என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வித வேரியன்ட்களில் வெளியிடப்பட இருக்கும் ஒப்போ A3s ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க ஒப்போவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் 2.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒப்போ A3 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய A3s வெளியிடப்பட இருக்கிறது. சீனாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட A3 ஸ்மார்ட்போனில் 19:9 ரக பெசல்-லெஸ் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.



    ஒப்போ A3s சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, AI பியூட்டி தொழில்நுட்பம் 2.0
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் ஒப்போ A3s 2 ஜிபி மாடலின் விலை ரூ.10,990 முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் டார்க் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் அந்நிறுவனம் மூன்று கேமராக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பத்தாவது எடிஷன் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் என்ற வகையில் புதிய சீரிஸ் பல்வேறு வேரியன்ட்களில் வெளியிடப்படும் என்றும் இதில் ஒரு மாடலில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 சீரிஸ்-இன் டாப் என்ட் மாடலில் 12 எம்பி டூயல் அப்ரேச்சர் லென்ஸ், 16 எம்பி (f/1.9) மற்றும் 13 எம்பி (f2.4) லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் மிட்-சைஸ் கேலக்ஸி எஸ்10 மாடலில் சூப்பர் வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வைடு-ஆங்கிள் லென்ஸ்-இல் ஆட்டோஃபோக்கஸ் அல்லது ஆப்டிக்கல் இமேஸ் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதேபோன்ற செட்டப் எல்ஜி மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



    புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் எவ்வித தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. இத்துடன் வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களின்படி கேலக்ஸி எஸ்10 மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

    இதேபோன்று சாம்சங் நிறுவனம் பியான்ட் 0, பியான்ட் 1 மற்றும் பியான்ட் 2 என்ற பெயர்களில் மூன்று சேம்பில்களை வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இவற்றில் பியான்ட் 1 மற்றும் பியான்ட் 2 மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் பியான்ட் 0 மாடல் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் புதிய நிறங்களில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன் மாடல்கள்: இரண்டாம் தலைமுறை ஐபோன் X, விலை குறைந்த ஐபோன் X தோற்றத்தில் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட 6.1 இன்ச் ஐபோன் மற்றும் ஐபோன் X பிளஸ் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியோ வெளியிட்டிருக்கும் புதிய தகவல்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களிலும், 6.1 இன்ச் ஐபோன் ரெட், புளு, ஆரஞ்சு, கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். 



    இதன் ரெட் நிறம் 2018 ஐபோன் X பிராடக்ட் ரெட் (PRODUCT RED) வெர்ஷனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதே போன்று ஐபோன் 8 மாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் X ரெட் வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கோல்டு நிற ஐபோன் X ப்ரோடோடைப் இணையத்தில் கசிந்திருந்தது.

    குறைந்த விலை, பெரிய டிஸ்ப்ளே, டூயல்-சிம் டூயல்-ஸ்டான்ட்பை மற்றும் பிளாக், வைட் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கலாம் என்ற காரணங்களால் ஐபோன் X மாடலை விட 6.5 இன்ச் OLED ஐபோன் மாடலுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என மிங் சி கியோ வெளியி்ட்டிருக்கும் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. 

    ஐபோன் 8 சீரிஸ்-ஐ விட புதிய 6.1 இன்ச் எல்சிடி ஐபோன் விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் இதற்கு ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி மற்றும் கிரே, வைட், புளு, ரெட் மற்றும் ஆரஞ்சு என ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கலாம் என மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார்.

    புகைப்படம்: நன்றி 9to5mac
    தமிழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இந்தியாவின் முதல் தானியங்கி சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கோயம்புத்தூரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் இணைந்து இந்தியாவின் முதல் தானியங்கி சக்கர நாற்காலி (Wheelchair) உருவாக்கியுள்ளனர். இந்த தானியங்கி சக்கர நாற்காலி பயனரை ஒருஇடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்லும். போக வேண்டிய இடத்துக்கு வீல்சேர் தானாக செல்லும் என்பதோடு, வழியில் இருக்கும் இடர்பாடுகளை தவிர்க்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    செல்ஃப்-இ (Self-E) என அழைக்கப்படும் இந்த வீல்சேர் ரோபோடிக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Robotic Operating System - ROS) பயன்படுத்துகிறது. இந்த இயங்குதளம் கொண்டு தானியங்கி வீல்சேர் தானாக செல்கிறது. இது அதன் அருகில் உள்ள இடங்களில் பயணிக்க ஏதுவாக வரைபடம் ஒன்றை உருவாக்கி, அதனை ஸ்மார்ட்போன் செயலியில் பிரதிபலிக்கிறது.

    வழியில் நிலையான மற்றும் மாறக்கூடிய இடர்பாடுகளை லேசர் சென்சார் மூலம் இயங்குதளம் தானாக கண்டறியும். பின் ஸ்மார்ட்போனில் உள்ள வரைபடத்தில் பயனர் எங்கு வேண்டுமானாலும் தொட முடியும். பயனர் தொடும் இடத்திற்கு வீல்சேர் பாதுகாப்பாக செல்லும். 

    முற்றிலும் பயனர் உதவியின்றி தானாக செல்லும் இதே போன்ற வீல்சேர் தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாடல்கலின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், மாணவர்கள் உருவாக்கியிருக்கும் வீல்சேர் ப்ரோடோடைப் விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவு தான். 

    சித்னா ரவி தேஜா, சரத் ஸ்ரீகாந்த் மற்றும் அகில் ராஜ் என செல்ஃப்-இ வீல்சேரை உருவாக்கிய மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமிர்தா விஷ்வா வித்யபீடம் மனிதாபமான தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஜூனியர் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.



    “வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணையாமல் பல்கலைக்கழக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட முதல் தானியங்கி சக்கர நாற்காலி என்ற பெருமையை செல்ஃப்-இ பெற்றிருக்கிறது. தற்சமயம் இந்த வீல்சேர் மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என பல்வேறு சூழல்களில் சோதனை செய்யப்பட வேண்டும்,” என அமிர்தா விஷ்வா வித்யபீடம் மனிதாபமான தொழில்நுட்ப ஆய்வகத்தின் உதவி பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

    “மாணவர்களின் தற்போதைய உருவாக்கம் வெற்றிகரமான ப்ரோடோடைப் என்ற நிலையில் அமிர்தா விஷ்வ வித்யபீடம் தொழில்நுட்ப வியாபார இன்குபேட்டர் மூலம் இதனை வணிக மயமாக்க இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

    செல்ஃப் இ தானியங்கி வீல்சேரை மருத்துவமனைகளில் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விமான நிலையம் அல்லது வீட்டில் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போனினை பயன்படுத்த தெரிந்த அனைவராலும் இந்த வீல்சேரை பயன்படுத்த முடியும். இதனால் வழக்கமான வீல்சேர்களில் ஜாய்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.

    செல்ஃப் இ தானியங்கி வீல்சேர் அதன் அருகில் உள்ள மக்கள், சுவர்கள், தூண்கள், மேசை, நாற்காலி போன்ற இடர்பாடுகளை தானாக கண்டறிந்து கொள்ளும். இதற்கு லிடார் (LiDAR) எனும் லேசர் சென்சாரை இந்த வீல்சேர் பயன்படுத்துகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் வரைபடம் லானாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு அனுப்பப்படும். இதற்கென பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    அசுஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    அசுஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சென்ஃபோன் 5இசட் மாடலில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக சூப்பர் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ மற்றும் செயற்கை நுண்ணறிவு டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ மற்றும் ZenUI 5.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, OIS, சோனி IMX363 சென்சார் மற்றும் 0.03s டூயல் பிக்சல் PDAF, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஆட்டோ போர்டிரெயிட் மற்றும் செல்ஃபி பானரோமா மோட்கள், ஃபேஸ் அன்லாக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள சென்ஃபோன் 5இசட், டூயல் ஸ்பீக்கர்கள், NXP ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், டி.டி.எஸ். ஹெட்போன் வழங்கப்பட்டுள்ளது. 3300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் அசுஸ் சென்ஃபோன் 5இசட் அசுஸ் பூஸ்ட்மாஸ்டர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஏ.ஐ. சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.



    அசுஸ் சென்ஃபோன் 5இசட் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வலைந்த கிளாஸ் சூப்பர் IPS டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி / 8ஜிபி ரேம் 
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ZenUI 5.0
    - ஆன்ட்ராய்டு பி அப்கிரேடு வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா
    - டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8
    - 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.0, OV8856 சென்சார்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா f/2.0, OV8856 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி

    அசுஸ் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, மெட்டோர் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 6 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி கொண்ட சென்ஃபோன் 5இசட் விலை ரூ.29,999 என்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.32,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.36,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்ஃபோன் 5இசட் விற்பனை ஜூலை 9-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது.

    அறிமுக சலுகைகள்:

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.3,000 தள்ளுபடி
    - ப்ளிப்கார்ட் வழங்கும் ரூ.499 மதிப்புடைய மொபைல் இன்சூரன்ஸ் 
    - மாதம் ரூ.3,333 கட்டணத்தில் வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி கூடுதல் டேட்டா
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோட்டோ இ5 பிளஸ் மாடல் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் 196 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,510) என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்படுவதாகவும், இந்த அம்சத்துக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அறிமுகமாக சில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வலம் வரத்துவங்கியுள்ளன.

    2019-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்க சாம்சங் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தவிர கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.



    இதற்காக சாம்சங் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த மான்டிஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இணைந்து ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டதை போன்ற முக அங்கீகார வசதியை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் சாம்சங் தனது எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கிவிட்டு, 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் வழங்குவதற்கான மாதிரி பாகங்களை உதிரிபாக நிறுவனங்களிடம் சாம்சங் முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இன்-டிஸ்ப்ளே சென்சார் மற்றும் 3D முக அங்கீகார தொழில்நுட்பங்களை புதிய ஸ்மார்ட்போனில் வழங்கும் பட்சத்தில் சாம்சங் நிச்சயம் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை சேர்க்கும் பட்சத்தில் புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஆர். எமோஜி அம்சம் இடம்பெறலாம்.
    மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு குறித்த டீசர் பதிவிடப்பட்டு இருக்கிறது.




    மோட்டோ இ5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே நிகழ்வில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர் நிர்ணயித்திருக்கும் விலை என்பதால் இது அதிகாரப்பூர்வ விலை கிடையாது

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது, எனினும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல்கள் ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - டர்போ பவர் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.13,495) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




    ஆல்காடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் ஷாங்காய் நகரில் நடைபெறும் மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனில் 5.34 இன்ச், 18:9 ஸ்கிரீன், குவாட்கோர் மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம், கூகுளின் கோ செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த செயலிகள் குறைந்த மெமரியில் சீராக இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    இத்துடன் சோஷியல் மோட் எனும் போட்டோ எடிட் செய்யும் சூட் கொண்டிருக்கிறது. இதை கொண்டு புகைப்படங்களை எடிட் செய்து மிக வேகமாகவும், எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். போட்டோ பூத் கொண்டு புகைப்படங்களை எடுத்து நண்பர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியும்.



    ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
    - 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் விஆர் ரோக் GE8100 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
    - சிங்கிள் / டூயல் சிம்
    - 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் புளு, ரோஸ் கோல்டு மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஜூலை மாதம் முதல் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஆல்காடெல் 1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் விலை 79 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.6,125) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.




    விவோ நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டுக்கான அழைப்பிதழ்களை விவோ வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஜூலை 19-ம் தேதி விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

    புதிய ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமாக அதன் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், மிகவும் மெல்லிய பெசல்கள், ஸ்கிரீன் சவுன்ட்கேஸ்டிங் தொழில்நுட்பம், 8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன. இதன் பாப்-அப் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் கேமரா செயலியை க்ளிக் செய்தால் தானாக திறந்து கொண்டு, மீண்டும் தானாக உள்ளே சென்று விடும். 



    இவ்வகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்களை பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது. இதில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மூன்றாம் தலைமுறையை சேர்ந்த இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அளவில் சிறியதாகவும், அதிக செயல்திறன் மற்றும் 10% வேகமாக அன்லாக் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    விவோ நெக்ஸ் ஏ / நெக்ஸ் எஸ் (அல்டிமேட்) சிறப்பம்சங்கள்:

    - 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + சூப்பர் AMOLED 19.3:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் (நெக்ஸ் எஸ்)
    - அட்ரினோ 630 GPU (நெக்ஸ் எஸ்)
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm சிப்செட் ( நெக்ஸ் ஏ)
    - அட்ரினோ 616 GPU ( நெக்ஸ் ஏ)
    - 8 ஜிபி ரேம், 256 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி (நெக்ஸ் எஸ்)
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி (நெக்ஸ் ஏ)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, f/1.8
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (நெக்ஸ் எஸ்)
    - பின்புறம் கைரேகை சென்சார் (நெக்ஸ் ஏ)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் டைமன்ட் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட நெக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் விலை 4498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.47,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதன் 256 ஜிபி வெர்ஷன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,640) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்ட நெக்ஸ் ஏ ஸ்மார்ட்போன் விலை 3898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,055) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், எல்ஜி தொடர்ந்து வித்தியாசமான முடிவுகளின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் எல்ஜியின் வி40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது ஆன்ட்ராய்டு போலீஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட இருமடங்கு அதிகம் என்ற வகையில் எல்ஜி தனது ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்களையும், முன்புறம் இரண்டு கேமராக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூவாய் P20 ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் டூயல் முன்பக்க கேமரா கொண்டு ஃபேஸ் அன்லாக், 3D ஃபேஸ் மேப்பிங் சிறப்பானதாக இருக்கும்.


    கோப்பு படம்

    பின்புறம் மூன்று கேமராக்களில் ஒரு வழக்கமான லென்ஸ், வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாவது கேமரா கொண்டு போர்டிரெயிட், ட்ரூ மோனோக்ரோம் அல்லது லாஸ்லெஸ் சூம் படங்களை எடுக்க முடியும். இந்த அம்சம் சற்றே வித்தியாசமானதாக தெரிந்தாலும், இவை எவ்வாறு இயங்கும் என்பதும், எவ்வாறு பொருத்தப்படும் என்பதும் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

    எல்ஜி வி40 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில், வழக்கமான வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவாட்-DAC செட்டப், பல்வேறு உயர் ரக ஆடியோ ஃபார்மேட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படும். சமீப காலங்களில் எல்ஜி-யின் ஜி சீரிஸ் மற்றும் வி சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் அம்சங்கள் மிகவும் நுனுக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் அந்நிறுவனம் ஐபோனில் சேர்க்க இருக்கும் அம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

     



    ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் கையெழுத்துக்களை புரிந்து கொள்ளும் புதிய வசதியை ஐபோன்களில் சேர்க்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 2014-இல் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் மேனேஜிங் ரியல்-டைம் ஹேன்ட்ரைட்டிங் ரெகஃனீஷன் (Managing Real-Time Handwriting Recognition) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சம் பயனரின் சாதனத்தில் கையெழுத்து வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் சைனீஸ் உள்பட பல்வேறு மொழிகளை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் ஆப்பிள் சாதனங்களில் வேலை செய்யுமா அல்லது இதர திட்டங்களை ஆப்பிள் வகுத்திருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    ஐபோனில் மட்டும் வழங்கப்படுமா அல்லது இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் விழாவில் ஏர்பவர் எனும் வயர்லெஸ் சாதனம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் மூன்று புதிய ஐபோன்களும் இந்த ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்பவர் சாதனம் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஏர்பவர் சாதனம் கியூ.ஐ. வயர்லெஸ் பேட் சாதனத்துக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    ×