search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 5T வெளியீடு
    X

    புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 5T வெளியீடு

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டிருக்கிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வைட் நிற ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 1 ஸ்மார்ட்போன்களில் பலரையும் கவர்ந்த  சான்ட்ஸ்டோன் நிறம் தற்சமயம் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    சான்ட்ஸ்டோன் வைட் நிற ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் நிற விலையிலேயே விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெய் தெரிவித்துள்ளார். புதிய சான்ட்ஸ்டோன் வைட் நிற ஒன்பிளஸ் 5T இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் இந்தியா உள்பட தேர்வு செய்யப்பட்ட சில சந்தைகளில் மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில், புதிய சான்ட்ஸ்டோன் நிற மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சான்ட்ஸ்டோன் நிற ஒன்பிளஸ் 5T அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் அனுபவம் மற்றும் கையில் இருந்து நழுவாத அமைப்பிற்காக பிரபலமாகி இருந்தது. ஒன்பிளஸ் 1 மற்றும் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்களில் சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் வழங்கப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 3 மாடலில் சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் நீக்கப்பட்டிருந்தது. நான்கு கட்ட வழிமுறைகள் நிறைந்த சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

    முந்தைய ஒன்பிளஸ் 1 மற்றும் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்களில் கிடைத்த அனுபவம் புதிய ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் வழங்காது என்றாலும், முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அழகிய தோற்றம் மற்றும் வித்தியாச அனுபவம் வழங்கும். புதிய வேரியன்ட் ஸ்மார்ட்போனிலும் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது.

    ஒன்பிளஸ் 5T லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சான்ட்ஸ்டோன் வேரியன்ட் மாடலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுவதோடு, வன்பொருள் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


    ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:


    - 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
    - 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

    ஒன்பிளஸ் 5T 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 5T மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.38,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஜனவரி 9-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வேரியன்ட் விலை 559 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,404 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×