என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் ஐ.ஓ.எஸ். அப்டேட் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மைஜியோ செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருந்த நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பிற்கான அப்டேட் மூலம் சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான மைஜியோ செயலியில் வாடிக்கையாளர்கள் பே.டி.எம். அல்லது ஜியோமனி வாலெட் கணக்குகளை கொண்டு பணம் செலுத்த முடியும். மைஜியோ ஐ.ஓ.எஸ். செயலியின் புதிய அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி சில பிழை திருத்தங்கள் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மைஜியோ செயலி 4.0.04 பதிப்பு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் சலுகையை ரூ.399க்கு வழங்குகிறது. இத்துடன் 70 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் பே.டி.எம். மற்றும் ஜியோ மனி சேவைகளை கொண்டு பிரீபெயிட் ரீசார்ஜ், போஸ்ட்பெயிட் கட்டணம் உள்ளிட்டவற்றை வாலெட் கணக்குகளில் இருந்து மேற்கொள்ள முடியும்.

    இத்துடன் ஜியோஃபைபர் மற்றும் ஜியோஃபை சாதனங்களை மிக எளிமையாக இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஜியோ ஃபைபர் அல்லது ஜியோஃபை நெட்வொர்க்குடன் இணைத்து சேவைகளை மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் கட்டுப்படுத்த முடியும்.

    மைஜியோ ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஹெல்லோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி காணப்பட்டது என்னும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இன்னும் வழங்கப்படவில்லை.  
    சியோமி நிறுவனத்தின் 2018 Mi ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
    பீஜிங்:

    சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் போன்றே கைரேகை சென்சாருக்கு மாற்றாக முக அங்கீகார வசதியை வழங்குமா அல்லது டிஸ்ப்ளேவில் பொறுத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் சீன வலைத்தளம் ஒன்றில் புதிய சியோமி ஸ்மா்ட்போனில் 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் முக அங்கீகார வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வலைத்தளத்தில் Mi7 ரென்டர் புகைப்படங்களில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுவதை உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெசல்கள் அற்ற வடிவமைப்பில் ஹோம் பட்டனின் மேல் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய சியோமி ஸ்மார்ட்போனில் முக அங்கீகார வசதி மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படுவது குறித்து முரணான தகவல்கள் வெளியாகியுள்ளது.
     


    முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி Mi 7 ஸ்மார்ட்போனின் ஆல்-ஸ்கிரீன டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதனை சாம்சங் தயாரிக்கலாம் என கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சியோமி Mi 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடுவது உறுதி செய்யப்படவில்லை என்ற நிலையில், சீனாவில் Mi 7 ஸ்மார்ட்போன் CNY 2,699 அதாவது இந்தியாவில் ரூ.26,500 என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Mi 7 மட்டுமின்றி சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 7.0 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 5500 எம்ஏஎச் பேட்டரி, டூயல் கேமரா, ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் குவிக் சார்ஜ் 3.0 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது அதிநவீன இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த புதிய இயர்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சாம்சங் நிறுவனம் ANC தொழில்நுட்பம் கொண்ட புதிய லெவல் இன்-இயர் (EO-IG930) இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் (ANC) தொழில்நுட்பம் கொண்ட புதிய இயர்போன்கள் அனைத்து விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் புதிய இயர்போனில் டாக் இன் மோட் வசதியும் வழங்கப்படுகிறது. 

    டாக் இன் மோட் அம்சம் வாடிக்கையாளர்களை சுற்றியிருக்கும் சத்தத்தை கேட்க வழி செய்யும். மேலும் இயர்போன்களின் தரத்தை குறைக்காமல் வெளிப்புற சத்தத்தை கேட்க முடியும். மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள புதிய இயர்போன் பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டிருப்பதால் அழைப்புகளை ஏற்கவும், ஒலியை கட்டுப்படுத்துவது, பாடல்களை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

    புதிய இயர்போனில் உள்ள ANC அளவு குறைந்தபட்சம் 10 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இதில் உள்ள ANC அளவு 90%x அளவு துல்லியமாக இருப்பதோடு வெளிப்புற சத்தத்தை 20 dB அளவு குறைக்கும் திறன் கொண்டுள்ளது.



    புதிய இயர்போனில் வழங்கப்பட்டுள்ள ஹைப்ரிட் கேனால் இயர்டிப்ஸ் வடிவமைப்பு பயன்படுத்தும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்குவதோடு, வெளிப்புற ஒலியை கட்டுப்படுத்தி இசையை எவ்வித இடர்பாடும் இன்றி கேட்க செய்கிறது. இந்தியாவில் சாம்சங் இயர்போனின் விலை ரூ.3,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் சோனி நிறுவனமும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. சோனி WI-1000X, WH-1000XM2, WF-1000X மற்றும் WH-H900N என நான்கு மாடல்களில் WH-1000XM2 மற்றும் WH-H900N மாடல்கள் ஹெட்பேன்ட் ஸ்டைல் கொண்டிருக்கிறது. இவை முறையே ரூ.18,990 மற்றும் ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான வயர்லெஸ் ஹெட்போன்களான WI-1000X மற்றும் WF-1000X முறையே 14,990 மற்றும் ரூ.21,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நான்கு புதிய சோனி இயர்போன்களும் நாட்டின் அனைத்து சோனி விற்பனை மையங்கள் மற்றும் மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சோனி WH-1000XM2, WF-1000X மற்றும் WH-H900N இயர்போன்களில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அசம் மற்றும் சென்ஸ் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப ஒலியை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டீடெல் டி1 பீச்சர்போனினை ரூ.499 விலையில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் மொபைல் போன்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது.

    மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் டீடெல் டி1 எனும் பீச்சர்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டீடெல் டி1 பீச்சர்போன் ரூ.499க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய மொபைல் போனுடன் பி.எஸ்.என்.எல். வாய்ஸ் கால்களும் வழங்கப்படுகிறது.

    நாடு முழுக்க விற்பனை செய்யப்பட இருக்கும் டி1 மொபைல் போனுடன் ரூ.153 விலையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. மொபைல் போன் கட்டணம் ரூ.349 மற்றும் சிறப்பு திட்டத்திற்கு ரூ.153 சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. புதிய மொபைல் போன் அறிமுக நிகழ்வில் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டார்.

    புதிய டி1 மொபைல் போன் வாங்குவோருக்கு ரூ.103 டாக்டைம் சுமார் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. புதிய சலுகையை கொண்டு பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மற்ற பி.எஸ்.என்.எல். எண்களுக்கு நிமிடத்திற்கு 15 பைசா கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நொடிக்கு 40 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



    புதிய டி1 மொபைல் போன் உயர் ரக பீச்சர்போன் என்றாலும் மற்ற மொபைல் போன்களுடன் ஒப்பிட முடியாது. டி1 மொபைல்போன் வாங்குவோருக்கு ரூ.499 விலையில் அழைப்புகள்: 686 பி.எஸ்.என்.எல்.-பி.எஸ்.என்.எல். நிமிடங்களும், பி.எஸ்.என்.எல்- மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 257 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. டி1 மொபைல் போனுடன் 4ஜி டேட்டா வழங்கப்படவில்லை, பீச்சர்போன் என்பதால் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் அன்லிமிட்டெட் அழைப்புகள், அன்லிமிட்டெட் டேட்டா உள்ளிட்டவை மாதம் ரூ.153 விலையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா, வைபை, இண்டர்நெட் பிரவுசிங் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். இதில் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பதிவு கட்டணமும், ரூ.1000 செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும்.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை டி1 மொபைல் போனில் 1.44 இன்ச் மோனோகுரோம் ஸ்கிரீன், கீபேட், சிம் ஸ்லாட், 650 எம்ஏஎச் பேட்டரி, எஃப்.எம். ரேடியோ, ஸ்பீக்கர், டார்ச், போன்புக் மற்றும் வைப்ரேஷன் மோட் வழங்கப்பட்டுள்ளது.
    முக அங்கீகார வசதி கொண்ட ஒப்போ நிறுவனத்தின் A83 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    ஒப்போ நிறுவனத்தின் A83 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சான்றளிக்கும் வலைத்தளத்தில் கசிந்த A சீரிஸ் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஒப்போ A83 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செல்ஃபிக்களை அழகாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஸ்மார்ட்போன் திரையில் முகத்தை காண்பித்து அன்லாக் செய்யும் முக அங்கீகார வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ முக அங்கீகார வசதி ஸ்மார்ட்போனினை 0.18 நொடிகளில் அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஒப்போ A83 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 எச்டி+ ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் மற்றும் கலர்ஓ.எஸ். 3.2
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3180 எம்ஏஎச் பேட்டரி

    ஒப்போ A83 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைப்பதோடு சீனாவில் 1399 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,630 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் டிசம்பர் 29-ம் தேதி முதல் ஒப்போ A83 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்குகிறது.
    சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    சோனி நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிய சோனி ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் கீக்பென்ச் தளத்தில் தெரியவந்துள்ளது.

    கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ள புதிய தகவல்களின் படி புதிய சோனி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா XZ2 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



    எக்ஸ்பீரியா XZ2 ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் வடிவமைப்பு, டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, இரண்டிலும் 12 எம்பி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

    இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி சோனி எக்ஸ்பீரியா XZ2 ஸ்மார்ட்போனில் 5.48 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3130 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    குவால்காம் புதிய பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்-ஐ விட 30 சதவிகிதம் வரை பேட்டரியை சேமிக்கும் என்றும் புதிய சிப்செட் குவிக் சார்ஜ் 4 வசதியை கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனினை 0-50% சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 4K தர வீடியோ பதிவு செய்ய முடியும் என்றும் 720 பிக்சல் தரத்தில் ஸ்லோ-மோ வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என கூறப்படுகிறது.
    16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஜியோணி நிறுவனத்தின் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக புதிய ஸ்மார்ட்போனினை ஜியோணி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா மற்றும் நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான ஜியோணி எஸ்10 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஜியோணி எஸ்10 லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருப்பதோடு, புகைப்படங்களின் அழகை கூட்ட பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் குளோன் போன்ற அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். இத்துடன் அதிநவீன கண் பாதுகாப்பு அம்சம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு அடிக்கடி கண் சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும் என ஜியோணி தெரிவித்துள்ளது.



    ஜியோணி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280x720 பிக்சல்
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 3100 எம்ஏஎச் பேட்டரி
    - கைரேகை ஸ்கேனர்

    அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் அம்சங்கள் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, சீராக பயன்படுத்த வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின்னல் வேகக்தில் இயங்கும் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 23-ம் தேதி முதல் துவங்குகிறது. ஜியோணி நிறுவனம் பேடிஎம் மற்றும் ஜியோவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.

    ஜியோ எஸ்10 லைட் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு 2 பேடிஎம் கேஷ்பேக் வவுச்சர் கோட்கள் முறையே ரூ.250 கேஷ்பேக் மற்றும் ரூ.350 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி டேட்டா, பத்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.309 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
    ஏர்டெல் மற்றும் செல்கான் நிறுவனங்கள் இணைந்து செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் எனும் புதிய மொபைல்போனினை ரூ.1249 விலையில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் மற்றும் செல்கான் நிறுவனங்கள் இணைந்து செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் எனும் புதிய மொபைல்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    4ஜி வசதி கொண்ட என்ட்ரி-லெவல் பீச்சர்போன் இந்தியவில் ரூ.1,249 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் ரூ.2,749 செலுத்தி போனினை வாங்க வேண்டும். இதில் ரூ.1,500 வரை கேஷ்பேக் முறையில் 36 மாதங்களில் திரும்ப பெற முடியும்.

    எவ்வித சலுகையும் இன்றி இதே போனினை ரூ.2,999 விலையிலும் வாங்கிட முடியும். செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் வாங்கும்  வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.169க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  இதில் முதல் 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் பெற முடியும்.  இதேபோல் 36 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.1,000 கேஷ்பேக் பெற முடியும்.



    செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ்:


    - 4.0 இன்ச் ஃபுல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ்  குவாட்கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 3.2 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 1800 எம்ஏஎச் பேட்டரி

    செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் மொபைல்போனில் மைஏர்டெல் செயலி,  ஏர்டெல் டிவி, விண்க் மியூசிக் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ். போன்ற  கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், எஃப்.எம். ரேடியோ மற்றும் MPEG4  வீடியோ வசதிகளை கொண்டிருக்கிறது.
    சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் மியூசிக் கிரியேஷன் செயலியான சவுண்டுகேம்ப் ஸ்கிரீன்ஷாட்களில் சாம்சங் கேலக்ஸி S9 போன்று காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. இத்துடன் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் கசிந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.

    செப்டம்பர் மாதம் முதல் அறிவிக்கப்படாத சாம்சங் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்ஷாட்களை தனது சவுண்ட்கேம்ப் செயலியில் பயன்படுத்தி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்கள் கேலக்ஸி S9 ரென்டர் மற்றும் வடிவமைப்பை போன்று காட்சியளிக்கிறது. எனினும் சாம்சங் சார்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



    இதேபோன்று வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் SM-G965U1 என்ற பெயரில் கீக்பென்ச் தளத்தில் காணப்பட்டது. சிங்கிள் கோரில் 2422 புள்ளிகளும், மல்டி கோரில் 8351 புள்ளிகளை பெற்றுள்ளது. கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனை விட 25 சதவிகித சிறப்பான புள்ளிகளை பெற்றுள்ளது.

    இத்துடன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மொபைல்ஃபன் வெளியிட்டுள்ள கேஸ் ரென்டர்களில் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புற பேனல்கள் இணையத்தில் கசிந்திருந்தது. இதில் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் மாத வாக்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், மற்றும் அடுத்த தலைமுறை PCB தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    வோடபோன் இந்தியா மற்றும் ஐடெல் நிறுவனங்கள் இணைந்து ரூ.1590 விலையில் 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவின் டிரான்சியன் குழும நிறுவனங்களின் ஐடெல் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் இந்தியா புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளன.

    ஐடெல் A20  ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1590 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் உண்மை விலை ரூ.3690 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வோடபோன் நெட்வொர்க் தேர்வு செய்து மூன்று ஆண்டுகளுக்கு இதே சேவையை பயன்படுத்த வேண்டும்.

    முன்னதாக வோடபோன் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து ரூ.2,200 விலையில் பாரத் கேன்வாஸ் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. முந்தைய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் போது அறிவிக்கப்பட்ட கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.



    அந்த வகையில் ஐடெல் A20 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.150க்கு 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ்களை ஒரே முறையும் அல்லது பல்வேறு கட்டங்களிலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 18 மாதங்கள் நிறைவுறும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று அடுத்த 18 மாதங்களில் ரூ.1200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    வோடபோன் வழங்கும் கேஷ்பேக் தொகையை எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். இதை கொண்டு ரீசார்ஜ், கட்டணங்கள், பண பரிமாற்றம் அல்லது பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் வோடபோன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதோடு அவர்களை எம்-பேசா சேவையை பயன்படுத்த செய்ய முடியும். வோடபோன் மற்றும் ஐடெல் A20 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் சேவை மார்ச் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.



    ஐடெல் A20 சிறப்பம்சங்கள்:

    - 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - மாலி-400 MP2 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - டூயல் சிம்
    - 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 1700 எம்ஏஎச் பேட்டரி

    இந்தியாவில் ஐடெல் A20  ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு, டார்க் புளூ மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

    வோடபோன் மட்டுமின்றி பாரதி ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1 ஸ்மார்ட்போனினை ரூ.1,649 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    டூயல் பிரைமரி கேமரா, 18:9 டிஸ்ப்ளே கொண்ட விஷன் 3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அமெரிக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்ஃபோகஸ் இந்தியாவில் விஷன் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும் இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட விலை குறைந்த சாதனமாக வெளியிடப்பட்டுள்ளது.

    மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 1440x720 பிக்சல் 18:9 ரக ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபோகஸ் விஷன் 3 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச், எச்டி + 18:9 டிஸ்ப்ளே
    - குவாட்கோர் மீடியாடெக் MT6735 சிப்செட்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    -  4000 எம்ஏஎச் பேட்டரி

    டூயல் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரூ.6,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விஷன் 3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது. இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi A1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ்-ஐ தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சியோமி Mi A1 இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் வெளியிடப்பட்ட Mi A1 ஸ்மார்ட்போனின் உண்மை விலையில் இருந்து ரூ.1000 நிரந்தரமாக குறைக்கப்பட்டது.

    விலை குறைப்பை தொடர்ந்து Mi A1 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சிவப்பு நிற Mi A1 ஸ்மார்ட்போன் முன்னதாக பிலிப்பைன்ஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 மற்றும் MiUI
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3080 எம்ஏஎச் பேட்டரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கைரேகை ஸ்கேனர்



    புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது. சியோமி Mi A1 சிவப்பு நிற மாடல் Mi.com, பிளிப்கார்ட், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் சியோமி Mi A1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 20-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆன்லைன் மட்டுமின்றி சியோமி Mi A1 சிவப்பு நிற ஸ்மார்ட்போன் Mi ஹோம் ஸ்டோர், Mi ஒப்பந்தமிட்டுள்ள விற்பனை மையங்கள் மற்றும் இதர விற்பனையாளர்களிடமும் விற்பனை செய்யப்படுகிறது.
    ×