என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    நோக்கியாவின் ஆஷா பிராண்டு சாதனங்களை மீண்டும் வெளியிட எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    நோக்கியா பிராண்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நோக்கியா பெயரில் இந்தியாவில் ஆறு ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்திலேயே நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது. 

    அந்தவகையில் நோக்கியாவின் பிரபல ஆஷா சீரிஸ் தலைப்பில் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்ய எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான காப்புரிமைகளை அந்நிறுவனம் கோரியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2011-ம் ஆண்டு ஆஷா சீரிஸ் பயன்படுத்துவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 9-ம் தேதி இந்த காப்புரிமை எச்.எம்.டி. பெயரில் மாற்றப்பட்டுள்ளது.

    புதிய காப்புரிமையை பயன்படுத்தி எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஸ்மார்ட்போன், டெலிபோன் மற்றும் மொபைல்போன்களில் பயன்படுத்தக்கூடிய கம்ப்யூட்டர் மென்பொருள்களை உருவாக்க முடியும். இத்துடன் மொபைல் டெலிபோன்களில் பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் கம்ப்யூட்டர் மென்பொருள்களையும் உருவாக்க முடியும்.  



    ஸ்மார்ட்போன் சந்தையில் 2011-ம் ஆண்டு களமிறங்கிய நோக்கியா ஆஷா சீரிஸ் 2014-இல் நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் நிறுத்தப்பட்டது. நோக்கியா ஆஷா சீரிஸ் பெயரில் அதிகளவு பட்ஜெட் ரக மொபைல் போன்கள், டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்ட சாதனங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன. 

    நோக்கியா ஆஷா பெயரில் வெளியான கடைசி சாதனமாக நோக்கியா ஆஷா 230 இருக்கிறது. இந்த கைப்பேசி வாட்ஸ்அப் கீ கொண்ட முதல் சாதனமாக அமைந்ததோடு 2 எம்பி பிரைமரி கேமரா மற்றும் சீரிஸ் 40 ஓ.எஸ். கொண்டு இயங்கின. சந்தையில் நோக்கியா ஆஷா சீரிஸ் வெளியாவது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த பிராண்டு மீண்டும் களமிறங்க இருப்பது மட்டும் தெரியவந்திருக்கிறது.



    முந்தைய வெளியீடு போன்றே புதிய ஆஷா சீரிஸ் சாதனங்களும் பட்ஜெட் விலையில் வெளியிடப்படலாம் என்றும் இவற்றில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு கோ தளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை அனைத்து பட்ஜெட்டிலும் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை வெளியிட எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.  

    இதை உறுதி செய்யும் வகையில் நோக்கியா 6, நோக்கியா 1, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 8 உள்ளிட்ட மாடல்கள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக நோக்கியா 6 (2018) சீனாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5T புதிய நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

    புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் முன்பக்க பெசல்களில் கருப்பு நிறமும், பக்கவாட்டுகள் மற்றும் பின்புறம் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் இந்தியாவிலும் சான்ட்ஸ்டோன் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் புதிய நிறம் தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 



    ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி 
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா ரெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் விற்பனை ஜனவரி 20-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஒன்பிளஸ் 5T லாவா ரெட் ஸ்மார்ட்போனின் அறிமுக வீடியோவினை கீழே காணலாம்..,


    டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று கேலக்ஸி A8 பிளஸ் (2018) ல்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் கேலக்ஸி A8 (2018) ஸ்மார்ட்போனுடன் A8 பிளஸ் (2018) அறிமுகம் செய்யப்பட்டது.

    சாம்சங் கேலக்ஸி A8 (2018) ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி+ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED 18:5:9 டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், 16 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, F/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் டூயல் செல்ஃபி கேமராக்கள் குளோஸ்-அப், பேக்கிரவுண்டு, போர்டிரெயிட் மற்றும் லைவ் ஃபோகஸ் உள்ளிட்ட அம்சங்களிடையே மாற்றி கொள்ள வழி செய்வதோடு, புகைப்படங்களை எடுக்கும் முன்போ அல்லது எடுத்த பின்னரோ அவற்றில் பொக்கே எஃபெக்ட் சேர்க்கவும் வழி செய்கிறது. 

    இத்துடன் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 3500 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் சாம்சங் பே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.  



    சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ் (2018) சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர்
    - மாலி-G71 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
    - 16 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா f/1.9 அப்ரேச்சர்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி (IP68)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஎச் பேட்டரி, அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் பிளாக், ஆர்சிட் கிரே, கோல்டு மற்றும் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் விலை ரூ.32,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் ஜனவரி 20-ம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
    லாஸ் வேகாஸ்:

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2018) இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்துள்ளது. 

    முன்னதாக அல்ட்ராசோனிக் சென்சார் சார்ந்து இயங்கும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை விவோ நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. அந்த வகையில் விவோ நிறுவனம் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது.



    சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆப்டிக்கல் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் டிஸ்ப்ளேவினுள் இருந்தபடியே சீராக இயங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் டிஸ்ப்ளேவின் மேல் தங்களது கை விரல்களை வைத்து ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்ய முடியும். 

    புதி்ய தொழில்நுட்பத்தின் வரவு வழக்கமான கைரேகை ஸ்கேனருக்கு மாற்றாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மாப்ட்போன் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்டு விற்பனை துவங்க இருக்கிறது.



    விவோ போன்றே மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் இந்த ஆண்டு அதிகளவு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் வீடியோவினை கீழே காணலாம்..,


    அமெரிக்காவில் நடைபெற்று வரும் சி.இ.எஸ் 2018 விழாவில் சென்ஹெய்சர் நிறுவனத்தின் இரண்டு புதிய இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
    புதுடெல்லி:

    சென்ஹெய்சர் நிறுவனத்தின் இரண்டு புதிய ஆடியோ சாதனங்கள் அமெரிக்காவில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் வசதி கொண்ட CX 6.00BT ஹெட்செட் மற்றும் HD 920 பிரீமியம் ஹெட்போன்களை சென்ஹெய்சர் அறிமுகம் செய்துள்ளது. புதிய CX 6.00BT இயர்பட்ஸ் குறைந்த எடை, அழகிய வடிவமைப்பு, கழுத்தில் வைத்து பயன்படுத்த சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. 

    சென்ஹெய்சர் HD 820 டைனமிக் ஸ்டீரியோ ஹெட்போன்கள் சுவாரஸ்ய மற்றும் பிரத்யேக ஆடியோ அனுபவம் வழங்கும் படி கிளாஸ் டிராஸ்டியூசர் கவர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஆப்ட்-X லோ லேடென்சி வழங்கப்பட்டிருப்பதால் கேமிங் அல்லது வீடியோ பார்க்கும் போது ஆடியோ தரத்தை மிக துல்லிமாக வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.



    சென்ஹெய்சர் CX 6.00BT சிறப்பம்சங்கள்:

    - ப்ளூடூத் 4.2
    -  14 கிராம் எடை கொண்ட ஃபிரேம்
    - இன்டகிரேடெட் மைக்ரோபோன்
    - மூன்று பட்டன் கொண்ட ரிமோட்
    - அழைப்புகள், மியூசிக் உள்ளிட்டவற்றை விரல் நுனியில் இயக்க முடியும் 
    - அழைப்புகள் மற்றும் பேட்டரி அளவு நோட்டிபிகேஷன்
    - நான்கு வித அளவுகளில் இயர் அடாப்டர்கள்
    - 6 மணி நேர பேட்டரி பேக்கப் 
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சென்ஹெய்சர் CX 6.00BT விலை 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,280 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை இம்மாத இறுதிக்குள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சென்ஹெய்சர் HD 820 சிறப்பம்சங்கள்:

    - இசையின் இயற்கை அனுபவத்தை வழங்கும் புதிய தொழில்நுட்பம்
    - மென்மையான மைக்ரோஃபைபர் இயர்பேட் சவுகரியத்தை வழங்குகிறது 
    - ஓபன் ஹெட்போன்களை போன்ற அனுபவத்தை வழங்கும் வடிவமைப்பு

    இத்துடன் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சில்வர் கிளேட் செய்யப்பட்ட OFC கேபிள்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இசை அனுபவத்தை மேம்படுத்துகிறது. சென்ஹெய்சர் HD 820 விலை 2399 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,52,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சென்ஹெய்சர் HD 820 ஹெட்போன்களுக்கான முன்பதிவுகள் அமெரிக்காவில் ஏற்கனவே துவங்கியுள்ளது. வுிரைவில் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுதகிறது.
    இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியான தகவல்களில், ஐபோன் X ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும் ஆப்பிள் இந்த அம்சத்தை ஐபோன் X மாடலில்  வழங்கவில்லை. 

    முழுமையாக தயாராகாத காரணத்தால் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் அம்சம் வழங்கப்படவில்லை என்றாலும் ஐபோன் X ஸ்மார்ட்போனில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை ஆப்பிள் வழங்கியது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டது.

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும் இந்த அம்சம் தற்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்ரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    அந்த வகையில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் வெளியிடலாம் என கூறப்பட்டது. சமீபத்தில் பிரபல டிப்ஸ்டர் எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் டூகி நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார். 

    இத்துடன் புதிய டூகி வி ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் புதிய டூகி வி ஸ்மாபர்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் ஐபோன் X சார்ந்த வடிவமைப்பு காணப்படுகிறது. டூகி வி வடிவமைப்பு பார்க்க ஐபோன் X மற்றும் சாம்சங் கேலக்ஸி S8 சீரிஸ் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதை போன்று காட்சியளிக்கிறது.

    எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை டூகி, விவோ போன்ற நிறுவனங்கள் வெளியிடுமா அல்லது சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் வழங்குமா என்பதை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
    இந்தியாவில் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை மெய்சூ நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    மெய்சூ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட டீசர்களில் புதிய 'ப்ரோ' சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை உணர்த்தியது. மெய்சூ ப்ரோ 7 அல்லது ப்ரோ 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என்றும் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் மட்டும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இரட்டை டிஸ்ப்ளே அம்சம் இருக்கிறது. இரண்டாவது டிஸ்ப்ளே கொண்டு அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மிக எளிமையாக இயக்க முடியும். 

    மேலும் பிரைமரி கேமரா கொண்டு அழகிய செல்ஃபிக்களையும் மிக எளிமையாக எடுக்க முடியும். மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்டது. சீனாவில் RMB 2,880 அதாவது இந்திய மதிப்பில் ரூ.27,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் RMB 3,380 அதாது இந்திய மதிப்பில் ரூ.32,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் கருப்பு, தங்கம் மற்றும் சிவப்பு நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    மெய்சூ ப்ரோ 7 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1080 பிக்சல், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 2.0 இன்ச் சூப்பர் AMOLED இரண்டாவது டிஸ்ப்ளே 
    - ஹீலியோ P25 சிப்செட்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 12 எம்பி சோனி IMX386 டூயல் பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - 3000 எம்ஏஎச் பேட்டரி
    சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பேண்ட் A2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்ட் இந்தியாவில் ஹானர் பேண்ட் A2 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட பேண்ட் A2 0.96 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் வசதியும் வழங்கப்பட்டிருப்பதால் பேண்ட் வழங்கும் தகவல்களை கொண்டு உறக்கத்தை மேம்படுத்த முடியும். இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை நோட்டிபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும். 

    ஹானர் பேண்ட் A2 வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டிருப்பதோடு 9 நாட்கள் பேட்டரி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஹானர் பேண்ட் A2 சிறப்பம்சங்கள்:

    - 0.96 இன்ச் OLED டச் டிஸ்ப்ளே
    - ப்ளூடூத் 4.2
    - ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஓ.எஸ். 8.0
    - பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், உடற்பயிற்சி டிராக்கர், செடன்ட்ரி ரிமைன்டர்
    - அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் நோட்டிபிகேஷன்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 95 எம்.ஏ.எச். பேட்டரி

    இந்தியாவில் ஹானர் பேண்ட் A2 கருப்பு நிறத்தில் கிடைப்பதோடு அமேசான் வலைத்தளத்தில் ஜனவரி 8-ம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் பேண்ட் A2 விலை ரூ.2799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டிருக்கிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வைட் நிற ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 1 ஸ்மார்ட்போன்களில் பலரையும் கவர்ந்த  சான்ட்ஸ்டோன் நிறம் தற்சமயம் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    சான்ட்ஸ்டோன் வைட் நிற ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் நிற விலையிலேயே விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெய் தெரிவித்துள்ளார். புதிய சான்ட்ஸ்டோன் வைட் நிற ஒன்பிளஸ் 5T இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் இந்தியா உள்பட தேர்வு செய்யப்பட்ட சில சந்தைகளில் மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில், புதிய சான்ட்ஸ்டோன் நிற மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சான்ட்ஸ்டோன் நிற ஒன்பிளஸ் 5T அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் அனுபவம் மற்றும் கையில் இருந்து நழுவாத அமைப்பிற்காக பிரபலமாகி இருந்தது. ஒன்பிளஸ் 1 மற்றும் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்களில் சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் வழங்கப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 3 மாடலில் சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் நீக்கப்பட்டிருந்தது. நான்கு கட்ட வழிமுறைகள் நிறைந்த சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

    முந்தைய ஒன்பிளஸ் 1 மற்றும் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்களில் கிடைத்த அனுபவம் புதிய ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் வழங்காது என்றாலும், முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அழகிய தோற்றம் மற்றும் வித்தியாச அனுபவம் வழங்கும். புதிய வேரியன்ட் ஸ்மார்ட்போனிலும் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் 5T லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சான்ட்ஸ்டோன் வேரியன்ட் மாடலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுவதோடு, வன்பொருள் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


    ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:


    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் 5T 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 5T மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.38,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஜனவரி 9-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் விலை 559 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,404 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமராவுடன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    எனினும் ரெட்மி நோட் 5 சோதனை செய்யப்படுகிறது என்றும், ஸ்னாப்டிராகன் 632 வெளியீட்டிற்காக ஸ்மார்ட்போன் வெளியீடு தாமதமாகிறது என்றும் இந்த ஸ்மார்ட்போன் CNY1,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,700 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு குவால்காம் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்டை விட புதிய ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் குறைந்த செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய சிப்செட் குவால்காம் ஸ்பெக்ட்ரா 160 ISP மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோடெம் டூயல் கேமரா அமைப்புகளை சீராக இயக்க வழி செய்யும்.



    அந்த வகையில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஸ்கிரீன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, MIUI 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் 7.1 இயங்குதளம் கண்டு இயங்கும் என கூறப்பட்டது.

    மெமரியை பொருத்த வரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ரெட்மி நோட் 5 வெளியாக இருக்கிறது. ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 5.5 இனஅச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டது.
    ஆண்ட்ராய்டு கோ சார்ந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போனுடன் எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் சார்ந்த தகவலை தொடர்ந்து எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

    நோக்கியா கேமரா செயலியில் நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. குளோபல் தயாரித்து வருவதாகவும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ சார்ந்து உருவாகும் நோக்கியா 1 ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 6 (2018), நோக்கியா 8 (2018) மற்றும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல் கசிந்திருக்கிறது. கிஸ்சைனா மூலம் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் கேமரா செயலியின் APK ஃபைல் மூலம் அன்சிப் செய்யும் போது தெரியவந்துள்ளது.



    இதில் நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இத்துடன் நோக்கியா 9, நோக்கியா 6 (2018), நோக்கியா 1 ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களும் ஒரே விழாவில் எச்.எம்.டி. குளோபல் வெளியிடுமா அல்லது 2018 ஆண்டு முழுக்க வெளியிடப்படுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி 2018-ம் ஆண்டில் மட்டும் ஐந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. வெளியிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    ஆண்ட்ராய்டு கோ சார்ந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போன் எச்டி IPS-LCD டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் கூகுளின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ திட்டங்களின் கீழ் அறிமுகம் செய்யப்படுவதால் குறைந்த ரேம் மற்றும் பிராசஸிங் வேகம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்படுகிறது.

    நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட இருக்கும் சிப்செட் குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஆண்ட்ரய்டு கோ திட்டத்திற்கு ஏற்ப குவால்காம் மற்றும் மீடயாடெக் செயல்படும் என்பதால் இவற்றில் ஏதேனும் ஒரு சிப்செட் நிச்சயம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபல சான்ட்ஸ்டோன் நிற ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 1 மற்றும் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்கள் சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் மர்ம பெட்டியை ஒருவர் கையில் வைப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் டீசர் வீடியோவில் பொது மக்கள் மர்ம பெட்டியில் கையை நுழைத்து, அதில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து தெரிவிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வீடியோவில் மர்ம பொருளை தொட்டு தழுவி உணர்ந்தவர்கள் மென்மை, அமைப்பு, கல், திடமான பொருள் போன்ற வார்த்தைகளை தெரிவித்துள்ளனர். ஜனவரி 2018-இல் மர்மத்தை தெரிந்து கொள்வோம் என்ற வாசகத்துடன் வீடியோ நிறைவுறுகிறது.



    கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகம் விரும்பப்பட்ட சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் அகற்றப்பட்டது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்தது.

    தற்சமயம் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் சான்ட்ஸ்டோன் பதிப்பு தயாரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஜனவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் பதிப்பு சார்ந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.



    ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


    ×