search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIUI 10"

    சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளீயீடு இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதில் MIUI 10 தளத்துக்கான இந்திய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளியீடு ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் நேற்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. புதிய MIUI 10 தளத்தில் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ஜெஸ்ட்யூர்கள் கொண்ட ஃபுல் ஸ்கிரீன் அனுபவம், இயற்கை ஒலி, ஆம்பியன்ட் நாய்ஸ், செயற்கை நுண்ணறிவு மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    வழக்கம்போல இம்முறையும் புதிய MIUI 10 தளத்தில் இந்திய பயனர்களுக்கென விசேஷ அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பயனர்கள் நேரடியாக கேமரா ஆப் மூலம் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய முடியும், அதிநவீன இணைய வசதி, மெசேஜிங் சேவையில் க்விக் மெனுக்கள், Mi மியூசிக் மற்றும் Mi வீடியோ செயலிகளில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பிராந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    புதிய MIUI 10 தளத்தில் கேமரா ஆப் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து நேரடியாக பேடிஎம் ஆப் மூலம் செக்-அவுட் செய்யும் வசதியை வழங்குகிறது. 



    மெசேஜிங் க்விக் மெனு

    எஸ்எம்எஸ் சென்டர் ஐடி மற்றும் காலர் ஐடி அம்சங்கள் ஏற்கனவே MIUI தளத்தில் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சென்டர் ஐடி தற்சமயம் 65% ஐடென்டிஃபை ரேட் கொண்டுள்ளது. MIUI 10 தளத்தில் வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு ரிப்ளை பட்டன்கள் நீக்கப்பட்டு க்விக் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை க்ளிக் செய்யும் போது குறிப்பிட்ட வலைத்தளங்கள், செயலிகள் அல்லது அருகாமையில் உள்ள ஏடிஎம் மையங்களை கூகுள் மேப்ஸ் மூலம் பார்க்க முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வரும் குறுந்தகவலை யார் அனுப்புகின்றார்கள் என்பதன் அடிப்படையில் வேறுபடும். தற்சமயம் க்விக் மெனு இந்தியாவில் 100-க்கும் அதிக சேவைகளுக்கு கிடைக்கிறது. 

    MIUI 10 தளத்தில் உங்களுக்கு வரும் ரயில் டிக்கெட் எஸ்எம்எஸ்-களை தானாக அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள தகவல்களை சிறப்பான முறையில் கார்டுகளாக மாற்றிவிடும். 



    பிரவுசர்களில் வெப் ஆப்

    ப்ரோகிரெசிவ் வெப் ஆப் சப்போர்ட் ப்ளிப்கார்ட், ஓலா, ஓயோ மற்றும் இதர சேவைகளை செயலிகளை பயன்படுத்துவதை போன்றே இயக்க முடியும். இதற்கு நீங்கள் கூடுதலாக எதையும் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த அம்சம் இந்தோனேஷியாவிலும் வழங்கப்படுகிறது.

    சியோமி நேற்று (ஜூன் 7, 2018) அறிமுகம் செய்த MIUI 10 பீட்டா ஜூன் 14-ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. இதன் ஸ்டேபிள் வெளியீடு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் MIUI 10 ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் MIUI 10 குளோபல் ரோம் வெளியீடும் இதே தேதியில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக சீனாவில் நடைபெற்ற Mi8 நிகழ்வில் சியோமி நிறுவனம் MIUI 10 அறிமுகம் செய்தது. அந்த வகையில் இம்முறை MIUI 10 குளோபல் ரோம் வெளியிடப்படலாம் என சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் வெளியீட்டு விவரங்களுடன் இவை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சியோமி கம்யூனிட்டி ஃபோரமில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் டீசரை சியோமி இந்தியா துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ரெட்மி வை1 அறிமுக நிகழ்விலேயே MIUI 9 அறிவிக்கப்பட்ட நிலையில், இதே ஆண்டும் முந்தைய வழக்கத்தை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஆன்ட்ராய்டு சார்ந்து இயங்கும் MIUI 10 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சக்தியூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யூசர் இன்டர்ஃபேஸ் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட் அம்சம் இருக்கிறது. இந்த அம்சம் புதிய இயங்குதளம் கொண்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் ஒற்றை அல்லது இரட்டை கேமரா கொண்டிருக்கும் எவ்வித ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் பெற முடியும். இத்துடன் விட்ஜெட், ஏஐ பிரீலோடு மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சியோமியின் MIUI 10 சீனா டெவலப்பர் ரோம் மற்றும் இதை சப்போர்ட் செய்யுயம் சாதனங்களின் பட்டியல் Mi8 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், MIUI 10 குளோபல் ரோம் வெளியீட்டு விவரம் மற்றும் இதனை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் ஜூன் 7-ம் தேதி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×