என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிட்டெட் நிறுவனம் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. #BlackBerryKEY2 #smartphone
ஆப்டமஸ் இன்ஃப்ராகாம் லிமிட்டெட் இந்தியாவில் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கீபோர்டு டச் ஜெஸ்ட்யூர், ஃப்ளிக் டைப்பிங், 52 வகையில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஷார்ட்கட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பேஸ் பார் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பட்டன்கள் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட 20% பெரிதாகவும், மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.
இத்துடன் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனில் ஸ்பீட் கீ வழங்கப்பட்டுள்ளது. இதை அழுத்தினால், பயனர்கள் ஏற்கனவே செட் செய்திருக்கும் செயலிகளை பயன்படுத்த முடியும். கீ2 ஸ்மார்ட்போனில் ஸ்ன்ப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி டூயல் பிரைமரி கேமராக்கள், 1.28 மைக்ரோமீட்டர் பிரைமரி கேமரா, டூயல் PDAF மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 7 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், டையமன்ட் பேட்டன் செய்யப்பட்ட பின்புறம், சாஃப்ட் டச் மற்றும் 3360 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்:
- 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 4-அடுக்கு க்வெர்ட்டி பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளஷ், F/1.8 அப்ரேச்சர், 1.14µm பிக்சல், டூயஸ் PDAF
- 12 எமபி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, 1.0µm பிக்சல்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- ஸ்பேஸ் பார் பட்டனில் கைரேகை சென்சார், ஸ்பீட் கீ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3360 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4,450 வரையிலான கேஷ்பேக், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக 5% கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை கண்டறியும் புதிய வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். #WearableTech
நம் உடலின் வியர்வையை கொண்டே மன அழுத்தத்தை நொடிகளில் கண்டறியும் வாட்டர் ப்ரூஃப் பட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தோளில் அணியக்கூடிய சிறிய பட்டை நம் தோலில் ஒட்டிக் கொண்டதும் வியர்வையை உறிந்து கொண்டு கார்டிசல் அதவாது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை (இயக்குநீர்) நொடிகளில் கண்டறிந்து விடும்.
நாள் முழுக்க உடலில் கார்டிசல் அளவு இயற்கையாகவே ஏறி, இறங்கும், அந்த வகையில் வழக்கமான காஜ் மனிதர்களின் உடல் சோர்வு மற்றும் மன சோர்வை கண்டறிந்து, அவர்களது அட்ரினல் சுரப்பி சீராக வேலை செய்கிறதா என மருத்துவர்கள் சோதனை செய்ய முடியும்.
தற்சமயம் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஆய்வகங்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளை தெரிந்து கொள்ள பலநாள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த வகையில் பயனர் தனது உடலின் வியர்வையில் பட்டையை வைத்து, இதனை சாதனத்துடன் இணைத்தால் சில நொடிகளில் கொண்டு சில நொடிகளில் மன அழுத்தம் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தற்சமயம் ப்ரோடோடைப் முறையில் சோதனை செய்யப்படும் இந்த வழிமுறை வெற்றிபெறும் பட்சத்தில் மன அழுத்த அளவு சீராக இல்லாத நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் செவ்வக வடிவம் கொண்ட நீட்டத்தக்க சென்சார் மற்றும் மெம்பிரேன் கார்டிசலுடன் இணைந்து கொள்ளும் வகையில் இந்த பட்டையை உருவாக்கியுள்ளனர். தோலில் ஒட்டிக் கொள்ளும் இந்த பட்டையில், வியர்வை படும் போது அதில் உள்ள ஓட்டை வழியே அனுமதிக்கிறது. இதன் வாட்டர்ப்ரூஃப் லேயர் பட்டையை பாழாகாமல் பார்த்துக் கொள்கிறது.
உடலில் உள்ள வியர்வை பட்டையில் உள்ள நீர்தேக்கம் போன்ற பகுதியில் சேமிக்கப்படும், இதன் மேல் கார்டிசலை உணரும் சவ்வு பொருத்தப்பட்டுள்ளது. #stress #WearableTech
ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதை போன்ற ஐயன் மேன் சூட் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #IronMan #JetPack
ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து வருகிறது.
திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
உலக பிரபலமாக இருக்கும் ஐயன் மேன் கதாபாத்திரத்தை தழுவிய நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய ஐயன் மேன் போன்ற சூட் ஒன்றை வியாபாரி ஒருவர் உருவாக்கி இருக்கிறார். ரிச்சர்டு பிரவுனிங் எனும் தொழிலதிபர் ஐயன் மேன் போன்று இயங்கும் சூட் ஒன்றை உருவாக்கியதை நாம் அறிந்திருப்போம்.
இந்த உடை தற்சமயம் லண்டனில் விற்பனைக்கு வந்திருக்கிறது. லண்டனில் இயங்கி வரும் விற்பனையகத்தில் இந்த உடையின் விலை 3,40,000 பவுன்ட்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,04,76,290) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏழு சூட் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கிறது. 3D ப்ரின்ட் செய்யப்பட்ட பாகங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் கொண்ட சூட் மொத்த எடை 27 கிலோ ஆகும்.
ஜெட் ஃபியூயல் அல்லது டீசல் மூலம் இயங்கும் இந்த பறக்கும் சூட் மணிக்கு 32 மைல் (51 கிலோமீட்டர்) வேகத்தில் செல்லும். வானில் அதிகபட்சம் 12,000 அடி வரை பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும் ரிச்சர்ட் பிரவுனிங் பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் இருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பயன்படுத்துகிறார்.

கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, மனிதர்களை காற்றில் பறக்கச் செய்யும் உடையை ரிச்சர்ட் கண்டறிந்தார். திரைப்படங்களில் வருமளவு அதிநவீன வசதிகள் இன்றி, இன்றைய காலத்துக்கு ஏற்ப முதற்கட்டமாக மனிதர்களை காற்றில் பறக்க வைக்கும் திறனை இவர் கண்டறிந்து இருக்கும் சூட் வழங்குகிறது.
டேடுலஸ் மார்க் 1 (Daedalus Mark 1) என பெயரிடப்பட்டிருக்கும் இவரது ஐயன் மேன் போன்ற சூட் ஆறு மினியச்சர் ஜெட் இன்ஜின்களை கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் மனிதர்களை செங்குத்தாக காற்றில் பறக்க வைக்கிறது. இவர் தனது சூட்டில் பொருத்தியிருக்கும் இன்ஜின்களின் மொத்த செயல்திறன் 1,001 ஹெச்பி என கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இவரது சூட் புகாட்டி வெரான் மாடல் காரில் உள்ளதற்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. சூட் பறக்கும் வேகம், திசை உள்ளிட்டவற்றை கைகளாலேயே கட்டுப்படுத்த முடியும் என்றும், எரிபொருள் பயன்பாடு மற்றும் இதர தகவல்கள் இவரது ஹெல்மெட் திரையில் தோன்றுகிறது.
உலகில் அதிவேகமாக செல்லும் திறன் படைத்த ஜெட் இன்ஜின் கொண்ட சூட் என கின்னஸ் சாதனை படைத்திருக்கும் டேடுலஸ் மார்க் 1 மணிக்கு 51.53 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக சான்று அளிக்கப்பட்டு இருக்கிறது.
எனினும் இவரது பறக்கும் சூட் மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் ஆயிரம் அடிகளுக்கு கீழ் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு பறக்க முடியும் என ரிச்சர்டு பிரவுனிங் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேகம் மற்றும் பறக்கும் உயரம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டேடுலஸ் மார்க் 1 பறக்கும் சூட் HUD சிஸ்டம் பயன்படுத்துகிறது, இதில் சோனி ஸ்மார்ட் ரிளாஸ் டெவலப்பர் எடிஷன் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் வைபை டேட்டா லின்கேஜ் சிஸ்டம் ஃபிளைட் சூட்டில் இருந்து கிரவுன்ட மானிட்டரிங்-க்கு லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது. மெடிக்கல் பபுள் டெடக்டர்கள் ஃபெயில்-சேஃப் ஃபியூயல் அலெர்ட் செய்கிறது. இதன் ஏர்பேக் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் ஏர்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அசம்ங்களை பார்ப்போம். #Nokia3 #smartphone
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.1, நோக்கியா 3 மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்த ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6750 சிப்செட், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், எதிர்காலத்தில் ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் பாலிகார்போனேட் மற்றும் பக்கவாட்டுகளில் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நோக்கியா 3.1 டூயல் டைமண்ட் கட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்
- 5.2 இன்ச் 720x1440 பிக்சல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750N சிப்செட்
- மாலி T860 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2990 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் புளு/காப்பர், பிளாக்/க்ரோம் மற்றும் வெள்ளை/ஐயன் நிறங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் நோக்கியா அதிகாரப்பூர்வ இணையதளம், பேடிஎம் மால் வலைதளம் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக சலுகைகள்:
- நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனில் வாங்குவோர் பேடிஎம் மால் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்தால் ரீசார்ஜ் மற்றும் பேடிஎம் பேமென்ட்களில் 10% கேஷ்பேக் பெற முடியும்.
- நோக்கியா 3.1 வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.250 திரைப்பட கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. பேடிஎம் மூலம் குறைந்த பட்சம் இரண்டு டிக்கெட்களை வாங்கும்போது இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- ஐடியா மற்றும் வோடபோன் பயனர்களுக்கு இரண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
கூடுதலாக 2ஜி/3ஜி போன் பயன்படுத்துவோர் புதிய நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கு மாறும் போது கூடுதலாக தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.595 ரீசார்ஜ் செய்யும் போது 6 மாதங்களுக்கு 8 ஜிபி டேட்டா, தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Nokia3 #smartphone
ஹெச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா X5 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #NokiaX5
ஹெச்.எம்.டி. குளோபல் தனது X சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X5 என பெயரிடப்பட்டுள்ளது.
நோக்கியா X5 ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 16:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓ.எஸ். கொண்டிருக்கும் நோக்கியா X5 ஆன்ட்ராய்டு பி அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதை கொண்டு ஏ.ஐ. போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் ஏ.ஐ. சார்ந்த செல்ஃபி போர்டிரெயிட் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா X5 சிறப்பம்சங்கள்:
- 5.86 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் மற்றும் 800MHz ARM
- மாலி-G72 MP3 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், F/2.0, PDAF
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா X5 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,300) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #NokiaX5 #smartphone
உலகின் முதல் லீப் மைக்ரோஸ்கோப் சாதனத்தை ஐ.ஐ.டி. மெட்ராஸ் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை சார்பில் ரிமோட் முறையில் இயங்கக்கூடிய மைக்ரோஸ்கோப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை மைக்ரோஸ்கோப் கொண்டு அணுக்களை மிகவும் துல்லியமாக பார்க்க முடியும். லோக்கல் எலெக்ட்ரோட் ஆட்டம் ப்ரோப் (Local Electrode Atom Probe) என அழைக்கப்படும் இந்த மைக்ரோஸ்கோப் நாட்டின் எட்டு ஆய்வு மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருப்பதாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பல்வேறு சாதனங்கள் உலகில் கிடைத்தாலும், புவியியல் அடிப்படையில் பிரிந்து இருக்கும் ஆராய்ச்சியாளர்களால் வெவ்வேறு முனையங்களில் இருந்து இயக்க கூடிய உலகின் முதல் மைக்ரோஸ்கோப் சாதனமாக இது இருக்கிறது என ஐ.ஐ.டி. மெட்ராஸ் அறிவித்திருக்கிறது.
மேலும், "நாட்டின் முன்னணி எட்டு ஆய்வு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை," என தெரிவித்திருக்கிறது.
புதிய லீப் மைக்ரோஸ்கோப் சாதனத்திற்கான முனையங்கள் ஆய்வில் கலந்து கொண்ட எட்டு முன்னணி ஆய்வு நிறுவன வளாகங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாம்பே, டெல்லி, கான்பூர், கராக்பூர், ரோபார் ஐ.ஐ.டி. மற்றும் பவுடர் மெட்டலர்ஜி மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச ஆய்வு மையம் உள்ளிட்டவை முறையே ரூ.2 கோடிகளை ஆய்வுக்காக செலவிட்டுள்ளன.
இதுதவிர அணு அறிவியல் பிரிவுக்கான ஆய்வு கூட்டமைப்பு ரூ.3 கோடியை ஆய்வுக்காக செலவிட்டிருக்கிறது. மற்ற நிதி உதவிகளை அறிவியல் மர்றும் தொழில்நுட்பத்திற்கான நானோ திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் நோவா ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் நோவா சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 26-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இத்தகவல் அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சிறப்பு பேனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் GPU டர்போ சப்போர்ட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்றும் ஹூவாய் தெரிவித்திருந்தது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெறாத நிலையில், சில அம்சங்கள் சார்ந்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் முதல் இரண்டு படங்களில் Capture Your Moments மற்றும் For You and Your View என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது புதிய ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் ஹூவாய் 3D க்யூமோஜி அம்சம் வழங்கப்படுகிறது. இது ஆப்பிளின் அனிமோஜி போன்ற அம்சம் ஆகும்.
ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட், மாலி-G72 MP12 GPU வழங்கப்படலாம் என்றும் இது ஹூவாயின் GPU டர்போ தொழில்நுட்பம் கொண்ட முதல் ஹூவாய் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் நோவா 3 மற்றும் நோவா 3i ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் ஹூவாய் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் GPU டர்போ சப்போர்ட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்றும் ஹூவாய் தெரிவித்திருந்தது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெறாத நிலையில், சில அம்சங்கள் சார்ந்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் முதல் இரண்டு படங்களில் Capture Your Moments மற்றும் For You and Your View என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது புதிய ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் ஹூவாய் 3D க்யூமோஜி அம்சம் வழங்கப்படுகிறது. இது ஆப்பிளின் அனிமோஜி போன்ற அம்சம் ஆகும்.
ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட், மாலி-G72 MP12 GPU வழங்கப்படலாம் என்றும் இது ஹூவாயின் GPU டர்போ தொழில்நுட்பம் கொண்ட முதல் ஹூவாய் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய சியோமி ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Xiaomi
சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
போலாந்து வலைதளம் (X-Kom) மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் Mi A2 லைட் என அழைக்கப்படலாம் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க மற்ற நாட்ச் போன்களை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி Mi A2 லைட் ஸ்மார்ட்போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் கார்டெக்ஸ் ஏ53 குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், அட்ரினோ 506 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் ஆன்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் 5.84 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. 2280x1080 பிக்சல் நாட்ச் ரக டிஸ்ப்ளே மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 12 எம்பி மற்றும் 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 64 ஜிபி மெமரி கொண்ட Mi A2 லைட் விலை PLN 999 (இந்திய மதிப்பில் ரூ.18,400) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Xiaomi #smartphone
கோகி நிறுவனத்தின் வைட்டல் ஃபிட்னஸ் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #FitnessGoals
கோகி நிறுவனத்தின் வைட்டன் ஃபிட்னஸ் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை பில்ட்-இன் அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கும் புதிய ஃபிட்னஸ் சாதனத்தில் OLED தொடுதிரை வசதி, ரத்த அழுத்த மானிட்டர், இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கோகி பிளே அம்சம் மூலம் வீடியோக்களை நேரலையில் கோகி ஆப் மூலம் ஸ்ட்ரீம் செய்ய முடியும். புதிய வைட்டல் ஃபிட்னஸ் பேன்ட் வாங்குவோருக்கு மூன்று மாதங்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும் என கோகி நிறுவனம் அறிவித்துள்ளது.
கோகி வைட்டல் பேன்ட் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு போன்றவற்றை டிராக் செய்ய முடியும் என்பதோடு இதில் வழங்கப்பட்டு இருக்கும் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே தினமும் நீங்கள் நடக்கும் தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகளினஎ் அளவு மற்றும் உறக்கம் சார்ந்த முழு விவரங்களை விரிவாக வழங்குகிறது.
இதன் ஸ்போர்ட்ஸ் மோட் நீங்கள் ஓட்ட பயிற்சி, உடற்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டும் போதும் உதவிகரமாக இருக்கிறது. மொபைல் போன் நோட்டிஃபிகேஷன்கள், அலாரம் செட் செய்வது போன்ற அம்சங்களை கோகி வைட்டல் பேன்ட் வழங்குகிறது. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு ஏற்ப கோகி வைட்டல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இதில் வாட்டர் ப்ரூஃப் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபிட்னஸ் பேன்ட் சாதனத்துடன் கோகி பிளே எனும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோகி பிளே அம்சம் மூலம் வல்லுநர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள், சுகாதார ஆலோசகர்களின் வீடியோக்களை கோகி ஆப் மூலம் பார்க்க முடியும். ஒவ்வொரு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நேரலை வீடியோக்களை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டு இருப்பதாக கோகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோகி வைட்டல் ஃபிட்னஸ் பேன்ட் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 16-ம் தேதி முதல் பயனர்கள் கோகி ஃபிட்னஸ் பேன்ட் சாதனத்தை அமேசான் வலைதளம் மற்றும் கோகி ஹெல்த் ஸ்டோரில் வாங்கிட முடியும்.
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹாட் சீரிஸ் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #InfinixHot6Pro
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபிகிஸ் ஹாட் 6 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த X ஓ.எஸ். 3.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட்கள், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்தகிளாஸ் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
- அட்ரினோ 308 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த X ஓ.எஸ். 3.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இன்ஃபினிக்ஸ் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட், சான்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் மேஜிக் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.7,999 விலையில் கிடைக்கும் ஹாட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews
ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் 11-இன்ச் ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி, பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச், ஏர்பவர் உள்ளிட்ட சாதனங்களை உருவாக்கி வருவதாக மிங் சி கியோ தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட சாதனங்களுடன் 5.8 இன்ச் OLED, புதிய 6.5 இன்ச் OLED, 6.1 இன்ச் எல்சிடி மாடல்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல் ஐபோன் X போன்றே ஃபேஸ் ஐடி, ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேக் மினி அப்டேட் குறித்து அதிக தகவல்களை வழங்காத பட்சத்திலும், புதிய பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு படம்
மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் புதிய பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த நோட்புக் மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் மேக்புக் ஏர் இன்றி 12 இன்ச் மேக்புக் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேக்புக் ஏர் சாதனத்துக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் மேக்புக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு 2018 மாடல்களை உருவாக்கி வருவதாகவும், இவற்றில் ஒரு மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இரண்டில் ஒரு மாடல் 1.57 இன்ச் (39.9 மில்லிமீட்டர்) மற்றொரு மாடலில் 1.778 இன்ச் (45.2 மில்லிமீட்டர்) டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகம் எதிர்பார்க்கப்படும் ஏர்பாட் மற்றும் ஏர்பவர் சாதனங்கள் 2018 மூன்றாவது காலாண்டு வாக்கில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை செப்டம்பர் மாத ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டாக்கிங் ஹப் வடிவமைப்பு அழகிய தோற்றம் மற்றும் எல்இடி கொண்டிருக்கிறது.
தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், "ZEB-5CSLU3" என்ற பெயரில் புதிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகம் செய்திருக்கிறது. சார்ஜிங் செய்வது மட்டுமின்றி காளான் வடிவில் எல்இடி வசதியும் கொண்டிருக்கிறது.
இரவு உறக்கத்தை துறந்து, எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பவர்களை குறிக்க 'டிஜிட்டல் போதை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. திரையில் பார்வையைச் செலுத்தும் நேரத்தைக் குறைப்பது மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திற்கு அவசியம். உறங்கும் போதும் இடையிடையே டிஜிட்டல் உலகிற்கு விசிட் அடிப்பவர்கள் பெரும்பாலும், உறங்கும் சிறிது நேரத்திற்கு அவற்றை சார்ஜரில் வைக்கின்றனர்.
அவ்வாறு உங்களது அனைத்து சாதனங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து சார்ஜ் செய்வது, வீட்டின் எல்லா அறைகளிலும் உள்ள போர்ட்களில் சார்ஜ் செய்வதை விட சிறப்பானதாக இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது உறங்கி எழுந்ததும் உட்கார்ந்த இடத்தில் டிஜிட்டல் உலகிற்கு சில க்ளிக்களில் செல்ல முடியும். இந்த கடுமையான சவாலை எளிமையாக எதிர்கொள்ள ZEB-5CSLU3 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் 'ZEB-5CSLU3' உடன் 5 போர்ட் டாக்கிங் ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதனால் சுவர்களில் பல்வேறு வயர்கள் தொங்கிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து உங்களது சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்த உதவுகிறது. சார்ஜிங் டாக்-இல் இருக்கும் காளான் வடிவ எல்இடி படுக்கை அறை விளக்கு போல செயல்படுகிறது.

ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்து போகும் பட்சத்தில், சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்தால் சாதனங்களுக்கு சார்ஜ் ஏறிவிடும். இந்த டாக்கிங் ஹப் எளிய மற்றும் அழகிய வடிவமைப்பு கொண்டிருப்பதால் அலுவலக மேஜைக்கும் ஏற்றதாக இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் 5CSLU3 5 USB போர்ட்டுகளை கொண்டிருப்பதோடு சிறப்பான சார்ஜிங்கிற்காக ஸ்மார்ட் ஐ.சி. பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் பயனரின் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது. இதில் சார்ஜ் ஏற்ற 5 USB போர்ட்டுகள் உள்ளன, அவற்றில் 1-4 வரை 5v சப்போர்ட் மற்றும் 5-வது போர்ட்-இல் 12v/9v/5v சப்போர்ட் கொண்டிருக்கிறது.
"அதிக வசதிகள் கொண்ட மற்றும் சிறப்பாக செயல்படும் சாதனங்களுக்கான தேவை மீது கவனம் செலுத்தி இந்த 5 போர்ட் சார்ஜிங் டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சிறிய வடிவமைப்பில் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டது," ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் பிரதீப் தோஷி தெரிவித்தார்.
இந்த சார்ஜிங் டாக் வரம்பில் பிரித்து எடுக்கக் கூடிய தடுப்புடன் கூடிய எல்இடி அமைப்புடன் 4 போர்ட்டுகள் கொண்ட மாடலும் கிடைக்கிறது. இந்த சாதனம் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






