என் மலர்
செய்திகள்

இரண்டு டிஸ்ப்ளேவுடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை மெய்சூ நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
மெய்சூ நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட டீசர்களில் புதிய 'ப்ரோ' சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை உணர்த்தியது. மெய்சூ ப்ரோ 7 அல்லது ப்ரோ 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என்றும் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் மட்டும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இரட்டை டிஸ்ப்ளே அம்சம் இருக்கிறது. இரண்டாவது டிஸ்ப்ளே கொண்டு அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மிக எளிமையாக இயக்க முடியும்.
மேலும் பிரைமரி கேமரா கொண்டு அழகிய செல்ஃபிக்களையும் மிக எளிமையாக எடுக்க முடியும். மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்டது. சீனாவில் RMB 2,880 அதாவது இந்திய மதிப்பில் ரூ.27,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் RMB 3,380 அதாது இந்திய மதிப்பில் ரூ.32,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மெய்சூ ப்ரோ 7 ஸ்மார்ட்போன் கருப்பு, தங்கம் மற்றும் சிவப்பு நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெய்சூ ப்ரோ 7 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1080 பிக்சல், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 2.0 இன்ச் சூப்பர் AMOLED இரண்டாவது டிஸ்ப்ளே
- ஹீலியோ P25 சிப்செட்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 12 எம்பி சோனி IMX386 டூயல் பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் பேட்டரி
Next Story






