இனி நீங்கள் தேர்வு செய்யும் மூன்றாவது நபர் உங்களின் அழைப்பினை ஏற்கும் பட்சத்தில் இரண்டு பெயர்களும் திரையில் தோன்றும். உடனடியாக க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் பயன்படுத்த கூகுள் பிளே வாட்ஸ்அப் பீட்டா பதிப்புக்கு பதிவு செய்வது அவசியமாகும்.

    ஐபோனிலும் க்ரூப் கால்களை பெறவும், அழைக்கவும் முடியும். ஐஓஎஸ் தளத்தில் சரவர் சார்ந்த அப்டேட் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த அம்சம் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபேஸ்புக் மூலம் வெளியிடப்பட்டது.
    ஒபோபோ ஃபைன்ட் X லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போனுடன் லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்பன் ஃபைபர் டெக்ஸ்ச்சர் மற்றும் 3D லம்போர்கினி கார் லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 2016 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ஃபைன்ட் X லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் வோல்டேஜ் பிளஸ் அல்காரிதம் மற்றும் பிரத்யேக கஸ்டமைஸ் செயய்ப்பட்ட ஒப்போ உருவாக்கிய சூப்பர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 2500 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என ஒப்போ தெரிவித்திருந்தது.

    ஒப்போ ஃபைன்ட் X லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கும் சூப்பர் VOOC சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் உள்ள 3400 எம்ஏஹெச் பேட்டரியை 0-100% சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது சக்திவாயந்த சூப்பர் VOOC சார்ஜரை பயன்படுத்துகிறது.



    மற்ற சிறப்பம்சங்கள் ஃபைன்ட் X மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.42 இன்ச் 2340x1080 பிக்சஸ், ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ பானரோமிக் ஆர்க் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் கலர் ஓஎஸ் 5.1, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏஐ போர்டிரெயிட் மற்றும் ஏஐ சீன் ரெக்ஃனீஷன் மற்றும் 25 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஃபைன்ட் X லம்போர்கினி எடிஷன் மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை 1699 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,34,470) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரத்யேக பெட்டியில் பேக் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் ஃபைன்ட் X ஸ்மார்ட்போனுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் ரூ.5,599 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.




    கோமியோ நிறுவனம் இந்தியாவில் சி1 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    5.0 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் கோமியோ சி1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. 

    பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கும் 2500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஃபேஸ் அன்லாக் வசதி இருப்பதால் இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.



    கோமியோ சி1 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் IPS டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் விஆர் ரோக் GE8100 GPU
    - 1.5 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2500 எம்ஏஹெச் பேட்டரி

    கோமியோ சி1 ப்ரோ ஸ்மார்ட்போன் மெட்டாலிக் கிரே, சன்ரைஸ் கோல்டு மற்றும் ராயல் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.5,599 விலையில் கிடைக்கும் கோமியோ சி1 ப்ரோ அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ், மற்றும் பேடிஎம் போன்ற வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதனால் கோமியோ சி1 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.3,399 விலையில் வாங்கிட முடியும். ஜியோ கேஷ்பேக் தொகை வவுச்சர்கள் வடிவில் ஜியோ கணக்கில் சேர்க்கப்படும்.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ், 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.12um பிக்சல்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் மேட் பிளாக் மற்றும் ஜெட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. 

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 (2018) ஸ்மார்ட்போனும் அந்நிறுவன வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கேன்வாஸ் 2 பிளஸ் போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் கேன்வாஸ் 2 (2018) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்ற இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய நிறம் இந்தியாவில் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் மொபைலில் இருந்து டிவியை இயக்கும் வசதியை ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் (SmartThings app) சேர்த்துள்ளது. டிவி கன்ட்ரோல் என அழைக்கப்படும் இந்த விட்ஜெட் முன்னதாக செயலியில் செயல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் டிவியின் அருகில் சென்றால் ஸ்மார்ட்போனில் விட்ஜெட் தானாக தோன்றும். இந்த விட்ஜெட் பயனர்களை இருவித-ஸ்கிரீன் மற்றும் சவுன்ட் மிரரிங் செய்யும். 

    டிவி கன்ட்ரோல் விட்ஜெட்-இல் வியூ ஸ்கிரீன் மோட் (View Screen mode) மூலம் பயனர்கள் தொலைகாட்சியை வீட்டில் எந்த அறையில் இருந்தும் பார்க்க முடியும். இதே போன்று கேம் மற்றும் ஸ்மார்ட்போன் தரவுகளை தொலைகாட்சிகளில் மிரர் செய்ய முடியும்.



    இந்த டிவி கன்ட்ரோல் விட்ஜெட் பிளே சவுன்ட் ஆப்ஷன் வழங்குவதால், பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் மியூசிக்-ஐ தொலைகாட்சியில் இயக்கலாம். அந்த வகையில் இது ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்று பயன்படுத்த முடியும். டிவி டு டிவைஸ் (TV to Device) ஆப்ஷன் தொலைகாட்சியில் உள்ள ஆடியோவை மொபைல் சாதனங்களில் கேட்க வழி செய்யும்.

    புதிய சன்ரைஸ் கோல்டு நிற கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் 128 ஜிபி வேரியன்ட்-இல் கிடைக்கிறது. இதன் விலை ரூ.68,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஜூன் 20-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு முறை ஸ்கிரீன் சரி செய்யும் வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு அல்லது பேடிஎம் மால் மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.9000 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் முன்னதாக கிசுகிசுக்கப்பட்ட தேதியிலேயே கேலக்ஸி நோட் 9 அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய நோட் ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் கியர் எஸ்4 சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    முந்தைய மாடல் போன்று இல்லாமல் புதிய கியர் எஸ்4 சாதனத்தில் பேனல் லெவல் பேக்கேஜிங் வழங்கப்படுகிறது. இது முந்தைய சாதனத்தை விட மெல்லியதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்டு 9-இல் அறிமுகமாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை விட நோட் 9 இரு வாரங்கள் முன்னதாக வெளியாகும்.

    இத்துடன் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 மாடலுடன் கியர் எஸ்4 சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் PLP வழிமுறை சார்ந்த சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியீட்டு தேதி மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், கியர் எஸ்4 சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2018 கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவு பேட்டரி திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    எல்ஜி நிறுவனத்தின் கியூ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சீயோல்:

    எல்ஜி நிறுவனத்தின் கியூ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இவை கொரியாவில் அறிமுகமாகி உள்ளன. இவை இந்த ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, போர்டிரெயிட் மோட், கியூலென்ஸ், ஹை-ஃபை ஆடியோ, டிடிஎஸ் X 3டி சரவுன்ட் சவுன்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய ஸ்மார்ட்போனில் குவல்காம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் 0-50% சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    எல்ஜி கியூ7 / கியூ7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 18:9 FHD பிளஸ் 2160x1080 பிக்சல் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி (கியூ7) 
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி (கியூ7 பிளஸ்)
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா (கியூ7 பிளஸ்)
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF (கியூ7)
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) MIL-STD 810G சான்று
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
    - 3,000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்

    எல்ஜி கியூ7 ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் லாவென்டர் வைலட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 495,000 கொரிய வொன் (இந்திய மதிப்பில் ரூ.30,850) என்றும் எல்ஜி கியூ7 பிளஸ் மொராக்கன் புளு நிற ஸ்மார்ட்போன் விலை 570,000 கொரிய வொன் (இந்திய மதிப்பில் ரூ.35,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் ஐரோப்பாவில் துவங்கி, அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என எல்ஜி அறிவித்துள்ளது.
    விவோ நிறுவனத்தின் நெக்ஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    விவோ நிறுவனத்தின் நெக்ஸ் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் பக்கவாட்டுகளில் 1.71மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 91.24% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஸ்கிரீன் சவுன்ட்காஸ்டிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தொழில்நுட்பம் சிறப்பான பேஸ் மற்றும் மென்மையான டிரெபிள் அனுபவம் வழங்குகிறது. ரே டேட்டா காம்பென்சேஷன் அல்காரிதம் பயன்படுக்கி லைட் சென்சாரை திரையின் கீழ் மறைக்கிறது. இதன் மைக்ரோ-ஸ்லிட் இன்ஃப்ராரெட் சென்சாரும் திரையின் மேல் மறைக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா ஒவ்வொரு முறை கேமரா ஆப் திறக்கும் போது தோன்றி, பின் தானாக மறைந்து கொள்கிறது.

    இவ்வகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்களை பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது. இதில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.



    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ முன்னதாக அறிமுகம் செய்தது. விவோ X20 பிளஸ் UD என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விவோ X21 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோவின் புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மூன்றாம் தலைமுறையை சார்ந்தது ஆகும். இது அளவில் சிறியதாகவும், அதிக செயல்திறன் மற்றும் 10% வேகமாக அன்லாக் ஆகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் எனர்ஜி யுஐ மற்றும் ஜோவி ஏஐ வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ நெக்ஸ் ஏ / நெக்ஸ் எஸ் (அல்டிமேட்) சிறப்பம்சங்கள்:

    - 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + சூப்பர் AMOLED 19.3:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் (நெக்ஸ் எஸ்)
    - அட்ரினோ 630 GPU (நெக்ஸ் எஸ்)
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm சிப்செட் ( நெக்ஸ் ஏ)
    - அட்ரினோ 616 GPU ( நெக்ஸ் ஏ)
    - 8 ஜிபி ரேம், 256 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி (நெக்ஸ் எஸ்)
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி (நெக்ஸ் ஏ)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, f/1.8
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (நெக்ஸ் எஸ்)
    - பின்புறம் கைரேகை சென்சார் (நெக்ஸ் ஏ)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் டைமன்ட் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் விலை 4498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.47,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 256 ஜிபி வெர்ஷன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,640) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்ட நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் விலை 3898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூன் 23-ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.

    புதிய ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12என்எம் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI9 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ A22 12என்எம் குவாட்கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பாலிகார்பனைடே மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ரெட்மி 6ஏ பிரஷ் செய்யப்பட்ட மெட்டல் சர்ஃபேஸ் கொண்டுள்ளது.



    சியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
    - பவர் விஆர் GE8320 GPU
    - 3ஜிபி / 4ஜிபி ரேம் 
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    சியோமி ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
    - 2 ஜிபி ரேம் 
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் MIUI 9
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் கிரெ, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 15-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

    சீனாவில் ரெட்மி 6 (3 ஜிபி) விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,410) என்றும், 4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) என்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை 599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.6,307) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டு ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லெனோவோவின் மோட்டோரோலா தனது ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.  

    மோட்டோரோலா ஒன் பவர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெயின் நாட்டு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3780 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி, f/1.8 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி சென்சார், f/2.0 அப்ரேச்ர் முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் X போன்ற நாட்ச், கீழே சிறிய சின், பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா மாட்யூல் அதன் கீழ் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டது.

    இதுதவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
    பிளாக்பெரி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    நியூ யார்க்:

    பிளாக்பெரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி அத்னா என குறியீட்டு பெயர் கொண்டிருந்த கீ2 ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    4.5 இன்ச் 1620x1080 பிக்டல், 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 4-அடுக்கு க்வெர்டி (QWERTY) பேக்லிட் கீபோர்டு, ஜெஸ்ட்யூர் வசதிகளை ப்போர்ட் செய்யும் பட்டன்கள், ஃப்ளிக் டைப்பிங், 52 கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஷார்ட்கட்கள், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய மாடலிலும் ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

    மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட பட்டன்கள் 20% பெரியதாகவும், பிரத்யேக ஸ்பீடு கீ ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்ததும், அவற்றில் செட் செய்யப்பட்ட செயலிகளை இயக்க முடியும். ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.

    7-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், டைமன்ட் பேக், சாஃப்ட் டச் மற்றும் 3360 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1.14µm பிக்சல்
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார், ஸ்பீடு கீ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3360 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 649 டாலர்கள் (இந்திய விலை ரூ.43,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×