என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5G smartphone"

    • புதிய ஜெனோ 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6300 சிப் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனம் ஜெனோ (Zeno) 5ஜி என்ற புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த புதிய மாடல் ஏற்றது.

    புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட், 5,000எம்ஏஎச் பேட்டரி, 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 50MP பிரதான கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது ரூ.10,000க்குக் கீழ் கிடைத்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனோ 10 ஸ்மார்ட்போனை விட இது சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.

    ஐடெல் ஜெனோ 5ஜி இந்திய விலை, விற்பனை விவரங்கள்:-

    * ஐடெல் ஜெனோ (itel Zeno) 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.10,299 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . ஆனால், வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக, நீங்கள் ரூ.1000 தள்ளுபடி கூப்பனைப் பெறலாம். இது விலையை ரூ.9,299 ஆகக் குறைக்கிறது.

    * 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் ட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கால்க்ஸ் டைட்டானியம், ஷேடோ பிளாக் மற்றும் வேவ் கிரீன் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

    ஐடெல் ஜெனோ 5ஜி அம்சங்கள்:-

    புதிய ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.67-இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் டைனமிக் பார் மற்றும் PANDA MN228 திரை பாதுகாப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய 100 நாட்களுக்குள் டிஸ்ப்ளேவில் சேதம் ஏற்படும் பட்சத்தில், நிறுவனம் இலவசமாக திரையை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய ஜெனோ 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6300 சிப் கொண்டுள்ளது. இது 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #oneplus #5G



    குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்தார். லண்டனில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    நெட்வொர்க் இஇ சேவையுடன் ஒன்பிளஸ் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 2018ல் ஒன்பிளஸ் 5ஜி ஆராய்ச்சியில் புது சாதனையை படைக்கும் விதமாக முதல் 5ஜி ட்விட் பதிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. 



    2019ம் ஆண்டில் 5ஜி சேவையை வணிக ரீதியாக வழங்குவதற்கான வடிவமைப்பு மற்றும் சாதனங்களை உருவாக்க ஒன்பிளஸ் மற்றும் குவால்காம் பணியாற்றி வருகின்றன.

    இதுகுறித்து குவால்காம் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ கூறும் போது, 

    ஒன்பிளஸ் வெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மட்டுமே எங்களது தேர்வாக இருக்கிறது. இந்த பிராசஸரின் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் 5ஜி வசதிகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை சிறப்பான தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் தொடர்ந்து வழங்கும். 

    என தெரிவித்தார். #oneplus #5G #Snapdragon855
    2019-ம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட ஒன்பிளஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவன சிஇஓ தெரிவித்திருக்கிறார்.




    ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஷாங்காய் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

    அதன்படி அமெரிக்க டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து அடுத்த ஆண்டு வாக்கில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 அல்லது 7T ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு அமெரிக்காவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் முதல் ஆண்டாக அமைய இருக்கிறது. தற்சமயம் ஒன்பிளஸ் நிறுவனம் மே அல்லது ஜூன் மாத வாக்கில் வழக்கமான வேரியன்ட் ஒன்றையும், நவம்பர் மாத வாக்கில் T-வேரியன்ட் மாடலை வெளியிட்டு வருகிறது. 


    கோப்பு படம்

    நெட்வொர்க் சப்போர்ட் முறை ஒன்பிளஸ் நிறுவனத்து சாதகமாக இருக்கும், இதனால் அமெரிக்க பயனர்களுக்கு வாங்கும் முன் பயன்படுத்த அதிக நேரம் வழங்கும். சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஐரோப்பிய நெட்வொர்க் வசதியுடன் வழங்க துவங்கியுள்ளது. 

    முதல் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், எந்த நெட்வொர்க் உடன் இணைய இருக்கிறது என்பது குறித்த எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் ஏடி&டி மற்றும் டி மொபைல் நெட்வொர்க்களில் வழங்கப்படுகிறது. 

    எனினும் குவால்காம் சிப்செட்களை கொண்டு எவ்வித அமெரிக்க நெட்வொர்க்களுடன் இயங்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட முடியும். ஸ்மார்ட்போனின் வேகம் குறித்த கேள்விக்கு, “ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சாராம்சமாக சீராக இயங்கும் அதிவேக அனுபவம் வழங்குவது தான்” என பீட் லௌ தெரிவித்தார்.
    ×