என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. புதிய கேலக்ஸி F14 5ஜி மாடல் அசத்தலான அம்சங்களை மிக குறைந்த விலையில் வழங்குகிறது. இதில் 6.6 இன்ச் FHD+ 90Hz ஸ்கிரீன், 13MP செல்ஃபி கேமரா, எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.0 கொண்டிருக்கும் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு ஒஎஸ் அப்டேட்களையும், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், மேக்ரோ கேமராக்கள் வழங்கப்படுகின்றன.

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்து 990 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 14 ஆயிரத்து 490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் B.A.E. பர்பில், கோட் கிரீன், OMG பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை சாம்சங் இ ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

     

    சாம்சங் கேலக்ஸி F14 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி V LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் எக்சைனோஸ் 1330 பிராசஸர்

    மாலி G68 MP2 GPU

    4 ஜிபி, 6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ சென்சார், எல்இடி ஃபிளாஷ்

    13MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அறிவிப்புகளை ஆப்பிள் வெளியிட்டு வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வு ஜூன் 5 ஆம் தேதி துவங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆப்பிள் பார்க் வளாகத்தில் டெவலப்பர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை நடைபெற்ற டெவலப்பர்கள் நிகழ்வுகளிலேயே மிகவும் பெரியது மற்றும் அதிக சுவாரஸ்யங்கள் நிறைந்த நிகழ்வாக WWDC 2023 இருக்கும் என ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் தொடர்பாளர் பிரிவு துணை தலைவர் சூசன் பிரிஸ்காட் தெரிவித்து இருக்கிறார். "WWDC 2023 எங்களின் மிகப் பெரிய மற்றும் அதிக சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாக இருக்க போகிறது. இந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது ஆன்லைனிலும், நேரிலும் உங்களை பார்க்க காத்திருக்க முடியவில்லை!" என்று அவர் தெரிவித்தார்.

     

    வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஐஒஎஸ், மேக்ஒஎஸ், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ் மற்றும் டிவி ஒஎஸ் உள்ளிட்டவைகளை அறிவிக்கும். அதே வரிசையில், இந்த ஆண்டும் ஆப்பிள் தனது புதிய மென்பொருள் சார்ந்த அறிவிப்புகளை WWDC 2023 நிகழ்வில் வெளியிடவுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு பல்வேறு மேம்படுத்தல்கள் மற்றும் புதிய அம்சங்கள் நிறைந்த ஐஒஎஸ் 17 வெர்ஷனை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஆப்பிள் தெரிவித்து இருப்பதை வைத்து பார்க்கும் போது, இந்த ஆண்டின் WWDC நிகழ்வு சிறப்பான ஒன்றாக இருக்கும். கடந்த சில மாதங்களில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் பட்சத்தில் ஆப்பிள் தனது விர்ச்சிவல் ரியாலிட்டி அல்லது ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ WWDC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     

    இவைதவிர ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மேக் ஹார்டுவேர் சாதனத்தை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் சமீபத்தில் வெளியிட்டு வரும் டீசர்களின் படி சிலிகான் மேக் ப்ரோ மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இவற்றுடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலும் இணையும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக புதிய மேக்புக் ஏர் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது.

    சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் 16.4 வெர்ஷனை வெளியிட்டது. புதிய ஐஒஎஸ் வெர்ஷன் உலகம் முழுக்க ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக 21 எமோஜிக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை யுனிகோட் 15.0 கீழ் இடம்பெற்றுள்ளன.

    • இந்தியாவில் பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் போது, அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் தோன்றும்.
    • பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் கணக்கை முடக்க மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்பூர்வ கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கணக்குகளை முழுமையாக நிறுத்திவைக்க டுவிட்டர் நிறுவன வழிமுறைகள் அனுமதிக்கின்றன.

    அதன்படி பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @GovtofPakistan இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா தவிர அமெரிக்கா, கனடா போன்ற இதர நாடுகளில் இருந்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மற்றவர்கள் தொடர்ந்து பார்க்கவும், பின்பற்றவும் முடியும்.

     

    எனினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கை தேடும் பட்சத்தில், அக்கவுண்ட் முடக்கப்பட்டதை கூறும் தகவல் திரையில் தோன்றுகிறது. கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசு டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    • மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டது.
    • மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.

    பிப்ரவரி மாத வாக்கில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்தது. வெரிஃபைடு கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக எலான் மஸ்க்-இன் டுவிட்டர் தளத்தில் இதே போன்ற கட்டண முறையிலான வெரிஃபிகேஷன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது அமெரிக்காவிலும் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் 11.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    இந்தியாவிலும் இந்த சேவைக்கான வெயிட்லிஸ்ட் ஒன்றை மெட்டா பிளாட்ஃபாரம் துவங்கி இருப்பதாகவும், விரைவில் சந்தா கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், மெட்டா வெரிஃபைடு சந்தா முறைக்கான இந்திய கட்டணம் மொபைலில் மாதம் ரூ. 1,450 என்றும் வலைதளத்திற்கு மாதம் ரூ. 1,099 என்றும் தெரிவித்து இருக்கிறது.

    மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. வெரிஃபைடு சந்தா செலுத்துவோர் ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொடுத்து அக்கவுண்ட்-ஐ வெரிஃபை செய்து கொள்ளலாம். சந்தா செலுத்துவோருக்கு நேரடி வாடிக்கையாளர் சேவை, பதிவுகளை அதிக நபர்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பலன்களை வழங்குகிறது.

    இந்தியாவில் இந்த சேவை தற்போதும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. மெட்டா வெரிஃபைடு சந்தாவில் இணைய பயனர்கள் வெயிட்லிஸ்ட்-இல் இணைய வேண்டும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது. மெட்டா வலைதளத்தில் இருந்தபடி பயனர்கள் வெயிட்லிஸ்ட்-ஐ இயக்க முடியும்.

    • சாம்சங் பி-ஸ்போக் ஜெட் மாடல் ஸ்டிக் போன்ற டிசைன் கொண்ட கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர் ஆகும்.
    • இதில் உள்ள புதுமைமிக்க நேவிகேஷன் தொழில்நுட்பம் LiDAR சென்சார்களை கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாப் எண்ட் வாக்யூம் கிளீனர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் பி-ஸ்போக் ஜெட், ரோபோடிக் ஜெட் பாட் பிளஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். இவற்றில் பிஸ்போக் ஜெட் மாடல் ஸ்டிக் போன்ற டிசைன் கொண்ட கார்ட்லெஸ் வாக்யூம் கிளீனர் ஆகும். ஜெட் பாட் பிளஸ் மாடல் அதீத திறன் கொண்டிருக்கிறது. இரு மாடல்களும் அதிநவீன வீடுகளுக்கு ஏற்ற வகையில், முக நுட்பமாக இயங்கும் வகையிலும் சிறப்பாக சுத்தம் செய்யும் திறன் கொண்டுள்ளன.

    இவற்றில் உள்ள மல்டி-லேயர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் அதிகபட்சம் 99.999 சதவீதம் தூசியில்லா சூழலை உருவாக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. பி-ஸ்போக் ஜெட் வாக்யூம் கிளீனர் சீரிசில் ஏராளமான மாடல்கள் உள்ளன. பி-ஸ்போக் ஜெட் ப்ரோ எக்ஸ்டிரா (வாக்யூம் + மாப்) விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் பி-ஸ்போக் ஜெட் பெட் (வாக்யூம்) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றும் ஜெட் பாட் பிளஸ் விலை ரூ. 65 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    புதிய வாக்யூம் கிளீனர் மாடல்களை சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம், சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர், சாம்சங் ஷாப் ஆப் உள்ளிட்டவைகளில் வாங்கிட முடியும். இதுதவிர அமேசான் ஆன்லைன் தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    பி-ஸ்போக் ஜெட் ரேஞ்ச்- ஆல்-இன்-ஒன் கிளீன் ஸ்டேஷன் (வாக்யூம் கிளீனரை சார்ஜ் செய்து தானாக குப்பை தொட்டியை சுத்தம் செய்து கொள்ளும்) மற்றும் அதிநவீன டிஜிட்டல் இன்வெர்டர் மோட்டார் கொண்டிருக்கிறது. இது பி-ஸ்போக் ஜெட் மாடலில் 210 வாட் வரையிலான இழுவை திறனும், ஜெட் பாட் பிளஸ் மாடலில் 2500pa வரையிலான இழுவை திறனை வெளிப்படுத்துகிறது.

    இந்த அதிநவீன ரோபோட் பிக்ஸ்பி, அலெக்சா மற்றும் கூகுள் ஹோம் போன்ற வாய்ஸ் ரெகாக்னிஷன் திறன் கொண்டுள்ளன. இதை கொண்டு பயனர்கள் வாய்ஸ் கமாண்ட் மூலம் சுத்தம் செய்வது, மோட்களை மாற்றுவது, செய்திகள் மற்றும் வானிலை அப்டேட்களை கேட்க முடியும். இத்துடன் லைவ் கிளீனிங் ரிபோர்ட் மூலம் ரோபோடிக் ஜெட் பாட் பிளஸ் எங்கு சுத்தம் செய்கிறது என்பதை ரியல்டைமில் டிராக் செய்ய முடியும்.

    இதில் உள்ள புது-மைமிக்க நேவிகேஷன் தொழில்நுட்பம் LiDAR சென்சார்களை கொண்டிருக்கிறது. இது ரோபோட் லொகேஷனை எந்நேரமும் டிராக் செய்து கொண்டே இருக்கும். இதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க ஸ்மார்ட்திங்ஸ் ஆப் மூலம் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் மாணிட்டரிங் வசதி வழங்கப்படுகிறது.

    • விவோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது.
    • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.

    விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய ஸ்மார்ட்போன் விவோ X ஃபோல்டு 2 பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் சீன வெளியீட்டை விவோ உறுதிப்படுத்தி இருக்கிறது. வெய்போ பதிவில் இதுபற்றிய தகவலுடன் விவோ X ஃபோல்டு 2 டீசரையும் விவோ வெளியிட்டு இருக்கிறது.

    தற்போதைய டீசரின் படி விவோ X ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அம்சங்கள் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம்.

     

    புதிய விவோ X ஃபோல்டு 2 மாடலில் இதுவரை விவோ உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படும் என விவோ தெரிவித்து இருக்கிறது. டிசைனை பொருத்தவரை இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிகவும் மெல்லியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    விவோ X ஃபோல்டு 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    விவோ X ஃபோல்டு 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 13, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 4800 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    • யுபிஐ பரிவர்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்தது.
    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் சார்பில் 1.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பேமண்ட் சேவை வழங்குவோர் அதிக வருவாய் ஈட்ட முடியும்.

    அந்த வகையில் இதற்கான கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த கட்டணங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    பிபிஐ எனப்படும் பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிக பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

     

    இதற்கான கட்டணம் ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். அதே சமயம் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி இறுதி முடிவை வணிகர்களே எடுக்கலாம். வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

    இந்தியாவில் யுபிஐ சார்ந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் போன் மூலமாகவே பணம் அனுப்ப முடியும். பிபிஐ-க்கள் என்பது பணத்தை வைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் ஆகும்.

    பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள்பே உள்ளிட்டவை பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவையை வழங்கி வருகின்றன. பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி சார்பில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பின் படி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • மோட்டோ E13 மாடலை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G13 தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோ E13 ஸ்மார்ட்போனை தொடர்ந்து மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் குறைந்தவிலை ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD ஸ்கிரீன், 1600x720 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்பேளே மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் கொண்டிருக்கும் மோட்டோ G13 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

     

    ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோ G13 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    பாண்டா கிளாஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

    ARM மாலி-FG52 2EEMC2 GPU

    4 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் மேட் சார்கோல் மற்றும் புளூ லாவெண்டர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் பேக்கப் சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையை பெறுவதற்கான குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    பிராட்பேண்ட் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஜியோ நிறுவனம் ரூ. 198 விலையில் மாதாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. பிராட்பேண்ட் பேக்கப் பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் நொடிக்கு 10 மெகாபைட் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

    இதுவரை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் இணைய மாதாந்திர கட்டணம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகை அறிவித்து இருப்பதோடு இணைய வேகத்தை நொடிக்கு 30 மெகாபைட் அல்லது 100 மெகாபைட் வரை உயர்த்திக் கொள்வதற்கான வசதியை வழங்குகிறது. இதற்கான கட்டணம் ஏழு நாட்களுக்கு ரூ. 21-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 152 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஃபிக்சட் லைன் பிராட்பேண்ட் சேவை பிரிவில் ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 84 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் 30.6 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1490 கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டி இருக்கும். இதில் ஐந்து மாதத்திற்கான கட்டணம் மற்றும் இன்ஸ்டால் செய்வதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் மொபைல் கட்டணங்களை மாற்றியமைத்தது. பிரீபெயிட் பிரிவில் துவக்க சலுகைகளின் விலையை ஏர்டெல் அதிகரித்து இருக்கிறது. போஸ்ட்பெயிட் சலுகையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் 5ஜி போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. 

    • டெக்னோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • 50MP பிரைமரி கேமராவுடன், ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.

    டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஸ்பார்க் சீரிசில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட முதல் மாடல் ஆகும். ஸ்பார்க் 10 ப்ரோ வரிசையில் டெக்னோ அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இது.

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்பார்க் டெக்ஸ்ச்சர் ஸ்டிட்ச், க்ளிட்டரிங் பேக் உள்ளது. இத்துடன் 6.6 இன்ச் HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 12.6 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10-பேண்ட் சப்போர்ட் உடன் 5ஜி கனெக்டிவிட்டி வழங்குகிறது.

     

    மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி அம்சங்கள்:

    6.6 இன்ச் HD டாட் 90Hz டிஸ்ப்ளே

    மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்

    ARM மாலிG57 GPU

    8 ஜிபி- 4 ஜிபி LCDDR4X+ 4ஜிபி Mem ஃபியுஷன் ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், PDAF, டூயல் பிளாஷ்லைட்

    8MP செல்ஃபி கேமரா

    டூயல் 5ஜி ஆக்டிவ், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபிளாஷ் சார்ஜர்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடல் இந்திய சந்தையில் மெட்டா பிளாக், மெட்டா வைட் மற்றும் மெட்டா புளூ என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
    • ஐஒஎஸ் பயனர்களிடையே சிறிய வீடியோ நோட் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாற்ற முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய அப்டேட் டெஸ்க்டாப் தளத்திற்கானது ஆகும். இதைத் தொடர்ந்து தற்போது பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புதிய அம்சம் பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை அழிப்பதற்கு மாற்றாக அதில் ஏற்பட்ட பிழையை மட்டும் சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும். அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு தற்போது 15 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்து கொள்ள வேண்டும்.

     

    தற்போது வழங்கப்பட்டு இருக்கும் டெலிட் அம்சத்திற்கு மாற்றாக, புதிய அம்சம் இருக்கும். டெலிட் அம்சம் குறுந்தகவலை முழுமையாக அழிக்கச் செய்து வேறொரு தகவலை அனுப்ப உதவி வருகிறது. புதிய அம்சம் குறுந்தகவல்களை அழிக்காமல், அதில் சிறு மாற்றங்களை மேற்கொள்ளச் செய்கிறது. இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் என இருவருக்கும் தகவல் இடம்பெற்று இருக்கும்.

    புதிய அம்சம் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த அம்சம் ஐஒஎஸ் பயனர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

    இதுதவிர வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஞ்ச் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 நொடிகளுக்கு சிறிய வீடியோ நோட்களை அனுப்பலாம். டெலிகிராமில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ நோட் போன்றே வாட்ஸ்அப்-இல் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.

    • அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.
    • டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது.

    டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் ஏஐ பாட்கள் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

    "ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், வெரிஃபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். இது தான் ஏஐ பாட்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் உண்மையான வழியாக இருக்கும். இதைதவிர மற்ற நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளவும் வெரிஃபிகேஷன் பெற்றிருக்க வேண்டும்," என எலான் மஸ்க் டுவிட் செய்திருக்கிறார்.

     

    அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிறப்பிக்கும் ரோபோட் டெஸ்டில் இருந்து விடுபட செய்யும் ஒரே வழிமுறை கட்டண சமூக வலைதள அக்கவுண்ட்கள் தான் என எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போதைய அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எவ்விதமான ரோபோட் டெஸ்டிங்கையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு விடுகின்றன.

    முன்னதாக ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருந்தது.

    உலகளவில் டுவிட்டர் புளூ வெளியானதை அடுத்து டுவிட்டர் நிறுவனம் தனது பழைய வெரிஃபைடு திட்டத்தை நிறுத்த இருக்கிறது. பழைய வழக்கப்படி டுவிட்டர் பயனர்களின் ஐடி மற்றும் பொது மக்கள் இடையே பிரபலமாக இருப்போருக்கு மட்டும் குறிப்பிட்ட வழிமுறைகளின் கீழ் வெரிஃபைடு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×