என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஜியோணி நிறுவனத்தின் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக புதிய ஸ்மார்ட்போனினை ஜியோணி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா மற்றும் நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான ஜியோணி எஸ்10 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஜியோணி எஸ்10 லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருப்பதோடு, புகைப்படங்களின் அழகை கூட்ட பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் குளோன் போன்ற அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். இத்துடன் அதிநவீன கண் பாதுகாப்பு அம்சம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு அடிக்கடி கண் சோர்வு ஏற்படுவதை தவிர்க்கும் என ஜியோணி தெரிவித்துள்ளது.



    ஜியோணி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1280x720 பிக்சல்
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 3100 எம்ஏஎச் பேட்டரி
    - கைரேகை ஸ்கேனர்

    அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் அம்சங்கள் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்குவதோடு, சீராக பயன்படுத்த வழி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின்னல் வேகக்தில் இயங்கும் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 23-ம் தேதி முதல் துவங்குகிறது. ஜியோணி நிறுவனம் பேடிஎம் மற்றும் ஜியோவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.

    ஜியோ எஸ்10 லைட் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு 2 பேடிஎம் கேஷ்பேக் வவுச்சர் கோட்கள் முறையே ரூ.250 கேஷ்பேக் மற்றும் ரூ.350 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி டேட்டா, பத்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.309 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
    Next Story
    ×