search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redmi Note 5"

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஐம்பது லட்சம் யூனிட்கள் விற்பனை செய்திருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.




    இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், குற்றம் சுமத்துவோரை சோதிக்கும் வகையில் சியோமியின் புதிய அறிவிப்பு அமைந்திருக்கிறது.

    ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நான்கே மாதங்களில் 50 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக சியோமி தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சியோமி அறிமுகம் செய்தது.

    சியோமி ரெட்மி நோட் 5 விலை ரூ.9,999, ரெட்மி நோட் 5 ப்ரோ விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதும், ரெட்மி நோட் 5 ப்ரோ விலை ரூ.1,000 அதிகரிக்கப்பட்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல்கள், 18:9 ரக டிஸ்ப்ளே, செல்ஃபி லைட் மாட்யூல், 4,000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய விற்பனை சாதனையின் மூலம் ரெட்மி நோட் 5 சீரிஸ் இந்தியாவின் அனைத்து வித தளங்களிலும் அதிவேகமாக ஐம்பது லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த மொபைல் போன் சீரிஸ் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 



    "ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடல்களின் அனைத்து வேரியன்ட்களும் சியோமி ப்ரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க கடினமாக பணியாற்றி வருகிறோம்," என சியோமி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்தே முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கியது. மூன்று நிமிடங்கள் நடைபெற்ற முதல் ஃபிளாஷ் விற்பனையில் சுமார் 3,00,000 அதிக ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ யூனிட்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனையாகி வரும் நிலையில், ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்ந்து ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக உருவெடுத்தது. அறிமுகமான ஒரே வருடத்தில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ரெட்மி நோட் 5 ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.999 விலையில் வாங்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் எக்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்தால் அதிகபட்சம் ரூ.11,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

    ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறை ரூ.9,999 மற்றும் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து 64 ஜிபி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.11,000 தள்ளுபடியும், 32 ஜிபி மாடல் வாங்குவோருக்கு ரூ.9,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    ப்ளிப்கார்ட் தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ஒவ்வொரு மாடலுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் சலுகை தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% தள்ளுபடி மற்றும் மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோன்று ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் பழைய ஸ்மாக்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% தள்ளுபடி மற்றும் மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் மட்டுமின்றி ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கபப்டுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்களாக வழங்கப்படும். இவை மைஜியோ செயலியில் நேரடியாக சேர்க்கப்பட்டு விடும்.
    ×