search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா?
    X

    ஐந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா?

    ஆண்ட்ராய்டு கோ சார்ந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போனுடன் எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    நோக்கியா ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் சார்ந்த தகவலை தொடர்ந்து எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

    நோக்கியா கேமரா செயலியில் நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. குளோபல் தயாரித்து வருவதாகவும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ சார்ந்து உருவாகும் நோக்கியா 1 ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 6 (2018), நோக்கியா 8 (2018) மற்றும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல் கசிந்திருக்கிறது. கிஸ்சைனா மூலம் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் கேமரா செயலியின் APK ஃபைல் மூலம் அன்சிப் செய்யும் போது தெரியவந்துள்ளது.



    இதில் நோக்கியா 4 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இத்துடன் நோக்கியா 9, நோக்கியா 6 (2018), நோக்கியா 1 ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களும் ஒரே விழாவில் எச்.எம்.டி. குளோபல் வெளியிடுமா அல்லது 2018 ஆண்டு முழுக்க வெளியிடப்படுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி 2018-ம் ஆண்டில் மட்டும் ஐந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. வெளியிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    ஆண்ட்ராய்டு கோ சார்ந்த நோக்கியா 1 ஸ்மார்ட்போன் எச்டி IPS-LCD டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் கூகுளின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ திட்டங்களின் கீழ் அறிமுகம் செய்யப்படுவதால் குறைந்த ரேம் மற்றும் பிராசஸிங் வேகம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு என ஆப்டிமைஸ் செய்யப்படுகிறது.

    நோக்கியா 1 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட இருக்கும் சிப்செட் குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஆண்ட்ரய்டு கோ திட்டத்திற்கு ஏற்ப குவால்காம் மற்றும் மீடயாடெக் செயல்படும் என்பதால் இவற்றில் ஏதேனும் ஒரு சிப்செட் நிச்சயம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×